தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

மனம் பழகிபோனால் குணம்.மனம் பற்றி அறிந்துகொள்ள எடுக்கும் முயற்சிகள் சமுத்திரத்தின் நடுவே திடீரென குதிப்பது போலான ஒன்று ஆனாலும் வேறு வழியில்லை எங்களை ஆட்டி படைத்துகொண்டிருப்பது எங்கள் மனம் தான். எங்கள் ஆசைகளை உருவாக்குவதும் அதில் ஏற்படும் முடிவுகளை பொறுத்து மகிழ்ச்சியையும், சோகத்தையும் உருவாக்குவது இந்த மனம் தான். எனவே இதை பற்றி அறியாமல் வாழ்கையை அறியமுடியாது. நாங்கள் சும்மா இருந்தாலும் எங்கள் மனம் எங்களை சும்மா இருக்க விடுவதில்லை ஏதாவதொரு ஆசையை உண்டாக்கி எங்காவது ஒரு சிக்கலில் மாட்டி விடுகிறது. எண்ணங்களை உருவாக்கி எண்ணவேகத்தில் செயல்படுகிறது என்றே தெரியாமல் தாவி திரிகிறது.

எங்கள் மனதில் ஒவ்வொரு எண்ணங்களும் எப்படி உருவாகிறது இதற்கு எங்கள் ஐம்புலன்களும்தான் காரணம். இந்த ஐம்புலன்களும் உள்வாங்கும் ஒவ்வொன்றுக்கும் ஏற்றது போலான எண்ணங்களையும் அதற்கு தொடர்புடைய ஏற்கெனவே எங்கள்  ஆழ் மனதில் பதிந்திருப்பதை நினைவுக்கு கொண்டு வருகிறது. எங்களுக்கு தெரியாமலே எங்கள் வாய் ஒரு பாடலை முனுமுனுக்கும் எதற்கு திடீரென இந்த பாட்டு நினைவுக்கு வந்தது என தேடி பார்த்தல் எங்கோ இந்த பாட்டு எங்கள் காதுக்கு மெதுவாக கேட்டிருக்கும். இதில் இருந்து ஒரு விடயத்தை நாங்கள் புரிந்துகொள்ள முடியும் ஒரு விடயத்தை நாங்கள் நினைவு வைதிருக்கவேண்டுமாயின் ஏற்கெனவே எங்கள் மனதில் பதிந்திருக்கும் ஒரு விடயத்துடன் தொடர்பு படுத்தி நினைவு வைத்துகொண்டால் எப்போதும் மறக்காது என்பதுவே.புதிதாக  ஒருவருடைய பிறந்த நாளை நினைவில் வைத்துகொள்ள விரும்பும் நாங்கள் அந்த திகதியை வெளிமனத்தில் பல தடவை மீட்பதற்கு பதிலாக ஏற்கெனவே  நினைவில் இருக்கும் ஒருவருடைய பிறந்த நாளுக்கு இரண்டு நாளுக்கு பின் என பதிந்து விட்டால் அது மறக்காது. இதில் இருந்து இன்னொரு விடயத்தையும் நாங்கள் புரிந்துகொள்ள முடியும் எங்கோ ஒலித்த பாடல் மெதுவாக கேட்டதும் அதுக்கான விளைவை ஆழ்மனம் காட்டுகிறது ஒருவருக்கு ஒரு சோகமான சம்பவம் ஒரு இடத்தில் நடந்தால் அவர் அதில் இருந்து வெளிவராமல் அந்த சம்பவம் அவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்திகொண்டிருந்தால் அவரை அந்த சூழ்நிலையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல் சிறப்பு இல்லை என்றால் அவர் காணும் கேட்கும் எல்லா விடயங்களையும் எங்களை அறியாமல் ஆழ்மனம் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கும். எங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் நல்லதாக இருந்தால் அது சம்பந்தமானவற்றால் எங்கள் மனதில் நல்ல மகிழ்ச்சியனவையே நினைவுக்கு வரும் அதுவே மாறாக சோகமும், துன்பங்கள் நிறைந்த ,கேவலமான சம்பவங்களாக இருந்தால் அது சம்பந்தமானவை எங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். எனவே எங்கள் மனதில் நல்லவற்றை பதிய விரும்பினால் உங்களை சுற்றி எப்போதும் நல்ல சூழலை உருவாக்கி கொள்ளுங்கள்.

ஒரு சைக்கிளை அல்லது ஒரு வாகனத்தை முதல் முறை பழகும் போது எவ்வளவு கவனத்துடன் பழக்குகிறோம் முழு சிந்தனையும் வீதியில் இருந்தாலும் பல தவறுகளை செய்துதான் விழுந்து எழும்பி பழகுகிறோம் ஆனால் அதுவே பழகி அதன் முறை எங்கள் ஆழ்மனதில் பதிந்துவிட்டால் அதன் பின் எத்தனையோ சிந்தனைகளின் மத்தியில் அந்த வாகனத்தை எங்களால் சரியாக ஓட்ட முடிகிறது இது ஆழ்மனதினால் சாத்தியமாயிற்று. சில நேரத்தில் ஏதோ சிந்தனையில் வாகனத்தை ஓடிகொண்டே போவோம் நாங்கள் போக வேண்டிய இடம் வேறாக இருக்கும் ஆனால் வாகனம் வழமையாக நாங்கள் போகும் ஒரு இடம் நோக்கி போய்கொண்டிருக்கும் நாங்கள் திடீரென சுயநினைவுக்கு வரும்போது இதை உணர்ந்துகொள்ளலாம். இதுபோலவே எங்கள் வாழ்கையில் பல விடயங்களுக்கு கட்டுபாட்டுடன் ஆரம்பத்திலேயே பழகி கொண்டால் அதுவே ஆழ்மனதில் பதிந்துவிட்டால் அதன் பின் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் ஆழ்மனம் அதையே செய்யதுண்டும். இதில் இருந்து நாங்கள் புரிந்துகொள்ளவேண்டியது சிறு வயதிலேயே பல நல்ல பழக்கங்களை கட்டுபாட்டுடன் பழக்கி ஆழ்மனதில் பதியவைத்துவிட்டால் அது அவர்கள் வாழ்நாள்முழுவதும் அவர்கள் சிறப்பாக இருக்க உதவும். 

