தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

ரஜினிகாந்த் சொத்து முழுவதையும் தமிழ் மக்களுக்கே வழங்குகிறார்.
எனது உயிரிலும் மேலான ரசிக்க பெருமக்களே பேருந்தில் நடத்துனராக இருந்த நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆயிரங்களில் ஆரம்பித்த எனது வாழ்க்கை உங்கள் அன்பினால் ஆயிரங்கள் இலட்சங்களாகின அது போதாதென்று உங்கள் அன்பு அதிகரிக்க அதிகரிக்க இலட்சங்கள் கோடிகளாகி.ஈழ தமிழர்களின் இடம்பெயர்வாலும் இன்று கோடிகள் பல்கிபெருகிவிட்டன. உங்கள் அன்பினால் சேர்த்த பணத்தில் எனது முதல் மகளுக்கு சீதனம் மட்டும் 100 கோடியும் அடுத்த மகளுக்கு அதை விட அதிகமாகவும் கொடுத்து கல்யாணமும் செய்து வைத்தேன் . அதை விட இன்னும் பல கோடிகள் சேர்த்து வைத்துள்ளேன். எந்திரனில் மட்டுமே எனது வருமானம் உங்களுக்கே தெரியும். எத்தனை கோடிகள் என்று.

எனது பல்லாயிரம் ரசிகர்கள் நான் உடல் நலம் இல்லாமல் இருந்த போது மண்சோறு சாப்பிடுவது , தீச்சட்டி எடுத்தது, அலகு குத்தி காவடி எடுத்தது , இப்படியாக பல வேண்டுதலை செய்ததை நான் அறிவேன். உங்கள் இந்த அன்பை நான் இதுவரை காலமும் எனது வியாபாரத்துக்கு பயன் படுத்திவிட்டேன் என்று நினைக்கும் போது மிகவும் மனது வேதனை படுகிறது.

எனது படம் வெளியாகும் நேரங்களில் பல ரசிகர்கள் எனது பல அடி உயரமான படங்களுக்கு ஏறி மாலை போடுவதும்,பாலபிசேகம் செய்வதுவும் எனக்கு தெரிந்தும் தெரியாமல் இருந்துவிட்டேன். மேலே ஏறும் நீங்கள் விழுந்தால் உங்கள் வைத்திய செலவுக்கு கூட உங்களிடம்  பணம் இல்லை என்பதுவும் தெரியும், எனது படத்துக்கு பாலபிசேகம் செய்யும் ரசிகர்களின் வீட்டில் குடிப்பதுக்கு பால் இல்லாமல் கூட இருந்திருக்கும் அது எல்லாமே தெரிந்திருந்தும் எனது சுய நலத்துக்காக உங்களை பயன் படுத்திவிட்டேன். அதை விட கொடுமையான விடயம் என்னை பார்த்து புகை பிடிக்க பழகிப்போன சிறுவர்கள் எத்தனையோ பேர் என்று தெரிந்தும் அது எனது "ஸ்டைலுக்கு"  கிடைத்த வெற்றியாக கருதினேனே தவிர அதை படங்களில் நிறுத்தவே இல்லை நான் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது நீங்கள் பட்ட மன வேதனையை, உங்கள் புகை பழக்கம் உங்கள் ஆயுளை குறைக்கும் என்று தெரிந்தும் நான் தடுக்காமல் எவ்வளவு சுயநலத்துடன் இருந்துவிட்டேன்.

