தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

தோல்வியை எதிர் கொள்ளும் பக்குவமே முதல் வெற்றி!!!

நம்பிக்கை இருந்தால் சிறகுகள் தேவை இல்லை பறப்பதுக்கு!!!

நீ சாதிக்க நினைத்தால் யாரும் இல்லை தடுப்பதுக்கு!!!

.......................................................................................................................
பிரச்சனைகள் வந்த போது 
எதிர் கொள்ள துணிவின்றி 
ஓடி ஒளிந்துகொண்டால்
உன்னோடு  ஒளிந்து கொள்ளும் 
வெற்றிகளும்
உன்  வாழ்கையும்.........

வெற்றி 
அனுபவங்களில் இருந்து கிடைக்கிறது ...

அனுபவம்
தோல்விகளில் இருந்து கிடைகின்றன ...

தோல்வியை எதிர் கொள்ளும் பக்குவமே
முதல் வெற்றி...

(தோல்வி)முதல் வெற்றி இன்றி 
தொடர் வெற்றி இல்லை ...

தோல்விகளே இல்லை என்றால் 
திறமை 
முயற்சி
உழைப்பு
தன்நம்பிக்கை 
தனித்துவமற்று போகும் ...

உன் வாழ்க்கை 
உனக்கு  மட்டும்தான் வாழ்க்கை 
மற்றவர்களுக்கு வேடிக்கை
துணிந்து நில்
எதுவானாலும் பார்த்துவிடலாம்
வந்தால் வாழ்க்கை 
இல்லை அனுபவம்......

அணு யுகமிது ...மிதிப்பதா? மிதிபடுவதா?

அணு யுகமிது 
வலியவன்  வாழும் பணப்பூகோளம் 
நாலு பேரை மிதித்து 
மேலே போகவேண்டிய கட்டாயம்
பாவம் பார்த்து தயங்கி நின்றாள்
நாலுபேரின் மிதி உன்மேல் விழும்!!! 

மிதிப்பதா? மிதிபடுவதா?
இரண்டில் ஒன்றுதான் 
தெரிவுகள் அழிக்கபட்ட 
இன்றைய உலகம்
இங்கு மனிதம் பற்றி பேசுவது
மடமை!!!

மிதிக்க பழகி கொண்டோம் 
வலிமை அற்ற நேரத்தில் 
மனிதம் பற்றி பேசி 
நல்லவர்களாக பார்க்கிறோம்
எங்களை காப்பாற்ற!!!

கடவுள் வேண்டும்..தூங்காத 
பல திருமணம் முடிக்காத 
அதி காலையில் திருப்பள்ளி எழுச்சி 
பாடி எழுப்பாத கடவுள் வேண்டும்

தரகர் இல்லாமல் 
மணி அடிக்காமல்
அர்ச்சனை பண்ணாமல்
காசு கொடுக்காமல் 
என் வேண்டுதலை
தமிழில் புரிந்துகொள்ளும் கடவுள் வேண்டும்

தானே சிலுவையில் அறைபடாமல் 
மனிதனின் கொடிய குணங்களை சிலுவையில் 
அறையும் சக்தியுள்ள கடவுள் வேண்டும்

பசித்த வயிறுக்கு உணவு கொடுக்க 
வதைக்கும் கொடியவனை தண்டிக்க 
வாழ வழி தெரியாமல் இருபவனுக்கு வழி காட்ட
கடவுள் வேண்டும்

உருவத்தை வைத்து
அலங்காரம் செய்து
சோம்பேறியாக இருந்துகொண்டு 
பிறப்பால் உயர்ந்த ஜாதி என 
பிரிவினைகளை உண்டாக்கி
ஒரு சுரண்டும் வர்க்கம் 
உரிமைகொள்ளா 
கடவுள் வேண்டும்...........