தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

ரஜினிகாந்த் சொத்து முழுவதையும் தமிழ் மக்களுக்கே வழங்குகிறார்.
எனது உயிரிலும் மேலான ரசிக்க பெருமக்களே பேருந்தில் நடத்துனராக இருந்த நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆயிரங்களில் ஆரம்பித்த எனது வாழ்க்கை உங்கள் அன்பினால் ஆயிரங்கள் இலட்சங்களாகின அது போதாதென்று உங்கள் அன்பு அதிகரிக்க அதிகரிக்க இலட்சங்கள் கோடிகளாகி.ஈழ தமிழர்களின் இடம்பெயர்வாலும் இன்று கோடிகள் பல்கிபெருகிவிட்டன. உங்கள் அன்பினால் சேர்த்த பணத்தில் எனது முதல் மகளுக்கு சீதனம் மட்டும் 100 கோடியும் அடுத்த மகளுக்கு அதை விட அதிகமாகவும் கொடுத்து கல்யாணமும் செய்து வைத்தேன் . அதை விட இன்னும் பல கோடிகள் சேர்த்து வைத்துள்ளேன். எந்திரனில் மட்டுமே எனது வருமானம் உங்களுக்கே தெரியும். எத்தனை கோடிகள் என்று.

எனது பல்லாயிரம் ரசிகர்கள் நான் உடல் நலம் இல்லாமல் இருந்த போது மண்சோறு சாப்பிடுவது , தீச்சட்டி எடுத்தது, அலகு குத்தி காவடி எடுத்தது , இப்படியாக பல வேண்டுதலை செய்ததை நான் அறிவேன். உங்கள் இந்த அன்பை நான் இதுவரை காலமும் எனது வியாபாரத்துக்கு பயன் படுத்திவிட்டேன் என்று நினைக்கும் போது மிகவும் மனது வேதனை படுகிறது.

எனது படம் வெளியாகும் நேரங்களில் பல ரசிகர்கள் எனது பல அடி உயரமான படங்களுக்கு ஏறி மாலை போடுவதும்,பாலபிசேகம் செய்வதுவும் எனக்கு தெரிந்தும் தெரியாமல் இருந்துவிட்டேன். மேலே ஏறும் நீங்கள் விழுந்தால் உங்கள் வைத்திய செலவுக்கு கூட உங்களிடம்  பணம் இல்லை என்பதுவும் தெரியும், எனது படத்துக்கு பாலபிசேகம் செய்யும் ரசிகர்களின் வீட்டில் குடிப்பதுக்கு பால் இல்லாமல் கூட இருந்திருக்கும் அது எல்லாமே தெரிந்திருந்தும் எனது சுய நலத்துக்காக உங்களை பயன் படுத்திவிட்டேன். அதை விட கொடுமையான விடயம் என்னை பார்த்து புகை பிடிக்க பழகிப்போன சிறுவர்கள் எத்தனையோ பேர் என்று தெரிந்தும் அது எனது "ஸ்டைலுக்கு"  கிடைத்த வெற்றியாக கருதினேனே தவிர அதை படங்களில் நிறுத்தவே இல்லை நான் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது நீங்கள் பட்ட மன வேதனையை, உங்கள் புகை பழக்கம் உங்கள் ஆயுளை குறைக்கும் என்று தெரிந்தும் நான் தடுக்காமல் எவ்வளவு சுயநலத்துடன் இருந்துவிட்டேன்.

பாடல் வரிகளில் தத்துவங்களை சொல்லி சொல்லி சேர்த்த பணத்தை கோடிகணக்கில் மகள்களுக்கு சீதனமாகவும் எனது குடும்ப சுக போகத்துக்கும் செலவழித்து விட்டேன்.மற்றயவற்றை சேமிப்பிலும் வைத்து இருக்கிறேனே தவிரஉங்களை பற்றி சிந்திக்கவே இல்லை. அது மட்டும் அல்ல எனது பிறந்த மாநிலத்தில் தொழில்சாலைகளை அமைத்து என்னை உயர்த்தி அழகு பார்த்து ஏணியை போல இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுக்காமல் துரோகம் செய்தேன். இப்படியாக எனது மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்லாமல் நான் உடல் நலம் இல்லாமல் வைத்திய சாலையில் இருக்கும் போது மிகவும் பயந்துவிட்டேன் எனது உயிர் போய்விடுமோ என்று பல சிந்தனைகள் வந்தன வாழ்க்கையே அப்போதுதான் புரிந்தது அது மட்டும் அல்லாமல் அப்போதுதான் உங்கள் அன்பு எனக்கு முழுசாக புரிய தொடங்கியது எனக்காக இவளவு செய்யும் உங்களுக்குதுவுமே செய்ததில்லையே என்று மனம் ஏங்கியது. அதை நான் வைத்திய சாலையில் இருந்து வெளியிட்ட அறிவிப்பில் தெரிந்து இருபீர்கள். என்னடா சுடலை ஞானம் போல வைத்திய சாலையில் இருக்கும் போது சொன்னானே உடல் நிலை சரியாகியதும் கொடுத்த பொருளையும் கொடுத்த வாக்கையும் திருப்பி வாங்கினதே இல்லை என்று வசனம் பேசியவன் உடல் நிலை சரியாகியதும் எல்லாவற்றையும் தூக்கி போட்டுட்டு அடுத்த படத்தில நடிக்க போய்ட்டானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியாமல் இல்லை. இந்த வாக்கும் அரசியலுக்கு வருவானா, மாட்டானா என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருப்பதை போல நினைத்திருப்பதுவும் எனக்கு புரியாமல் இல்லை.

ஒருவனுக்கு அதுவும் எனக்கு என் மனைவிக்கும் காலாம் பூராவும் சுகபோகமாக வாழ எதனை கோடி வேண்டும் அனால் என்னிடம் எத்தனை கோடிகள், சொத்துகள் இருகின்றன இவற்றை எல்லாம் நான் சேர்த்து வைத்து இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனை தமிழர்கள் பசியால் துடித்துக்கொண்டு இருப்பார்கள் என்பதுவும் எனக்கு தெரியாமல் இல்லை. நானெல்லாம் என்ன தலைவன் என்னை அரசியலுக்கு வருவேனா மாட்டேன என்று எல்லாம் எதிர்பார்கிறார்கள் இத்தனை ஏழைகள் பசியால் துடிக்கும் போது பல கொடிகளை ஒதுக்கி வைத்து இருக்கிறேனே என் பணம் என்ற சுய நலத்தில் தானே ? என்னை எல்லாம் எந்த நம்பிக்கையில் அரசியலுக்கு அழைக்கிறார்கள்? என் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவன் நான் அரசாங்க பணத்தில் உதவி செய்வேன் என்று நம்பி வர சொல்கிறார்களோ!!! இப்படியான பாமர முட்டாள் ரசிகர்களை இப்படி இத்தனை காலமும் ஏமாற்றியது எனக்கு மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

என்னிடம் இருக்கும் பணத்தில் எத்தனை ஏழைகளின் குடும்பத்துக்கு கடன் உதவி செய்யலாம், தொழில் செய்ய உதவி செய்யலாம் அது மட்டும் அல்ல ஒரு படம் நடித்தால் குறைந்தது 25 கோடி கிடைக்கும் ஒருவனுக்கு 2 லட்சங்கள் படி கொடுத்தாலே ஒரு படத்தின் மூலம் 1250 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என்னால் மட்டுமே இப்படி என்றால் மொத்த நடிகர்களும் சேர்ந்தால்? நடிகர்கள் மட்டும் அல்ல என்னை போன்ற பணக்காரர்கள் எல்லோரும் சேர்ந்தால் தமிழ் நாட்டையே  மாற்றிவிட முடியாதா? எனது இரு மகள்களுக்கு மட்டும் கொடுத்த சீதன பணத்தில் 12 ,500 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுத்து இருக்கலாம். இதை எல்லாம் சிந்தித்து பார்க்கும் போது நானெல்லாம் எவ்வளவு சுயநலவாதி என என் மனச்சாட்சியே என்னை பார்த்து துப்புகிறது.

