தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மனம் பழகிபோனால் குணம்.



மனம் பற்றி அறிந்துகொள்ள எடுக்கும் முயற்சிகள் சமுத்திரத்தின் நடுவே திடீரென குதிப்பது போலான ஒன்று ஆனாலும் வேறு வழியில்லை எங்களை ஆட்டி படைத்துகொண்டிருப்பது எங்கள் மனம் தான். எங்கள் ஆசைகளை உருவாக்குவதும் அதில் ஏற்படும் முடிவுகளை பொறுத்து மகிழ்ச்சியையும், சோகத்தையும் உருவாக்குவது இந்த மனம் தான். எனவே இதை பற்றி அறியாமல் வாழ்கையை அறியமுடியாது. நாங்கள் சும்மா இருந்தாலும் எங்கள் மனம் எங்களை சும்மா இருக்க விடுவதில்லை ஏதாவதொரு ஆசையை உண்டாக்கி எங்காவது ஒரு சிக்கலில் மாட்டி விடுகிறது. எண்ணங்களை உருவாக்கி எண்ணவேகத்தில் செயல்படுகிறது என்றே தெரியாமல் தாவி திரிகிறது.

எங்கள் மனதில் ஒவ்வொரு எண்ணங்களும் எப்படி உருவாகிறது இதற்கு எங்கள் ஐம்புலன்களும்தான் காரணம். இந்த ஐம்புலன்களும் உள்வாங்கும் ஒவ்வொன்றுக்கும் ஏற்றது போலான எண்ணங்களையும் அதற்கு தொடர்புடைய ஏற்கெனவே எங்கள்  ஆழ் மனதில் பதிந்திருப்பதை நினைவுக்கு கொண்டு வருகிறது. எங்களுக்கு தெரியாமலே எங்கள் வாய் ஒரு பாடலை முனுமுனுக்கும் எதற்கு திடீரென இந்த பாட்டு நினைவுக்கு வந்தது என தேடி பார்த்தல் எங்கோ இந்த பாட்டு எங்கள் காதுக்கு மெதுவாக கேட்டிருக்கும். இதில் இருந்து ஒரு விடயத்தை நாங்கள் புரிந்துகொள்ள முடியும் ஒரு விடயத்தை நாங்கள் நினைவு வைதிருக்கவேண்டுமாயின் ஏற்கெனவே எங்கள் மனதில் பதிந்திருக்கும் ஒரு விடயத்துடன் தொடர்பு படுத்தி நினைவு வைத்துகொண்டால் எப்போதும் மறக்காது என்பதுவே.புதிதாக  ஒருவருடைய பிறந்த நாளை நினைவில் வைத்துகொள்ள விரும்பும் நாங்கள் அந்த திகதியை வெளிமனத்தில் பல தடவை மீட்பதற்கு பதிலாக ஏற்கெனவே  நினைவில் இருக்கும் ஒருவருடைய பிறந்த நாளுக்கு இரண்டு நாளுக்கு பின் என பதிந்து விட்டால் அது மறக்காது. இதில் இருந்து இன்னொரு விடயத்தையும் நாங்கள் புரிந்துகொள்ள முடியும் எங்கோ ஒலித்த பாடல் மெதுவாக கேட்டதும் அதுக்கான விளைவை ஆழ்மனம் காட்டுகிறது ஒருவருக்கு ஒரு சோகமான சம்பவம் ஒரு இடத்தில் நடந்தால் அவர் அதில் இருந்து வெளிவராமல் அந்த சம்பவம் அவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்திகொண்டிருந்தால் அவரை அந்த சூழ்நிலையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல் சிறப்பு இல்லை என்றால் அவர் காணும் கேட்கும் எல்லா விடயங்களையும் எங்களை அறியாமல் ஆழ்மனம் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கும். எங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் நல்லதாக இருந்தால் அது சம்பந்தமானவற்றால் எங்கள் மனதில் நல்ல மகிழ்ச்சியனவையே நினைவுக்கு வரும் அதுவே மாறாக சோகமும், துன்பங்கள் நிறைந்த ,கேவலமான சம்பவங்களாக இருந்தால் அது சம்பந்தமானவை எங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். எனவே எங்கள் மனதில் நல்லவற்றை பதிய விரும்பினால் உங்களை சுற்றி எப்போதும் நல்ல சூழலை உருவாக்கி கொள்ளுங்கள்.

ஒரு சைக்கிளை அல்லது ஒரு வாகனத்தை முதல் முறை பழகும் போது எவ்வளவு கவனத்துடன் பழக்குகிறோம் முழு சிந்தனையும் வீதியில் இருந்தாலும் பல தவறுகளை செய்துதான் விழுந்து எழும்பி பழகுகிறோம் ஆனால் அதுவே பழகி அதன் முறை எங்கள் ஆழ்மனதில் பதிந்துவிட்டால் அதன் பின் எத்தனையோ சிந்தனைகளின் மத்தியில் அந்த வாகனத்தை எங்களால் சரியாக ஓட்ட முடிகிறது இது ஆழ்மனதினால் சாத்தியமாயிற்று. சில நேரத்தில் ஏதோ சிந்தனையில் வாகனத்தை ஓடிகொண்டே போவோம் நாங்கள் போக வேண்டிய இடம் வேறாக இருக்கும் ஆனால் வாகனம் வழமையாக நாங்கள் போகும் ஒரு இடம் நோக்கி போய்கொண்டிருக்கும் நாங்கள் திடீரென சுயநினைவுக்கு வரும்போது இதை உணர்ந்துகொள்ளலாம். இதுபோலவே எங்கள் வாழ்கையில் பல விடயங்களுக்கு கட்டுபாட்டுடன் ஆரம்பத்திலேயே பழகி கொண்டால் அதுவே ஆழ்மனதில் பதிந்துவிட்டால் அதன் பின் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் ஆழ்மனம் அதையே செய்யதுண்டும். இதில் இருந்து நாங்கள் புரிந்துகொள்ளவேண்டியது சிறு வயதிலேயே பல நல்ல பழக்கங்களை கட்டுபாட்டுடன் பழக்கி ஆழ்மனதில் பதியவைத்துவிட்டால் அது அவர்கள் வாழ்நாள்முழுவதும் அவர்கள் சிறப்பாக இருக்க உதவும். 

