தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

காமமயமாகி போன இணையம்


நண்பர்களே இன்று முகபுத்தகத்தில் படித்த தோழி ஒருவரின் கட்டுரை மிகவும் பிடித்து போனதால் இங்கு பிரசுரிக்கிறேன். ஒரு பெண் இப்படி எழுதியது வரவேற்க படவேண்டிய விடயம் ............


எழுதலாமா கூடாதா சிந்திக்கலாமா

எழுதலாமா வேண்டாமா? இன்றும் ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் அவரின் எழுத்துகளும்
இப்படி தான் இருக்கவேண்டும் என்று ஒரு சிலர் எதிர்பார்கிறார்கள்.

அதையே தான் சில பெண்களும் செய்கிறார்கள்.பெண்ணின் சுதந்திரம் அழகுசாதன பொருட்கள் பாவிப்பதும் அணியும்  ஆடையில் புரட்சி செய்வதுமே சுதந்திரம் என்கிறார்கள் பெண்கள்.. என்ன கொடுமை.மாதர் தனை இழிவு செய்யும் மாதர்கள் தான் இங்கே அதிகம் இருக்கிறார்கள்.இப்படி பட்டவர்களுக்கு மாறுபட்டு இருக்கவே நான் விரும்புகிறேன். அதனால் தான் என் எழுத்துகளும் மாறுபட்டே இருக்கிறது.

இரண்டு மாதங்களாக பாதி எழுதியும் மீதி எழுதாமலும் வைத்திருந்தேன். ஆனால் இன்று இதை எப்படியும் எழுதிடமுடிவு செய்து எழுதுகிறேன். தவறு என்று எண்ணுபவர்கள் படித்ததை மறந்துவிடுங்கள்.சரி என்பவர்கள் வாழ்த்து சொல்லுங்கள். ஆனால் யாரும் எனக்கு காதல் மன்னிக்கவும் காம மடல் அனுப்பாதிர்கள்.அப்புறம் உங்கள் பெயர் என் சுவரில் வந்துவிடும்.

சில இணையதளங்கள் தமிழ் இணைய ஊடகங்கள் மாற்றான் மனைவியை காமவெறியோடு பார்ப்பவர்கள் என்று எல்லோரையும்  கொஞ்சம் சாடலாம் என்று பார்கிறேன். அதிகம் இணையத்தை மேயும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும் நாட்டு நடப்பை பற்றி தெரிந்து கொள்ள நான் இணையதளங்களில் மேய்வது உண்டு. இப்படி நான் தேடி படிக்க முயன்ற இணையங்களில் எல்லாம் அதிகம் கள்ளகாதல் பாலியல் பலத்தாகரம் சிறுவயது கற்பம் சினிமா காமக்கதைகள் என்று எல்லாமே காமத்தை சுற்றியே இருக்கிறது.லங்காஸ்ரீ இணையத்தை தவற்றி.

இவர்கள் இதனால் எதை சொல்லவருகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. கள்ளகாதல் என்பது இப்பொழுது சர்வசாதர்நாமாகிவிட்ட ஓன்று இதை ஒரு செய்தி ஆக்கி அதற்க்கு முக்கியத்துவம் தருகிறீர்களே இது முறையா? கள்ளகாதலை எதிர்க்கிறோம் என்று கூறி கொண்டு இங்கிலாந்து பெண்களில் பார்க்க இந்திய பெண்கள் தான் காமகளியாட்டங்களில் ஆசைகூடியவர்களாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். பெண்களுக்கு எந்தமாதிரி எல்லாம் காமாவிளையாட்டுக்கள் பிடித்திருக்கு என்று எழுதுகிறீர்கள். இது தான் நாட்டு நடப்பா. இவை தான் இணையஊடகங்களின் வேலையா? பத்தாதுக்கு இன்று யாழ்பாணம் முழுக்க முழுக்க காமத்திலே கட்டுண்டு இருப்பது போல் எழுதுகிறீர்கள். ஏன் முன்பு இப்படியில்லையா?

சரி இந்த கள்ளகாதல் செய்தியோடு குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதை பிரசுரித்து அதை ஒரு சர்வசாதரானமான விடையமாக படிக்கவைதுவ்டுகிறீர்கள் ´. இது சரியா. இணைய ஊடகத்துக்கு மட்டும் எப்படி அதிகம் காமக்கதைகள் கிடைகின்றன? ஊடகங்களின் வேலை என்ன வெறும் காமபிரச்சனைகளை மட்டுமே அலசுவதா?

குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபடுவது என்றால் அது என்ன சர்வசாதாரணமான பிரச்சனயா`? ஊடகங்கள் என்னும் பெயரில் எதற்கு மக்களை சீர்குலைகின்றீர்கள்? இப்படி செய்திகளை பிரசுரித்து யாழ்பாணம் கெட்டுவிட்டது கெட்டுவிட்டது என்று எழுதுவதுக்கு பதில். பெண்ணின் அந்தரங்கக ஆசைகளை உணர்சிகளை எழுதுவதுக்கு பதில். இந்த மாதிரி கள்ளகாதலும் குழந்தைகள் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பது எப்படி  என்று எழுதலாமே? ஊடகங்களே உங்களுக்கு இருக்கும் போட்டியில் எதுக்கு இப்படி சமுகபிரசனைகளை  பொழுது போக்கு அம்சமாக ஆக்குகின்றீர்கள்?