எந்த ஒரு விடயமும் முதல்தடவை செய்யும் போது தவறாக தோன்றும் அதன் பின் அது ஆழ்மனதில் அது பதிந்தபின் அது பிழையான விடயமாக தெரிவதில்லை. முதல் தடவை தவறு செய்யும் போதே திருத்திக்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் அதன்பின் அதை மாற்றிகொள்வது மிககடினமனதாகும். வெளிமனம் இது தவறு என்று சொன்னாலும் அதை ஏற்றுகொள்ளாது ஆழ்மனம் அப்படி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்தாலும் சிலநாட்களில் ஆழ்மனம் வெளிமனத்தை அடக்கிவிடும் இன்று மட்டும் செய்யலாம் நாளில் இருந்து தவிர்த்துவிடலாம் என்று சமாதானமும் சொல்லும். இதுபோல ஆழ்மன அடிமைத்தனம்தான் போதை ,குடி,புகை பழக்கங்களுக்கு அடிமையாகியவர்களின் நிலை இதில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கிறது எனவே கட்டுபாடு ரொம்ப முக்கியம் என முன்னவர்கள் சொல்வது  இதுக்காகத்தான். எனவே தப்புகள் முதல் தடவை செய்யும் போதே தடுத்து விடுங்கள் பழகியபின் ஆழ்மனதை வெல்வது சாத்தியமில்லை என்று சொல்லிவிட முடியாது மிக கடினம்.

சில காதலர்களை பார்த்திருப்போம் அதில் ஒருவர் மிக அழகாக இருப்பார் மற்றவர் அசிங்கமாக இருப்பார் அவர்களுக்குள் அது பெரிய விடயமாக இருக்காது பார்க்கும் எங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இங்கு நடப்பது என்ன அவர்கள் பழகும் போது அவர்களுக்குள் காதல் இருந்திருக்காது ஆனால் அவர்கள் சில காலம்  பழகும் போது அவர் ஆழ்மனதில் மற்றவர் பதிந்துவிடுவார் அதன் பின் விலகுவது கடினமாக இருக்கும். இவர்களை கேட்டால் அவரை விரும்புவதற்கு காரணம் சொல்ல முடியாமல் இருக்கும் சொல்லவேண்டும் என்பதுக்காக சில காரணங்களை சொல்லலாம் ஆனால் உண்மை ஆழ்மனம் தான். ஆனால் இவர்களால் மற்றவரை விட்டு விலகமுடியாமல் இருப்பதுதான் காரணம். நண்பர்களே உங்களுக்கு ஒருவர் மீது காதலா? முதலில்  அவர்கள் ஆழ்மனதில் பதியும் வரை நன்றாக பழகுங்கள் நல்லவிதத்தில் பதியவேண்டுமாயின் அவர்கள் மனம் விரும்பும் விதத்தில் பழகி ஆழ்மனதில் உங்களை பதியவையுங்கள். அதன் பின் அவர்கள் உங்களை விட்டு பிரிய நினைக்கும் போது அவர்கள் உங்களை உணர்வார்கள்.
எங்களை போல பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்........
தொடரும்..மீண்டும் தலைவர் பிரபாகரன் (நன்றி மறந்த தமிழர்கள்....!!!)நேற்று இரவு ஏனோ மனது சிறிது பாரமாக இருப்பதை உணர்ந்தேன் அதை திசை திருப்ப வழமை போல வலைபூக்களை துலாவிகொண்டிருந்தேன் அப்போது நண்பர் சஞ்சயன் தனது பயண அனுபவங்களை பகிர்ந்திருந்தார் அவற்றை பார்க்க நேர்ந்தது எனது மன கவலை வறண்ட நிலத்தில் விழுந்த மழைத்துளிபோல மறைந்து போனது காரணம் அவர் எழுத்துக்களில் என் மனதில் சுனாமியே அடித்திருந்தது.

விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன் அவர்கள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வேறுவிதமாக இருக்கும் இப்படியானவர்கள் மத்தியில் இவரின் தேடல் எங்கள் மக்களுக்கு நல்லதொரு பாடம். எங்களுக்காக போராடியவர்கள் இப்போது இருக்கும் நிலைமை என்ன,நாங்கள் எதை பற்றி கவலை பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் எங்கள்  குறுகியமனப்பாங்கையும் எங்கள் சுயநல மனதுக்கு புரிய வைத்திருக்கிறது இவரின் இந்த அனுபவ பகிர்வு. இவரின் இந்த தேடல் இவருக்கு தெரிந்த ஒரு சிலருக்கு தெரிந்தவர்களிடம் இருந்து அறிந்துகொண்டது அதிலும் சிலவற்றைத்தான் அவர் பகிர்ந்திருப்பார் அப்படியானால் இதுபோன்ற இன்னும் எத்தனை பேர் இழப்புகளை தாங்கிக்கொண்டு வாழ்கையை இறுதிவரை போராட்டமாக சுமக்க போகிறார்கள் ஈழ போராட்டத்துக்காக பங்களிப்பு செய்ததுக்கு???? 