பாடல் வரிகளில் தத்துவங்களை சொல்லி சொல்லி சேர்த்த பணத்தை கோடிகணக்கில் மகள்களுக்கு சீதனமாகவும் எனது குடும்ப சுக போகத்துக்கும் செலவழித்து விட்டேன்.மற்றயவற்றை சேமிப்பிலும் வைத்து இருக்கிறேனே தவிரஉங்களை பற்றி சிந்திக்கவே இல்லை. அது மட்டும் அல்ல எனது பிறந்த மாநிலத்தில் தொழில்சாலைகளை அமைத்து என்னை உயர்த்தி அழகு பார்த்து ஏணியை போல இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுக்காமல் துரோகம் செய்தேன். இப்படியாக எனது மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்லாமல் நான் உடல் நலம் இல்லாமல் வைத்திய சாலையில் இருக்கும் போது மிகவும் பயந்துவிட்டேன் எனது உயிர் போய்விடுமோ என்று பல சிந்தனைகள் வந்தன வாழ்க்கையே அப்போதுதான் புரிந்தது அது மட்டும் அல்லாமல் அப்போதுதான் உங்கள் அன்பு எனக்கு முழுசாக புரிய தொடங்கியது எனக்காக இவளவு செய்யும் உங்களுக்குதுவுமே செய்ததில்லையே என்று மனம் ஏங்கியது. அதை நான் வைத்திய சாலையில் இருந்து வெளியிட்ட அறிவிப்பில் தெரிந்து இருபீர்கள். என்னடா சுடலை ஞானம் போல வைத்திய சாலையில் இருக்கும் போது சொன்னானே உடல் நிலை சரியாகியதும் கொடுத்த பொருளையும் கொடுத்த வாக்கையும் திருப்பி வாங்கினதே இல்லை என்று வசனம் பேசியவன் உடல் நிலை சரியாகியதும் எல்லாவற்றையும் தூக்கி போட்டுட்டு அடுத்த படத்தில நடிக்க போய்ட்டானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியாமல் இல்லை. இந்த வாக்கும் அரசியலுக்கு வருவானா, மாட்டானா என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருப்பதை போல நினைத்திருப்பதுவும் எனக்கு புரியாமல் இல்லை.

ஒருவனுக்கு அதுவும் எனக்கு என் மனைவிக்கும் காலாம் பூராவும் சுகபோகமாக வாழ எதனை கோடி வேண்டும் அனால் என்னிடம் எத்தனை கோடிகள், சொத்துகள் இருகின்றன இவற்றை எல்லாம் நான் சேர்த்து வைத்து இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனை தமிழர்கள் பசியால் துடித்துக்கொண்டு இருப்பார்கள் என்பதுவும் எனக்கு தெரியாமல் இல்லை. நானெல்லாம் என்ன தலைவன் என்னை அரசியலுக்கு வருவேனா மாட்டேன என்று எல்லாம் எதிர்பார்கிறார்கள் இத்தனை ஏழைகள் பசியால் துடிக்கும் போது பல கொடிகளை ஒதுக்கி வைத்து இருக்கிறேனே என் பணம் என்ற சுய நலத்தில் தானே ? என்னை எல்லாம் எந்த நம்பிக்கையில் அரசியலுக்கு அழைக்கிறார்கள்? என் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவன் நான் அரசாங்க பணத்தில் உதவி செய்வேன் என்று நம்பி வர சொல்கிறார்களோ!!! இப்படியான பாமர முட்டாள் ரசிகர்களை இப்படி இத்தனை காலமும் ஏமாற்றியது எனக்கு மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

என்னிடம் இருக்கும் பணத்தில் எத்தனை ஏழைகளின் குடும்பத்துக்கு கடன் உதவி செய்யலாம், தொழில் செய்ய உதவி செய்யலாம் அது மட்டும் அல்ல ஒரு படம் நடித்தால் குறைந்தது 25 கோடி கிடைக்கும் ஒருவனுக்கு 2 லட்சங்கள் படி கொடுத்தாலே ஒரு படத்தின் மூலம் 1250 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என்னால் மட்டுமே இப்படி என்றால் மொத்த நடிகர்களும் சேர்ந்தால்? நடிகர்கள் மட்டும் அல்ல என்னை போன்ற பணக்காரர்கள் எல்லோரும் சேர்ந்தால் தமிழ் நாட்டையே  மாற்றிவிட முடியாதா? எனது இரு மகள்களுக்கு மட்டும் கொடுத்த சீதன பணத்தில் 12 ,500 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுத்து இருக்கலாம். இதை எல்லாம் சிந்தித்து பார்க்கும் போது நானெல்லாம் எவ்வளவு சுயநலவாதி என என் மனச்சாட்சியே என்னை பார்த்து துப்புகிறது.

