தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

வல்லரசாகத்துடிக்கும் கேவல அரசே நல்லரசாக முயற்சி ...!!!


வல்லரசாகத்துடிக்கும் 
கேவல அரசே
நல்லரசாக முயற்சி 

பசித்த வயிறுகள் 
அநாதரவாக எரிந்து கிடக்க 
வீதியில் மிருகங்கள் போல் 
வாழ்க்கை நடத்த
சுகாதாரம் இன்றி 
மழலைகள் மலராமலே  கருக 

உனக்கு எதுக்காக 
அணுகுண்டுகள் 
அடுத்த நாட்டின் பொல்லாப்புகள் 
அவர்கள் அழிவில் சந்தோசங்கள்

மனிதன் 
வல்லவனாக பார்கிறான் 
நல்லவனாக முனைவதில்லை

நாடுகள் 
வல்லரசாக பார்கின்றன 
நல்லரசாக நினைப்பதேயில்லை

நாங்கள் எதை நோக்கி 
சென்றுகொண்டிருக்கிறோம் 
எதை விதைத்துவிட்டு 
போகபோகிறோம் 
நாளைய சமூகத்துக்கு
எங்கள் வாரிசுகளுக்கு

எப்படி அழிப்பது என்பதையா?
அழிக்க முடிந்தவன்தான்
திறமையானவன்  என்பதையா?

ஏழ்மையை ஒழிக்கும் வரை 
உழைப்பவன் உயரும் வரை 
வலியவர் மெலியவரை 
ஒடுக்குவதை நிறுத்தும் வரை  
எந்த நாடும் நல்லரசாக முடியாது 
நல்லரசில்லாத எவ்வரசு
வல்லரசு? 

16 comments:

 1. முடிவில் சரியான கேள்வி... அது தான் உண்மை... என் மனதில் அடிக்கடி நினைக்கும் வரிகள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எங்கள் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன ...
   வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே..

   Delete
 2. நல்லரசில்லாத எவ்வரசு
  வல்லரசு?//

  அருமையான கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள்
  வெடிகுண்டுச் சபதமே கேட்காத காதுகளில்
  வீணையோசையா கேட்கப் போகிறது
  சிந்திக்கச் செய்யும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழரே அணுகுண்டே போட்டாலும் அது அவர்களுக்கு கேட்காது சுயநலமும்,பணத்தாசையும் அதை கேட்கவிடாது .....

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே ...

   Delete
 3. ஊழலை எதிர்பவர்கலையே உள்ள தள்ளும் அரசு எப்படி நல்லரசாக மாறும் ?

  ReplyDelete
 4. நல்ல ஆழமான கருத்துகள் நிறைந்த வரிகள்

  ReplyDelete
 5. வணக்கம்
  /*வல்லரசாக பார்கின்றன
  நல்லரசாக நினைப்பதேயில்லை*/
  வலிமை மிக்க வரிகள்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி... உங்கள் கவிதை மழையில் நானும் நனைய வருகிறேன்..

   Delete
 6. நாடுகள்
  வல்லரசாக பார்கின்றன
  நல்லரசாக நினைப்பதேயில்லை//Survival for the fittest

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதலாமே ........

   நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

   Delete

 7. // நாங்கள் எதை நோக்கி
  சென்றுகொண்டிருக்கிறோம்
  எதை விதைத்துவிட்டு
  போகபோகிறோம்
  நாளைய சமூகத்துக்கு
  எங்கள் வாரிசுகளுக்கு //
  அழகான வரிகள். வல்லரசை விட நல்லரசாக இருந்தாலே போதும்.

  என்னுடைய தளத்தில் தன்னம்பிக்கை

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்
  Halith

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி தோழரே,,

   Delete