முத்து படத்தில் சொத்துகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது போலவும், சிவாஜி படத்தில் மற்றவர்களுக்காக வாழ்வது போல,இப்படி சமுக சிந்தனையாளன் போல  நடித்து சேர்த்த காசை நான் மட்டும் எனது குடும்பம் மட்டும் அனுபவிக்கிறோம். ஒரு மனிதாபிமானமுள்ள மனிதனாக நியவாழ்விலும் நடிப்பது வேதனையளிக்கிறது.நானும் எவ்வளவு நாளாத்தான் நல்லவனாவே நடிக்கிறது?????? 

இன்று புதுவருட நாளிலே எனது மனச்சாட்சி விளித்து கொண்டது, எனது மகள்கள் திறமையானவர்கள் சொந்த காலில் நிக்கும் தகுதி தன்னம்பிக்கை உள்ளவர்கள் அது மட்டும் அல்ல அவர்கள்  கணவர்கள் இருவரும்  நிறையவே சம்பாதிக்கிறார்கள் அத்துடன் நான் கொடுத்த பல கோடிகள் அவர்களிடம் இருகின்றன எனவே அவர்களை பற்றி இனி எனக்கு கவலை இல்லை. என்னுடைய கவலை எல்லாம் என்மேல் ஒப்பற்ற பாசம் வைத்து இருக்கும் உங்களை பற்றியதே!!!அதனால் தான் இந்த முடிவு எனது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை எடுத்துகொண்டு மீதமாக உள்ள பணத்தை உங்களுக்காக பயன் படுத்த போகிறேன்.

இப்படிக்கு உங்கள் தொண்டனாக இந்த நிமிடம் முதல்.
ரஜினிகாந்த்.

ஒரு நடிகனை நடிகன் என்ற வட்டத்தை விட்டு வெளியேயும் அதுபோலவே என நம்பும் ஒரு ரசிகனின் கற்பனையாக இந்த பதிவை இங்கு பதிகிறேன். ஒரு நடிகன் நடிகனாக இருந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வது அவசியம் அற்றது அது அவ ரது சொந்த பிரச்சனை. விமர்சனம் செய்வது தவறு. ஒரு நடிகனை அந்த துறையை விட்டு அரசியல், நாடு, தலைவன் என அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வத்துக்கு முன்பு அதுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை பார்க்கவேண்டும். போது தொண்டு போது வாழ்கையின் சமுதாய அக்கறை படத்துக்கு வெளியேயும் இருக்கிறதா என்று சிந்திக்கவேண்டும். இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியலில் வேறு எந்த நாடிலும் இல்லாத கொடுமை இருக்கிறது எல்லா தேர்தலிலும் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தெரிவு செய்து வாக்களிப்பார்கள். தமிழ் நாட்டில் மட்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை தெரிவு செய்துவிட்டு பின் போடுகிறார்கள் ஏனெனில் யாருக்கு போட்டாலும் ஒன்றுதான் அப்போதைய நிலவரப்படி யார் அதிக கேட்டவர்கள் என பார்த்து அவர்களுக்கு போட கூடாது   என நினைத்து மற்றவர்களுக்கு போடுகிறார்கள்.

மக்களே சிந்தியுங்கள். உங்களால் தான் சமுதாய சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவே பயப்பிடுகிறார்கள்.

இந்த சினிமா, அரசியல் இதை ஒரு எல்லையுடனே வைத்து கொள்ளுங்கள் இல்லை உங்கள் வாழ்கையை அழித்துவிடும்.

இந்த பதிவை பார்த்து எனக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு கோபம் என்று நினைக்கவேண்டாம் ஒரு ரசிகனாக ரஜினி படத்தை நானும் ரசிப்பேன். என்றும்  வெறியனாகியதில்லை. இது ஒரு ஆதங்கம் ரஜனியை ஒரு சிறு உதாரணமாக எடுத்தேன் இப்படியான பல பணக்காரர்கள் நாளும் எங்களை சுரண்டுகிறார்கள் சினிமா காரர்களாக மட்டும் அல்ல அரசியல் வாதியாக, முதலாளியாக இப்படியானவர்களுக்கு மனிதாபிமானமே இருப்பதில்லை. வெளியில்  தேனொழுக பேசி பேசியே அவர்கள் குடும்பம் பல தலைமுறை சுகபோகமாக வாழ வழி செய்து விடுவார்கள் இது தெரியாமல் நாங்கள்  அவர்கள் சொல்லும்   வார்த்தையை  நம்பி அவர்கள் பின்னால் சென்று எங்கள் வாழ்கையை தொலைக்கிறோம்.எங்கள் அறியாமைதான் அவர்கள் மூலதனம்.

அன்னை திரேசா ஒரு முறை பணம் கேட்டு சென்ற இடத்தில் ஒருவர்  காறி உமிழ்ந்து விடுகிறார்கள் அப்போது கூட அவர் சொன்னா வார்த்தை இதை நான் எனக்கு வைத்துகொள்கிறேன் ஏழை குழந்தைகாளுக்கு எதவாது தாருங்கள். இப்படி இல்லாதவார்கள் எத்தனையோ சேவைகள் செய்து இருக்கும் போது இருக்கும் இவர்கள்???????

தங்களிடம் பணம் இல்லாவிட்டலும் இருபவர்களிடம் கையேந்தி சிறுக சிறுக சேர்த்து இல்லதாவார்காளுக்கு உதவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கும் நாட்டில் இப்படி இருப்பதை பதுக்கி வைத்து தத்துவம் பேசும் இவர்கள் எதிர் காலத்தில் நாட்டை ஆளபோகிறார்களாம். 


மனிதத்தை தொலைத்துவிட்டு(பசியும் நானும் இரட்டை பிறவி)"தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆனால் எனக்கு மட்டும் எத்தனை தை பிறந்து விட்டது வழிகள் மட்டும் பிறக்கவே இல்லை. 

உலகமே கோலாகலமாக கொண்டாடுகிறது இன்று 2011 இன் இறுதி நாளாம் எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள், வானவேடிக்கைகள் விற்கும் கடைகள் மக்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். எனக்கு எல்லா நாளும் ஒன்றுதான் ஆனால் இப்படியான நாட்கள் என்றால் எங்கள் வீட்டில் ஏகபட்ட விருந்தாளிகள் எங்களுக்கும் வழமையை விட கொண்டாட்டமே! 

என்ன சொன்னாலும் சென்ற வருடத்தை விட இம்முறை மக்கள் புதுவருடத்தை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது உலக பொருளாதார வீழ்சியில் என்நாட்டு மக்களையும் விதிவிலக்கக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். மக்கள் கூட்டம் எங்கள் வீட்டருகில் அதிகமாக இல்லை இம்முறை.