முத்து படத்தில் சொத்துகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது போலவும், சிவாஜி படத்தில் மற்றவர்களுக்காக வாழ்வது போல,இப்படி சமுக சிந்தனையாளன் போல  நடித்து சேர்த்த காசை நான் மட்டும் எனது குடும்பம் மட்டும் அனுபவிக்கிறோம். ஒரு மனிதாபிமானமுள்ள மனிதனாக நியவாழ்விலும் நடிப்பது வேதனையளிக்கிறது.நானும் எவ்வளவு நாளாத்தான் நல்லவனாவே நடிக்கிறது?????? 

இன்று புதுவருட நாளிலே எனது மனச்சாட்சி விளித்து கொண்டது, எனது மகள்கள் திறமையானவர்கள் சொந்த காலில் நிக்கும் தகுதி தன்னம்பிக்கை உள்ளவர்கள் அது மட்டும் அல்ல அவர்கள்  கணவர்கள் இருவரும்  நிறையவே சம்பாதிக்கிறார்கள் அத்துடன் நான் கொடுத்த பல கோடிகள் அவர்களிடம் இருகின்றன எனவே அவர்களை பற்றி இனி எனக்கு கவலை இல்லை. என்னுடைய கவலை எல்லாம் என்மேல் ஒப்பற்ற பாசம் வைத்து இருக்கும் உங்களை பற்றியதே!!!அதனால் தான் இந்த முடிவு எனது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை எடுத்துகொண்டு மீதமாக உள்ள பணத்தை உங்களுக்காக பயன் படுத்த போகிறேன்.

இப்படிக்கு உங்கள் தொண்டனாக இந்த நிமிடம் முதல்.
ரஜினிகாந்த்.

ஒரு நடிகனை நடிகன் என்ற வட்டத்தை விட்டு வெளியேயும் அதுபோலவே என நம்பும் ஒரு ரசிகனின் கற்பனையாக இந்த பதிவை இங்கு பதிகிறேன். ஒரு நடிகன் நடிகனாக இருந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வது அவசியம் அற்றது அது அவ ரது சொந்த பிரச்சனை. விமர்சனம் செய்வது தவறு. ஒரு நடிகனை அந்த துறையை விட்டு அரசியல், நாடு, தலைவன் என அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வத்துக்கு முன்பு அதுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை பார்க்கவேண்டும். போது தொண்டு போது வாழ்கையின் சமுதாய அக்கறை படத்துக்கு வெளியேயும் இருக்கிறதா என்று சிந்திக்கவேண்டும். இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியலில் வேறு எந்த நாடிலும் இல்லாத கொடுமை இருக்கிறது எல்லா தேர்தலிலும் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தெரிவு செய்து வாக்களிப்பார்கள். தமிழ் நாட்டில் மட்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை தெரிவு செய்துவிட்டு பின் போடுகிறார்கள் ஏனெனில் யாருக்கு போட்டாலும் ஒன்றுதான் அப்போதைய நிலவரப்படி யார் அதிக கேட்டவர்கள் என பார்த்து அவர்களுக்கு போட கூடாது   என நினைத்து மற்றவர்களுக்கு போடுகிறார்கள்.

மக்களே சிந்தியுங்கள். உங்களால் தான் சமுதாய சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவே பயப்பிடுகிறார்கள்.

இந்த சினிமா, அரசியல் இதை ஒரு எல்லையுடனே வைத்து கொள்ளுங்கள் இல்லை உங்கள் வாழ்கையை அழித்துவிடும்.

