தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

சக்கரை மேல் எறும்புகள்(முகபுத்தகம்)



போனால் திரும்பாத நேரங்கள் 
பொழுது போக்காகவே போகிறது

காலை மாலை என எந்நேரமும் 
உலகத்தையே மறக்க வைக்கிறது 

பெண்கள் பதிவுசுவர்கள் சக்கரை
அங்கெ மொய்க்கிறது  எறும்புகள் போல் 
ஆண்கள் பின்னூட்டல்கள் 

முகம் பார்த்து நித்தமும் பழகும்
முகமூடி மனிதர்கள் இருக்கும் உலகில்
அவர்கள் மனதை அறிந்ததாக அரட்டையில் 
சில எதுகைமோனை சொற்களில் காதல் பிறக்கிறது

அன்று உண்மை காதல்கள்  பல சொல்ல 
சந்தர்ப்பம் கிடைக்காமல் புதைந்து போனது 
இப்போதெல்லாம் சில நிமிடங்களில் 
காதல் பிறக்கிறது
அதே வேகத்தில் பிரிந்தும் போகிறது

கிழவனும் குமரனாகி காதல் வசனம் பேச 
அவன் சொற்களில் யுவதியவள் காதல் ரசம் பருக
கற்பனையாகிபோன நாகரிக காதல்கள்

கவர்ச்சி பொங்க படங்கள் போட்டு 
பெண்னென அடையாளம் காட்டி 
சபலர்களை நண்பர்களாக்கி 
இணைய விளம்பரம் தேடும் வியாபாரிகள்
இன்னொருபக்கம் 

நூறு ஆண்டுகள் தான் ஆயுளாம் அதிகமானால்
தொழிநுட்ப உலகில்  இப்போது சராசரி அறுபதாம் 
அதில் இப்படி முகநூலில்  போலியாக 
போழுதைபோக்கினால் 
நீ இலட்சியம் அடைவது எப்போது?

7 comments:

  1. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

    ReplyDelete
  2. Arumai Sago. Nam neramellam ippadi ponaal munnetram eppadi varum?. Ungal kelvi niyayamanathu.

    ReplyDelete
  3. நன்றி நண்பரே............. உங்கள் தொடர் வருகை என்னை மகிழ்விக்கிறது.

    ReplyDelete
  4. அதில் இப்படி முகநூலில் போலியாக
    போழுதைபோக்கினால்
    நீ இலட்சியம் அடைவது எப்போது?
    சரியான கேள்வி தான் பதில் தருவது யாரோ ?

    ReplyDelete
  5. முகப்புத்தகத்தைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.புரியாதவர்கள்தான் அந்தப் பொய்முகத்திற்குள் அமிழ்ந்து அழிந்துபோகிறார்கள் !

    ReplyDelete
  6. உண்மைதான் இதில் பல பாடசாலை சிறுவர்களும் தங்கள் வயதை அதிகம் போட்டு நேரத்தை வீணாக்குகிறார்கள்.

    ReplyDelete