இங்கே இந்த முகபுத்தகத்தில் பெண்விடுதலை தேடிதர்கிறோம் என்று கூறி கொண்டு. பெண்கள் மானம் காப்பம் என்று கூறிக்கொண்டு. பெண்கள் மதுபானம் பாவிப்பது அரைநிர்வாணமாக இருப்பது புகைப்பது போன்ற புகைப்படங்களை போடுகின்றீர்கள். இஸ்லாமியர்கள் பெண்களை அடிமைபடுத்துகிரார்கள் என்று இஸ்லாமிய பெண்களுக்கு ஆக குரல் கொடுக்கும் தமிழ் ஆண்கள் தமிழ் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். கேட்டால் தமிழன் தமிழனுக்கு ஒரு கலாசாரம்.

கள்ளகாதல் கள்ளகாதல் என்று சொல்கிறீர்களே கள்ளகாதல் எதனால் உருவாகுது என்று சிந்தித்தது உண்டா நீங்கள்? எங்கள் தமிழினத்தில் தாலிகட்டிய கணவனிடம் கூட ஒரு பெண் அந்த காமாசைகளை வெளிபடுத்த கூடாதம். கேட்டால் அது அசிங்கம் வெக்கம். கணவனுக்கு மனைவியை  பற்றி சிந்தனையே இல்லை. தான் சுகம் கண்டால் போதும் அது தான். கனவிடம் சொல்லமுடியாத கேட்க்கமுடியாத விடையங்களை எல்லாம் மனைவி பக்கத்திவீட்டுகாரனிடமும் அவனிடமும் கூறி ஓடிவிடுகிறாள். பின்னால் ஐயோ தமிழன் மானம் போச்சே மறியாதே போச்சே யாழ்பாணம் அழிந்துவருதே என்று குரல் குடுக்கவேண்டியது.

பாவம் குழந்தைகள் அவர்கள் பாலியல் சித்திரவதைக்கு ஆளான பின் எவ்வளவு மனுளைச்சளுக்கு ஆளாகிறார்கள் தெரியுமா? இதை கொஞ்சம் என்றாலும் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூடஇல்லாமல் யாழ்பாணம் கெட்டுவிட்டது கலாசாரம் போய்விட்டது என்குறீர்கள். சிறுவயது கற்பம். இவற்றை தடுக்க குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை சொல்லிதாருங்கள். இது அவசியமான ஓன்று. வெறும் கற்பம் ஆகாமல் தடுக்க மட்டுமல்ல பாலியல் நோய்களிலும் இருந்து குழந்தைகளை காப்ற்ற வேண்டியகடமை உங்களிடம் உண்டு. சரியான முறையில் சொல்லி கொடுத்தால் தவறான தொடுதலை குழந்தை புரிந்து கொல்லுஇல்லையா? சொல்லி தெரிவது காமகலை இல்லை என்று கூறி கொண்டு. காதலில் விழுந்தேன் மயக்கம் என்ன போன்ற படங்களை குழந்தைகளை பார்க்க விடுங்கள். பெரியவர்கள் உங்களுக்கே சரியாக பாலியல் பற்றிவிளக்கமில்லையே . பின் குழந்தைகளிடம் மட்டும் எப்படி வரும். பிள்ளைகள் கட்டாயம் பாலியல் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். காமுகனிடம் இருந்தும் சிறுவயது கற்பம் பாலியல் நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ் ஆய்வாளர்களும் சமுகபிரபலங்களும் பாலியல் கல்வியை எதிர்கிறார்கள் கேட்டால் சொல்லி தெரிவது காமகலைகள் இல்லை என்பார்கள். ஆனால் இதே தமிழர்களின் கோயில்களில் தான் ஆயகலைகள் அறுபத்திமூன்றையும் சிலையாக செய்து வைத்திருகிறார்கள். கடவுள் இருக்கும் இடம் கருவறை என்னப்படும் அப்படி பட்ட கருவறைகளில் மாமிமாரோடு சாமியார்கள் உள்ளாசகமாக இருக்கிறார்கள். இணையங்களில் காமத்தை பாடமாக நடத்துகிறார்கள். ஆனால் தன்னை காமுகனிடமிருந்தும் பலியல்தொல்லைகளிலும் இருந்து காப்பாற்றி கொள்ள ஒரு குழந்தைக்கு அனுமதிகிரார்களில்லை. கொடுமை கொஞ்சம் மாத்தி சிந்தியுங்கள். கலாசாரம் கெட்டுவிட்டது சமுகம் அழிவுக்கு உட்படுகிறது என்ற கூச்சல் கும்மாளங்களை விட்டு அதற்க்கு வேண்டியவற்றை செய்யுங்கள். ஊடகம் என்னும் பெயரில் படுக்கையறையை   வெட்டை வெளிச்சத்தில் கொண்டுவந்து உங்கள் வாசகர்வட்டத்தை கூட்டுவதுக்கு பதில் நல்ல கருத்துகளை முன்வையுங்கள்.

