தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

கருவறைக்கும் கல்லறைக்கும் இடையில் ...!!!


கருவறைக்கும் 

கல்லறைக்கும் இடையில் 
ஆயிரம் ஆட்டம் 
அடுத்தவர் அழிவில் 
அடைந்த சுயநல 
ஆணவ வெற்றிகளெல்லாம் 
ஆறடி மண்ணிடம் தோற்கும்  
அந்தநாள் அந்த கணத்தில் 
எழுந்திடும் மனச்சாட்சியின் 
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு 
வெட்கி தலை குனிந்து 
பிரிந்த விழுந்திடும் 
உடல் 
பதிலாகிடுமா...!!!


16 comments:

 1. ஆழமான கேள்வியுடன் கவிதை.

  இடியின் முழக்கத்தைக்
  கேட்க மட்டும் தான் முடியும்.
  பார்க்க முடியாது என்பது போல...

  வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே,,

   Delete
 2. நல்ல கேள்வி... தொடருங்கள்... நன்றி...


  ('தொற்கும்' என்பதை 'தோற்கும்' என மாற்றவும்..)

  ReplyDelete
  Replies
  1. தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி தோழரே ..மாற்றிவிட்டேன்..

   Delete
 3. ஆடுவரை ஆட்டம். ஆடி அடங்கினால், ஆறடி நிலமே சொந்தமடா. அதற்குள் இந்த அற்பபிதற்கள் ஆடும் ஆட்டதான் எத்தனையோ?
  // அந்தநாள் அந்த கணத்தில்
  எழுந்திடும் மனச்சாட்சியின்
  அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
  வெட்கி தலை குனிந்து
  பிரிந்த விழுந்திடும்
  உடல்
  பதிலாகிடுமா...!!! // நன்றாக கேட்டீர்கள். சிறப்பாக முடித்துள்ளீர்கள்.
  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..

   Delete
 4. உண்மை அழகான அர்த்தமுள்ள வரிகள்....

  ReplyDelete
  Replies
  1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..

   Delete
 5. Replies
  1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..

   Delete
 6. அந்தநாள் அந்த கணத்தில்
  எழுந்திடும் மனச்சாட்சியின்
  அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
  வெட்கி தலை குனிந்து
  பிரிந்த விழுந்திடும்
  உடல்
  பதிலாகிடுமா...!!!//


  அருமை அருமை.அதுதான்
  கேள்வியே நல்ல பதிலாகவும் உள்ளது
  மனம் தொட்ட கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி தோழரே..

   Delete
 7. அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
  வெட்கி தலை குனிந்து
  பிரிந்த விழுந்திடும்
  உடல்
  பதிலாகிடுமா...!!!
  நிச்சயம் பதிலாகாது. சிறந்த படைப்பாக்கம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிலுக்கு வருகைக்கும் நன்றி..

   Delete
 8. நல்ல கவிதை தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete