தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மனித நேயத்தின் அளவி



எங்களை 
நீங்கள் தூக்கி சுமக்கவேண்டாம்.
நடக்க கற்று கொடுங்கள் 
நாளை இந்த நாட்டையும் சேர்த்து 
நாங்கள் தூக்கி சுமக்கிறோம்

எங்களுக்கு  நீங்கள்
காலமெல்லாம் உணவு தரவேண்டாம்
வாழ்கையை  கற்றுகொடுங்கள் 
கல்விக்கு வழி காட்டுங்கள்
நாளை நாங்கள் உலகுக்கே 
உணவு தருகிறோம்

எங்கள் திறமைகளை 
அரசியல்
பணம் 
அதிகாரம்
பட்டினி 
மொட்டு விரிவதுக்குள் 
கருக்கி  விடுகிறதே 
நாங்கள் எப்படி காய்ப்பது
கனியாவது
விதையாவது?

ஒரு கல்லு 
இல்லையென்றாலும் 
ஓட்டை வீடுதான்

எங்களை போல நாட்டில் 
ஒருவர் 
இருந்தாலும் அந்த நாடு
மனித நேயம் அற்றதே!!!

10 comments:

  1. //நாளை இந்த நாட்டையும் சேர்த்து
    நாங்கள் தூக்கி சுமக்கிறேன்//

    - சுமக்கிறேன் என்பதற்கு பதில் சுமக்கிறோம் என்று இருந்தால்தான் சரி. உடன் கவனிக்கவும் சகோ.

    நல்ல சிந்தனை. உயர்வான நோக்கம்.

    ReplyDelete
  2. //ஒரு கல்லு
    இல்லையென்றாலும்
    ஓட்டை வீடுதான்//

    அருமையான வரிகள் சகோ.

    தமஓ 2.

    ReplyDelete
  3. நன்றி நண்பரே ............ தவறை திருத்திகொள்கிறேன். உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. சரியான சிந்தனை அண்ணா அருமை...

    ReplyDelete
  5. உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி தோழரே.............

    ReplyDelete
  6. கல்விக்கு வழி காட்டுங்கள்
    நாளை நாங்கள் உலகுக்கே
    உணவு தருகிறோம்
    விருந்தோம்பலை மறவாத கவி வரிகள் அருமை

    ReplyDelete
  7. முக்கியமானவர்கள் நிச்சயம் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.கூடியளவு இலவசக் கல்வி கொடுத்தால் கூடியளவு குழந்தைகள் பயன்பெற்றுக்கொள்வார்கள் !

    ReplyDelete
  8. உண்மைதான்.....கல்வி ஒன்றால் தான் நிரந்தர ஏழ்மையை போக்க முடியும்............

    ReplyDelete