தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

காமமயமாகி போன இணையம்


நண்பர்களே இன்று முகபுத்தகத்தில் படித்த தோழி ஒருவரின் கட்டுரை மிகவும் பிடித்து போனதால் இங்கு பிரசுரிக்கிறேன். ஒரு பெண் இப்படி எழுதியது வரவேற்க படவேண்டிய விடயம் ............


எழுதலாமா கூடாதா சிந்திக்கலாமா

எழுதலாமா வேண்டாமா? இன்றும் ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் அவரின் எழுத்துகளும்
இப்படி தான் இருக்கவேண்டும் என்று ஒரு சிலர் எதிர்பார்கிறார்கள்.

அதையே தான் சில பெண்களும் செய்கிறார்கள்.பெண்ணின் சுதந்திரம் அழகுசாதன பொருட்கள் பாவிப்பதும் அணியும்  ஆடையில் புரட்சி செய்வதுமே சுதந்திரம் என்கிறார்கள் பெண்கள்.. என்ன கொடுமை.மாதர் தனை இழிவு செய்யும் மாதர்கள் தான் இங்கே அதிகம் இருக்கிறார்கள்.இப்படி பட்டவர்களுக்கு மாறுபட்டு இருக்கவே நான் விரும்புகிறேன். அதனால் தான் என் எழுத்துகளும் மாறுபட்டே இருக்கிறது.

இரண்டு மாதங்களாக பாதி எழுதியும் மீதி எழுதாமலும் வைத்திருந்தேன். ஆனால் இன்று இதை எப்படியும் எழுதிடமுடிவு செய்து எழுதுகிறேன். தவறு என்று எண்ணுபவர்கள் படித்ததை மறந்துவிடுங்கள்.சரி என்பவர்கள் வாழ்த்து சொல்லுங்கள். ஆனால் யாரும் எனக்கு காதல் மன்னிக்கவும் காம மடல் அனுப்பாதிர்கள்.அப்புறம் உங்கள் பெயர் என் சுவரில் வந்துவிடும்.

சில இணையதளங்கள் தமிழ் இணைய ஊடகங்கள் மாற்றான் மனைவியை காமவெறியோடு பார்ப்பவர்கள் என்று எல்லோரையும்  கொஞ்சம் சாடலாம் என்று பார்கிறேன். அதிகம் இணையத்தை மேயும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும் நாட்டு நடப்பை பற்றி தெரிந்து கொள்ள நான் இணையதளங்களில் மேய்வது உண்டு. இப்படி நான் தேடி படிக்க முயன்ற இணையங்களில் எல்லாம் அதிகம் கள்ளகாதல் பாலியல் பலத்தாகரம் சிறுவயது கற்பம் சினிமா காமக்கதைகள் என்று எல்லாமே காமத்தை சுற்றியே இருக்கிறது.லங்காஸ்ரீ இணையத்தை தவற்றி.

இவர்கள் இதனால் எதை சொல்லவருகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. கள்ளகாதல் என்பது இப்பொழுது சர்வசாதர்நாமாகிவிட்ட ஓன்று இதை ஒரு செய்தி ஆக்கி அதற்க்கு முக்கியத்துவம் தருகிறீர்களே இது முறையா? கள்ளகாதலை எதிர்க்கிறோம் என்று கூறி கொண்டு இங்கிலாந்து பெண்களில் பார்க்க இந்திய பெண்கள் தான் காமகளியாட்டங்களில் ஆசைகூடியவர்களாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். பெண்களுக்கு எந்தமாதிரி எல்லாம் காமாவிளையாட்டுக்கள் பிடித்திருக்கு என்று எழுதுகிறீர்கள். இது தான் நாட்டு நடப்பா. இவை தான் இணையஊடகங்களின் வேலையா? பத்தாதுக்கு இன்று யாழ்பாணம் முழுக்க முழுக்க காமத்திலே கட்டுண்டு இருப்பது போல் எழுதுகிறீர்கள். ஏன் முன்பு இப்படியில்லையா?

சரி இந்த கள்ளகாதல் செய்தியோடு குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதை பிரசுரித்து அதை ஒரு சர்வசாதரானமான விடையமாக படிக்கவைதுவ்டுகிறீர்கள் ´. இது சரியா. இணைய ஊடகத்துக்கு மட்டும் எப்படி அதிகம் காமக்கதைகள் கிடைகின்றன? ஊடகங்களின் வேலை என்ன வெறும் காமபிரச்சனைகளை மட்டுமே அலசுவதா?

குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபடுவது என்றால் அது என்ன சர்வசாதாரணமான பிரச்சனயா`? ஊடகங்கள் என்னும் பெயரில் எதற்கு மக்களை சீர்குலைகின்றீர்கள்? இப்படி செய்திகளை பிரசுரித்து யாழ்பாணம் கெட்டுவிட்டது கெட்டுவிட்டது என்று எழுதுவதுக்கு பதில். பெண்ணின் அந்தரங்கக ஆசைகளை உணர்சிகளை எழுதுவதுக்கு பதில். இந்த மாதிரி கள்ளகாதலும் குழந்தைகள் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பது எப்படி  என்று எழுதலாமே? ஊடகங்களே உங்களுக்கு இருக்கும் போட்டியில் எதுக்கு இப்படி சமுகபிரசனைகளை  பொழுது போக்கு அம்சமாக ஆக்குகின்றீர்கள்?

இங்கே இந்த முகபுத்தகத்தில் பெண்விடுதலை தேடிதர்கிறோம் என்று கூறி கொண்டு. பெண்கள் மானம் காப்பம் என்று கூறிக்கொண்டு. பெண்கள் மதுபானம் பாவிப்பது அரைநிர்வாணமாக இருப்பது புகைப்பது போன்ற புகைப்படங்களை போடுகின்றீர்கள். இஸ்லாமியர்கள் பெண்களை அடிமைபடுத்துகிரார்கள் என்று இஸ்லாமிய பெண்களுக்கு ஆக குரல் கொடுக்கும் தமிழ் ஆண்கள் தமிழ் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். கேட்டால் தமிழன் தமிழனுக்கு ஒரு கலாசாரம்.

கள்ளகாதல் கள்ளகாதல் என்று சொல்கிறீர்களே கள்ளகாதல் எதனால் உருவாகுது என்று சிந்தித்தது உண்டா நீங்கள்? எங்கள் தமிழினத்தில் தாலிகட்டிய கணவனிடம் கூட ஒரு பெண் அந்த காமாசைகளை வெளிபடுத்த கூடாதம். கேட்டால் அது அசிங்கம் வெக்கம். கணவனுக்கு மனைவியை  பற்றி சிந்தனையே இல்லை. தான் சுகம் கண்டால் போதும் அது தான். கனவிடம் சொல்லமுடியாத கேட்க்கமுடியாத விடையங்களை எல்லாம் மனைவி பக்கத்திவீட்டுகாரனிடமும் அவனிடமும் கூறி ஓடிவிடுகிறாள். பின்னால் ஐயோ தமிழன் மானம் போச்சே மறியாதே போச்சே யாழ்பாணம் அழிந்துவருதே என்று குரல் குடுக்கவேண்டியது.

