தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

பென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...
தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.

Usb Flash Sequrity

Usb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf”  மற்றும்  “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.

தரவிறக்கசுட்டி:Usb Flash Sequrity 

பெண்களுக்கு தெரியாமல் ............... வீடியோ - தொகுப்பு(18+)


 சிறிது நாளைக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஆசிரியப்பயிற்சி பயிலும் ஒரு மாணவன் கல்லூரி பாத்ரூமில் உடன் படிக்கும் மாணவியை தவறான முறையில் செல்பேசி மூலம் படமாக எடுத்து நண்பர்களுக்கு காட்டியது மட்டுமன்றி இணையத்திலும் போட்டு விட்டான்.அந்த மாணவியின் நிலையை நினைத்துப்பாருங்கள்.இதில் கொடுமை என்னவென்றால் இருவரும் காதலர்களாம். இதே போல் ஒரு பள்ளியின் படிக்கட்டிலேயே வைத்து பிளஸ்டூ படிக்கும்....

இதை விட இன்னொரு சம்பவம். காஞ்சிபுரம் கோயில் குருக்களின் காமக்கொடுரம். நான்கு பெண்களை கோயிலிலேயே வைத்து மனதைக்கெடுத்து அந்தரங்கத்தை படமாக எடுத்தது தான். இவற்றை எல்லாம் மிஞ்சிய விடியோக்கள் எல்லாம் இணையத்தில் பரவிக்கிடைக்கின்றன. எல்லாவற்றையும் கவனியுங்கள். பெண்கள் தான் ஏமாந்தோ அல்லது அலட்சியமாகவோ இருந்து உள்ளனர்.

இப்படி படம் எடுக்க உதவும் செல்பேசிகள் சந்தையில் 2000 ருபாய்க்கே கிடைக்கின்றன.அதுவும் தெளிவாக படம் எடுக்கும் வசதியோடு.மேலும் உளவு பார்க்கும் Spy Cameras மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.இவை பட்டன் வடிவிலோ பேனா மூடி வடிவிலோ மேலும் கண்ணுக்கு புலப்படாத வடிவில் கூட கிடைக்கின்றன. இவற்றை வைத்து படம் எடுப்பது சுலபமான வேலை தான்.

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

• இணையம் பயன்படுத்த வெளியில் நெட்கஃபேகளுக்கு செல்லும் போது கணிணியின் மேல் வைத்திருக்கும் வெப் கேமராவின் கண்கள் உங்களுக்கு தெரியாமல் படம் பிடிக்கலாம்.இந்த மாதிரி மாட்டுகிற பெண்கள் அதிகம்.எனவே அங்கே சென்று மகிழ்வதை நிறுத்துங்கள்.

• எங்கேனும் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் படுக்கைக்கு அருகில் கேமரா இருக்கிறதா என்று நன்றாக பார்த்து விடவும். கூடவே பாத்ரூமிலும் பாருங்கள்.பொது கழிப்பறைகள், துணிமாற்றும் அறைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும் கவனமாக இருங்கள்.

• உங்கள் காதலரோ அல்லது கணவரோ விளையாட்டாய் படம் பிடிக்கறதாய் இருந்தால் கூட அனுமதிக்காதிர்கள்.அழித்து விடலாம் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவர்கள் உண்மையாக இருந்தால் கூட இப்போது அழித்ததை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் நிறைய உள்ளன. மொபைலை கடைகளில் வேலையாக கொடுக்கும் போது அவர்கள் மீட்டு எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது.

• காமுகர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் தான் மோசம் செய்கின்றனர்.இளம்பெண்கள் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். எங்கேனும் வெளியில் அழைத்தால் தள்ளி ப்போடுங்கள். பாசமாக பேசுகிறவர்கள் கூட் வில்லனாக இருப்பார்கள். ஒருபோதும் எதையும் படமாக எடுக்க அனுமதிக்காதிர்கள்.உங்களுக்கு தெரியாமலே படம் எடுத்து உங்களை மிரட்டக்கூட வாய்ப்புண்டு.

• பொது இடங்களில் உங்கள் உடைகள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். எங்கே கேமரா இருக்கும் என்றே இப்போது சொல்ல முடிவதில்லை.உடைகள் கலைந்த நிலையில் பிடிக்கப்பட்ட படங்கள் நிறைய உலவுகின்றன. உங்கள் குளியல் அறையில் கூட இருக்கலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், பக்கத்துக்கு வீட்டு நபர்களால் கூட வைக்கப்பட்டு அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டலாம்.