இந்த பதிவை பார்த்து எனக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு கோபம் என்று நினைக்கவேண்டாம் ஒரு ரசிகனாக ரஜினி படத்தை நானும் ரசிப்பேன். என்றும்  வெறியனாகியதில்லை. இது ஒரு ஆதங்கம் ரஜனியை ஒரு சிறு உதாரணமாக எடுத்தேன் இப்படியான பல பணக்காரர்கள் நாளும் எங்களை சுரண்டுகிறார்கள் சினிமா காரர்களாக மட்டும் அல்ல அரசியல் வாதியாக, முதலாளியாக இப்படியானவர்களுக்கு மனிதாபிமானமே இருப்பதில்லை. வெளியில்  தேனொழுக பேசி பேசியே அவர்கள் குடும்பம் பல தலைமுறை சுகபோகமாக வாழ வழி செய்து விடுவார்கள் இது தெரியாமல் நாங்கள்  அவர்கள் சொல்லும்   வார்த்தையை  நம்பி அவர்கள் பின்னால் சென்று எங்கள் வாழ்கையை தொலைக்கிறோம்.எங்கள் அறியாமைதான் அவர்கள் மூலதனம்.

அன்னை திரேசா ஒரு முறை பணம் கேட்டு சென்ற இடத்தில் ஒருவர்  காறி உமிழ்ந்து விடுகிறார்கள் அப்போது கூட அவர் சொன்னா வார்த்தை இதை நான் எனக்கு வைத்துகொள்கிறேன் ஏழை குழந்தைகாளுக்கு எதவாது தாருங்கள். இப்படி இல்லாதவார்கள் எத்தனையோ சேவைகள் செய்து இருக்கும் போது இருக்கும் இவர்கள்???????

தங்களிடம் பணம் இல்லாவிட்டலும் இருபவர்களிடம் கையேந்தி சிறுக சிறுக சேர்த்து இல்லதாவார்காளுக்கு உதவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கும் நாட்டில் இப்படி இருப்பதை பதுக்கி வைத்து தத்துவம் பேசும் இவர்கள் எதிர் காலத்தில் நாட்டை ஆளபோகிறார்களாம். 


36 comments:

 1. wonderful.antha rajini pol oru kevalamana piravi yarume illai.kudikaran.pombalai porukki.avanukku ivvalavu nalla per. avan marumakan athai vida asingam. avan paattirku intha varaverpu.ellam kalikalam.

  ReplyDelete
 2. அருமையான பதிவு சிந்திக்க வைக்கிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான பதிவு.

  ReplyDelete
 3. தமிழ்நாட்டுக்கு தேவையான பதிவு.
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 4. சரியான சந்தர்ப்பத்தில் மிகச் சரியான சூடு, தமிழனுக்கும் ரஜினிக்கும். இனிமேலாவது தமிழ்நாட்டுத் தமிழனும் உலகத் தமிழனும் திருந்துவானா?

  ReplyDelete
 5. "என்னை பார்த்து புகை பிடிக்க பழகிப்போன சிறுவர்கள் எத்தனையோ பேர் என்று தெரிந்தும் அது எனது "ஸ்டைலுக்கு" கிடைத்த வெற்றியாக கருதினேனே தவிர அதை படங்களில் நிறுத்தவே இல்லை நான் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது நீங்கள் பட்ட மன வேதனையை, உங்கள் புகை பழக்கம் உங்கள் ஆயுளை குறைக்கும் என்று தெரிந்தும் நான் தடுக்காமல் எவ்வளவு சுயநலத்துடன் இருந்துவிட்டேன்."

  unmai..

  ReplyDelete
 6. emanda rasigargalil nanum oruvan

  ReplyDelete
 7. cinema,cinema enru irrukkum
  perumpalana nam makkal
  irrukkumvarai intha sabakedu
  thodarum.nalla pathivu.
  VAZHUTHKKAL.
  ABISHEK.AKIL...

  ReplyDelete
 8. adada uthama tamil puthiraan thaan yaa nee

  ReplyDelete
 9. rajinikanth's family is in rush to make more money as soon as possible.....they can't afford to give some rest to him ....

