தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?



வண்ணங்கள் போல் பல எண்ணங்கள் தோணுது 
என்னுள்ளே என்னையும் ஏகாந்தம் செய்யுது 
முயற்சிகள் ஏதும் இன்றி எண்ணங்கள் ஜெயிக்குது 
பகல் கனவிலே மகிழ்ச்சியை தூண்டுது 
நித்தமும் இந்நிரந்தரமில்லா இன்பம் வந்துதான் போகுது 

கண் திறந்திருந்தும் கனவினில் லயிக்கிறேன் 
போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

கனவினில் கண்ட வேகம் நிஜத்தில்  நில்லாமல் 
சொர்ந்துதான் போகிறேன் நம்பிக்கை இழக்கிறேன்
உழைப்பை மறந்து உயரத்தில் பறக்கமுயல்கிறேன் 

வலிகள் இல்லாமல் வானத்தை அடைவதில் 
உனக்கென்று  தனித்துவம் என்ன இருந்திடபோகுது 
அனுபவம் இன்றி அடைந்திடும் வெற்றி என்றும் நிரந்தரமாகிடாது 
சோதனைகளும் வேதனைகளுமே வெற்றியில் இன்பம்
அடுத்தவர் கொடுக்கும் பெயருக்கு அடையும் வெற்றி இன்பத்தை தந்திடுமோ 
இத்தனை சொல்லியும் சொப்பனம் போகிறேன் 

போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

ஒரு அடி வைத்து சிகரத்தை அடைகிறேன் 
இறக்கை முளைக்காமல் உயரத்தில் பறக்கிறேன் 
சக்கரம் சுத்தாமலே வண்டிகள் ஓடுது 
கண் திறந்திருந்தும் காட்சிகள் போய்க்குது 

உடல் கழைக்க உத்வேகம் இல்லாமல் 
உணர்வுக்கு தெரியாமல் அப்பா ஆகபார்க்கிறேன் 
இன்பத்தை தொலைக்கிறேன் 
உழைப்பில் இருக்கும் உண்மையை அறியாமலே 
இந்த வெற்றியில்  எனக்கு  என்ன கிடைத்திட போகுது
கண் தெரிந்தும்  குருடனாய் வாழ்கிறேன்

போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

5 comments:

  1. Arumai Sago. Nalla Nalla Sinthanaigal. Vaalthukkal.

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உங்கள் நண்பர்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    உங்கள் தொடர் வருகைக்கு நன்றி தோழரே..

    ReplyDelete
  3. முதல் வரியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது நண்பரே....

    எண்ணங்களுக்கு ஏது வண்ணங்கள்? நம் கற்பனை தான் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கிறது என்று சொல்லவைக்கும்படி அசத்தல் வரிகள்பா...

    ஒருவரின் உள் நுழைந்து ஏகாந்தம்செய்கிறது என்றால் உலகத்தில் இருந்து தன்னை பிரித்தெடுத்து தனிமைப்படுத்தி சிந்திக்க வைக்கிறது...

    கண்ணை மூடினால் நமக்குள் ஒரு உலகம் பிறக்கிறது.... அதில் நம் சிந்தனைகள் உயிர்க்கின்றது.... நிஜத்தில் சாதிக்க இயலாத அத்தனையும் கனவுலகத்தில் சாதித்து வெற்றியின் விளிம்பை தொடவைக்கிறது....

    உழைப்புமின்றி அனுபவங்களின்றி இப்படி கிடைக்கும் வெற்றி சுவைப்பதுமில்லை... நிலைத்து நிற்பதுமில்லை....

    கண்கள் மூடி கனவில் கற்பனையில் சிந்திப்பதை நிஜத்தில் செயல்படுத்த கொஞ்சம் நம்பிக்கை, அதிக உழைப்பு, முடிவு எப்படி இருந்தாலும் ஏற்கும் மனத்திண்மை, தோல்வி என்றால் அதை தோல்வியென்று எடுக்க முனையாமல், அனுபவங்களாக அது கற்றுத்தந்த பாடங்களாக எடுத்துக்கொண்டு.....

    வலிகள் கொடுக்கும் வெற்றிகள் நிலைப்பதுண்டு...
    வலிகள் இல்லாது கிடைக்கும் வெற்றி சோம்பலில் கிடக்கவைத்து அடுத்த முயற்சியை தொடரவிடாது முடக்கிவைத்து சுருண்டு படுக்கவைக்கும்....

    நினைவுகளில் காலம் கழிக்காமல்...
    நினைத்ததை செயல்படுத்த துணிந்துவிட்டால்...
    நிற்க சமயமில்லாது உழைக்க தொடர்ந்துவிட்டால்...

    வெற்றி கிட்டுவதும்... அதை தக்கவைக்க நாம் எடுக்கும் சிரத்தையும் சரித்திரத்தில் நம் பெயரை பொறிக்கும்படி நிலைத்திருக்கும்...

    கவிதை வரிகள் நாம் எப்படி இருக்கக்கூடாதென்பதையும்..... எப்படி இருக்கவேண்டும் என்பதையும்.... அழகாய் எளிய நடையில் எல்லோரும் புரிந்துக்கொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக வரிகளில் பூக்களைத்தூவி கொஞ்சம் வண்ணம்குழைத்து அதையும் நாங்கள் ரசிக்கும் விதமாக கொடுக்கும் லாவகம் மிக அட்டகாசம்.....

    அசத்தலாய் கவிதை வரிகள் என்றால் அதற்கு பொருத்தமான படம்....

    அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் நண்பரே பகிர்வுக்கு....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு பொங்கல் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் அருமையான விளக்கத்துக்கும் நன்றி தோழி..... இப்படி விரிவான பின்னூட்டலை எனது வலை பூவில் பார்ப்பது இதுவே முதல் முறை. மிகவும் சந்தோசமாக உள்ளது.

    ReplyDelete