• பெற்றோர்களும் தங்களது பெண்கள் பாசம் கலந்த அக்கறை கொள்ள வேண்டும். இயல்பான நடத்தையில் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதிக நேரம் சாட்டிங் செய்வது , மொபைலில் பேசுவது போன்றவை இருந்தால் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

• எளிதில் யாரையும் நம்பாதிருங்கள்.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட பழிவாங்கலாம்.முன்னரே எச்சரிக்கையாக இருந்தால் பின்னால் ஆபத்து இல்லை தானே!

இன்று எவ்வாறான காமராக்கள் உள்ளன .......................


இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் கள்ளக்காதல், லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.

கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது.

அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.


இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.


இதைப்பாருங்கள் வாயில் இட்டு சுவைக்ககூடிய சமாச்சாரம். அதன் வடிவில்கூட கேமரா.

இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.

இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!

எனவே கள்ளகாதல் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், ஊழல் பேர்வழிகள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இது காலத்தின் கட்டாயம்.

லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.

கணிணி திரையை படம் பிடிக்கும் சிறிய இலவச மென்பொருள்

கணிணியை உபயோகிக்கும் போது நடக்கும் மாறுதல்களை அல்லது சில செயல்பாடுகளை படமாக பிடிக்க பல மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனால் Liksoft தயாரிப்பான இந்த மென்பொருள் கொஞ்சம் மற்றவற்றோடு வேறுபட்டுள்ளது.


இந்த மென்பொருள் மூலம் எடுக்கப்படும் படங்கள் தரமானதாகவும் முழு சன்னலையும் படம் எடுக்கும் வசதியும் உள்ளது. தற்போது இயக்க நிலையில் உள்ள சன்னல்கள், எந்த ஒரு செவ்வக வடிவ நிலை மற்றும் நீள்வட்ட நிலையிலும் படம் எடுக்க முடியும். மேலும் எதாவது செயல்திட்டம் அமைக்கும் போது நமக்கு பயன்படும். எங்கேயாவது விளக்கக் காட்சி காட்ட வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். மேலும் இதில் எடுக்கப்பட்ட படங்களை பல வடிவங்களில் சேமிக்கலாம்( jpg, gif,png)


தரவிறக்கச்சுட்டி :Download Liksoft Free Screen Capture

உலகம் முழுவதும் இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த............

உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்...................................

இங்கே சொடுக்கவும்.....

உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

யூடியூப் தெரியும்.டிவி டியூப் தெரியுமா?
டிவியூடியூப்பை டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம்.
இந்த இணையதளம் வாயிலாக டிவி நிகழ்ழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். சும்மா இல்லை;உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
டிவி நிகழ்சிகளை இணையத்தில் திரட்டித்தரும் சேவையான டிவி டியூப் அகண்ட அலைவரிசை மற்றும் இண்டெர்நெட் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து சிறந்தவற்றை திரட்டித்தருவதாக சொல்கிறது.
இத‌ற்காக‌ ட‌வுண்லோடு செய்ய‌வோ அல்ல‌து எதாவ‌து சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய‌வோ தேவையில்லை நிக‌ழ்ச்சிகளை தேர்வு செய்து கிளிக் செய்தாலே போதும்.
டிவி நிக‌ழ‌ச்சிக‌ள் ப‌ல‌வேறு த‌லைப்புக‌ளில் வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அவ‌ற்றில் விருப்ப‌மான‌வ‌ற்றை தேர்வு செய்து கொள்ள‌லாம்.
இதைத்த‌விர‌ முக‌ப்பு ப‌க்க‌த்திலேயே பிர‌ப‌ல‌மான‌ சேனல், ச‌மீப‌த்திய‌ சேன‌ல் , த‌ற்போது பார்க்க‌ப்ப‌டும் சேன‌ல் ஆகிய‌ ப‌குதிக‌ள் மூல‌மும் நிக‌ழ்ச்சிக‌ளை தேர்வு செய்ய‌லாம்.
உல‌க‌லாவிய‌ அனுப‌வ‌த்தை விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்க‌ ச‌ரியான‌ விருந்து இந்த‌ த‌ள‌ம்.அதோடு க‌ண்ணை க‌சிக்கி கொண்டு பார்க்கும் ந‌ம்மூர் சேன‌ல்க‌ளை பார்த்து வெறுத்துப்போன‌வ‌ர்க‌ள் இந்த‌ டிவி டியூப்பை மிக‌வும் விரும்ப‌லாம்.
 ————-
 http://www.tv-tube.net/

கணனியை IP மூலம் HACK பண்ணுவது எப்படி????????ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.

சில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்
அப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்
பிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.


படம் 1
இணையதள முகவரி :  http://www.pdfmyurl.com
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்
பிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்
பிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.