தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

வெற்றியின் ரகசியம்


ஆசைகள் மிக சுலபமாக எங்கள் மனதை ஆட்கொள்கிறது அதனை அடைய முடியுமா இல்லையா என எதையும் ஆராயாமல் அது பாட்டுக்கு கனவு காண்கிறது எல்லாம் நிறைவேறிவிட்டதாக .... ஆசை இல்லை என்றாலும் வாழ்க்கை எதிர்பார்ப்பு இருக்காது உப்பில்லாத உணவு போலாகிவிடும். அளவுக்கு அதிகமானாலும் அதுவே வாழ்கையையும் அழித்துவிடும். எனவே இந்த ஆசையை எப்படி வகைபடுத்துவது எதை நோக்கி எங்கள் பயணத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவெடுப்பது மிக முக்கியம். சிந்திக்க தெரியாத ஆழ்மனம் ஆயிரம் சொல்லும் பின்விளைவுகளை சிந்திக்காது. எந்த ஒரு ஆசை யாரையும் பாதிக்காமல் தொந்தரவு செய்யாமல் எங்களுக்காக நிறைவேற்ற முடியுமோ அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை. அதுவே எங்கள் ஆசை நிறைவேறுவதில் இன்னொருவர் சுகந்திரம் பறிபோகிறது என்றால் அதை நிறுத்திவிடவேண்டும். தவறான ஆசை. அடுத்த படியாக எங்கள் ஆசையில் எங்களுக்கும் பயனிருந்து இன்னும் பலருக்கும் பயனாக இருந்தால் அந்த மாதிரியான ஆசைகள் எங்கள் இலட்சியங்களாகவே நாங்கள் கருதலாம்.

 சில ஆசைகள் மற்றவர்களை,சமுதாயத்தையே அழித்து எங்களை சந்தோஷ படுத்துவதாக இருக்கும் அவற்றை நிறைவேற்ற துடிப்பவர்கள் தேச துரோகிகள். சட்ட விரோதிகள். சட்டத்துக்கு விரோதமாக ஆசைகளை நிறைவேற்றியவர்கள் வாழ்கையில் எப்போதும் அவர்கள் நிம்மதியை எதிர்பார்க்க முடியாது. எதேட்சையாக காவல்துறை அவர்களின் வீட்டருகில் வந்தாலே தன்னை தேடித்தான் வருகிறதோ என்ற பயம் அவர்கள் நிம்மதியை அழித்துவிடும்.இப்படியே தொடரும் வாழ்க்கை. எப்போதும் எங்கள் பெரிய ஆசைகள் அதாவது எங்கள் இலட்சியங்கள் போதுநலமனதாக இருந்தால் மிக சிறப்பு. நான் பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை இருந்தால் கூடவே அதன் பின் பலருக்கு என்னால் வேலை வாய்ப்பை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். இல்லை என்றால் சுயநலமான  இலட்சியமாகிவிடும்.  ஆசைகளை நிறைவேற்றுவதில் வெற்றியடைவதுக்கு சில தகுதிகள் இருக்கவேண்டும்.

 முதலாவது அது தொடர்பான அறிவு. ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் அது தொடர்பான அறிவுதான் முதல்நிலை வகிக்கிறது.பல பாமரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் நன்றாக உழைக்க மட்டுமே முடியும் அதை எங்கே எப்படி பயன் படுத்துவது என்று தெரிவதில்லை அதனாலேயே வாழ்நாள் முழுவதிலும் மற்றவர்களுக்காக உழைத்து கடைசிவரை உழைப்பாளியாகவே வாழ்ந்து காலத்தை கடந்து விடுகிறார்கள் அந்த உழைப்பை எப்படி எங்கே பயன்படுத்தவேண்டும் என்ற அறிவுள்ளவர்கள் இவர்களை பயன்படுத்தி அவர்கள் சமுதாயத்தில் வெற்றிகளை குவிக்கிறார்கள். 