தமிழன் கலாசாரம் ஒன்றும் கெட்டுவிடவில்லை. அப்படி ஒரு நிலையை ஊடகங்கள் நீங்கள் தான் உருவாக்குக்றீர்கள். நன்றாக சிந்தியுங்கள் ஒரு விடையத்தை பிரசுரிக்கும் முதலில்.

பெற்றோர்களும் சிந்தியுங்கள்... அடுத்தவன் மனைவியை பகலில் ஆடையில்லாமல் இரசிக்கதுடிப்பவர்களும் சிந்தியுங்கள்.


என்றும் அன்புடன்

ஜெனித்தா பிரதீப்

நம்(பிக்)கைதோல்விகள் கொடுத்த 
வலிகளை
அனுபவமாக்கு 

வெற்றிகள் கொடுத்த 
ஆணவத்தை
படிகட்டாக்கு

தொடர் வெற்றிக்கு!!!!

**************************
விழுந்தால் -உன்
காலிலே விழு
நீதான் உயர்ந்தவன்

எழுந்தால்-உன்
கை பிடித்தே எழு
உன் கைதான் உனக்கு உதவி!!!

*****************************
தோல்வி தாங்கி
தாண்டியதுதான்
வெற்றி

முடியாது என்று
ஒதுங்கியவன்
தோல்வியை கூட
நெருங்க முடியாது

நாளைய பொழுது
உனக்காக என்று
இருந்துவிடாதே

இன்றைய பொழுது
உனக்காக என்று
எழுந்துவிடு!!!

******************************

மனித நேயத்தின் அளவிஎங்களை 
நீங்கள் தூக்கி சுமக்கவேண்டாம்.
நடக்க கற்று கொடுங்கள் 
நாளை இந்த நாட்டையும் சேர்த்து 
நாங்கள் தூக்கி சுமக்கிறோம்

எங்களுக்கு  நீங்கள்
காலமெல்லாம் உணவு தரவேண்டாம்
வாழ்கையை  கற்றுகொடுங்கள் 
கல்விக்கு வழி காட்டுங்கள்
நாளை நாங்கள் உலகுக்கே 
உணவு தருகிறோம்

எங்கள் திறமைகளை 
அரசியல்
பணம் 
அதிகாரம்
பட்டினி 
மொட்டு விரிவதுக்குள் 
கருக்கி  விடுகிறதே 
நாங்கள் எப்படி காய்ப்பது
கனியாவது
விதையாவது?

ஒரு கல்லு 
இல்லையென்றாலும் 
ஓட்டை வீடுதான்

எங்களை போல நாட்டில் 
ஒருவர் 
இருந்தாலும் அந்த நாடு
மனித நேயம் அற்றதே!!!

பறக்கிறேன் நான்.சோதனையும் 
வேதனையும் 
இரு 
சிறகாக 
போராட்ட வானில் 
இப்போது 
நான்

இன்பமும்
நிம்மதியும் 
இரு
சிறகாக 
சந்தோஷ வானில் 
எப்போது 
நான்

விடா முயற்சியும் 
நம்பிக்கையும்
இரு சிறகாக 
கொள்ளாமல் 
பறந்திட முடியும்??

காத்தாடி போல் வாழ்க்கை..!!!ஆசை என்னும் காற்றில் 
அன்பு என்ற நூலில்
பணம் என்ற வால்கட்டி
பறக்கிறது 
வாழ்க்கை என்னும் காத்தாடி...!!!

பலமான நூலும் 
அளவான காற்றும்
சரியான வாலும் 
ஆனந்த வாழ்க்கை...!!!
************************************************************************************
 விடாமுயற்சி என்னும் நூலில்லாமல்
வெற்றி என்னும் காத்தாடி 
உழைப்பு எனும் காற்றில் 
தன்னம்பிக்கையுடன் பறக்க முடியாது.......!!!
*************************************************************************************
நூலாக அவள் நினைவுகள் என்னை
இழுப்பதால் தான் 
உயிரெனும் காத்தாடி இன்னமும்
பறந்துகொண்டிருக்கிறது.....!!!

சக்கரை மேல் எறும்புகள்(முகபுத்தகம்)போனால் திரும்பாத நேரங்கள் 
பொழுது போக்காகவே போகிறது

காலை மாலை என எந்நேரமும் 
உலகத்தையே மறக்க வைக்கிறது 

பெண்கள் பதிவுசுவர்கள் சக்கரை
அங்கெ மொய்க்கிறது  எறும்புகள் போல் 
ஆண்கள் பின்னூட்டல்கள் 

முகம் பார்த்து நித்தமும் பழகும்
முகமூடி மனிதர்கள் இருக்கும் உலகில்
அவர்கள் மனதை அறிந்ததாக அரட்டையில் 
சில எதுகைமோனை சொற்களில் காதல் பிறக்கிறது

அன்று உண்மை காதல்கள்  பல சொல்ல 
சந்தர்ப்பம் கிடைக்காமல் புதைந்து போனது 
இப்போதெல்லாம் சில நிமிடங்களில் 
காதல் பிறக்கிறது
அதே வேகத்தில் பிரிந்தும் போகிறது

கிழவனும் குமரனாகி காதல் வசனம் பேச 
அவன் சொற்களில் யுவதியவள் காதல் ரசம் பருக
கற்பனையாகிபோன நாகரிக காதல்கள்

கவர்ச்சி பொங்க படங்கள் போட்டு 
பெண்னென அடையாளம் காட்டி 
சபலர்களை நண்பர்களாக்கி 
இணைய விளம்பரம் தேடும் வியாபாரிகள்
இன்னொருபக்கம் 

நூறு ஆண்டுகள் தான் ஆயுளாம் அதிகமானால்
தொழிநுட்ப உலகில்  இப்போது சராசரி அறுபதாம் 
அதில் இப்படி முகநூலில்  போலியாக 
போழுதைபோக்கினால் 
நீ இலட்சியம் அடைவது எப்போது?

காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?வண்ணங்கள் போல் பல எண்ணங்கள் தோணுது 
என்னுள்ளே என்னையும் ஏகாந்தம் செய்யுது 
முயற்சிகள் ஏதும் இன்றி எண்ணங்கள் ஜெயிக்குது 
பகல் கனவிலே மகிழ்ச்சியை தூண்டுது 
நித்தமும் இந்நிரந்தரமில்லா இன்பம் வந்துதான் போகுது 

கண் திறந்திருந்தும் கனவினில் லயிக்கிறேன் 
போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

கனவினில் கண்ட வேகம் நிஜத்தில்  நில்லாமல் 
சொர்ந்துதான் போகிறேன் நம்பிக்கை இழக்கிறேன்
உழைப்பை மறந்து உயரத்தில் பறக்கமுயல்கிறேன் 

வலிகள் இல்லாமல் வானத்தை அடைவதில் 
உனக்கென்று  தனித்துவம் என்ன இருந்திடபோகுது 
அனுபவம் இன்றி அடைந்திடும் வெற்றி என்றும் நிரந்தரமாகிடாது 
சோதனைகளும் வேதனைகளுமே வெற்றியில் இன்பம்
அடுத்தவர் கொடுக்கும் பெயருக்கு அடையும் வெற்றி இன்பத்தை தந்திடுமோ 
இத்தனை சொல்லியும் சொப்பனம் போகிறேன் 

போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

ஒரு அடி வைத்து சிகரத்தை அடைகிறேன் 
இறக்கை முளைக்காமல் உயரத்தில் பறக்கிறேன் 
சக்கரம் சுத்தாமலே வண்டிகள் ஓடுது 
கண் திறந்திருந்தும் காட்சிகள் போய்க்குது 

உடல் கழைக்க உத்வேகம் இல்லாமல் 
உணர்வுக்கு தெரியாமல் அப்பா ஆகபார்க்கிறேன் 
இன்பத்தை தொலைக்கிறேன் 
உழைப்பில் இருக்கும் உண்மையை அறியாமலே 
இந்த வெற்றியில்  எனக்கு  என்ன கிடைத்திட போகுது
கண் தெரிந்தும்  குருடனாய் வாழ்கிறேன்

போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

காதல்!!!காதல்!!!
தன் மனதையே  சரியாக புரியாத மனிதன் 
தன் ஆசைக்காக இன்னொரு மனதை புரிந்ததாக 
ஆடும் வாழ்க்கை நாடகங்களில் ஒன்று!!!

எண்ணத்தில் ஐம்புலன்களும் வஞ்சத்தை விதைக்குதுஎண்ணத்தில் ஐம்புலன்களும் 
வஞ்சத்தை விதைக்குது
எனக்குள்
பல முகங்கள் முளைக்குது

அடுத்தவர் அறிவுக்கு புரியாமல் 
ஒரு முகம் அதை மறைக்குது

சமூகத்தில் என் பெயர் கெட்டிடாமல் 
அம்முகம் நடிக்குது

புத்தியின் ஆதிக்கம் தனை 
எண்ணங்கள் ஜெயிக்குது 
இது மனிதத்தையும் கெடுக்குது

முகங்கள் அழிவதுக்குள் 
என்னை நானே அறிவதுக்குள்  
முதுமை வந்திடுமோ 
உண்மை வதனம் அறிந்திடாமலே 
உன்னை மண்ணும் விழுங்கிடுமோ!!!


வெற்றியின் ரகசியம்முயன்றால் முயலையும் ஆமை வெல்லும்
முயாலாமை என்றும் வெல்லாது.

சில தடவை முயன்றேன் 
ஒருதடவை வென்றேன் 

பல முறை முயன்றேன் 
சில முறை வென்றேன் 

இதுதான் வெற்றியின் வழியோ???
நம்(பிக்)கையில் தான் இருக்கிறது 
வெற்றியின் ரகசியம். 

பணம் என்ற போதையில்...

அன்பு என்ற எரிபொருளில் 
நெடுந்தூரம் மகிழ்ச்சியாக ஓடிய வாழ்க்கை வண்டி

கலந்து போன கலப்படத்தில் 
கவிழ்ந்துபோனது 
போகும் திசையை மறந்து

பணம்  என்ற போதையில் 
ஏன் மயங்கிபோனாய்
அன்பே

தனுஷ் -சுருதியினால் ரஜினி கமலுக்குகிடையிலான நட்பில் விரிசல்.