  ReplyDelete
 10. எனது பல அடி உயரமான படங்களுக்கு ஏறி மாலை போடுவதும்,பாலபிசேகம் செய்வதுவும் எனக்கு தெரிந்தும் தெரியாமல் இருந்துவிட்டேன். மேலே ஏறும் நீங்கள் விழுந்தால் உங்கள் வைத்திய செலவுக்கு கூட உங்களிடம் பணம் இல்லை என்பதுவும் தெரியும், எனது படத்துக்கு பாலபிசேகம் செய்யும் ரசிகர்களின் வீட்டில் குடிப்பதுக்கு பால் இல்லாமல் கூட இருந்திருக்கும் அது எல்லாமே தெரிந்திருந்தும் எனது சுய நலத்துக்காக உங்களை பயன் படுத்திவிட்டேன்.

  muddalukku enna sonnalum puriyaathu.
  nalla pathivu vaalthukkal.

  ReplyDelete
 11. தங்களிடம் பணம் இல்லாவிட்டலும் இருபவர்களிடம் கையேந்தி சிறுக சிறுக சேர்த்து இல்லதாவார்காளுக்கு உதவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கும் நாட்டில் இப்படி இருப்பதை பதுக்கி வைத்து தத்துவம் பேசும் இவர்கள் எதிர் காலத்தில் நாட்டை ஆளபோகிறார்களாம்.

  hahaha..

  ReplyDelete
 12. சிந்திக்க வேண்டிய விசயம்.

  ReplyDelete
 13. poramaiaduththavanil poramai konda naam makkalukku seithathellaam thurokam,unmaiyil uzhaiththu uyarnthavanai paarththu ippadi poraamaippada,erissalpada izhivaana tamilarum irukkaanka enkaiyil tamilanai enni kanneer vadikkiren.

  ReplyDelete
 14. உன்மையான்,அருமையான பதிவு இது.பகிர்ந்ததிர்க்கு ஆயிரம் கோடி நண்றி நன்பா. அவன் ரசிகனுங்க எப்பவும் திருந்தமாட்டானுங்க..அவனைபோல...

  ReplyDelete
 15. Thalaivar super still wow. nee ennaezhuthi irukanu padika villai thanks for thalaivan still

  ReplyDelete
 16. தலைவர் யார்? எதுக்கு? இப்படி என்ன எழுதி இருக்கிறது என்று வாசிக்காமல் படத்தை பார்த்து பின்னூட்டல் போடுவது போலவே தலைவன் என்ற புலம்பலும்.

  ReplyDelete
 17. Arputham ,Arumaiyana pathivu ,Inimelavathu thirunthattum Intha Ilaya Samuthayam.

  ReplyDelete
 18. I am not accepting this document, he is doing the hard work to get this money. All the actors getting good monies who are enteraining the people. I think this person is very jelous or racist.
  Please remember his family is running charity

