தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

முகபுத்தகமும் தவறவி(ட்ட)டும் தருணங்களும்.



நான் ஈழத்தில் பிறந்தவன். எல்லோரும் போல எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக  எங்கள்  ஊரில் என் நண்பர்களுடன் சந்தோசமாக காலங்களை கழித்து  வந்தேன். யாருக்கு தெரியும் போர் எங்களை எல்லாம் இப்படி சிதறடிக்கும் என்று ஆளுக்கொரு இடம், நாடு சிதறியே போனோம். ஒன்றாக இருந்து பழகிய நாட்கள் மட்டுமே எப்போதெல்லாம் தனிமை வாட்டியதோ அப்போதெல்லாம் நினைத்து சந்தோஷ படும் நினைவுகளாக இருந்தது. இந்த அனுபவம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது ஆனால் ஈழத்தில் பிறந்தவர்களுக்கு இது அதிக பட்ச கொடுமையை செய்தது யார் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் இயந்திர வாழ்கையில் கால் பதித்து போலியான சந்தோசத்தை கொடுத்த பணத்தின் பின் ஓடிகொண்டிருந்தோம். 

இந்த சமயத்தில் தான் முகபுத்தக அறிமுகம் கிடைத்தது நானும் அங்கத்தவர் ஆகினேன் அதில் பெயரை தட்டச்சு செய்து பல இழந்த நண்பர்களை இணைத்துக்கொண்டேன். பலர் எனது பெயரை தேடி இணைந்து கொண்டனர் இப்படியாக இழந்த நட்பை பெற்று கொடுத்தது இந்த முகபுத்தகம் அதன் பின் இழந்த சந்தோசங்கள் மீட்க பட்டது எப்போதெல்லாம் தனிமையும், துன்பமும், தோல்விகளும் மனதை அழுத்தும் போதும், சந்தோசங்கள் ஆட்கொள்ளும் போதும் எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டோம் இழந்த எதோ ஒரு சந்தோசம் கைகெட்டிய துரத்தில் இருந்தது.
இது எனக்கு மட்டும் அல்ல, ஈழத்தில் மட்டும் அல்ல, பல பிரிந்த உண்மை உறவுகள் பலருக்கும் இந்த பிரிவு உணர்வை அனுபவிக்கும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருந்தது. இந்த வகையில் முகபுத்தகத்துக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் இன்று முகபுத்தகத்தில் என்ன நடக்கிறது? எந்த செய்தி இணையத்தை திறந்தாலும் முகபுத்தகத்தால் இது நடந்தது, முகபுத்தகத்தில் இது நடந்தது. என குற்றங்கள் பதிய பட்டுள்ளது.இது யார் தவறு? முகபுத்தகத்தின் தவறா? கையில் எடுக்கும் கத்தியை உயிரை காக்கும் அறுவை சிகிச்சைக்கும் பயன் படுத்தலாம் உயிரை எடுக்கவும் பயன் படுத்தலாம் இதில் கத்தியை குற்றம் சொல்ல முடியுமா? அன்பர்களே முகபுத்தகத்தை நீங்கள் தவறாக பயன் படுத்தி விட்டு தவறை நிங்கள் செய்து விட்டு முகபுத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றால் எந்த விதத்தில் சரியானது? இளையவர்கள் கவர்சிக்கும், பருவ உணர்வுக்கும் காதலை பகடைகாயாக்கி விட்டும் இப்பெல்லாம் காதல் பொய்யானது என்று காதல் மீது பழி போடுவது போலவே இதுவும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை முகபுத்தகம் ஒரு கண்ணாடி போல எந்த நோக்கத்தில் நீங்கள் அங்கு நுழைகிறிர்களோ அதனை நிங்கள் காணலாம். அன்பை, காதலை, நட்பை, காமத்தை , நகைசுவையை,நல்ல பயனுள்ள கருத்தை எந்த நோக்கமோ அது உங்களுக்கு கிடைக்கும் இது கண்ணாடியின் குற்றமா உங்கள் குற்றமா? நான் இங்கு எல்லவிதமானவர்களையும் கண்டேன். இங்கு நாங்கள் எதை தெரிவு செய்கிறோம் எதை நாடுகிறோம் எதை தேடுகிறோம் என்பதை பொறுத்து இங்கு எங்கள் பயன் வேறுபடுகிறது இதை வைத்து எங்கள் உண்மை முகத்தை நாங்களே படிப்பதுக்கு உதவியாக இருக்கிறது. நிஜம்  சரியாக இருந்தால் விம்பம் சரியானதாக இருக்கும் இது ஒரு இலட்சிய கண்ணாடி. இப்போது புரிகிறதா எங்கள் முகத்தை நாங்களே படிக்கும் புத்தகம் தான் இந்த முகபுத்தகம் என்பது.பெயர் சரியாகத்தான் இருக்கிறது எங்கள் நிஜ முகம் சரியில்லை என தோன்றினாள் திருத்த சந்தர்பத்தை உருவாக்கி கொள்ளலாம்.