எந்த பக்கம் திரும்பினாலும் பசி, முடியாமை, மூட நம்பிக்கை, ஏமாற்றம், ஏழ்மை இப்படியாக ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது இதை பற்றியோ இதை போக்க ஏதாவது விழிப்புணர்வோ அல்லது இதை தடுக்கவோ என்பதை பற்றிய பதிவுகள் எங்கேனும் தேடினால் தான் கிடைக்கிறது ஆனால் சில இருவர் சம்பந்த பட்ட அவர்களின் தனிபட்ட விடயம் அதை பற்றி எங்கு பார்த்தாலும் பதிவுகள் தனுஷ்- சுருதி காதல் இதனால் என்ன என்ன நடக்கிறது என அவரவர் கற்பனையில் ஒவ்வொரு விதமான பல பதிவுகள் இதனால் யாருக்கு என்ன பயன்?? அதிகளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்பதை தவிர? முன்பு பிரபுதேவா,நயன்தாரா அவர்கள் கூட அவர்கள் வாழ்கையை பற்றி அவளவு நேரம் செலவழித்து அவர்களை பற்றி சிந்தித்து இருக்க மாட்டார்கள் அவர்களுக்காக பலர் எந்த பயனும் அற்று பதிவுகளை போட்டு தங்களை தானே எமற்றிகொண்டனரே தவிர வேறு எந்த நன்மையும் ஏற்பட்டதாக  என் சிற்றறிவுக்கு படவில்லை.

மேலே நான் பதிந்த தலைப்பை பார்த்து பலர் பல  எதிர்பார்ப்புக்களோடு   வந்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியும் அந்த நபர்கள் எல்லாம் என்னை மன்னித்து விடுங்கள்.என்னாலும் கிளுகிளுப்பாக எழுத முடியும் ஆனால் அடுத்தவர்கள் வாழ்கையை கெடுப்பதுக்காக எழுதுவதுக்கா நானும் எழுத வேண்டும் என்று சில காலங்களுக்கு முன்பு எழுதுபவர்களை பார்த்து நானும்  ஆசை பட்டேன். பயனுள்ள நேரத்தை விரயம் செய்யும் பொது ஒன்று எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் இல்லை பிறருக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் எதுவும் இல்லாமல் உண்மையோ இல்லையோ என்று தெரியாத ஒரு விடயத்தை பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல எழுதுவது மட்டும் அல்ல ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கிறீர்கள் இது சரியானதா? இப்படி எழுதி எங்கள் இணையத்தை பலர் பார்க்க வைப்பதில் என்ன ஆகிவிட போகிறது?? இதை விட மற்றவர்களை சிந்திக்கவோ சிரிக்கவோ வைக்கும் பதிவுகளை போடலாமே!!!

சமுதாயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க எழுத எத்தனையோ விடயங்கள் இருகின்றன. படித்தவர்கள் பாமர மக்களின் அறியாமையை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள். கல்வி இன்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது நல்ல கல்வியை நாடி சென்றால் அதிகளவு பணம் கேட்கிறார்கள் இல்லை என்றால் அதோடு அப்பா அம்மா படித்தவர்களா என்று கேட்டகிறார்கள் அப்படியானால் பாமரனும் ஏழையும் என்ன செய்வான்? இதை விட சில இடங்களில் சாதி கேட்கிறார்கள்,சீதனம் என்ற பெயரில் எத்தனை பெண்ணை பெற்றவர்கள் சுரண்ட படுகிறார்கள்,ஆன்மிகம் என்ற பெயரில் எத்தனை பாமரர்கள் வழிமாறி போகிறார்கள்  இப்படி ஆயிரம் ஆயிரம் பிரச்சனையில் எங்கள் சமுதாயம் மெல்ல மெல்ல அழிக்கபடுகிறது. 

தனுஷ் சுருதியை காதலிக்கா விட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமா? அவர்கள் அப்படி காதலித்தாலும் அவர்களை விட கேவலமானவர்கள் அவர்கள் தனிபட்ட வாழ்கையை இப்படி கேலிசெய்து விளம்பர படுத்தி ரசிக்கும் வக்கிர குணம்.


முகமூடியும் மெல்ல மெல்ல கிழிகிறதுஎனக்குள் எப்படி இத்தனை அழுக்குகள்
இவற்றை மறைக்க முகமூடி அணிகிறேன்...
நல்லவனாவதற்கு!!!

அடுத்தவர் கண்ணீரை துடைக்க எழும் போது 
என் கண்ணீரில் வழுக்கி விழுகிறேன்...
முடியாதவனாகிறேன்!!!

சமுதாய சீர்கேட்டை பார்த்து ஆவேச படும் போது
சிற்றின்பம் வந்து தோற்றி கொள்கிறது...
தடை பட்டுதான் போகிறேன்!!!

ஒவ்வொன்றாக அழுக்கை கழுவுகிறேன்
ஏதோ ஒரு ஆனந்தம் மனதில்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிட்டத்தை போல்
பட பட வரும் பக்குவமும் அறிவும் அனுபவமும் 
பலனளிக்கிறது புரிகிறது!!!

முக மூடியும் மெல்ல மெல்ல கிழிகிறது
இரண்டு முகமும் ஒன்றாகவே தெரிய ஆரம்பிக்கிறது!!!