  ReplyDelete
 19. கடினமாக உழைக்கிறார் சம்பாதிக்கிறார். உண்மைதான் ஆனால் கடினமாக உழைப்பவர்கள் மற்றவர்களுக்குஉதவ கூடாதா இது பணக்காரர்கள் சட்டமா? உலகுக்கே உணவளக்கும் விவசாயியை விடவா கடின உழைப்பு? சரி கடின உழைப்பு இருந்து விட்டு போகட்டும் அண்ணன் இயந்திரன் பட தயாரிப்பு காணொளி பார்க்கவில்லை போலும்,அதிக ரசிகர்களை கவரும் சண்டை,நடன காட்சிகளில் யார் உழைப்பு இருந்ததென்று.அப்படி கடினமாக உழைப்பவர்களுக்கு மிஞ்சுவதெல்லாம் உடல் வழியும் சுறு தொகை பணமும் தான். பெயர் நாயகனுக்கு. என்னதான் சொன்னாலும் சிலருக்கு இது புரியாது, குடிப்பவர்கள், புகை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இதனால் நோய்வாய் பட்டு இருக்கும் பொது வைத்தியர் குணமடைந்து வீடு செலலும் பொது சொல்லுவார் இனி குடித்தால் உயிருக்கு ஆபத்து என்று. ஆனால் மனவடக்கம் இல்லாதவர்கள் உயிரை பற்றி கவலை படாமல் மீண்டும் குடிப்பார்கள். இப்படி பட்டவர்கள் தான் மனிதர்கள். இது இயற்கையாகவே மனிதனின் மனதில் இருக்கும் சுபாவம். இதை சிலர்தான் வெற்றிகொள்கிறார்கள்.பலர் வெற்றிகொண்டதாக நடிக்கிறார்கள்.
  எனக்கு பொறாமை, இனவெறி என ஒரு நண்பர் மேலே சொல்லி இருக்கிறார் ஒரு வர்க்கம் உன்ன உணவில்லாமல் இருக்க இன்னொரு வர்கள் பல தலை முறைக்கு சொத்து சேர்க்க , அவர்களை தலைவர், குடும்பமே கருணை உள்ளவர்கள் என்று சொல்லும் முட்டாள்கள் குழுவே இருக்கும் போது நாங்கள் எவ்வளவு முயன்றாலும் சில பாமரர்களை திருந்துவதுக்கு சில அங்கிலம் தெரிந்த படித்த முட்டாள்கள் தடையாக இருக்கிறார்கள்.என்ன செய்ய.

  ReplyDelete
 20. சினிமா போதை. போதைக்கு அடிமை ஆகியவர்களை அதில் இருந்து விலக்குவது கடினம்.

  ReplyDelete
 21. பிரமாதமான பதிவு.நல்ல கற்பனை. கடைசிவரை கற்பனயாகவே இருக்கும்.

  ReplyDelete
 22. @soorya bala
  உண்மைதான் நண்பரே...நன்றி உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 23. எத்தனயோ நூறு கோடிகளை சம்பாதித்து விட்டு ரஜனி தானே புயல் நிவாரணத்திற்கு கொடுத்தது வெறும் பத்து லட்சம். த்தூ........ கமல் கூட பரவில்லை, அவர் பதினைந்து லட்சம் கொடுத்திருக்கிறார்.

  ReplyDelete
 24. அவர் கொடுக்கவேண்டும் என்பதை விட நாம் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை,தமிழ்ப் பண்பு நமக்கு வரட்டும்,நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கள்,கோடிகணக்கில் கொட்டும் தயாரிப்பாளர்,தேவையற்ற,நமக்கு சம்பந்தமற்ற கதைகளை தரும் இயக்குனர்களை புறக்கணியுங்கள்.குறைந்த செலவில் கருத்தாழம் கொண்ட படங்களை நீங்கள் வரவேற்றால் ரஜனி கூட அப்படித்தான் நடிப்பார்,குசேலனில் உண்மை பேசியதால் அப்படம் தோல்வி,நீங்கள் ரஜனியை எப்படி பார்க்கிறீர்கள்??சூப்பர்மானாகத்தானே!!அவரும் அவர்கள்,மூன்று முடிச்சு,ஆறிலிருந்து அறுபதுவரை....நடிக்கலையா??வில்லனாக புகழடையலையா?கோமண மில்லா ஊரில் கோமணம் கட்டியவன் முட்டாள்.அமெரிக்க ஜனாதிபதி ரீகன் கூட நடிகராமே!!அரசியலுக்கு வருபவர்கள் ஐரோப்பாவில் அரசியல் ,சட்டம் படித்து பட்டதாரிகளாயிருக்கவேண்டும்.ரஜனி வரமுதலே புகைபிடிப்பது இருக்கிறது,வசந்தமாளிகை பாருங்கள்,கமலின் வாழ்வே மாயம் சொல்லாத அறிவுரையா??ரஜனி உண்மையாக நடக்க விரும்பினாலும் அவர் ரசிகரால் அது தடைப்படுகிறது.பணம் குறுக்கு வழியில் சம்பாதிப்பவர்களை தலைவராக ஏற்று மந்திரியாக்கும் இன்றைய நாளில் நேர்வழியில் உழைக்கும் அவரை தூற்ற லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் எவனுக்கும் அதிகாரமில்லை.உங்கள் கைகளை சுத்தமாக்கியபின்னால் அடுத்தவன் முதுகு அழுக்கை பேசலாமே!!காதலுக்கே லஞ்சம் கொடுக்கும் மனிதா கொடுப்பது அவனவன் விருப்பம்,கோடை என்பது எல்லோருக்கும் தெரியத்தான் கொடுக்கவேண்டுமென்பதல்ல.பிச்சைக்காரனுக்கு பத்துப் பைசா போடாத நாமெல்லாம் அடுத்தவனில் லட்சங்கள் பற்றி அலட்சியமாக பேசுவது ????????????????

