தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

காத்தாடி போல் வாழ்க்கை..!!!



ஆசை என்னும் காற்றில் 
அன்பு என்ற நூலில்
பணம் என்ற வால்கட்டி
பறக்கிறது 
வாழ்க்கை என்னும் காத்தாடி...!!!

பலமான நூலும் 
அளவான காற்றும்
சரியான வாலும் 
ஆனந்த வாழ்க்கை...!!!
************************************************************************************
 விடாமுயற்சி என்னும் நூலில்லாமல்
வெற்றி என்னும் காத்தாடி 
உழைப்பு எனும் காற்றில் 
தன்னம்பிக்கையுடன் பறக்க முடியாது.......!!!
*************************************************************************************
நூலாக அவள் நினைவுகள் என்னை
இழுப்பதால் தான் 
உயிரெனும் காத்தாடி இன்னமும்
பறந்துகொண்டிருக்கிறது.....!!!

9 comments:

  1. நல்ல கற்பனை.

    ReplyDelete
  2. பலமான நூலும்
    அளவான காற்றும்
    சரியான வாலும்
    ஆனந்த வாழ்க்கை...!!!

    எத்தனை பேருக்கு அப்படி வாய்க்கிறது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    tha.ma 2

    ReplyDelete
  3. விடாமுயற்சி என்னும் நூலில்லாமல்
    வெற்றி என்னும் காத்தாடி
    உழைப்பு எனும் காற்றில்
    தன்னம்பிக்கையுடன் பறக்க முடியாது.......
    உண்மையான வரிகள் அருமை

    ReplyDelete
  4. ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு காத்தாடியாக உருவகம் செய்து உரிய நூலையும் காற்றையும் ஒப்புமைப்படுத்தியது அழகு.

    (இளுப்பதால் - இழுப்பதால்).

    ReplyDelete
  5. தவறை சுட்டி காட்டியதுக்கு நன்றி... பதிவில் திருத்தி விடுகிறேன்.

    ReplyDelete
  6. ஒரு பட்டமும் நூலும் எத்தனை விதமான வாழ்வியலைச் சொல்கிறது.காதல் நூல் அற்புதம் !

    ReplyDelete
  7. @ஹேமா
    நன்றி தோழி.............

    ReplyDelete