முகபுத்தகமும் தவறவி(ட்ட)டும் தருணங்களும்.நான் ஈழத்தில் பிறந்தவன். எல்லோரும் போல எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக  எங்கள்  ஊரில் என் நண்பர்களுடன் சந்தோசமாக காலங்களை கழித்து  வந்தேன். யாருக்கு தெரியும் போர் எங்களை எல்லாம் இப்படி சிதறடிக்கும் என்று ஆளுக்கொரு இடம், நாடு சிதறியே போனோம். ஒன்றாக இருந்து பழகிய நாட்கள் மட்டுமே எப்போதெல்லாம் தனிமை வாட்டியதோ அப்போதெல்லாம் நினைத்து சந்தோஷ படும் நினைவுகளாக இருந்தது. இந்த அனுபவம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது ஆனால் ஈழத்தில் பிறந்தவர்களுக்கு இது அதிக பட்ச கொடுமையை செய்தது யார் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் இயந்திர வாழ்கையில் கால் பதித்து போலியான சந்தோசத்தை கொடுத்த பணத்தின் பின் ஓடிகொண்டிருந்தோம். 

இந்த சமயத்தில் தான் முகபுத்தக அறிமுகம் கிடைத்தது நானும் அங்கத்தவர் ஆகினேன் அதில் பெயரை தட்டச்சு செய்து பல இழந்த நண்பர்களை இணைத்துக்கொண்டேன். பலர் எனது பெயரை தேடி இணைந்து கொண்டனர் இப்படியாக இழந்த நட்பை பெற்று கொடுத்தது இந்த முகபுத்தகம் அதன் பின் இழந்த சந்தோசங்கள் மீட்க பட்டது எப்போதெல்லாம் தனிமையும், துன்பமும், தோல்விகளும் மனதை அழுத்தும் போதும், சந்தோசங்கள் ஆட்கொள்ளும் போதும் எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டோம் இழந்த எதோ ஒரு சந்தோசம் கைகெட்டிய துரத்தில் இருந்தது.
இது எனக்கு மட்டும் அல்ல, ஈழத்தில் மட்டும் அல்ல, பல பிரிந்த உண்மை உறவுகள் பலருக்கும் இந்த பிரிவு உணர்வை அனுபவிக்கும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருந்தது. இந்த வகையில் முகபுத்தகத்துக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் இன்று முகபுத்தகத்தில் என்ன நடக்கிறது? எந்த செய்தி இணையத்தை திறந்தாலும் முகபுத்தகத்தால் இது நடந்தது, முகபுத்தகத்தில் இது நடந்தது. என குற்றங்கள் பதிய பட்டுள்ளது.இது யார் தவறு? முகபுத்தகத்தின் தவறா? கையில் எடுக்கும் கத்தியை உயிரை காக்கும் அறுவை சிகிச்சைக்கும் பயன் படுத்தலாம் உயிரை எடுக்கவும் பயன் படுத்தலாம் இதில் கத்தியை குற்றம் சொல்ல முடியுமா? அன்பர்களே முகபுத்தகத்தை நீங்கள் தவறாக பயன் படுத்தி விட்டு தவறை நிங்கள் செய்து விட்டு முகபுத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றால் எந்த விதத்தில் சரியானது? இளையவர்கள் கவர்சிக்கும், பருவ உணர்வுக்கும் காதலை பகடைகாயாக்கி விட்டும் இப்பெல்லாம் காதல் பொய்யானது என்று காதல் மீது பழி போடுவது போலவே இதுவும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை முகபுத்தகம் ஒரு கண்ணாடி போல எந்த நோக்கத்தில் நீங்கள் அங்கு நுழைகிறிர்களோ அதனை நிங்கள் காணலாம். அன்பை, காதலை, நட்பை, காமத்தை , நகைசுவையை,நல்ல பயனுள்ள கருத்தை எந்த நோக்கமோ அது உங்களுக்கு கிடைக்கும் இது கண்ணாடியின் குற்றமா உங்கள் குற்றமா? நான் இங்கு எல்லவிதமானவர்களையும் கண்டேன். இங்கு நாங்கள் எதை தெரிவு செய்கிறோம் எதை நாடுகிறோம் எதை தேடுகிறோம் என்பதை பொறுத்து இங்கு எங்கள் பயன் வேறுபடுகிறது இதை வைத்து எங்கள் உண்மை முகத்தை நாங்களே படிப்பதுக்கு உதவியாக இருக்கிறது. நிஜம்  சரியாக இருந்தால் விம்பம் சரியானதாக இருக்கும் இது ஒரு இலட்சிய கண்ணாடி. இப்போது புரிகிறதா எங்கள் முகத்தை நாங்களே படிக்கும் புத்தகம் தான் இந்த முகபுத்தகம் என்பது.பெயர் சரியாகத்தான் இருக்கிறது எங்கள் நிஜ முகம் சரியில்லை என தோன்றினாள் திருத்த சந்தர்பத்தை உருவாக்கி கொள்ளலாம்.