பாவம் குழந்தைகள் அவர்கள் பாலியல் சித்திரவதைக்கு ஆளான பின் எவ்வளவு மனுளைச்சளுக்கு ஆளாகிறார்கள் தெரியுமா? இதை கொஞ்சம் என்றாலும் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூடஇல்லாமல் யாழ்பாணம் கெட்டுவிட்டது கலாசாரம் போய்விட்டது என்குறீர்கள். சிறுவயது கற்பம். இவற்றை தடுக்க குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிதாருங்கள். இது அவசியமான ஓன்று. வெறும் கற்பம் ஆகாமல் தடுக்க மட்டுமல்ல பாலியல் நோய்களிலும் இருந்து குழந்தைகளை காப்ற்ற வேண்டியகடமை உங்களிடம் உண்டு. சரியான முறையில் சொல்லி கொடுத்தால் தவறான தொடுதலை குழந்தை புரிந்து கொல்லுஇல்லையா? சொல்லி தெரிவது காமகலை இல்லை என்று கூறி கொண்டு. காதலில் விழுந்தேன் மயக்கம் என்ன போன்ற படங்களை குழந்தைகளை பார்க்க விடுங்கள். பெரியவர்கள் உங்களுக்கே சரியாக பாலியல் பற்றிவிளக்கமில்லையே . பின் குழந்தைகளிடம் மட்டும் எப்படி வரும். பிள்ளைகள் கட்டாயம் பாலியல் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். காமுகனிடம் இருந்தும் சிறுவயது கற்பம் பாலியல் நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ் ஆய்வாளர்களும் சமுகபிரபலங்களும் பாலியல் கல்வியை எதிர்கிறார்கள் கேட்டால் சொல்லி தெரிவது காமகலைகள் இல்லை என்பார்கள். ஆனால் இதே தமிழர்களின் கோயில்களில் தான் ஆயகலைகள் அறுபத்திமூன்றையும் சிலையாக செய்து வைத்திருகிறார்கள். கடவுள் இருக்கும் இடம் கருவறை என்னப்படும் அப்படி பட்ட கருவறைகளில் மாமிமாரோடு சாமியார்கள் உள்ளாசகமாக இருக்கிறார்கள். இணையங்களில் காமத்தை பாடமாக நடத்துகிறார்கள். ஆனால் தன்னை காமுகனிடமிருந்தும் பலியல்தொல்லைகளிலும் இருந்து காப்பாற்றி கொள்ள ஒரு குழந்தைக்கு அனுமதிகிரார்களில்லை. கொடுமை கொஞ்சம் மாத்தி சிந்தியுங்கள். கலாசாரம் கெட்டுவிட்டது சமுகம் அழிவுக்கு உட்படுகிறது என்ற கூச்சல் கும்மாளங்களை விட்டு அதற்க்கு வேண்டியவற்றை செய்யுங்கள். ஊடகம் என்னும் பெயரில் படுக்கையறையை   வெட்டை வெளிச்சத்தில் கொண்டுவந்து உங்கள் வாசகர்வட்டத்தை கூட்டுவதுக்கு பதில் நல்ல கருத்துகளை முன்வையுங்கள்.

தமிழன் கலாசாரம் ஒன்றும் கெட்டுவிடவில்லை. அப்படி ஒரு நிலையை ஊடகங்கள் நீங்கள் தான் உருவாக்குக்றீர்கள். நன்றாக சிந்தியுங்கள் ஒரு விடையத்தை பிரசுரிக்கும் முதலில்.

பெற்றோர்களும் சிந்தியுங்கள்... அடுத்தவன் மனைவியை பகலில் ஆடையில்லாமல் இரசிக்கதுடிப்பவர்களும் சிந்தியுங்கள்.


என்றும் அன்புடன்

ஜெனித்தா பிரதீப்

5 comments:

 1. pakirvukku nantri.

  ReplyDelete
 2. //இன்று யாழ்பாணம் முழுக்க முழுக்க காமத்திலே கட்டுண்டு இருப்பது போல் எழுதுகிறீர்கள். ஏன் முன்பு இப்படியில்லையா?//

  அப்படியானால் எப்போ்துமே யாழ்பாணம் காம வெறியர்களின் கூடம் தானோ :((

  ReplyDelete
 3. ///முழுக்க முழுக்க காமத்திலே கட்டுண்டு இருப்பது போல் எழுதுகிறீர்கள்.///
  இதன் அர்த்தம் புரிகிறதா? எங்காவது இருப்பதை கொண்டு எல்லா இடமும் என்று சொல்வது போலவே அன்றில் இருந்து இருக்கிறது.......

  ReplyDelete
 4. http://www.thamilnattu.com/2012/01/blog-post_21.html
  here you can see all the details of the owner of that site and some actions to be taken on them by someone

  ReplyDelete
  Replies
  1. அப்படியானால் எப்போ்துமே யாழ்பாணம் காம வெறியர்களின் கூடம் தானோ :(( // அப்படி அல்ல முன்பு விடுதலை புலிகளுக்கு பயத்தில் யாரும் அதை வெட்ட வெளிச்சத்தில் செய்யவில்லை. ஆனால் அங்கங்கே ஊருக்கு ஊர் ஆரங்கேரிகொண்டுதான் இருந்தன அசிங்கங்கள். எம் பல்லை குத்தி நாம் அடுத்தவரை முகந்து பார்க்க சொல்வது தவறு.

   நன்றி நண்பர் இடிமுழக்கம். சில நேரங்களில் நான் கவலை படுவேன் அர்த்தமில்லா கவிதைகளை ரசிப்பவர்கள் இப்படி பற்ற எழுத்துகளுக்கு அதரவு தருவதே இல்லை. உங்க்கள் ஆதரவுக்கு நன்றி.

   Delete