எனது தந்தை,தாய்  யார் என்று எனக்கு இதுவரை தெரியாது என்னை நான் சிறுவயது இருக்கும் போதே இப்போதைய தாய் என்னை இலங்கை காசுக்கு 3000 ரூபாவுக்கு என்தாயிடம் இருந்து என்னை தன் வியாபாரத்துக்கு மூலதனமாக வாங்கினாராம் அப்போது எனக்கு வயது ஆறு மாதங்கள் என்ன நண்பர்களே புரியவில்லையா நான் எப்படி மூலதனமாக முடியும் என்று ?? என் பெற்ற தாய் மட்டும் அல்ல இப்போது வளர்க்கும் தாயும் செய்யும் தொழில் வேறெதுவும் இல்லை பிச்சை எடுப்பதுதான். எனது பெற்ற தாயின் பெயரை மட்டும் எனக்கு சொன்னார்கள் வேறெதுவும் தெரியாது.

எங்கள் வாழ்க்கை இந்த கடை தெருவில் தான் அதிகாலையில் எழுந்திருப்போம் கடைகள் திறப்பதுக்காக எங்களை அந்த கடைகளில் தொழிலாளிகள் வந்து எழுப்புவார்கள் அவர்கள் கடைகளை பூட்டி போனதும் வந்து தூங்குவோம். பல நாள் பட்டினி.பட்டினி மட்டும்தான் எங்களுக்கு நன்கு பழகிப்போன நண்பன் என்னதான் பசியுடன் இருந்தாலும் அதை மறந்த நேரங்கள் மனதை கனக்க வைத்திருக்கிறது என் வயது பிள்ளைகளை அவர்கள் பெற்றோர்கள் என்ன கவனமாக கூட்டி வருவார்கள் அன்பாக அணைத்தபடி அவர்கள் விரும்பியதை வாங்கி கொடுத்து அரவணைத்து அவர்கள் செய்யும் குறும்புகளை ரசித்தபடி செல்லும் பொது மனதுக்குள் அழுவேன் பாரமாகி தாண்டு போகும் மனது பசி  பறந்து போகும். அந்த தாழ்வில் இருந்து மீழ்வதுகுள் என் வளர்ப்பு அம்மா வந்து அடிப்பார் அதோ வருகிற துறையிடம் போய் கேளு பார்க்க பணக்காரர் போல தெரிகிறார் என்று...........

நேற்று இரவு கூட நள்ளிரவில் பலர் வானவேடிக்கைகள் செலுத்தி அழகு பார்த்தார்கள். பழகிபோன பசியுடன் இருந்த நானும் ரசித்தேன் இவர்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பங்கை கொடுத்தாலாவது இங்கு இருக்கும் பலரின் பசி போகுமே என்று அதங்க பட்டு கொள்வேன்.

 என்னதான் மனிதர்கள் பலர் எங்கள் தெருவில் சென்றாலும் மனிதம் என்பது சிலரிடம் தான் காண்கிறோம் .

தாய்லாந்தில் வசிப்பவர்கள் கரப்பான் பூச்சியை ருசிக்கிறார்கள் அதை இங்குள்ளவர்கள் நினைத்தாலே அருவருகிறார்கள், இங்குள்ளவர்கள் மாமிசம் புசிக்கிறார்கள்  அதை பூசாரிகள் வாயை சுளிக்கிறார்கள். அவரவர் வாழும் வளரும் சூழழுக்கு ஏற்ப அவர்கள் பழக்கங்கள் இருக்கிறது. என் பழக்கம் என் சுற்றத்தை அண்டியே..

நான் பிச்சை கேட்கும் போது பலர் என்னை ஏசுவார்கள் பலர் பரிதாபமாக பார்ப்பார்கள் பள்ளிகூடம் செல்வதில்லையா என்று கேட்பார்கள் நான் மாட்டேன்  என்றா  சொல்கிறேன் எப்படி போவது இன்று இங்கு, நாளை எங்கோ? ஒரு வீடு இல்லை பசிக்கு உணவே இல்லை படிக்க எப்படி? உடை என்று சொல்வதுக்கு எதுவும் இல்லை எப்படி நாங்கள் பள்ளிக்கு செல்வது? போகலாம் பணம் படைத்தவர்கள் மனம் வைத்தால் அவர்கள் மனம் எல்லாம் மதுபானம் மீதும், சுகபோகம் மீதும் எப்படி அவர்கள் எங்களை பார்ப்பார்கள்? பல தலை முறைக்கு பணம் சேர்த்து வைப்பார்கள் பக்கத்தில் பசித்த வயிறுடன் பலர் இருக்க!!! பெற்றால்தான் பிள்ளை. எவனோ பெற்ற பிள்ளை பசியால் இருந்தால் என்ன இறந்தால் என்ன? நான் மனிதன் என்று மார்தட்டுகிறார்கள்.

எங்களை கேட்கிறார்கள் சில அறிவாளிகள் கை கால் நன்றாகத்தானே இருக்கிறது எதுக்காக இப்படி பழகுகிறிர்கள்  என்று எனக்குள் சிரித்து கொண்டேன். பல பெரிய படிப்புகளை படித்து பட்டங்கள் பெற்று விட்டு சீதனம் என்ற பெயரில் பிச்சை எடுக்கும்  இவர்கள் என்னை கேட்கிறார்கள் கைகால் நன்றாக இருக்கிறது என்று...

என்னால் முடியவில்லை எத்தனையோ படித்த, பல திறமைகள் இருக்கும் மனிதர்களே இந்த உலகில் வாழ்கையை போராட்டமாக கழிக்கும் போது இந்த சிறு வயதில் எந்த உதவியும் இல்லாமல் எப்படி பிச்சை எடுப்பதை நிறுத்துவேன்?பிச்சை எடுக்காதே என்று சொல்லும் எவரும் அதுக்கான மாற்று வழியை சொல்வதில்லை??????

இங்குதான் பிறக்கவேண்டும் என்று நான் விரும்பி பிறக்கவில்லை. ஒட்டியே பிறந்த நண்பனும் அவனே, எதிரியும் அவனே,"பசி" என்னை போல பலர் எங்களை கைதூக்கி விட யாரும் இல்லை. ஆனால் மனிதர்கள் வாழ எந்த கிரகத்தில் வசதி இருக்கிறது என்று பல கோடிகள் செலவழித்து போட்டி போட்டு தேடுகிறார்கள் செல்வந்த நாடுகள். அவர்களை குறை சொல்லவும் முடியாது வறுமையை ஒழிக்க மற்ற நாடுகள் உதவி செய்தால் அந்த பணமும் அமைச்சர்கள் சுகபோகத்துக்கு பங்கிடபடுகிறது.

பல திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உழைப்பை முதலாளிகள் சுரண்டுகிறார்கள் அந்த திறமையை கொண்டு அவர்கள் தனியாக தொழில் செய்யும் ஆற்றல் இருக்கும் முதல் இருபதில்லை உழைப்புக்கு ஏற்ற சம்பளமும் குடுக்க மாட்டார்கள் அதிகம் கொடுத்தால் சேமித்து தனியாக ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் . இவர்களுக்கும் கை கொடுக்க யாருமில்லாததால் தான் காலமெல்லாம் உழைத்து உழைத்தே வருடங்களை தொலைகிறார்கள். 