அடுத்த விடயத்தை பகிர நினைக்கும் போது கண்ணதாசனின் யதார்த்த வரிகள் நினைவுக்கு வருகிறது ..
"நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!. 
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்!"
ஆம் அன்பர்களே குடி என்பது போதை ஆழ்மனதை ஆட்டி  படைத்துகொண்டிருக்கும் பல குடும்பங்களை  அழித்துகொண்டிருக்கும் கொடிய வியாதி  சிலருக்கு அது உற்சாகபானம் அது அவரவர் பயன் படுத்தும் அளவை பொறுத்தது. இதை எதுக்காக இங்கு சொல்கிறேன் என்றால் முகபுத்தக பாவனை ஒரு போதையாக மாறிகொண்டிருக்கிறது இது மறுக்க முடியாத உண்மை இந்த போதையில் பலர் சிக்கித்தவிக்கிறார்கள் பல பயனுள்ள வேலைகளை சந்தர்பங்களை இன்று தவற விடுகிறார்கள் முக்கியமான வேலைகளை நாளை நாளை என்றி தள்ளி போடுகிறார்கள் நாளை முதல் குடிக்க மேடன் என்று சொன்ன எவனும் குடியை நிறுத்தியதில்லை எப்போது முகபுத்தக பாவனையால் ஒரு பயனுள்ள வேலை நாளை நாளை என்று தள்ளி போனதோ அன்றே நிங்கள் அந்த போதைக்கு அடிமை என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். இது கால போக்கில் எங்கள் வாழ்கையையும் அழிக்கலாம். இங்கு கூட இது முகபுத்தக தவறு அல்ல எங்கள் மன கட்டுபாடற்றதன்மையே.நான் முகபுத்தகத்துக்கு வருவதுக்கு முன் பல துறை விடயங்கள்  தெரியாதவனாக இருந்தேன் என்றே சொல்லவேண்டும் இப்போது சரியோ பிழையோ என்னையும் எழுத தூண்டியது என்றால் அந்த பெருமை கண்டிப்பாக பெரும் பங்கு முகபுத்தகத்துக்கு உண்டு.  பலர் எழுதுகிறார்கள்  அவர்கள்  எழுத்தில் யதார்த்தமும், தன்னம்பிக்கையும், கருத்தாழமும் சுவை சொட்ட தருகிறார்கள். மனதில் தோன்றுவதை உண்மையாக எழுதுபவர்கள்  அவற்றுள் இருந்து தெறித்து வெளிவந்ததுதான் இந்த பாமரனின் சிறிய கருத்துக்கள். அதை பார்த்து பார்த்து தோன்றியதுதான இந்த எழுதும் ஆசை எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை. இப்படி பலருக்கு பயனுள்ளதாக  இருக்கிறது முக புத்தகம்.

இந்த பதிவை பகிர்வதுக்கு சில உண்மை அனுபவங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது ஒரு கிழமைக்கு முன்பு ஒரு பெரியவரின் ஒரு வீட்டுக்கு கணணி திருத்தி கொடுக்க சென்றிருந்தேன் அப்போது அவரது மனைவி வந்து எனக்கு சொன்ன வசனம் "தம்பி இந்த கணணியை திருத்தி விட்டு முகபுத்தகம் பயன் படுத்த முடியாதவாறு எதாவது செய்ய முடியுமானால் செய்து விடுங்கள்" ஏன் என கேட்டதுக்கு அவருடைய கணவன் எப்ப பார்த்தாலும் முகபுத்தகத்திலேயே இருப்பதாகவும் எதாவது அவசர வேலை என்று சொன்னால் பின்பு செய்யலாம் என்பதுவும் அதையும் மீறி பலமுறை கேட்டால் கோவம் வந்து ஏசுவதாகவும் சொன்னார். மற்ற நாடில் கல்யாணம் கட்டி  கொடுத்த மகளுடன்,பிள்ளைகளுடன்  முகம் பார்த்து கதைப்பதுக்ககத்தான் கணணியை எடுத்தோம் இப்போது மகள் கதைப்பதுக்கு வந்தாலும் சில நேரங்களில் கதைக்க விடாமல் முகபுத்தகத்தில் அதையோ செய்துகொண்டு இருக்கிறார். அதுக்கு அவர் இவளுக்கு என்ன தெரியும் என்று அவர் பக்க நியாயங்களை அடுக்க தொடங்கினார், சுதாரித்துகொண்ட நான் நாட்டாமை  பதவியை புறக்கணித்து விலகி வருவது கணணி திருத்துவதை விட கடினமாக இருந்தது.

 மனோதத்துவ நிபுணர்களின் அறிக்கையில் இப்போதெல்லாம் குடி பழக்கம் போல இந்த இணைய, முகபுத்தக பழக்கத்தில் இருந்து விலகுவதுக்கு அதிக மக்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் .

அறிவுத்தீ கொண்டு வாழ்கையில் ஒளி ஏற்றவும் முடியும் வாழ்கையை அழிக்கவும் முடியும், அறிவோ  தீ யோ பயன்படுத்துவதை பொறுத்தே அதன் பயனும், பாதிப்பும்..

அன்பாக இருந்தாலும் அமிர்தமாக இருந்தாலும் அளவுடன் இருந்தால் நிம்மதி,சுவை தவறினால் ஆபத்தே.அதிகூடிய விலைக்கு விற்கபடும் மிருகம் ஆண்கள்தான்.சீதன மாப்பிள்ளை  (தன்மானத்தை இழந்தவன்)
பெருமை கொள் 
உலகிலேயே
அதிகூடிய விலைக்கு 
விற்கபடும் மிருகம்
படித்த ஆண்கள்தான்.