  கதைக்கு அவசியமென்று பெண்களை நிர்வாணப்படுத்தி இளைஞரை உசுப்பேத்தி உழைக்கும் இயக்குனர்களை சாணியால் அடித்து விரட்டுவோமா??

  ReplyDelete
  Replies
  1. கொடுப்பது அவரவர் விருப்பம் உண்மைதான் அது அவரவர் மனதை பொறுத்தது...அதைதான் நானும் இங்கே வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறேன்...

   ரஜினி ரசிகர்கள் பற்றி சொல்லி இருந்தீர்கள் ரசிகர்கள் தப்பானவர்களாக இருப்பதால் தான் ரஜனி இப்படி இருக்கிறார் என்பது ஆன்மிகம் பேசும் அவருக்கு சரியானதா? தனித்துவம் அற்றவரா அவர்?

   Delete
 25. Arumaiyana Karuthukku Nanri... Sinthikka vaikum Katturai..Suya olukkam matrum suya sinthanai ellarukkum venum.

  ReplyDelete
 26. நிழல் நிஜமானால்
  நன்றாக இருக்கும்

  ReplyDelete
 27. நல்ல பதிவு இடி....உங்கள் சேவை தேவை உங்கள் தைரியத்தை பாராட்டுகின்றேன்

  ReplyDelete
 28. மக்களிடமிருந்து பெற்ற பணத்தை
  மக்களுக்கே வாரி வாரி வழங்கிய
  நடிகர்கள் ஒரு சிலரே.
  அது சென்ற தலைமுறையோடு போயிற்று. .

  இந்த பதிவையெல்லாம்
  படிக்க அவர்களுக்கு எது நேரம்?

  ஆன்மிகம் பேசுவதற்கு மட்டும்தான்
  இந்த காலத்தில்
  கடைபிடிக்க அல்ல

  அவர் ஆன்மிகம் பற்றி பேசினால்
  அதையும் விற்று காசாக்க
  அவர் பின்னால் ஊடகங்கள்
  காத்து கிடக்கின்றன.

  அடுத்த மெகா ப்ராஜெக்ட் என்ன என்பதுதான்
  அவர்களின் தாரக மந்திரம்.

  மற்றவர்களை தர்மம் செய்ய நாம்
  ஊக்குவிப்பதை விட
  நம்மால் முடிந்த அளவிற்கு
  விளம்பரமில்லாமல் செய்தால் போதும்
  நம் ஜென்மம் கடைதேறும்.

  மற்றவர்களுக்கு அறிவுரை
  சொல்ல நாம் யார்?

  எவன் ஒருவன் பிறருக்கு கொடுக்கிறானோ
  அவன் தனக்குத்தான் கொடுத்து கொள்கிறான்
  என்று நீதி நூல்கள் சொல்லும்

  அதை ஒருவன் உணரும்போது
  அவர்களே தர்மம் செய்ய புகுவார்கள்.

  ஒவ்வொருவர் வாழ்விலும்
  அந்த நாள் ஒருநாள் நிச்சயம் வரும்.

  ReplyDelete