தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

முகமூடியும் மெல்ல மெல்ல கிழிகிறதுஎனக்குள் எப்படி இத்தனை அழுக்குகள்
இவற்றை மறைக்க முகமூடி அணிகிறேன்...
நல்லவனாவதற்கு!!!

அடுத்தவர் கண்ணீரை துடைக்க எழும் போது 
என் கண்ணீரில் வழுக்கி விழுகிறேன்...
முடியாதவனாகிறேன்!!!

சமுதாய சீர்கேட்டை பார்த்து ஆவேச படும் போது
சிற்றின்பம் வந்து தோற்றி கொள்கிறது...
தடை பட்டுதான் போகிறேன்!!!

ஒவ்வொன்றாக அழுக்கை கழுவுகிறேன்
ஏதோ ஒரு ஆனந்தம் மனதில்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிட்டத்தை போல்
பட பட வரும் பக்குவமும் அறிவும் அனுபவமும் 
பலனளிக்கிறது புரிகிறது!!!

முக மூடியும் மெல்ல மெல்ல கிழிகிறது
இரண்டு முகமும் ஒன்றாகவே தெரிய ஆரம்பிக்கிறது!!!

6 comments:

 1. //சமுதாய சீர்கேட்டை பார்த்து ஆவேச படும் போது
  சிற்றின்பம் வந்து தோற்றி கொள்கிறது...
  தடை பட்டுதான் போகிறேன்!!!//
  உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் தான். நீங்கள் சொல்லிவிட்டிர்கள் எங்களால் சொல்ல முடியவில்லை.

  ReplyDelete
 2. முகமூடிகளின் பின்னே முகம் மறைத்து வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் உருவானால் சமுதாயம் சீர்பட்டுவிடும். நல்ல சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. @துரைடேனியல்
  @கீதா
  நன்றி..

  ReplyDelete
 4. எனக்குள் எப்படி இத்தனை அழுக்குகள்
  இவற்றை மறைக்க முகமூடி அணிகிறேன்...
  நல்லவனாவதற்கு!!!
  எல்லோருக்குமான தவிப்பை அழகாக சொன்ன பதிவு அருமை

  ReplyDelete
 5. @sasikala
  உங்கள் சொற்களுக்கு இருக்கும் சக்தியை நான் எனக்குள் உணர்கிறேன். இன்னும் என்னை வளர்க்க உங்கள் சொற்கள் என்னுள் நம்பிக்கையூட்டுகிறது நன்றி.

  ReplyDelete