இதுவும் எங்களை போன்ற நிலையே. நானும் படிக்க விரும்புகின்றேன். நானும் வேலை செய்ய விரும்புகின்றேன் , நன்றாக சாப்பிட ஆசை படுகிறேன். நான் பாமரன் ஏழை. எனக்கு வழி தெரியவில்லை . வழி காடவேண்டிய மனிதர்கள் மனிதத்தை தொலைத்து விட்டார்கள்.

நண்பர்களே உங்கள் புதுவருடத்தை நன்றாக கொண்டாடுங்கள். மது அருந்துங்கள். புதிய உடை அணியுங்கள் . சிறு குழந்தைகள்,இருதய நோய் உள்ளவர்களை பற்றி சிந்திக்காது வானவேடிக்கைகள் வெடிகளை போடுங்கள். உங்கள் பிள்ளை இல்லாததால் நாங்கள் பசித்த வயிறுடன் இருக்கும் போது உங்கள் அடுத்த தலைமுறைக்கு பணம் சேர்த்து வைகிறிர்கள் ஆனால் நீங்கள் வெடிக்கும் வெடிகளால் சூழலில் ஏற்படும் மாசுகள் ஓசோன் வரை சென்று நாளை உங்கள் தலைமுறைக்கு மட்டும் அல்ல எங்கள் தலைமுறைக்கும் அச்சுறுத்தலாகும் சிந்தியுங்கள் உங்கள் சந்தோசம் அடுத்தவர்களை சந்தொசபடுத்துவதில் இருக்கட்டுமே!!!!!!!!

எல்லாம் வளர்கிறது பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்,ஏழை இன்னும் ஏழை ஆகிறான் உங்கள் தேவைக்கு போக மீதத்தை கொண்டு மற்றவர்களை தூக்கிவிடுங்கள். மனிதம், மனிதாபிமானம், அன்பு, இவை எல்லாம் என்ன? எதுக்கு எங்களுக்கு ஆறறிவு? அடுத்தவன் அறியாமையை, இயலாமையை பணமாக்கவா? 

பிறக்கின்ற புதுவருடத்தில் அன்பினால் உலகை ஆழ புறபடுங்கள்.

எங்களை போன்றவர்களுக்கு பிச்சை போடா சொல்லி கேட்கவில்லை எங்கள் அறியாமையை போக்க கல்வியை புகட்ட வழி செய்யுங்கள், எங்கள் பெற்றவர்களுக்கு தொழில் செய்யும் அறிவை கொடுங்கள். 

முள்ளி வாய்க்கள் போரினால் எங்கள் இனத்தில் எண்ணிக்கை அதிகரித்து விட்டது........... எங்களை பற்றி பேசி பேசியே அரசியல் மாற்றம் நடக்குது, தலைமைத்துவம் மாற்றம் நடக்குது,சினிமா வெற்றி அப்படி இப்படி என்று என்னென்னவோ எல்லாம் நடக்குது, எந்த மாற்றமும் இல்லாமல் நாங்கள் மட்டும்.
நாங்களும் மனிதர்கள்தான்.


களவாடப்படும் கடவுள்கள்.களவாடப்படும் கடவுள்கள்.
பணத்தை பறிகொடுத்த வழிப்போக்கன் 
நள்ளிரவில் கோவிலுக்கு வந்தான்.

கோவில் பூட்டபட்டிருந்தது..
கடவுளையும் அவர் நகைகளையும் காப்பாற்ற..

சிலைகள் திருடபடுகின்றன 
கடவுள் நகைகள் கொள்ளை போகின்றன.

பக்தன் தன் உடமையை காப்பாற்ற 
உண்டியலில் பணம் போடுகின்றான்...

இப்படியான உலகில் 
கல்லுக்கு ஊற்றும் பாலும்
சினிமா நடிகன் படத்துக்கு ஊற்றும் பாலும் 
பசித்த வயிற்றுக்கு  செய்யும் துரோகமல்லவா??

காக்கை கூட கரைந்து கூடி உண்ணும் 
மனிதா நீ மட்டும்??

ஏழையின் சிரிப்பில் இறைவனை தேடு.

விஜயின் நண்பன் படத்தை தடைசெய்வோம்!!!

பெரியாறு அணை பிரச்னைக்கு வாயை திறந்து அந்த மாநில வசூலை நிறுத்த விரும்பாத  டிகர்கள்!!! 
இவர்களும் தமிழை வைத்து ஆதாயம் தேடும் கருணாநிதி வம்சமே!!


பெரியாறு பிரச்சனையும் சினிமாவும், பலர் தங்கள் தங்கள் சொந்த கோபதாபாங்களுக்கும், உண்மை உணர்வுக்குமாய் ஒருவரை ஒருவர் குறை சொல்லி அவரவர் தப்பித்து கொள்கிறார்கள். இந்த நெருப்பில் பல காலமாக தமிழை வைத்து அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் பலர் குளிர் காய்கிறார்கள். அதை மக்கள் வழமை போல உணர்வு என்று நம்பி தங்கள்  வெறியை  வெளிபடுத்தி அவர்கள் தூண்டிலில் இலகுவாக சிக்கிகொள்கிறார்கள்.

இதில் என்ன கொடுமையான விடயம் என்றால் நேற்று முன்தினம் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் போலான நடிகர் விஜய் சில காலமாக தந்தையின் அரசியல் ஆசையால் பந்தாடபடுவதுதான். நடிகர் ரஜனி போல வர வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம், அரசியலில் எம்.ஜி.ஆர் போல வரவேண்டும் என்ற ஆசை இன்னொரு பக்கம் இப்படியான ஆசைகளினால் சில காலமாக தோல்வி படங்களை கொடுத்து வந்தார் இரு படம் வெற்றி பெற்றதும் மீண்டும் தந்தையின் சதுரங்க ஆட்டத்துக்கு பகடை காயகினார்.  அன்னா ஹசாரே வின் லஞ்ச ஒழிப்புக்கு விமானாம் ஏறி சென்று வாழ்த்து தெரிவித்து வந்தார். 

எல்லா விடயங்களுக்கும் முந்திரிகொட்டை போல முந்திகொள்ளும் நடிகர் சங்கம் எதுக்காக அமைதி காக்கிறது மற்ற மாநிலங்களில் நடிகர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது எதுக்காக பின்னுக்கு நிக்கிறார்கள்? ரஜனிகாந்த் கூட  அன்னா ஹசாரே வின் உண்ணாவிரதத்துக்கு மண்டபத்தை இலவசமாக வழங்கி அதரவு தெரிவித்து மக்கள் மீதும் நாட்டின் மீதும் அக்காரை உள்ளவர்கள் என்று வழமை போல குரல் கொடுத்தார் எதுக்காக பெரியாறு ஆணை பிரச்னைக்கு எதுவும்பேச வில்லை.........?????

பணம்! பணம்! பணம்! "பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் " இதுதான் இவர்கள் உண்மையான அக்கறை இதுக்காகத்தான் இவர்கள் உணர்வு. ஆனால் இப்போது வந்திருக்கும் பிரச்சனையால் வாயை திறந்தாள் அந்த மாநிலங்களில் இவர்களில் படங்களுக்கு தடை போடபட்டால் இவர்கள் வசூல் குறையும் இதுதான் இவர்கள் வாயை அடைக்கிறது வேறு எதுவும் இல்லை.