ஈழ போராட்டம்  கசப்பான அனுபவத்தில் முடிந்ததில் இருந்து எங்கள் எதிர் பார்ப்புகள் என்னவாக இருந்தது. இனி ஈழம் கிடைக்காதா என்ற கவலை மனம் முழுவதும் பரவி ஒருவித மன நோயாளர்கள் போல எங்களை மாற்றியது உண்மை அதன் விளைவால் தலைவர் மீண்டும் வருவார் மீண்டும் ஈழ போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கையை நாமே உருவாக்கி அந்த கனவில் எங்கள் மனநோய்க்கு மருந்தாக்கி கொண்டோம். அது மட்டுமல்ல இந்த பின்னடைவை தாங்கி கொள்ள முடியாமல் எங்கும் தமிழ் பற்றை புகுத்த முனைந்தோம் தமிழ் நடிகர்கள் இலங்கைக்கு சென்றால் அவரின் படங்கள் தடை செய்வோம், ஒரு தமிழன் ஆங்கிலத்தில் தமிழ் படங்களில் பாடல் எழுதினால் கொதித்தெழுவது இதுபோன்ற நியாயமற்ற காரணங்களை தூக்கி பிடித்து எங்கள் மன வேதனையை திசை திருப்ப முயன்றோம் . மக்களின் மனதினை நன்கு புரிந்துகொண்ட அரசியல் வாதிகள் சினிமாக்காரர்கள் என எல்லோரும் எங்கெங்கு ஈழம் பற்று பற்றி பேச முடியுமோ அங்கெல்லாம் பேசி அவர்களை உயர்த்திகொண்டார்கள்.ஆனால் எதை நாங்கள் நினைத்திருக்க வேண்டுமோ அதை மறந்துவிட்டோம்.

எங்களுக்காக நாங்கள் சொகுசாக இங்கு வாழ களத்தில் போராடி இன்று ....

நண்பர் சஞ்சயனின் அனுபவ பகிர்வில் இருந்து ...
http://visaran.blogspot.com/2012/08/blog-post_19.html 
"ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. 
  • விபச்சாரம் செய்யும்  முன்னாள் பெண்போராளிகள்,
  • ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும்  முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி, 
  • தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவிகுழந்தைகளை  காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,
  • திருமணமாகி  பத்தே மாதத்தில் கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன்  இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி  தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,
  • இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள்  போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை, 
  • இருகண்களையும் இழந்த முன்னாள்  ‌போராளி,
  • குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் ‌ ‌போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி"
இவர்கள் வாழ்க்கை போராட்டமாக மாறிவிட்டது இப்போதும் நாங்கள் ஈழத்தில் போராட்டம் மீண்டும் வெடிக்காதா என்று எங்கள் சுயநலத்தை விதைக்கிறோமே தவிர இவர்களை பற்றி அறிய கூட முயலவில்லை என்பதுதான் உண்மை. எத்தனை பேர் இது பற்றி பேச தயாராக இருக்கிறீர்கள் ... 

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை முகபுத்தகதை திறந்தால் ஈழம் பற்றி தினமும் பல ஆயிரம் பகிர்வுகள் எங்கும் ஈழம் சம்பந்தமான குழுக்கள், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியை பார்த்தாலும் ஈழத்துக்காகவே பிறந்தவர்கள் போல பேட்டிகள் மேடை பேச்சுக்கள் அப்படி இருக்க ஒரு இடத்திலும் இதுபோன்ற உண்மை பதிவுகளை, பேச்சுக்களை இவற்றை நிவர்த்தி செய்ய எதாவது திட்டமிடல் முயற்சி  நான் பார்த்ததில்லை சுய விளம்பரத்துக்கான விடயமாக போய்விட்டது ஈழம்..

புலம்பெயர்ந்த தேசத்தில் ஈழ தமிழர்கள் எத்தனை இலட்சம் இருக்கிறார்கள் அவர்களில் எத்தனைபேர் பணங்களில் புரள்கிறார்கள் அவர்களுக்கு குடியுரிமை வாங்கித்தந்த போராட்டத்தில் பங்கேற்று இன்று ஒரு வேளை உணவுக்காக அங்கங்களை இழந்து ,விபச்சாரம் செய்து வாழ்வை போராட்டமாக மாற்றிகொண்டிருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் ஒவ்வொருத்தருக்கு ஒரு புலம் பெயர்ந்த குடும்பம் உதவி செய்தாலே தாரளமாக போதுமானது... இது எங்களின் கடமையும் கூட ... ஆனால் நாங்கள் அன்று புலிகள் பெற்ற வெற்றி பெருமைகளையும், ஈழ வரலாறுகளையும், மீண்டும் தலைவர் வருவார் , போராட்டம் மீண்டும் மலரவேண்டும் போன்ற விடயங்களை பற்றி பேசுவதால், சிங்களவர்களையும், அவர்களோடு நட்புறவை பேணுபவர்களையும் வன் சொற்களால் எசுவதாலும் எங்களை ஈழ ஆதரவாளர்கள் என நாங்களே நினைத்து பெருமையடைந்துகொண்டிருக்கிறோம்.


எங்களுக்காக இரத்தம் சிந்தி, உயிரை விதையாக்கி வாழ்ந்தவர்கள், அவர்கள் குடும்பங்கள் பற்றி சிறிது சிந்தியுங்கள் நாங்கள் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் யார்? எங்களுக்காக போராடி இன்று ஒரு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்யும் அளவுக்கு முன்னாள் போராளிகள் செல்லுமளவுக்கு நாங்கள் எங்கள் சுயநலம் இருக்கிறது என்றால் நாங்களனைவரும் உயிருள்ள சுயலப்பிணங்கள்..


நண்பர் சஞ்சயனின் பயண அனுபவங்கள் இனித்தான் விரிவாக பதிவாகும்... இன்னும் பல 
உண்மைகளுடன் .....!!!
இணைந்திருங்கள் அறிய விரும்புபவர்கள்.
http://visaran.blogspot.com/ 

உண்மை காதலின் குழந்தை...!!!


ஏறி வந்த வாழ்க்கை படிகட்டுகளில் 

ரசித்து புரிந்தவை சில
புரியாமல் கடந்து வந்தவை பல 
ஒரு புதிர்-விடை தேடி 
ஓடி முடிவதற்குள் 
அடுத்தடுத்த கேள்விகள் 
வாழ்கையின் அர்தத்தை 
சிந்திக்க நேரமற்று 
ஓட்டம் மட்டும் முடிவாக 
இதயவோட்டம் நிக்கும்வரை...!!!