அறிவு மட்டும் இருந்தால் வெற்றியடைந்துவிடமுடியுமா? இந்த உலகத்தில் பல அறிவாளிகள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் வெற்றியாளர்களா? இல்லை அவர்களில் பலருக்கு விடாமுயற்சி, உழைப்பும் ,பொறுமை,நம்பிக்கை இருப்பதில்லை  "புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை" என்ற சந்திரபாபுவின் பாடல்கள் நினைவுக்கு வருகிறது இப்போதெல்லாம் பலர் ஏதோ அலுவலகம் சென்றோம் முடித்து வந்தோம் என்ற சாதாரண வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் ஆனாலும் இவர்கள் முயற்சி என்பது புதிதாக ஒன்றும் இருந்துவிடபோவதில்லை இவர்கள் வாழ்வில் பாரிய வெற்றிகள் இருக்காது ஆனாலும் இவர்கள் அறிவாளிகள்தான் . இருக்கும் வாழ்க்கை போதும் என்று அதையே வாழ பழகிக்கொண்டவர்கள், இதில் குறை எதுவும் இல்லை. அறிவு மட்டும் வெற்றியை தந்துவிடாது. 

இந்த முயற்சி எப்படி உருவாகிறது?
என்னிடம் முயற்சி இருக்கிறது என்பதற்காக கடல் தண்ணீரை என்னால் குடித்தே முடித்துவிட முடியுமென்று விடாமுயற்சி கொண்டு தண்ணீரை குடிக்க ஆரம்பித்தால் சாத்தியமா? இல்லை எங்கள் முயற்சியை எங்கே பிரயோகித்தால் வெற்றி கிடைக்கும் என்பதை வழிகாட்டும் அந்த அறிவு  மிக முக்கியம்,இந்த அறிவு உறுதியாக இருந்தால் நம்பிக்கை உண்டாகும்.இந்த நம்பிக்கை கடைசிவரை இருக்கவேண்டும்  நம்பிக்கை எங்களை விடாமல் முயற்சி செய்ய வைக்கும்.

 பலர் வெற்றியை நோக்கி 90 %  சென்றிருப்பார்கள் அங்கெ அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் மேலும் பத்து சதவிகிதம் முயற்சி செய்திருந்தால் வெற்றியை அடைந்திருக்கலாம் எனவே பொறுமை என்பதுவும் இங்கே முக்கியமாகிறது.
எனவே வெற்றிக்கு அறிவு,நம்பிக்கை,பொறுமை,முயற்சி,உழைப்பு எல்லாமே முக்கியமாகிறது.. 

இந்த கட்டுரை சம்பந்தமான எங்கோ வாசித்த ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது.... 

நூறு முறை முயற்சித்து ஒரு தடவை வெற்றியடைந்தேன் 99 தடவை தோல்வியில் இருந்து நூறு முறை வெற்றியடைவது எப்படி என்பதை அறிந்துகொண்டேன்.ஆயிரம் தடவை முயற்சி செய்யவேண்டும் என்பதுவே அது.
 வெற்றி என்பது ஆசை பட்டதும் வந்துவிடுவதில்லை எதுவும் செய்யாமல்  வரவில்லை என்றதும் குறைகளை வேறு இடங்களில் திணிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை.......

8 comments:

 1. அனுபவங்கள் பல பாடங்களை கற்றுக் கொடுக்கும்...

  நல்லதொரு பாடலின் வரியையும் முடிவில் சேர்த்துக் கொண்டது சிறப்பு... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழரே..

   Delete
 2. அருமையான கட்டுரை

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
 3. விடா முயற்சி நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்.நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
 4. // வெற்றி என்பது ஆசை பட்டதும் வந்துவிடுவதில்லை எதுவும் செய்யாமல் வரவில்லை என்றதும் குறைகளை வேறு இடங்களில் திணிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை.......//

  நல்ல வரிகள் .....

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி..

   Delete