இவர்கள் வருமானத்தை தடை செய்யாத இவர்கள் செல்வாக்கை உயர்த்தும் எந்த பிரச்சனைக்கும் இவர்கள் மூக்கை நுழைப்பார்கள் வீரம் பேசுவார்கள்.

முடிந்தால் விஜயின் நண்பன் படத்தை தடை செய்வோம் என்று ஒரு அறிக்கை விட்டு பாருங்கள் முதல் ஆளாக நடிகர் விஜய் பெரியாறு அணை பிரச்னைக்கு எதிர்ப்பறிக்கை விடுவார் அனல் பறக்க "பஞ்ச" வசனங்களும் வந்தாலும் வியப்பதுக்கு இல்லை.

சினிமாவை விட இப்போதெல்லாம் நடிகர்கள் நிஜத்தில் தான் அதிகம் நடிக்கிறார்கள்.

நடிகர் ரஜனிகாந்த் முதல் மகளுக்கு நூறு கோடி சீதனம் கொடுத்தார், இரண்டாவது மகளுக்கு................?தமிழ் நாட்டில்  இருக்கும் அவரின் உயிரிலும் மேலானா ரசிகர்களுக்கு ஒரு 10 கோடி கொடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம். ரஜனி உடல் நலம் சரி இல்லமால் இருக்கும் போது வெளியிட்ட அறிக்கையில் தமிழ் நாட்டு ரசிகர்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்து இருகிறார்களா? அவர்களுக்கு எதாவது செய்வேன் என்றார். இப்படி வாய் திறக்கமால் இருப்பதுதானா? சுடலை ஞானம் வீடு வந்ததும் போயே போச்சு!

சும்மா சொல்ல கூடாது நல்லாவே நடிக்கிறாங்கப்பா!!!

ஏமாற்றியது செம்மொழி!!!அம்மா!!!
ஆயிரம் ஆண்டுகள் பல கடந்த மொழியாம் 
தரணியில் இதுதான் முதல் மொழியாம் 
அன்னையே உன் அன்பை சொல்ல 
தமிழில் வார்த்தை இல்லையே 
ஏமாற்றியது செம்மொழி!!!
தாயே உன் பாசத்தால் மொழியையும் வென்றாய் 
அதனால் தான் தாய் மொழி என்றோம்!!!

நானும் கணணியும் இணையமும்.அப்போது எனக்கு பதின்நான்கு வயது ஆண்டு எட்டில்முதல் முதலில் கணணி என்ற சொல்லை அறிந்த காலம் அது எங்கள் பாடசாலையில் படித்து வெளிநாடு சென்ற பழைய மாணவர் ஒருவர் பாடசாலைக்கு நன்கொடையாக கொடுத்ததால் அதை அன்று அறிய முடிந்தது. முதலில் அதை கணணி என்று சொல்லவில்லை பாடசாலை முழுவது இதுதான் பேச்சு  ஒரு இயந்திரம் கொண்டு வந்திருக்கிறார்கள் அது ஒருவரின் கையை அதில் அழுத்தினால் அவரை பற்றி எல்லா விடயங்களையும் சொல்லிவிடுமாம் இதுவரை நாங்கள் என்னென்ன தவறுகள் செய்தோம் சொன்ன பொய்கள் எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிடுமாம் இப்படியாக அதை ஒரு மந்திரவாதியை விமர்சிப்பதை போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களை சொல்லி பயமுறுத்திக்கொண்டு இருந்தனர். போது கூட்டத்தில் அதிபர் அதை அறிமுகம் செய்து வைக்கும் வரை எங்கள் பயம் போகவில்லை. அப்படி இருந்தும் எங்களால் அன்று அதை தூர நின்று பார்க்க முடிந்ததே தவிர அதை இயக்க முடியவில்லை அதற்க்கு காரணம் அப்போது ஈழத்தில் மின்சாரம் இருக்கவில்லை எப்போதாவது உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இயக்கி காட்டினார்கள்,நானுன் எனது நண்பர்களும் கணணி வைக்கபட்டிருந்த யன்னலுக்கு  அருகில் களவாக சென்று அதை  பார்த்துவருவோம்.இப்படியாக என் வாழ்வில் கணணி உள்நுழைந்தது.

அதன் பின் அப்படியே இடம் பெயர்வுஅவசரகாலசட்டம் அப்படியே காலம் யுத்தத்துடன் ஓடியது பாடசாலைக்கு கூட பல காலங்கள் போக முடியவில்லை கணணியை பற்றி யார் சிந்திப்பது.

அப்படியே பல வருடங்கள் ஓடிப்போனது.அப்போது எனது வாழ்க்கை யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நகர்ந்து இருந்தது.

அப்போது வழமையாக மாலை நேரங்களில் காற்பந்து விளையாடுவோம் அதில் அறிமுகமாகிய ஒரு நண்பன் தான் எனக்கு கணணியை அறிமுகம் செய்துவைத்தான். அதுவும் சும்மா அல்ல இணையத்தில் நடிகைகளின் படங்களை பார்க்கலாம் என எனக்கு ஆசை காட்டி அழைத்து சென்றான் நானும் அவனுடன் ஒரு "சைபர் கபே" க்கு சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் காட்டிய வித்தைகளை வியப்புடன் பார்த்துகொண்டிருந்தேன்அவன் என்ன என்ன செய்தான் என்பதை மிகவும் அவதானமாக கவனித்துக்கொண்டே மறுநாள் தனியாக அதே இடத்துக்கு சென்று முயற்சி செய்தேன் முடியவில்லை நடத்துனருக்கு தெரிந்திருக்கவேண்டும் எனக்கு தெரியாது என்று என்னை வெளியில் அனுப்பி விட்டார். மீண்டும் நண்பனுடன் சிலகாலம் தொடர்ந்தேன் படிப்படியாக தனியாக சென்று இயக்கும் அளவுக்கு பழகிவிட்டேன்.

பாடசாலைகாலங்களில் ஆங்கில பாடம் என்றாலும் சரி ஆங்கில ஆசிரியர்கள் என்றாலும் ஏனோ ஒரு வெறுப்பு என்றுமே எனக்கு ஆங்கில பாடத்துக்கு முப்பதுக்கு மேல் மதிப்பெண் வந்ததே இல்லை. இது கணனியில்  எனது மேலதிக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது இதுக்கும் இணையத்திலேயே விடை கிடைத்தது. அரட்டையில் பெண்களுடன் பேசவேண்டும் என்ற ஆர்வத்தில் தேவையானவற்றை பழக ஆரம்பித்தேன் ஆங்கிலம் தெரியாது என்று சொன்னால் என்னை கேவலமாக நினைப்பார்கள் என்ற எண்ணம் வேறு. கையில் அகராதியுடன் அரட்டை அடித்த காலங்களும் உண்டு.


வேலையோடு சிலகாலங்கள்வெளிநாடு செல்லும் ஆசையால் கனடா செல்வதாக சில வருடங்கள் முகவர்களுடன் சில நாடுகளில் கடவு சீட்டை தொலைத்துவிட்டு அநாதரவாக சில வருடங்கள் கடந்துவிட்டது . எப்போதாவாதுதான் கணணியை பார்க்கவே முடிந்தது.