அடுத்த விடயத்தை பகிர நினைக்கும் போது கண்ணதாசனின் யதார்த்த வரிகள் நினைவுக்கு வருகிறது ..
"நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!. 
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்!"
ஆம் அன்பர்களே குடி என்பது போதை ஆழ்மனதை ஆட்டி  படைத்துகொண்டிருக்கும் பல குடும்பங்களை  அழித்துகொண்டிருக்கும் கொடிய வியாதி  சிலருக்கு அது உற்சாகபானம் அது அவரவர் பயன் படுத்தும் அளவை பொறுத்தது. இதை எதுக்காக இங்கு சொல்கிறேன் என்றால் முகபுத்தக பாவனை ஒரு போதையாக மாறிகொண்டிருக்கிறது இது மறுக்க முடியாத உண்மை இந்த போதையில் பலர் சிக்கித்தவிக்கிறார்கள் பல பயனுள்ள வேலைகளை சந்தர்பங்களை இன்று தவற விடுகிறார்கள் முக்கியமான வேலைகளை நாளை நாளை என்றி தள்ளி போடுகிறார்கள் நாளை முதல் குடிக்க மேடன் என்று சொன்ன எவனும் குடியை நிறுத்தியதில்லை எப்போது முகபுத்தக பாவனையால் ஒரு பயனுள்ள வேலை நாளை நாளை என்று தள்ளி போனதோ அன்றே நிங்கள் அந்த போதைக்கு அடிமை என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். இது கால போக்கில் எங்கள் வாழ்கையையும் அழிக்கலாம். இங்கு கூட இது முகபுத்தக தவறு அல்ல எங்கள் மன கட்டுபாடற்றதன்மையே.நான் முகபுத்தகத்துக்கு வருவதுக்கு முன் பல துறை விடயங்கள்  தெரியாதவனாக இருந்தேன் என்றே சொல்லவேண்டும் இப்போது சரியோ பிழையோ என்னையும் எழுத தூண்டியது என்றால் அந்த பெருமை கண்டிப்பாக பெரும் பங்கு முகபுத்தகத்துக்கு உண்டு.  பலர் எழுதுகிறார்கள்  அவர்கள்  எழுத்தில் யதார்த்தமும், தன்னம்பிக்கையும், கருத்தாழமும் சுவை சொட்ட தருகிறார்கள். மனதில் தோன்றுவதை உண்மையாக எழுதுபவர்கள்  அவற்றுள் இருந்து தெறித்து வெளிவந்ததுதான் இந்த பாமரனின் சிறிய கருத்துக்கள். அதை பார்த்து பார்த்து தோன்றியதுதான இந்த எழுதும் ஆசை எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை. இப்படி பலருக்கு பயனுள்ளதாக  இருக்கிறது முக புத்தகம்.

இந்த பதிவை பகிர்வதுக்கு சில உண்மை அனுபவங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது ஒரு கிழமைக்கு முன்பு ஒரு பெரியவரின் ஒரு வீட்டுக்கு கணணி திருத்தி கொடுக்க சென்றிருந்தேன் அப்போது அவரது மனைவி வந்து எனக்கு சொன்ன வசனம் "தம்பி இந்த கணணியை திருத்தி விட்டு முகபுத்தகம் பயன் படுத்த முடியாதவாறு எதாவது செய்ய முடியுமானால் செய்து விடுங்கள்" ஏன் என கேட்டதுக்கு அவருடைய கணவன் எப்ப பார்த்தாலும் முகபுத்தகத்திலேயே இருப்பதாகவும் எதாவது அவசர வேலை என்று சொன்னால் பின்பு செய்யலாம் என்பதுவும் அதையும் மீறி பலமுறை கேட்டால் கோவம் வந்து ஏசுவதாகவும் சொன்னார். மற்ற நாடில் கல்யாணம் கட்டி  கொடுத்த மகளுடன்,பிள்ளைகளுடன்  முகம் பார்த்து கதைப்பதுக்ககத்தான் கணணியை எடுத்தோம் இப்போது மகள் கதைப்பதுக்கு வந்தாலும் சில நேரங்களில் கதைக்க விடாமல் முகபுத்தகத்தில் அதையோ செய்துகொண்டு இருக்கிறார். அதுக்கு அவர் இவளுக்கு என்ன தெரியும் என்று அவர் பக்க நியாயங்களை அடுக்க தொடங்கினார், சுதாரித்துகொண்ட நான் நாட்டாமை  பதவியை புறக்கணித்து விலகி வருவது கணணி திருத்துவதை விட கடினமாக இருந்தது.

 மனோதத்துவ நிபுணர்களின் அறிக்கையில் இப்போதெல்லாம் குடி பழக்கம் போல இந்த இணைய, முகபுத்தக பழக்கத்தில் இருந்து விலகுவதுக்கு அதிக மக்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் .

அறிவுத்தீ கொண்டு வாழ்கையில் ஒளி ஏற்றவும் முடியும் வாழ்கையை அழிக்கவும் முடியும், அறிவோ  தீ யோ பயன்படுத்துவதை பொறுத்தே அதன் பயனும், பாதிப்பும்..

அன்பாக இருந்தாலும் அமிர்தமாக இருந்தாலும் அளவுடன் இருந்தால் நிம்மதி,சுவை தவறினால் ஆபத்தே.



5 comments:

  1. அன்பாக இருந்தாலும் அமிர்தமாக இருந்தாலும் அளவுடன் இருந்தால் நிம்மதி,சுவை தவறினால் ஆபத்தே.
    மிகச்சரியான உண்மை

    ReplyDelete
  2. நல்ல பதிவு! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மிகச்சரியானதொரு கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். எந்தப் பொருளையும் அதை உபயோகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது அதன் நன்மையும் தீமையும். இளைய தலைமுறை மட்டுமல்லாது மூத்த தலைமுறையும் முகப்புத்தகத்துக்குள் முகத்தை எந்நேரமும் நுழைத்துக்கொண்டு தங்களை மறந்திருப்பது வருத்தத்துக்குரியது. நேரம் விழுங்கும் இதுபோன்ற செயல்களிலிருந்தும் அதனால் வரும் பிற சிக்கல்களிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொள்வதே அறிவுடைமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. PUTHIYATHENRAL& கீதா
    நன்றி நண்பர்களே.

    ReplyDelete