திருக்குறள் ஆங்கில பெயர்ப்பு செய்தது தமிழுக்கு செய்யும் துரோகம் (கொலைவெறி)ஒரு தமிழன் எழுதி பாடி  இன்னொரு தமிழன் இசையமைத்த  பாடல் சர்வதேச அளவில் ரசிக்கபட்டு பாரட்ட படுவதில் ஒரு தமிழனாக பெருமை அடைகிறேன். அந்த பாடலை நானும் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். ஆனால் பலருக்கு இந்த பாடல் விசயத்தில் தமிழ் பற்று விஸ்வரூபம் எடுத்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. 

இதில் எங்கு வந்தது தமிழ் துரோகம்? ஒரு படத்தில் ஒரு பாடல் இடம் பெறுகிறது என்றால் அந்த படத்தில் எந்த சந்தர்ப்பத்தில் இடம் பெறுகிறது என்பதை கூட தெரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது சரியானதா? 

இதுவரை எந்த பாடலிலும் அங்கில வார்த்தை வரவில்லையா? ஏன் ஒரு ஆங்கில வார்த்தை கூட கலவை இல்லாமல் உங்களால் பேச முடியுமா? அப்போ நீங்கள் தமிழுக்கு துரோகம் செய்ய வில்லையா? ஒரு தமிழன் பாடல் இந்தளவுக்கு பாரட்ட பட்டு மொழிகள்,நாடுகள் தாண்டி ரசிக்கபடுவதுக்கு குறை சொல்வது எந்தவகையான மனபாங்கு என்பது இலகுவில் புரிந்து கொள்ள முடியும். இது தமிழனுக்கு கூடவே பிறந்த குணம்.

ஈழ தமிழர்களை எடுத்து கொள்ளவோம் இன்று ஈழத்தை வென்றெடுப்பது,தமிழை பற்றி பாரிய பற்று பொறுப்பு இருப்பதாக சொல்லிகொள்ளும் இவர்கள் அன்று இவர்கள் நண்பர்கள் ஈழத்துக்காக போராடும் போது அநாதரவாக விட்டுவிட்டு உயிரை காக்க ஓடியவர்கள் தானே மறுக்க முடியுமா? அப்படி சென்றவர்கள் அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்ற ஈழ பிரச்சனையை காரணம் காட்டி அநாட்டு  குடியுரிமை வாங்கி தங்கள் பாதுகாப்பையும் பொருளாதரத்தையும் சரி செய்துவிட்டு ஈழத்தில் இருப்பவர்களை குறை சொல்லுகிறார்கள். தமிழை மற்றவர்கள் காப்பற்றவில்லை என்கிறார்கள். இதை சொன்னால் அத்தனை  பேரும் சேர்ந்து என்னை துரோகி என்பார்கள்.இவர்கள் சொல்கிறார்கள் கொலை வெறிபாடல் தமிழில் எழுத படாததால் இது தமிழுக்கு செய்யும் துரோகம் என்று. "சாத்தான் வேதம் ஓதுது" என்று சொல்வார்களே அந்த முது மொழி நினைவுக்கு வருகிறது.இவர்கள் மட்டும் தமிழ் ஈழத்தை விட்டு ஓடி போனது துரோகம் இல்லை.வேறு மொழி பேசும்  நாடுகளில் போய் வசிக்கலாம்.அனால் இவர்கள் பார்வையில் 
திருக்குறள் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தது ,தமிழன் ஆங்கில அல்லது  வேறு மொழி படம் எடுப்பது,ஏ.ஆர் .ரகுமான் ஆங்கில மொழி படங்களுக்கு இசை அமைப்பது தமிழ் மொழிக்கு செய்யும் துரோகம் என்று கூட சொல்லுவார்கள் இனி வரும் காலங்களில்.ஆனால் இவர்கள் வணங்கும் கடவுளுக்கு மட்டும் கிரந்த மொழிபெயர்ப்பு தரகர்கள்  வேண்டும் அருள் வாங்க.

இப்படி எதாவது சொல்லி  தாங்கள் செய்த தப்பை மறைக்கிறார்கள் என்றே படுகிறது. இவர்கள்தான் முகபுத்தகத்தில் ஈழ உணர்வு நிரம்பி வழிய குழுக்கள் ஆரம்பித்து கழுத்தறுக்கிறார்கள். அங்கும் ஆளுக்கு ஒரு குழு அமைத்து பிரிந்துதான் இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு பற்று என்று சொல்லி ஒருவர் நாற்காலியில் இருந்து நாட்டை சுரண்டி குடும்பத்தை கொழுக்க வைத்து கிட்ட தட்ட அவர்கள் குடும்பம் கால் பதித்து  ஆதிக்கம்  செலுத்தாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு துரோகம் செய்யும் போது அவர்களுக்கு கோசம் போட்டு கோடி பிடித்து விட்டு ஒரு பாடல் தமிழை அழிக்கிறது என்று எப்படித்தான் சொல்கி றார்களோ?????