தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

இணையம் பாதுகாப்பானதாஇன்று இணையம் மனிதனின் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. இந்த வளர்ச்சி இன்றைய வாழ்க்கைக்கு பல வழிகளில் பயனுள்ளதாகவே இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பல விதத்தில் நேரத்தை மிகுதியாக்கி கொள்ளலாம் முன்பெல்லாம் ஒரு துறை சார்ந்த விடயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அத்துறை சார்ந்த ஒருவரிடம் சென்றுதான் அது பற்றி தெரிந்துகொள்ள முடியும் அதிலும் அப்படியானவர்களை தெரியாதபட்சத்தில் அச்சந்தேகம் அப்படியே தீர்க்க படாமல் இருக்கும் ஆனால் இன்று இணையத்தில் அந்த நிமிடத்திலேயே அது பற்றி தெரிந்துகொள்ளலாம் இப்போதெல்லாம் இணையத்தில் எல்லா பொருள்களையும் விக்கவோ வாங்கவோ இணையத்திலேயே முடிகிறது. கண்டம் விட்டு கண்டம் காதலிக்கும் காதலர்களுக்கும், பொருளாதார தேடல் காரணமாக பிரிந்திருக்கும் கணவன் மனைவி க்கும் ஒருவருக்கு ஒருவர் பக்கத்திலேயே இருப்பது போன்ற உணர்வுடன் இருக்கவும் இந்த இணையம் உதவுகிறது.

சிலருக்கு இன்று இணையம் அறிவை வளர்க்கும் ஒரு ஒப்பற்ற களஞ்சியமாக இருக்கிறது சிலருக்கு பொழுது போக்காகவும் சிலருக்கு மனோவியாதியாகவும்  மாறிகொண்டிருக்கிறது.

அதிகமானவர்கள் இன்று அவர்களுடைய கொடுக்கல் வாங்கல்களை இணையத்தின் உடாகவே நடாத்துகின்றனர் இது அவர்களின் வியாபர நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவியாக இருகின்றது. பல வியாபர தலங்களின் அலுவலகங்களில் ,தொழில்சாலைகளில் என்று எல்லா இடமும் ஒளிபதிவு கருவிகள் மூலம் எந்த நாட்டில்  இருந்துகொண்டும் அவற்றை கண்காணிக்கிறார்கள் இணையத்தினுடாக. 

இப்படி தெரிந்தோ தெரியாமலோ இணையத்தின் பாவனை எங்களுக்குள் கலந்து விட்டது அது பற்றி சிந்திக்க நேரம் இல்லை அவசர  உலகத்தில் எல்லாம் அவசரமாக நடக்க வேண்டும் என்பதுக்காக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

இப்படியான பயனுள்ள இணையத்தினால் என்னென்ன இழப்புக்கள் எங்களுக்கு தெரியாமல் நடக்கிறது என்பது பற்றிய தொடர் பதிவொன்றை பதியலாம் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்கிறேன்.

அடுத்த தொடரில்.....
உங்கள் இரகசிய இலக்கங்கள் எப்படி களவாடபடுகிறது.

தொடரும் ...

6 comments:

 1. தீக்குச்சியை வைத்து விளக்கையும் ஏற்றலாம். வீட்டையும் கொளுத்தலாம். அது போலத்தான் இந்த இணையமும். நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து அமைகிறது.

  அருமையான பதிவு. விழிப்புணர்வு தேவை. தொடருங்கள். காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 2. உண்மைதான் நண்பரே.. நன்றி உங்கள் தொடர் வருகைக்கு..

  ReplyDelete
 3. இணையத்தில் நிறையவே நல்ல விஷயங்கள் இருக்கு.நாங்கள் எதைத் தேர்ந்தெடுத்துக்கிறோம் என்பதில்தான்.தொடருங்கள் !

  ReplyDelete
 4. உண்மைதான் ஆனால் எங்களுக்கு தெரியாமலா எங்களை சுற்றி பல விடயங்கள் நடக்கிறது அது பற்றி ஒரு விழிப்புணர்வுக்கான பதிவாக தொடரலாமென உள்ளேன்........

  ReplyDelete
 5. அவசியம பதியுங்கள்
  தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்

  ReplyDelete
 6. @Raman
  பொருளாதார தேடல் .............. நேரத்தை விழுங்கி நிக்கிறது.... பதிகிறேன். நன்றி உங்கள் அதரவுக்கு..

  ReplyDelete