பூமி தனது வேலையே சரியாக செய்துகொண்டே இருந்தது பகல் இரவு என்று காலம் உருண்டுகொண்டே போனது. வெளிநாடு செல்ல முடியாமல் சொந்த நாடுக்கு வருவதுக்கே பலத்த போராட்டம். இப்படியாக மீண்டும் கொழும்புக்கு வந்து சேர்ந்தேன்.
மீண்டும் ஒரு வேலையில் சேர்ந்தேன் சொந்தமாக ஒரு கணணியையும்  வாங்கினேன் அதிலேயே எல்லாவற்றையும் செய்து பழகினேன். பலவிதமான மென்பொருள்களை தரவிறக்குவதுவும் அதை பயன் படுத்தி பார்ப்பதுவும் பின்பு அழிப்பதுமாக இப்படியே ஓரளவுக்கு கணணியை திருத்தும் அளவுக்கு பிரசித்தம் ஆகிவிட்டேன், பலரது கணணியை திருத்தி கொடுப்பது இப்படியே எனது தேர்ச்சியையும் வளர்த்துக்கொண்டேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் இணையத்தில் ஒரு வலைபூவை ஆரம்பித்துவிட்டு எனக்கு இணையத்தளம் இருப்பதாக பல கவிதைகளை போட்டு காட்டினான். பொறாமையாக இருந்ததுநான் கணணி பற்றி படிக்கவில்லையே என்ற கவலை அதேநேரம் எப்படியும் நானும் அதை பழகவேண்டும் என்ன ஆசையும் அவனிடமே கேட்டு தெரிந்துகொண்டேன் அவனும் எனக்கு ஒரு வலைபூ ஆரம்பித்து அதுக்கு இடிமுழக்கம் என பெயரும் வைத்து கொடுத்தான். 

எனக்கு ஆங்கிலம் இப்போதும் நன்றாக தெரியாது ஆனால் வாசிப்பேன் புரிந்துகொள்வேன் இதுவும் இணையத்தினால்தான்.

இப்போது பல இணையத்தளங்களில் இருக்கும் செய்திகளை எனது தளத்தில் பிரதி செய்து அதை தமிழ்மணத்தில் இணைத்து எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை அடிகடி பார்த்து சந்தோஷ பட்டுகொள்வேன்.

இப்படியே பலர் என் வலை பூவை பார்க்க பார்க்க சந்தோஷ பட்டாலும் உள்ளுக்குள் கவலையாகவே இருந்தது. யாரோ எழுதிய எழுத்துக்கு சந்தோஷ படுகிறோமே.எனக்கு தமிழ் எழுத தெரியும் ஆனால் கட்டுரை,கவிதை இவை எல்லாம் எழுதவே தெரியாது எழுதியும் பழக்கம் இல்லை இலக்கணம், இலக்கியம் என்றால் பெயரளவில் தெரியுமே தவிர அவற்றின் பங்களிப்பு மொழியிலே எப்படிபட்டது எதுவுமே தெரியாது நானெப்படி எழுதுவது என்று எனக்கும் சிந்தித்து சொர்ந்துபோவேன்.

இந்த நேரத்தில் தான் நண்பன் தனது வலை பூவில் தமிழில் எழுதுவதை பார்த்து எப்படி எழுதுகிறாய் என்று கேட்டேன் அவனும் "கூகிளில்" எழுதும் முறையை சொல்லி கொடுத்தான் அதிலே தமிழில் பல சொற்களை எழுதி பழக ஆரம்பித்தேன் இப்போது நினைக்கும் சொற்களை தமிழில் எழுத பழகிவிட்டேன்.
 எழுதவேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்காமல் என்னை முனைப்புக்குள்ளாக்கியது.... 
நானும் சிலவற்றை இடையிடையே எனது வலைப்பூவில் எதாவது எழுதிகொள்வேன் அதை யாரவது பார்கிறார்களா என பலமுறை பார்த்து சந்தோஷ பட்டுகொள்வேன். வலைப்பூவை அறிமுகபடுத்திய நண்பன் அதே பெயரில் முகபுத்தகத்தில் ஒரு கணக்கு ஆரம்பித்து இங்கு பதியும் பதிவுகளை அங்கு இணைப்பு கொடுத்து பலர் அவன் வலை பூவை பார்ப்பது போல செய்துகொண்டான் நானும் முகபுத்தகத்தில் இடிமுழக்கத்தை ஆரம்பித்தேன்.

இப்போது முகபுத்தகத்தில் பல நண்பர்களை சேர்க்கும் படலம் எங்கள் அதிவேக நண்பர்கள் இணைப்பால் முகபுத்தக நிர்வாகம் நண்பர்களை இணைப்பதுக்கு அப்பப்ப தற்காலிக தடை விதிப்பதுவும் மீண்டும் நான் இணைப்பதுவும் இப்படியே ஒரு சக்கரமாக நடந்துகொண்டே இருந்தது.

இந்த காலத்தில் முகபுத்தகத்தில் சிறிது சிறிதாக ஒவ்வொருவரின் பதிவுகளில் நான் பதிந்த பின்னூட்டல்கள் பலர் விருப்பம் தெரிவிக்க தெரிவிக்க எனக்குள் எதோ ஒரு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது அதன் பின் எனது எண்ணங்களை எல்லாம் பதிந்தேன் அதுக்கு பலரது விமர்சனங்கள், விருப்பங்கள் அவற்றுக்கு கருத்து சொல்வது வாதம் செய்வது இப்படியாக பல விடயங்கள் பற்றி பலர் பதியும் பதிவுகள் சம்பந்தமான கட்டுரைகளை தமிழில் தட்டச்சு செய்து "கூகுளில்" தேடி வாசித்து தெரிந்துகொண்டு அது பற்றி வாதம் செய்ய அரம்பித்தேன் இதன் காரணமாக பல நண்பர்களும் சில கொள்கை எதிரிகளும் உருவாகினார்கள் அவர்களில் சிலர் என் கணக்கை மொத்தமாக ஐந்து தடவைகள் முடக்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த முகபுத்தக ஆர்வம் அதிகரித்த காலத்தில் நான் வலைபூவை மறந்து போனேன் என்றே சொல்லவேண்டும்.
இப்போது எனது முகபுத்தக கணக்கு இறுதியாக முடக்கபட்டு ஆறாவது கணக்கு ஆரம்பித்து இருக்கிறேன் இந்த நேரத்தில் மீண்டும் வலைப்பூவில் எழுத ஆசை வந்துள்ளது.முகபுத்தக கணக்கில் 5000 நண்பர்களும், பக்கத்தில் அண்ணளவாக 1000 நண்பர்களையும் சேர்த்து வைத்து இருந்தேன் அதை இம்முறை இழந்தது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. முகபுத்தகத்தை திறந்ததுமே அந்த சோகம் தொற்றிகொள்கிறது முதல் கணக்கில் ஒரு பதிவு பதிந்தால் பல விருப்பங்கள், பல பின்னூட்டல்கள் ஒருவித உற்சாகத்தை கொடுத்தது இப்போது புதிய கணக்கில் நண்பர்கள் 200௦௦ பேர் தான் இருக்கிறார்கள்.