ஆயிரம் ஆசைகள் 
வந்து போயின 
அதில் அடைந்தது என்ன 
இழந்தது என்ன 
அர்த்தமற்ற சிந்தனை மட்டும்தான் 
நிரந்தரமாக ஆரம்பித்த இடத்திலேயே 
விடைகள் மட்டும் சூன்யமாக ...!!!

கடந்து வந்த காலத்தில் 
சூழ்ந்துகொண்ட பிரச்சனைகளில் 
ஓடி ஒளிந்ததனால் 
கிடைதவையெல்லாம் அனுபவம்
என்ற வீராப்பில் 
உன் வயது என் அனுபவம் என்று 
அடுத்தவர்களிடம் வாய்சுனாமி
அடித்தவரெல்லாம்  
வாழ்க்கையை முகம் கொடுக்கமுடியாமல் 
மூச்சு முட்டி மூழ்கி இறந்தவர்களே 
பிணங்கள் மட்டும் பேசிக்கொண்டு திரிகிறது...!!! 

வயதல்ல அனுபவம் 
முகம் கொடுத்து முன்னின்று 
முயற்சி செய்ததில் 
கிடைத்த தோல்விகள்-அறிவுகள்
அதன்பால் கொண்ட 
வெற்றிகள் தான் அனுபவம் ...!!!

நெற்றிகாசை எதிர்பார்த்து 
எரியாமல் காத்திருக்கும் பிணம் வரை 
பணத்தின் மேல் கொண்ட மோகம் தீருவதில்லை...!!!

மனங்களை நோகடித்தேனும் 
பணங்களை அடையலாம் தவறில்லை 
பணங்களை இழந்து மனங்களை ஜெயிப்பதில் 
உடன்பாடில்லா புதுமை விதிகள் 
மனிதத்தை வளர்ப்பதற்காக  என்று  
நமக்குள் சொல்லிகொள்கிறோம் ...!!!

பருவத்தில் வரும் காதல் போல் 
ஈர்பில் வருவது இவையெல்லாம் 
உண்மை காதல் மலர்ந்து 
அவர்கள் குழந்தை பிரசவிக்கும்வரை 
உண்மைபோல்  தோன்றும்  இவையனைத்தும் 
பொய்யாக்கும் பிறந்த குழந்தை...!!!

எதுதான் உண்மை காதல் 
மண்ணுக்கு எங்கள் மேல் இருக்கும் காதல் 
அவர்கள் குழந்தைதான்  எது 
கல்லறை.
கருவறைக்கும் கல்லறைக்கும் இடையில் ...!!!


கருவறைக்கும் 

கல்லறைக்கும் இடையில் 
ஆயிரம் ஆட்டம் 
அடுத்தவர் அழிவில் 
அடைந்த சுயநல 
ஆணவ வெற்றிகளெல்லாம் 
ஆறடி மண்ணிடம் தோற்கும்  
அந்தநாள் அந்த கணத்தில் 
எழுந்திடும் மனச்சாட்சியின் 
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு 
வெட்கி தலை குனிந்து 
பிரிந்த விழுந்திடும் 
உடல் 
பதிலாகிடுமா...!!!


பணமும் பசியும் இழந்த நிம்மதி...!!!


பணம் தனது 

ஆடம்பரத்தால்-மேலும்
மேலும் சிலரை மட்டும் 
அலங்கரிக்க ...

பசி  அதனது 
கொடூரத்தால் -உயிர் 
போகும்வரை 
ஏழைகளை மட்டும் 
உருக்கிகொண்டிருக்கின்றது ..!!!

பணமும் பசியும் 
எங்கெங்கே அதிகமோ 
அங்கெல்லாம் சந்தோசம் 
நிம்மதி இழந்து விலகிவிடுகிறது ...!!!
தமிழ்மணம் மகுடம்... அதிக வாசகர்கள் பரிந்துரைஇன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறது மனது..நண்பன் ஒரு வலை பூ வைத்திருக்கிறான் நானும் உருவாகினால் பெருமை என கருத்தி உருவாக்கிய வலைப்பூவில்  மற்றவர்கள் பதிவுகளை போட்டு மகிழ்ச்சியடைந்த நான் படிப்படியாக  சொந்தமாக எழுத ஆரம்பித்தேன் எனது பதிவுகளையும் சிலர் பார்வையிடுவதையும் கருத்து தெரிவிப்பதையும் பார்த்து சந்தோசமடைந்த எனக்கு இன்று தமிழ்மணம் மகுடம் என்ற தலைப்பின் கீழ்  

                                             தமிழ்மணம் மகுடம் 
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
எனது பதிவு இருப்பதை கண்டு மனம் காற்றில் சருகாகி பறந்து திரிகிறது.... என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த பரிந்துரையாளர்களுக்கு எனது நன்றிகளை உங்கள் பாதத்தில் சமர்பிக்கிறேன்..

வல்லரசாகத்துடிக்கும் கேவல அரசே நல்லரசாக முயற்சி ...!!!


வல்லரசாகத்துடிக்கும் 
கேவல அரசே
நல்லரசாக முயற்சி 

பசித்த வயிறுகள் 
அநாதரவாக எரிந்து கிடக்க 
வீதியில் மிருகங்கள் போல் 
வாழ்க்கை நடத்த
சுகாதாரம் இன்றி 
மழலைகள் மலராமலே  கருக 

உனக்கு எதுக்காக 
அணுகுண்டுகள் 
அடுத்த நாட்டின் பொல்லாப்புகள் 
அவர்கள் அழிவில் சந்தோசங்கள்

மனிதன் 
வல்லவனாக பார்கிறான் 
நல்லவனாக முனைவதில்லை

நாடுகள் 
வல்லரசாக பார்கின்றன 
நல்லரசாக நினைப்பதேயில்லை

நாங்கள் எதை நோக்கி 
சென்றுகொண்டிருக்கிறோம் 
எதை விதைத்துவிட்டு 
போகபோகிறோம் 
நாளைய சமூகத்துக்கு
எங்கள் வாரிசுகளுக்கு

எப்படி அழிப்பது என்பதையா?
அழிக்க முடிந்தவன்தான்
திறமையானவன்  என்பதையா?