எந்த ஒரு விடயமும் முதல்தடவை செய்யும் போது தவறாக தோன்றும் அதன் பின் அது ஆழ்மனதில் அது பதிந்தபின் அது பிழையான விடயமாக தெரிவதில்லை. முதல் தடவை தவறு செய்யும் போதே திருத்திக்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் அதன்பின் அதை மாற்றிகொள்வது மிககடினமனதாகும். வெளிமனம் இது தவறு என்று சொன்னாலும் அதை ஏற்றுகொள்ளாது ஆழ்மனம் அப்படி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்தாலும் சிலநாட்களில் ஆழ்மனம் வெளிமனத்தை அடக்கிவிடும் இன்று மட்டும் செய்யலாம் நாளில் இருந்து தவிர்த்துவிடலாம் என்று சமாதானமும் சொல்லும். இதுபோல ஆழ்மன அடிமைத்தனம்தான் போதை ,குடி,புகை பழக்கங்களுக்கு அடிமையாகியவர்களின் நிலை இதில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கிறது எனவே கட்டுபாடு ரொம்ப முக்கியம் என முன்னவர்கள் சொல்வது  இதுக்காகத்தான். எனவே தப்புகள் முதல் தடவை செய்யும் போதே தடுத்து விடுங்கள் பழகியபின் ஆழ்மனதை வெல்வது சாத்தியமில்லை என்று சொல்லிவிட முடியாது மிக கடினம்.

சில காதலர்களை பார்த்திருப்போம் அதில் ஒருவர் மிக அழகாக இருப்பார் மற்றவர் அசிங்கமாக இருப்பார் அவர்களுக்குள் அது பெரிய விடயமாக இருக்காது பார்க்கும் எங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இங்கு நடப்பது என்ன அவர்கள் பழகும் போது அவர்களுக்குள் காதல் இருந்திருக்காது ஆனால் அவர்கள் சில காலம்  பழகும் போது அவர் ஆழ்மனதில் மற்றவர் பதிந்துவிடுவார் அதன் பின் விலகுவது கடினமாக இருக்கும். இவர்களை கேட்டால் அவரை விரும்புவதற்கு காரணம் சொல்ல முடியாமல் இருக்கும் சொல்லவேண்டும் என்பதுக்காக சில காரணங்களை சொல்லலாம் ஆனால் உண்மை ஆழ்மனம் தான். ஆனால் இவர்களால் மற்றவரை விட்டு விலகமுடியாமல் இருப்பதுதான் காரணம். நண்பர்களே உங்களுக்கு ஒருவர் மீது காதலா? முதலில்  அவர்கள் ஆழ்மனதில் பதியும் வரை நன்றாக பழகுங்கள் நல்லவிதத்தில் பதியவேண்டுமாயின் அவர்கள் மனம் விரும்பும் விதத்தில் பழகி ஆழ்மனதில் உங்களை பதியவையுங்கள். அதன் பின் அவர்கள் உங்களை விட்டு பிரிய நினைக்கும் போது அவர்கள் உங்களை உணர்வார்கள்.
எங்களை போல பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்........
தொடரும்..



10 comments:

  1. arumayana kaddurai.

    ReplyDelete
  2. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு ஆரோக்கியமான விடயங்கள்
    பதிவினை படிக்கும் போதே எப்போதோ பார்த்த ஒரு இங்கிலீசு படம் ஞாபகத்துக்கு வருகிறது....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... அந்த ஆங்கிலப்படம் எதுவென நினைவு வந்தால் சொல்லவும் நானும் பார்கிறேன்..

      Delete
  4. ஆரோக்கியமான் கருத்து . நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

      Delete
  5. எனது இணைய இனிய நண்பர் ஆளுங்க அருண் அவர்கள், என்னுடைய மனிதனின் உண்மையான ஊனம் பதிவில் ஒரு கருத்து சொல்லி இருந்தார்... அவர்களுக்கு ஒரு பதில் எழுதி இருந்தேன்... (வழக்கமாக கருத்துக்கு கருத்து சொல்வதில்லை... தேவைப்பட்டால் மட்டும்... ) அந்த ஞாபகம் வந்தது - உங்களின் பதிவு படிக்கும் போது... நல்ல பல கருத்துக்கள்... இது போல் தொடருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு முதன் நன்றி.. தொடர் வருகைக்கும் இன்னும் எழுத தூண்டும் அழகான கருத்துக்கும் மனமார்ந்த நன்றி...

      Delete