தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

பாடசாலை நாட்களுக்குள் இருந்து சில நினைவுகள் ............

ஒரு மாதத்துக்கு முன்பு எனது ஊரில்  ஒரு சனிக்கிழமை  நான் படித்த பள்ளிக்கூடத்தை பார்பதுக்கு பாதுகாவலரின் அனுமதியோடு உள்ளே சென்றேன், நான் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பழைய இனிமையான நினைவுகளை ஒவ்வொரு நண்பர்களையும், ஆசிரியர்களையும் , நாங்கள் அன்று வேதனை என அனுபவித்த இன்று நினைத்து சந்தோஷ படும் தண்டனைகள், எங்களால் வேதனயடைந்தவர்கள் என என் மனகண்ணில் அலைகள் போல வந்து என் சந்தோஷ சுவரை தொட்டு தொட்டு சென்றுகொண்டிருந்தன அப்போதுதான் அந்த மரத்தை கண்டேன் அப்போது என் சந்தோஷ சுவரை சுனாமியே தாக்கி இருந்தது அந்த மரத்தில் எங்கள் பெயர்கள் பதித்த ஒரு தகரம். கண்டிப்பாக இந்த இடத்தின் என்மனம் முழுவதுமாக பள்ளி பருவத்துக்கே சென்றிருந்தது............


"அப்போது நான் ஆண்டு ஆறு படித்துகொண்டிருந்தேன் எங்கள்  பாடசாலையில் விளையாட்டுபோட்டிக்கான பயிற்சிகள் நடந்துகொண்டிருந்தன இதனால் எல்லோரும் மைதானத்தில்தான் இருந்தோம் அன்று எங்களுக்கு எந்த பயிற்சியும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு நானும் எனது நண்பர்கள் ஆறு பேர் சேர்ந்து பின்புறமாக இருக்கும் சுவரை தாண்டி வீடு வந்து சேர்ந்தோம் நாங்கள் எல்லோரும் அருகருகே உள்ள வீடுகளில் இருப்பதால் எங்கள் வீட்டருகே உள்ள தோட்டத்தில் பட்டம் விடுவதில் அப்போது எங்கள் ஆர்வம் இருந்தது அன்றைய பொழுது சந்தோசமாக பட்டத்தோடு போனது .

மறுநாள் பாடசாலைக்கு சென்றதும் மாணவத்தலைவன் எங்கள் ஏழு பேரையும் வகுப்பறைக்குள் விடவேண்டாம் என வகுப்பாசிரியர் சொன்னதாக வெளியே நிறுத்தி வைத்திருந்தான். வகுப்பாசிரியர் வந்தார் இது வழமையாக எங்களுக்கு நடப்பதால் பெரிதாக ஒன்றும் எங்களுக்கு பயம் இருக்கவில்லை ஆனால் அவரும் அதை புரிந்துகொண்டிருப்பார் போலும் உங்களுக்கு நானும் எவ்வளவுதாண்டா அடிக்கிறது போதும் இனி உங்களுக்கு அடித்து எதுவும் ஆகபோறதில்லை என்னோடு வாருங்கள் என பாடசாலைக்கு நடுவில் இருக்கும் ஒரு இடத்துக்கு அழைத்து சென்று ஒரு பள்ளம் தோண்ட சொன்னார் மெதுவாக எங்களுக்குள் பயம் ஊற்றெடுத்தது ஆனால் ஒரு ஒரடி பள்ளம் தொண்டியவுடன் நிறுத்து போதும் என்றதும் அந்த பயம் அப்படியே வற்றியும் போனது அவர் பள்ளம் தோண்ட சொன்னது ஒரு தேக்கு மரத்தினை நடுவதுக்கு. நாங்களும் இவ்வளவுதானா? என மனதுக்குள் சிரித்துகொண்டோம் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்துகொண்டோம்.ஆனால் ஆப்பு காத்துகொண்டிருந்தது..

இனி இந்த மரம் உங்களுடையது ஒவ்வொருநாளும் ஒவ்வொருவர் பாடசாலை நேரத்தை விட பத்து நிமிடம் முதல் வந்து  இதற்கு தண்ணீர் ஊற்றவேண்டும்,காலையில் வரவில்லை என்றால் பாடசாலை முடிந்ததும்  இதுதான் அன்று களவாக ஓடியதுக்கு உங்களுக்கு தண்டனை என்றார். இனி செய்யும் தப்புகளுக்கு ஒவ்வொரு மரமாக கூடிக்கொண்டு போகும் என்றார். அன்றில் இருந்து நாங்கள் சிறிது மாறித்தான் போய்விட்டோம். இதனால் ஒரு புரட்சியே ஆரம்பமாகிவிட்டது எங்கள் வகுப்பாசிரியர் இப்போதெல்லாம் தப்பு செய்பவர்களுக்கு அடிப்பதில்லை இதுபோன்ற தண்டனைகளை கொடுக்க தொடங்கினார். தாமதமாக வந்தால் பாடசாலை முடிந்ததும் பத்து திருக்குறள் மனனம் செய்து அங்கிருக்கும் ஒரு ஆசிரியரிடம் சொல்லிகாட்டி போகவேண்டும் மறுநாள் காலை அவருக்கும் சொல்லிகாட்ட வேண்டும். இது போல பல விதமான தண்டனைகளை அவர் புரட்சிகரமாக நிறைவேற்றியது மட்டுமல்லாது பாடசாலை முழுவதிலும் அது நடைமுறைக்கும் வந்தது. நாங்கள் இப்போதேல்லாம் எங்கள் குரங்கு வேலைகளை பாடசாலைக்கு வெளியே தான் வைத்துகொண்டோம்.

ஆனால் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காமல் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்தது எங்கள் வகுப்பாசிரியர் உயிரை  பலாலி இராணுவமுகாமில் இருந்து பாய்ந்து வந்து அவர் வீட்டுக்கு அருகில் விழுந்த செல்லொன்று குடித்து சென்றது....... அன்றில் இருந்து அந்த மரத்தை அவர் நினைவாக நாங்கள் அந்த பாடசாலையை விட்டு வரும் வரை பேணி பாதுகாத்தோம்....  "

ஒரு மரம் என்னை பாடசாலை பருவத்துக்கே அழைத்து சென்று விட்டது. இறந்தும் அந்த மரத்தின் மூலம் எங்கள் மனங்களில் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். 

நாங்களும் இந்த உலகத்துக்கு எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு இதுபோல பயனுள்ளவற்றை விட்டுசெள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அந்த மரம் எனக்கு உணர்த்தி இருக்கிறது.....


பாடசாலை நாட்கள் எப்போதெல்லாம் மனம் சோர்ந்து சோகத்தில் நனைகிறதோ அப்போதெல்லாம் இந்தநினைவுகள் எங்களை இன்புறசெயகிறது....

என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்தது இன்னும் சந்தோசம்........................

4 comments:

 1. நாங்களும் இந்த உலகத்துக்கு எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு இதுபோல பயனுள்ளவற்றை விட்டுசெள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அந்த மரம் எனக்கு உணர்த்தி இருக்கிறது...//

  பதிவின் விஷயம் மன்ம் கனக்க்ச் செய்து போனாலும்
  நீங்கள் முடித்தவிதம் நம்பிக்கை விதைகளை
  மனதில் விதைத்தும் போகிறது
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்...

  நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. @Ramani
  உங்கள் அழகான பின்னூட்டலுக்கு நன்றி தோழரே...

  ReplyDelete
 4. @திண்டுக்கல் தனபாலன்
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

  ReplyDelete