ஏழ்மையை ஒழிக்கும் வரை 
உழைப்பவன் உயரும் வரை 
வலியவர் மெலியவரை 
ஒடுக்குவதை நிறுத்தும் வரை  
எந்த நாடும் நல்லரசாக முடியாது 
நல்லரசில்லாத எவ்வரசு
வல்லரசு? 

கடவுள் கற்றுகொடுத்த லஞ்சம்...


கடவுளுக்கு

அர்சனை லஞ்சம் 
படையல் காணிக்கை 
வேண்டுதல் முறைப்பாடு
கடவுளிடம் மனிதன் 
கற்றுகொள்கிறான்
அரசியலை ....!!!

எங்களால் உருவாக்கபட்ட
உருவாக்கப்படும்
இவர்கள் இருவரும் 
சுயநலவாதிகளே 
எங்களுக்கு
அறிவும் 
தன்னம்பிக்கையும்
முயற்சியும் 
உழைப்பும் 
இல்லாதவரைக்கும்...!!!


பணத்தாசை அழித்த எனது வாழ்க்கை.........கருமேகங்களுக்கு பொருத்தம் பார்த்தது யாரோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் அழுவது தவறாமல் நடந்துகொண்டே இருக்கிறது ... யதார்த்த உலகில் அடுத்தவர்கள் அழுவது மற்றவர்களுக்கு இப்போதெல்லாம் சந்தோசம்தானே... அதுபோலவே அந்த மேகங்கள் அழுவதை என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மரமும் சந்தோசமாக இலையசைத்து ரசிப்பதை என் வீடடு யன்னலூடாக நான் ரசித்துகொண்டிருந்தேன் ... அப்போதுதான் ஒரு முதியவர் அந்த மழையில் நனைந்துகொண்டே சென்று கொண்டிருந்தார் அவரை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் சில வருடங்களுக்கு முன்பு கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வு மனகண்ணில் நிழலாடியது அதை உங்களுடன் பகிர வேண்டும் என்று நான் விரும்பியதுக்கு காரணமும் உண்டு அன்று அந்த சம்பவம் வாழ்க்கை பற்றி
 எனக்கும் பல விடயங்களை இன்றுவரை பதித்து நிற்பதுதான்......


மலேசியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் எனது இருக்கைக்கு முன்னாள் இருந்த ஒருவரை சந்தித்தேன் இன்றுவரை நாங்கள் நல்ல நண்பர்கள் இப்படி ஒரு உயர்ந்த நட்பினை பார்த்திருக்கிறீர்களா கிட்டதட்ட 3000 அடி உயரத்தில் இருந்து ஆரம்பித்த நட்பு  மிக உயர்ந்த நட்பு.......
அப்போது எனது வேலை கணணி திருத்தி கொடுப்பது விற்பனை செய்வது இடையிடையே மலேசியா, சிங்கபூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கணணி, தொலைபேசி, உதிரி பாகங்கள், ஆண்களின்  உடைகள் என கொடுக்கப்படும் பட்டியல்களுக்கேற்ப பொருட்களை கொண்டுசென்று இலங்கையில் விற்பனை செய்வது ,இப்படியான நேரத்தில் தான் எனது உயர்ந்த நண்பன் எனக்கு தொலைபேசியில் சொன்னான் ஒரு முகவரியையும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அந்த வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார் அவருடைய கணணி வேலை செய்யவில்லை செய்து கொடுக்கும் படி .........அவன் அப்போது லண்டனில் இருந்தான் இப்போதும்......
நானும் அந்த முகவரியை நாடி அந்த பெரியவரின் கணணியை சரி செய்து கொடுத்தேன் ஒரு மணிநேரம் ஆகிவிட்டது அதை செய்து முடிப்பதுக்கு.
நானும் அய்யா இப்போது சரியாகிவிட்டது நான் போயிட்டு வருகிறேன் என சொல்லிக்கொண்டு நாற்காலியை விட்டு எழும்பும் போது எனது கையில் 2000 ரூபாய் பணத்தை கொண்டுவந்து திணித்தார். நானும் அய்யா நான் நண்பனுக்காகத்தான் இங்கு வந்தேன் பணம் வேண்டாம் என பணத்தை கணணி அருகில் வைத்துவிட்டு போவதுக்கு ஆயத்தமாகும் போது சொன்னார் என்னை மீண்டும் பழைய மாதிரி ஆக்கி கவலைபட வைத்துவிடாத தம்பி இந்த காசை எடு என்றார்... 
இப்போது எனது ஆர்வம் அவரது வார்த்தைக்குள் ஒளிந்திருந்த பழைய மாதிரி என்ற சொற்களுக்குள் மறைத்து நிக்கும் கருத்துமேல் ஆவலை தூண்டியது. அது என்ன அய்யா பழைய மாதிரி என்றேன்?

அது ஒரு பெரிய கதை தம்பி என்னுடைய சோக கதை என்றார்... அவர் அப்படி சொல்லும் போதே அவர் கண்களில் அவர் தனிமையின் வேதனையை நான் உணர்ந்தேன். ஏதோ ஒன்றை சொல்ல விரும்புகிறார் ஆனால் என்னிடம் சொன்னால் நான் அதை காது கொடுத்து கேட்பேனா,கேட்க விரும்புவேனா  என்பதுதான் இப்போதைக்கு அவரது சொற்களிலும் அவர் உடல் பாவத்திலும் உணர்த்தி நின்றது..
உங்கள் கதையை கேட்காமல் இன்று நான் இங்கிருந்து போக போவது இல்லை என சொல்லிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தேன் ...
அப்போது அவர் சிரித்துக்கொண்டே அது ஒருவித வெட்கமும் கூட கலந்திருந்தது போடா தம்பி என மீண்டும் சொல்ல விரும்பாதது போல ...
நானும் விடவில்லை கடைசியில் சொல்ல ஆரம்பித்தார்..

நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார் இடியப்பம் விற்பது , அரிசி இடித்து கொடுப்பது,மிளகாய் தூள் இடித்து கொடுப்பது,இப்படியாகத்தான் நானும் எனது தம்பிகள் இருவரும் வளர்க்க பட்டோம்எனக்கு படிப்பு சரியாக மண்டையில் ஏறவில்லை அதனால் 14 வயதிலேயே கொழும்பில் வேலை பார்த்துகொண்டிருந்த பெரியப்பாவில் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டேன். அதன் பின் மிகவும் சிரமபட்டு அப்படி இப்படியாக நானும் வளர்ந்து ஒரு சிறு கடை போட்டு முதலாளியானேன் அப்படியே பணம் மீது எனக்கு வெறி என்றே சொல்லவேண்டும் அதை சேர்பதிலேயே எனது வாழ்கையை அற்பணித்தேன் அப்படியே எனது கடை பெரிதாகியது நானும் பணங்களில் புரள ஆரம்பித்தேன் அப்போதும் எனக்கு பணம் மீது ஆசை போகவில்லை என்னை எப்படி முந்திய காலத்தில் முதலாளிகள் வதைத்தார்களோ அது போலவே நானும் பலரது உழைப்பை சுரண்டி எனது மூலதனமாக்கி கொண்டேன் . எப்போதும் கடையிலேயே காலத்தை கடத்தினேன் இப்படியாக எனது உடல் பருமனும் எனது பணம் போல பெருகி கொண்டே போனது எனக்கோ எதை பற்றியும் கவலை இருக்கவில்லை பணம் இருந்தால் எல்லாமே வந்துவிடும் பணம்தான் எல்லாம் என இருந்துவிட்டேன். எனக்கு ஆண்டவன் பிள்ளைகளையும் கொடுக்கவில்லை, மனைவியும் வேளைக்கே கூப்பிட்டுடான்.என் பொண்டாட்டியை ஒரு மனுசி மாதிரியே நடத்தல்ல.அதை நினைத்து வருந்தாத நாளே இன்று இல்லை. நான் ஆசை பட்டது போல பணம் என்கூடவே இருந்தது சந்தோசம்.......? கண்களை கசக்கிகொண்டார். 

அன்று விதைத்தவற்றை இன்று அறுவடை செய்துகொண்டு இருக்கிறேன் எனது உடலில் எல்லா வியாதிகளும் இருக்கிறது விரும்பிய எந்த உணவையும் உண்ண முடியாது உண்ணும் உணவும் செமிப்பது பெரிய கலவரமாக இருக்கிறது குடல்புண்ணினால். அன்று அநியாயமாக சம்பாதித்து விரும்பிய உணவை உன்னது சேர்த்து வைத்த  பணத்தை இன்று மருந்திற்காக அழித்துகொண்டிருக்கிறேன் நான் அன்று பணத்திற்காக மனிதர்களை பகைத்துகொண்டேனே தவிர மனிதர்களை, நல்ல நண்பர்களை சம்பாதிக்கவில்லை அதனால் இன்று தனிமையில் இருக்கிறேன். பணத்தினால் வியாதிகளை குனபடுத்தவும் முடியவில்லை, தனிமையை போக்கவும் முடியவில்லை. இது எனக்கு கொடுக்கபட்ட தண்டனையாக அனுபவித்துகொண்டிருக்கிறேன். அன்று வாழ்க்கை என்றால் என்ன? சந்தோசம், நிம்மதி என்றால் என்ன? என்று தெரியாமல் பணம் பின்னால் போகும் போதும் வாழ்கையை அனுபவிக்கவில்லை. இன்று எல்லாவற்றையும் புரிந்துகொண்ட போது என்னால் முடியவில்லை.  தனிமை, வியாதி நான் சம்பாதித்தது.மொத்தத்தில் வாழ்கையை நான் வாழவில்லை பணம் அழித்துவிட்டது இல்லை இல்லை என் பணத்தாசை அழித்துவிட்டது என்று சொல்லலாம் என்றார்.
அன்று ஒவ்வொருநாளும் சில நிமிடங்கள் உடற் பயிற்சி செய்திருந்தால், எனது பணத்தினை மற்றவர்கள் கஷ்டத்துக்கு பயன் படுத்தி இருந்தால் இந்த தனிமை, வியாதி இரண்டும் இன்று இல்லாமல் இருந்திருக்கும் இப்போ புரிவது மரமண்டைக்கு அப்போது புரியாமல் போய்விட்டது...
சரிடா தம்பி போதும் நேரமாச்சு நீ போய்ட்டு வா என மேசைமேல் இருந்த பணத்தினை என் கையில் மீண்டும் திணித்தார் நானும் மறுக்கவில்லை. அவரோடு இனி தொடர்ந்து பேசவேண்டும் என முடிவு செய்துகொண்டு அவரது தொலைபேசி இலக்கத்தையும் சேமித்துக்கொண்டு அங்கிருந்து பலவிதமான சிந்தனைகளுடன் புறபட்டேன்... 

அவரை பின்பும் சில தடவை சந்தித்தேன்.. அப்பப்ப தொலைபேசியில் பேசி அவரது தனிமையை இயன்றவரை போக்கினேன்.. ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லை...

  

இப்படி ஒரு அனுபவத்தை எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்.....

உண்மைதான் இப்படியாக பணம் பணம் என எத்தனை பேர் வாழ்க்கை உண்மையான வாழ்கையை புரிந்துகொள்ளாமல் அழிந்து போய் இருக்கிறது, பணத்துக்குள் சந்தோசம், நிம்மதியை தேடி தொலைந்து போய் இருக்கிறது. பணத்தாசையால் மழலை சொல்லை கேட்காமல் ,பிஞ்சுகளை கொஞ்சாமல், மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச நேரமில்லாமல் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? இப்படியெல்லாம் பணம் பலரது வாழ்கையை அழித்தது, அழித்துகொண்டிருக்கிறது,இனியும் அழிக்கும்.........

வெள்ளம் கடந்தபின் ஆணை கட்ட முடியாது.........
கண்கெட்ட பின் சூரிய நமாச்காரம் பண்ண முடியாது......
வருமுன் காப்போம்... இல்லை வாழ்கையை தொலைத்தபின் புலம்ப மட்டுமே முடியும்... மேலே அந்த வயோதிபர் போல...
நீங்கள் முதலாளியா? உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுங்கள்.... மனிதத்தையும் மதியுங்கள்.

எல்லோரும் உங்கள் உடலையும்,அன்பையும் எப்போதும் பேணுங்கள் அதுதான் நிரந்தர சந்தோசம்,நிம்மதி.

நன்றி.கமலை(குருவை) மிஞ்சிய அன்ட்ரியா .. படங்கள்,காணொளிகள்இன்று இணையத்தை மட்டுமல்ல இளையவர்களை கிசுகிசுக்க வைக்கும் விடயம் அன்ட்ரியா அனிருத் .... இப்படியான விடயங்களுக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் ஏனோ பல சமுதாய சீர்கேடுகளுக்கு கொடுப்பதில்லை. இது என்ன மனநிலை புரியவில்லை எனக்கு...
படங்களில் சிலர் தங்கள் பெயர்களை போட்டு புகழ் தேட முயல்வது இன்னும் ........

இருவருடைய அந்தரங்கங்களை உணர்வுகளை இப்படி படம் பிடித்து ரசிப்பது சரியானதா? இருவருடைய விருப்பங்கள் சம்பந்த பட்ட விடயங்களை மற்றவர்கள் குறை சொல்வதுவும்  அவர்களை கேவலமானவர்களாக சித்தரிப்பதுவும் சரியானதா?

அவர்கள் செய்தது தவறென்றால் அதை தேடு தேடி பார்க்க விரும்புவது????

இந்த விடயம் எனக்கு உண்மையில் தெரியாது எனது நண்பனை சந்திக்க சென்ற வேளை அவனுடைய நண்பன்  என்னோடு அறிமுகமாகினான்.நண்பனின் வீட்டருகில் கடல் இருப்பதால் அப்படியே பேசி பேசி கடற்கரையில் அலைகளின் இசைக்கு எங்கள் நடைகளை நடனமாக்கி நடக்க தொடங்கினோம் பல விடயங்களை பேசிக்கொண்டே போகும் போது இந்த விடயமும் வந்தது... அவன் இதை சொன்ன விதம் என்னை அப்படியே சுனாமி அடித்தது போல இருந்தது ... கமல் கமல்தான் என்றான் என்ன கொடுமை கமலுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் என்று சிந்திப்பதுக்குள் சொல்லி முடித்தான் கமல் விஸ்வரூபத்தில் நல்லாத்தான் சொல்லி கொடுத்திருக்கிறார் என்றான்.
ஆனால் குருவை மிஞ்சி விட்டார் அன்ட்ரியா என்றான்..........எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுகிறான் பார்த்தீர்களா? 
இதுவும் திறமைதான் ஆனால் அதை சரியான இடத்தில் பயன்படுத்தாத திறமை என்றே சொல்ல வேண்டும்.

நித்தியானந்தா விடயம் வேறு துறவறம் என்று சொல்லி சாமி என்று சொல்லி லீலைகள் செய்தவன்.. வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது... ஆனால் இது??????????? இப்படி ஊதி பெரிதாக்குவது சரியானதா? 

நண்பர்களே தலைப்பை பார்த்து ஏதோ எதிர் பார்த்திருப்பீர்கள் .....

ஹிஹி... 

இலக்கணங்கள் மாறுது ...


அலையின் சத்தத்தை  கொண்டு 

ஆழ் சமுத்திரத்தினை அறிந்திடலாமோ 

என் மௌனித்த உதட்டசைவால்  
உள்ளத்தன்பை வெறுத்திடலாமோ ...

நிலவுக்குள் பூமியை புதைத்திடலாமோ 
உன்னை நானும் மறந்திடலாமோ...

விசத்துளி பாலை விசமாக்குவது போல் 
ஊடல் ஒன்று கூடல்களை மறந்திடலாமோ...

தி.மு.க போல மாநாடுகள் நடத்தி 
நானும் போலிமுகங்கள் காட்டியிருந்தால் 
என் அன்பு புரிந்திருக்குமோ ...

பணம் கொண்டு அளந்திடும் மானிடத்தை 
மனம் கொண்டு அணைத்திட நினைத்தது 
சினம் கொண்டு சிதைபடுவதற்காகவா ...!!!பாடசாலை நாட்களுக்குள் இருந்து சில நினைவுகள் ............

ஒரு மாதத்துக்கு முன்பு எனது ஊரில்  ஒரு சனிக்கிழமை  நான் படித்த பள்ளிக்கூடத்தை பார்பதுக்கு பாதுகாவலரின் அனுமதியோடு உள்ளே சென்றேன், நான் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பழைய இனிமையான நினைவுகளை ஒவ்வொரு நண்பர்களையும், ஆசிரியர்களையும் , நாங்கள் அன்று வேதனை என அனுபவித்த இன்று நினைத்து சந்தோஷ படும் தண்டனைகள், எங்களால் வேதனயடைந்தவர்கள் என என் மனகண்ணில் அலைகள் போல வந்து என் சந்தோஷ சுவரை தொட்டு தொட்டு சென்றுகொண்டிருந்தன அப்போதுதான் அந்த மரத்தை கண்டேன் அப்போது என் சந்தோஷ சுவரை சுனாமியே தாக்கி இருந்தது அந்த மரத்தில் எங்கள் பெயர்கள் பதித்த ஒரு தகரம். கண்டிப்பாக இந்த இடத்தின் என்மனம் முழுவதுமாக பள்ளி பருவத்துக்கே சென்றிருந்தது............