நண்பர்களே இணையம் எங்களுக்கு கிடைத்து இருக்கும் ஒரு அருங்கொடை அதை பாவிக்கும் நாங்கள் தான் அதன் மீது பழி போடுகிறோம், பல செய்திகள் வருகின்றன முகபுத்தகத்தால் பல பெண்கள் ஏமாற்ற படுகிறார்கள் பல தவறுக்க நடைபெறுகின்றன,முகபுத்தகத்தை தடை செய்யவேண்டும் உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் முகபுத்தகம் உங்களை ஏமாற்றுகிறதா?  நீங்கள் எமாற்றுவதுக்கு முகபுத்தகத்தை பயன் படுத்துகிறீர்களா? பலர் கொலை செய்வதுக்கு கத்தியை பயன் படுத்தினார்கள் என்பதுக்காக அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை தடை செய்யவேண்டும் சொல்வது சரியா?

முன்பெல்லாம் ஒரு விடயம் தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ள அது சம்பந்தமாக படித்தவரிடம் தான் தெரிந்துகொள்ளவேண்டும் இப்போது எந்த விடயத்தையும் இருந்த இடத்திலேயே நாங்களாகவே அறிந்துகொள்கிறோம். இணையம் என்பது ஒரு கொடை அதை நாங்கள் எங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பயன் படுத்தவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் முகபுத்தகத்தில் பல குழுக்கள் ஆரம்பித்து ஒரே பதிவை பலமுறை பதிந்து உங்கள் நேரங்களையும் வீணாக்குகிறிர்கள். பலர் இனணயத்தளம் பார்ப்பதே இல்லை செய்திகள் படிப்பதே இல்லை எப்போது பார்த்தாலும் முகபுத்தகத்தில் அரட்டை. 
ஒன்றுமே தெரியாத நான் இன்று எழுத ஆரம்பித்து இருக்கிறேன் என்றால் பல விடயங்கள் தெரிந்த உங்களால் ஏன் முடியாது???

இணையத்தில் இப்போது மொழி அறிவு ஒரு தடை இல்லை எல்லா விடயங்களையும் எங்கள் மொழியிலேயே அறிந்துகொள்ளலாம் வாசியுங்கள் பல விடயங்களை வாசியுங்கள் அறிய அறிய உங்கள் அறிவு வளர்ந்துகொண்டே போகும். உங்கள் கையிலேயே உங்கள் அறிவு இருக்கிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க....


இணையத்தில் பல விளம்பர இணையங்கள் இருகின்றன ஆனால் எனக்கு இந்த இணையத்தை எனது தளத்தில் இணைத்ததால் இரண்டு முறை 300 $ பெற்றுகொண்டேன் ....நீங்களும்  பணம் பெற விரும்பினால் உங்கள் பிளாக்கர்,Wordpress , web page இல் இணைத்து பயன்பெறுங்கள்........ 


Get cash from your website. Sign up as affiliate

நாங்கள்தான் பேயாகிறோம்.............பேய்குள் நாங்கள்.பேய் என்றால் என்ன? பேய்க்கு சக்தி இருக்கிறதா? இறந்த பின் மனிதனுக்குஆவியாகி இன்னொரு  மனிதனை ஏதாவது செய்ய முடியுமா? ஒருவரின் உடலில் புகுந்து இன்னொருவரை பழிவாங்க முடியுமா? இப்படியான நம்பிக்கை பலரது மனங்களில் ஆதிக்கம் செலுத்தி அவர்கள் வாழ்கையை திசை மாறி போய்  விடுகிறது இதில் பல பாமர மக்கள் பாதிக்க படுகிறார்கள் என்று பார்த்தால் இல்லை படித்தவர்கள் பலரும் இந்த பயத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்..........

நண்பர்களே இறக்கின்ற ஒவ்வொடு மனிதனுக்கும் பல எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி சாகிறவர்கள் எல்லோரும் ஆவியாகி அவர்களை பழி வாங்கினால் பழி வாங்க முடிந்தால் பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள் எப்படி கோவில்களில் சாமி வருகிறதோ அதுபோலவே நம்பியவர்களுக்குத்தான் பேயும் பிடிக்கிறது இது உங்கள் மனதில் நடக்கும் ஒரு விந்தை இதை அறியாதவர்கள் பலர். இதுபற்றி தெளிவு படுத்த சமுதாய அக்கறை உள்ளவர்களும் முன்வருவதில்லை இந்த பயத்தை வைத்து கோவில்களிலும் பிழைப்பு நடத்துகிறார்கள். 

சரி நீங்கள் நம்புவது போல இறந்தவர்களால் ஏதாவது செய்ய முடியும், அவர்களுக்கு சக்தி இருக்கிறது, பழி வாங்கலாம் என்று வைத்து கொள்ளவோம். முள்ளி வாய்க்காலில் எத்தனை ஆயிரம் பேர் இறந்தார்கள் ????அதில் ஒருவர் கூடவா மகிந்த ராஜபக்ஷவை பிடிக்க முடியாமல் போய்விட்டது?? அவரை அழிக்க முன்வாராமல் இருந்திருப்பார்கள்?????????இப்படி உலகில் எத்தனையோ அப்பாவிகள் அழிக்க படுகிறார்கள் வலியவர்களால் அவர்கள் நல்லவர்களை விட சிறப்பாக இருக்கிறார்களே??? இயற்கை விதிக்கு அமைய எல்லா தாக்கத்துக்கும் சமமானதும் எதிரானதுமான மறு தாக்கம் அவர்களை பாதிக்கும் வரை அவர்களை ஆவிகள் ஒன்றும் செய்வதில்லையே ஏன்???

உங்கள் மனம்தான் பேய்... மூடநம்பிக்கையால் நீங்கள்தான் பேயை உருவாக்குகிறீர்கள் ,பேயாகுகிறீர்கள்!! 

உங்கள் முதலிரவு காணொளியை பலவருடங்கள் கடந்து நீங்களே பார்க்க நேரிட்டால்???தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்கையை மேம்படுத் தவே  ஆரம்ப காலத்தில் இருந்து வந்தது ஆனால் இன்று மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவே அதிகம் காணபடுகிறது அதுக்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.எந்த ஒரு வளர்ச்சியையும் பயன் படுத்தும் விதத்தை பொறுத்தே அதன் வெற்றி அமைகிறது..

எனது நண்பனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடை பெற்றது நானும் சென்றிருந்தேன் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது பல பாடசாலை நண்பர்களை சந்திக்க கிடைத்ததால் சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது மீண்டும் பள்ளிக்கு  போன உணர்வு அது மட்டும் அல்லாமல் பல விதமான அனுபவங்களை ஒவ்வொருத்தரும் பகிர்ந்துகொண்டார்கள் அதில் ஒரு நண்பனின் மாமாவும் அதில் கலந்துகொண்டார் அவர் சொன்ன ஒரு சம்பவம் மிகவும் கவலை அடைய வைத்தது ...

திருமணம் முடிந்து தம்பதிகளை ஒரு ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைப்பதுக்காக தயாராகிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் மாமா அவசர அவசரமாக மாப்பிளையிடம் ஏதோ ரகசியம் சொல்லிகொண்டிருந்தார் அதன் பின் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு மாமாவிடம் கேட்டோம் என்ன ரகசியம் பேசிக்கொண்டு இருந்தீர்கள் என !!!
அவர் சொன்னது...

சில ஆண்டுகளுக்கு முன் அவர் துபாயில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் ஒருநாள் அவருடன் அறையில் தங்கி இருந்த நண்பர்கள் இருவர் பலான படம் பாற்பதுக்காக ஒரு கடையில் இருந்து ஒரு CD ஒன்றை எடுத்து வந்து போட்டார்களாம் அதிலும் கடைக்காரன் சொல்லி கொடுத்து இருக்கிறான் இது உண்மையாக நடந்ததை களவாக பிடிக்க பட்ட காணொளி என்று, காணொளியும் ஆரம்பமானது, ஒரு பெண் தனியாக அறையில் நின்று கொண்டிருந்தாள்  திடிரென அங்கு அறையில் இருந்த ஒருவர் அவசரமாக வந்து மின்சார இணைப்பை துண்டித்தாராம் காரணம் அந்த கானொளியில் இருந்த அந்த பெண் அவர் மனைவி.
 மிகவும் மனமுடைந்துபோனவரை அவர்கள் சமாதான படுத்தினார்களாம் பின் அந்த காணொளியை தனியாக எடுத்து சென்று கணனியில் போட்டு பார்த்து இருக்கிறார் அடுத்த அதிர்ச்சி அங்கு அவர் மனைவியுடன் இருந்தது அவர் தான்!!! அதுவும் அவர்கள் தேனிலவுக்காக தங்கி இருந்த அறையில் அவர்களுக்கு தெரியாமல் பிடிக்க பட்ட காணொளி......

என்ன நண்பர்களே புரிகிறதா எதுக்காக முதல் இரவுக்கு போகும் மாப்பிளைக்கு மாமா என்ன சொல்லி இருப்பார் என்று?? 

இப்படியான பிரச்சனைகளில் இப்போதெல்லாம் பல பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிகொள்கிறார்கள்  வாழ்கையையும் தொலைகிறார்கள், காதலிக்கும் போது காதலன் தானே எதிர் கால கணவன் தானே என்று நம்பியே பல பெண்கள் தங்கள் அரை நிர்வாண ,நிர்வாண படங்கள் எடுப்பதை அனுமதிகிறார்கள் பின் வழமை போல தோல்வியில் முடியும் கவர்ச்சி காதலில் பெண்ணின் நிம்மதி அந்த படங்களை நினைத்து அழிக்கபடுகிறது. இது இப்போது skype இல் அதிகமாக நடக்கிறது........

எதையும் வருமுன் காப்பதே மேல் முடிந்தபின் !!!!!!!!!!!!!!!!

வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்.. 

நீண்டநாட்களுக்கு பின்.....வணக்கம் நண்பர்களே! நீண்ட நாட்களாக எந்த பதிவும் பதியவில்லை சில மாதங்கள் வழமை போல ஓடிப்போனது. எனது இந்த வலைப்பூவை எனது நண்பன் ஆரம்பிக்கிறான் என்பதுக்காக விளையாட்டாக ஆரம்பித்தேன் அப்போதெல்லாம் எனக்கு சரியாக தமிழ் தட்டச்சு  கூட தெரியாது மற்றவர்களின் வலைபூவிலும் இணையத்தளங்களிலும் இருக்கும் செய்திகளை பிரதி செய்து போட்டுகொள்வேன் பலர் எனது பக்கத்தை பார்ப்பதை பார்த்து சந்தோஷபடுவேன் ஆனால் நாளாக நாளாக ஏதோ ஒரு உறுத்தல் என் மனதில் நானும் எழுதவேண்டும் என்ற ஆதங்கம் மனதில் விஸ்வரூபம் எடுத்து இருந்தது அதுக்கான சந்தர்ப்பத்தை இந்த வலை பூவை விளம்பர படுத்த ஒரு முகபுத்தக கணக்கை ஆரம்பித்தேன் அந்த கணக்கில் எழுத ஆரம்பித்தேன் சின்ன சின்னதாக ஆரம்பித்து இன்று நான் எழுதுபவற்றை பலர் விருப்பம் தெரிவித்தும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல சொல்ல என்னுள்,என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை வேரூண்டி விட்டது இந்த சந்தர்ப்பத்தில் இனி வலைபூவில் எனது அனுபவங்களை எண்ணங்களை பதியலாம் என நினைக்கிறேன் எனது எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள இது இன்னும் உதவும், இணையம் என்னுள் இப்படியான மாற்றத்தை ஏற்ப்டுத்தி இருப்பது மிகவும் சந்தோசத்தைகொடுக்கிறது..


எனது இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவை,கருத்தை சொல்லி என் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பையும் எதிர்பாக்கிறேன்.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை கண்டறியும் அட்டவணை

பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவது பெண்ணின் வயது அது தரிக்கும் மாதத்தை வைத்து சீனர்கள் இப்படி ஒரு அட்டவணை மூலம் தெரிந்துகொள்கிறார்கள் அதுவும் சரியாகவே இருக்கிறதாம்.........உங்களுக்கு இந்த அட்டவனையை முதலே பிறந்தவர்களை  பரிசோதித்து செய்வதன்மூலம் இனி பிறக்கபோகும் பிள்ளையை நீங்களே தேர்வுசெய்யலாம்........
கர்ப்பம் தரிக்கும் போது பெண்ணின் வயது 
தரித்த மாதம் 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
January G B G B G B B G B G B G B B B G B B
February B G B G B B G B G B G B G G B G B G
March G B G G B G B B B G B G G B B B B G
April B G B G G B B G G B G G G G G B G B
May B G B G B B G G G G G B G G G G G G
June B B B G G G B B B G G B G G G G B G
July B B B G G B B G G B B B G G G G G G
August B B B G B G G B B B B B G G G B G B
September B B B G G B G B G B B B G G G G G G
October B B G G G B G B G B B G G G G G G G
November B G B G G B G B G G G G B G G G B B
December B G B G G G G B G B G G B B B B B B
கர்ப்பம் தரிக்கும் போது வயது 
தரித்த மாதம் 36 37 38 39 40 41 42 43 44 45
January G B G B G B G B B G
February B B G B G B G B G G
March B B G B G B G B G B
April G B B B B G B G B G
May B G B B G B G B B G
June G B G G B G B G B G
July G G B G B B G B G B
August G B G B G B B G B G
September B G B G B G B B G B
October B B G B G B G B B G
November B G B G B G B B G B
December B B G G G B G B G B

40 நாடுகளுக்கு இலவசமாக தொலைபேசி உரையாட

நண்பர்களே இணையத்தின் ஊடாக  40 நாடுகளுக்கு கைத்தொலைபேசிக்கும் சேர்த்து இலவசமாக பேசும் மென்பொருளை பற்றி உங்களுடன் பகிரவுள்ளேன்..........இதன் மூலம் இந்த இணையத்தில் உள்ள 40 நாடுகளுக்கு நீங்கள் இலவசமாக பேசலாம்...........

1207 இலவச தொலைக்காட்சி சனல்களை பார்த்து ரசிக்க இங்கே ....


இந்த இணையத்தில் அங்கத்தவராகுங்கள்...........மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள் ..பேசுங்கள்...........

 இந்த இணையத்துக்கு செல்லுங்கள்....


கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய

நாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IP எண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.


மென்பொருளை பயன் படுத்தும் முறை:
  • இதற்கு முதலில் கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Download செய்து கொள்ளுங்கள். 
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
  • அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
  • இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம் இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணினி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
  • அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
  • இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

உலகத்தில் உள்ள எல்லா தொலைகாட்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க.

உலகத்தில் உள்ள எல்லா தொலைகாட்ச்சிகளையும் ஒரே ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க.

உங்கள் தொலைக்காட்சி......