"அப்போது நான் ஆண்டு ஆறு படித்துகொண்டிருந்தேன் எங்கள்  பாடசாலையில் விளையாட்டுபோட்டிக்கான பயிற்சிகள் நடந்துகொண்டிருந்தன இதனால் எல்லோரும் மைதானத்தில்தான் இருந்தோம் அன்று எங்களுக்கு எந்த பயிற்சியும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு நானும் எனது நண்பர்கள் ஆறு பேர் சேர்ந்து பின்புறமாக இருக்கும் சுவரை தாண்டி வீடு வந்து சேர்ந்தோம் நாங்கள் எல்லோரும் அருகருகே உள்ள வீடுகளில் இருப்பதால் எங்கள் வீட்டருகே உள்ள தோட்டத்தில் பட்டம் விடுவதில் அப்போது எங்கள் ஆர்வம் இருந்தது அன்றைய பொழுது சந்தோசமாக பட்டத்தோடு போனது .

மறுநாள் பாடசாலைக்கு சென்றதும் மாணவத்தலைவன் எங்கள் ஏழு பேரையும் வகுப்பறைக்குள் விடவேண்டாம் என வகுப்பாசிரியர் சொன்னதாக வெளியே நிறுத்தி வைத்திருந்தான். வகுப்பாசிரியர் வந்தார் இது வழமையாக எங்களுக்கு நடப்பதால் பெரிதாக ஒன்றும் எங்களுக்கு பயம் இருக்கவில்லை ஆனால் அவரும் அதை புரிந்துகொண்டிருப்பார் போலும் உங்களுக்கு நானும் எவ்வளவுதாண்டா அடிக்கிறது போதும் இனி உங்களுக்கு அடித்து எதுவும் ஆகபோறதில்லை என்னோடு வாருங்கள் என பாடசாலைக்கு நடுவில் இருக்கும் ஒரு இடத்துக்கு அழைத்து சென்று ஒரு பள்ளம் தோண்ட சொன்னார் மெதுவாக எங்களுக்குள் பயம் ஊற்றெடுத்தது ஆனால் ஒரு ஒரடி பள்ளம் தொண்டியவுடன் நிறுத்து போதும் என்றதும் அந்த பயம் அப்படியே வற்றியும் போனது அவர் பள்ளம் தோண்ட சொன்னது ஒரு தேக்கு மரத்தினை நடுவதுக்கு. நாங்களும் இவ்வளவுதானா? என மனதுக்குள் சிரித்துகொண்டோம் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்துகொண்டோம்.ஆனால் ஆப்பு காத்துகொண்டிருந்தது..

இனி இந்த மரம் உங்களுடையது ஒவ்வொருநாளும் ஒவ்வொருவர் பாடசாலை நேரத்தை விட பத்து நிமிடம் முதல் வந்து  இதற்கு தண்ணீர் ஊற்றவேண்டும்,காலையில் வரவில்லை என்றால் பாடசாலை முடிந்ததும்  இதுதான் அன்று களவாக ஓடியதுக்கு உங்களுக்கு தண்டனை என்றார். இனி செய்யும் தப்புகளுக்கு ஒவ்வொரு மரமாக கூடிக்கொண்டு போகும் என்றார். அன்றில் இருந்து நாங்கள் சிறிது மாறித்தான் போய்விட்டோம். இதனால் ஒரு புரட்சியே ஆரம்பமாகிவிட்டது எங்கள் வகுப்பாசிரியர் இப்போதெல்லாம் தப்பு செய்பவர்களுக்கு அடிப்பதில்லை இதுபோன்ற தண்டனைகளை கொடுக்க தொடங்கினார். தாமதமாக வந்தால் பாடசாலை முடிந்ததும் பத்து திருக்குறள் மனனம் செய்து அங்கிருக்கும் ஒரு ஆசிரியரிடம் சொல்லிகாட்டி போகவேண்டும் மறுநாள் காலை அவருக்கும் சொல்லிகாட்ட வேண்டும். இது போல பல விதமான தண்டனைகளை அவர் புரட்சிகரமாக நிறைவேற்றியது மட்டுமல்லாது பாடசாலை முழுவதிலும் அது நடைமுறைக்கும் வந்தது. நாங்கள் இப்போதேல்லாம் எங்கள் குரங்கு வேலைகளை பாடசாலைக்கு வெளியே தான் வைத்துகொண்டோம்.

ஆனால் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காமல் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்தது எங்கள் வகுப்பாசிரியர் உயிரை  பலாலி இராணுவமுகாமில் இருந்து பாய்ந்து வந்து அவர் வீட்டுக்கு அருகில் விழுந்த செல்லொன்று குடித்து சென்றது....... அன்றில் இருந்து அந்த மரத்தை அவர் நினைவாக நாங்கள் அந்த பாடசாலையை விட்டு வரும் வரை பேணி பாதுகாத்தோம்....  "

ஒரு மரம் என்னை பாடசாலை பருவத்துக்கே அழைத்து சென்று விட்டது. இறந்தும் அந்த மரத்தின் மூலம் எங்கள் மனங்களில் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். 

நாங்களும் இந்த உலகத்துக்கு எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு இதுபோல பயனுள்ளவற்றை விட்டுசெள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அந்த மரம் எனக்கு உணர்த்தி இருக்கிறது.....


பாடசாலை நாட்கள் எப்போதெல்லாம் மனம் சோர்ந்து சோகத்தில் நனைகிறதோ அப்போதெல்லாம் இந்தநினைவுகள் எங்களை இன்புறசெயகிறது....

என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்தது இன்னும் சந்தோசம்........................

காதல் அவஸ்தை!!!
பார்வையிலேயே கருத்தரித்தேன் 

உன்னை பார்த்ததும் எனக்குள் 
கருத்தரித்த கவியை
பிரசவிக்கமுடியாமல்
இருந்தபோதுதான் உணர்ந்தேன் 
பிரசவ வேதனையை...!