தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

பணத்தாசை அழித்த எனது வாழ்க்கை.........



கருமேகங்களுக்கு பொருத்தம் பார்த்தது யாரோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் அழுவது தவறாமல் நடந்துகொண்டே இருக்கிறது ... யதார்த்த உலகில் அடுத்தவர்கள் அழுவது மற்றவர்களுக்கு இப்போதெல்லாம் சந்தோசம்தானே... அதுபோலவே அந்த மேகங்கள் அழுவதை என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மரமும் சந்தோசமாக இலையசைத்து ரசிப்பதை என் வீடடு யன்னலூடாக நான் ரசித்துகொண்டிருந்தேன் ... அப்போதுதான் ஒரு முதியவர் அந்த மழையில் நனைந்துகொண்டே சென்று கொண்டிருந்தார் அவரை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் சில வருடங்களுக்கு முன்பு கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வு மனகண்ணில் நிழலாடியது அதை உங்களுடன் பகிர வேண்டும் என்று நான் விரும்பியதுக்கு காரணமும் உண்டு அன்று அந்த சம்பவம் வாழ்க்கை பற்றி
 எனக்கும் பல விடயங்களை இன்றுவரை பதித்து நிற்பதுதான்......


மலேசியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் எனது இருக்கைக்கு முன்னாள் இருந்த ஒருவரை சந்தித்தேன் இன்றுவரை நாங்கள் நல்ல நண்பர்கள் இப்படி ஒரு உயர்ந்த நட்பினை பார்த்திருக்கிறீர்களா கிட்டதட்ட 3000 அடி உயரத்தில் இருந்து ஆரம்பித்த நட்பு  மிக உயர்ந்த நட்பு.......
அப்போது எனது வேலை கணணி திருத்தி கொடுப்பது விற்பனை செய்வது இடையிடையே மலேசியா, சிங்கபூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கணணி, தொலைபேசி, உதிரி பாகங்கள், ஆண்களின்  உடைகள் என கொடுக்கப்படும் பட்டியல்களுக்கேற்ப பொருட்களை கொண்டுசென்று இலங்கையில் விற்பனை செய்வது ,இப்படியான நேரத்தில் தான் எனது உயர்ந்த நண்பன் எனக்கு தொலைபேசியில் சொன்னான் ஒரு முகவரியையும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அந்த வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார் அவருடைய கணணி வேலை செய்யவில்லை செய்து கொடுக்கும் படி .........அவன் அப்போது லண்டனில் இருந்தான் இப்போதும்......
நானும் அந்த முகவரியை நாடி அந்த பெரியவரின் கணணியை சரி செய்து கொடுத்தேன் ஒரு மணிநேரம் ஆகிவிட்டது அதை செய்து முடிப்பதுக்கு.
நானும் அய்யா இப்போது சரியாகிவிட்டது நான் போயிட்டு வருகிறேன் என சொல்லிக்கொண்டு நாற்காலியை விட்டு எழும்பும் போது எனது கையில் 2000 ரூபாய் பணத்தை கொண்டுவந்து திணித்தார். நானும் அய்யா நான் நண்பனுக்காகத்தான் இங்கு வந்தேன் பணம் வேண்டாம் என பணத்தை கணணி அருகில் வைத்துவிட்டு போவதுக்கு ஆயத்தமாகும் போது சொன்னார் என்னை மீண்டும் பழைய மாதிரி ஆக்கி கவலைபட வைத்துவிடாத தம்பி இந்த காசை எடு என்றார்... 
இப்போது எனது ஆர்வம் அவரது வார்த்தைக்குள் ஒளிந்திருந்த பழைய மாதிரி என்ற சொற்களுக்குள் மறைத்து நிக்கும் கருத்துமேல் ஆவலை தூண்டியது. அது என்ன அய்யா பழைய மாதிரி என்றேன்?

அது ஒரு பெரிய கதை தம்பி என்னுடைய சோக கதை என்றார்... அவர் அப்படி சொல்லும் போதே அவர் கண்களில் அவர் தனிமையின் வேதனையை நான் உணர்ந்தேன். ஏதோ ஒன்றை சொல்ல விரும்புகிறார் ஆனால் என்னிடம் சொன்னால் நான் அதை காது கொடுத்து கேட்பேனா,கேட்க விரும்புவேனா  என்பதுதான் இப்போதைக்கு அவரது சொற்களிலும் அவர் உடல் பாவத்திலும் உணர்த்தி நின்றது..
உங்கள் கதையை கேட்காமல் இன்று நான் இங்கிருந்து போக போவது இல்லை என சொல்லிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தேன் ...
அப்போது அவர் சிரித்துக்கொண்டே அது ஒருவித வெட்கமும் கூட கலந்திருந்தது போடா தம்பி என மீண்டும் சொல்ல விரும்பாதது போல ...
நானும் விடவில்லை கடைசியில் சொல்ல ஆரம்பித்தார்..

நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார் இடியப்பம் விற்பது , அரிசி இடித்து கொடுப்பது,மிளகாய் தூள் இடித்து கொடுப்பது,இப்படியாகத்தான் நானும் எனது தம்பிகள் இருவரும் வளர்க்க பட்டோம்எனக்கு படிப்பு சரியாக மண்டையில் ஏறவில்லை அதனால் 14 வயதிலேயே கொழும்பில் வேலை பார்த்துகொண்டிருந்த பெரியப்பாவில் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டேன். அதன் பின் மிகவும் சிரமபட்டு அப்படி இப்படியாக நானும் வளர்ந்து ஒரு சிறு கடை போட்டு முதலாளியானேன் அப்படியே பணம் மீது எனக்கு வெறி என்றே சொல்லவேண்டும் அதை சேர்பதிலேயே எனது வாழ்கையை அற்பணித்தேன் அப்படியே எனது கடை பெரிதாகியது நானும் பணங்களில் புரள ஆரம்பித்தேன் அப்போதும் எனக்கு பணம் மீது ஆசை போகவில்லை என்னை எப்படி முந்திய காலத்தில் முதலாளிகள் வதைத்தார்களோ அது போலவே நானும் பலரது உழைப்பை சுரண்டி எனது மூலதனமாக்கி கொண்டேன் . எப்போதும் கடையிலேயே காலத்தை கடத்தினேன் இப்படியாக எனது உடல் பருமனும் எனது பணம் போல பெருகி கொண்டே போனது எனக்கோ எதை பற்றியும் கவலை இருக்கவில்லை பணம் இருந்தால் எல்லாமே வந்துவிடும் பணம்தான் எல்லாம் என இருந்துவிட்டேன். எனக்கு ஆண்டவன் பிள்ளைகளையும் கொடுக்கவில்லை, மனைவியும் வேளைக்கே கூப்பிட்டுடான்.என் பொண்டாட்டியை ஒரு மனுசி மாதிரியே நடத்தல்ல.அதை நினைத்து வருந்தாத நாளே இன்று இல்லை. நான் ஆசை பட்டது போல பணம் என்கூடவே இருந்தது சந்தோசம்.......? கண்களை கசக்கிகொண்டார். 

அன்று விதைத்தவற்றை இன்று அறுவடை செய்துகொண்டு இருக்கிறேன் எனது உடலில் எல்லா வியாதிகளும் இருக்கிறது விரும்பிய எந்த உணவையும் உண்ண முடியாது உண்ணும் உணவும் செமிப்பது பெரிய கலவரமாக இருக்கிறது குடல்புண்ணினால். அன்று அநியாயமாக சம்பாதித்து விரும்பிய உணவை உன்னது சேர்த்து வைத்த  பணத்தை இன்று மருந்திற்காக அழித்துகொண்டிருக்கிறேன் நான் அன்று பணத்திற்காக மனிதர்களை பகைத்துகொண்டேனே தவிர மனிதர்களை, நல்ல நண்பர்களை சம்பாதிக்கவில்லை அதனால் இன்று தனிமையில் இருக்கிறேன். பணத்தினால் வியாதிகளை குனபடுத்தவும் முடியவில்லை, தனிமையை போக்கவும் முடியவில்லை. இது எனக்கு கொடுக்கபட்ட தண்டனையாக அனுபவித்துகொண்டிருக்கிறேன். அன்று வாழ்க்கை என்றால் என்ன? சந்தோசம், நிம்மதி என்றால் என்ன? என்று தெரியாமல் பணம் பின்னால் போகும் போதும் வாழ்கையை அனுபவிக்கவில்லை. இன்று எல்லாவற்றையும் புரிந்துகொண்ட போது என்னால் முடியவில்லை.  தனிமை, வியாதி நான் சம்பாதித்தது.மொத்தத்தில் வாழ்கையை நான் வாழவில்லை பணம் அழித்துவிட்டது இல்லை இல்லை என் பணத்தாசை அழித்துவிட்டது என்று சொல்லலாம் என்றார்.
அன்று ஒவ்வொருநாளும் சில நிமிடங்கள் உடற் பயிற்சி செய்திருந்தால், எனது பணத்தினை மற்றவர்கள் கஷ்டத்துக்கு பயன் படுத்தி இருந்தால் இந்த தனிமை, வியாதி இரண்டும் இன்று இல்லாமல் இருந்திருக்கும் இப்போ புரிவது மரமண்டைக்கு அப்போது புரியாமல் போய்விட்டது...
சரிடா தம்பி போதும் நேரமாச்சு நீ போய்ட்டு வா என மேசைமேல் இருந்த பணத்தினை என் கையில் மீண்டும் திணித்தார் நானும் மறுக்கவில்லை. அவரோடு இனி தொடர்ந்து பேசவேண்டும் என முடிவு செய்துகொண்டு அவரது தொலைபேசி இலக்கத்தையும் சேமித்துக்கொண்டு அங்கிருந்து பலவிதமான சிந்தனைகளுடன் புறபட்டேன்... 

அவரை பின்பும் சில தடவை சந்தித்தேன்.. அப்பப்ப தொலைபேசியில் பேசி அவரது தனிமையை இயன்றவரை போக்கினேன்.. ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லை...

  

இப்படி ஒரு அனுபவத்தை எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்.....

உண்மைதான் இப்படியாக பணம் பணம் என எத்தனை பேர் வாழ்க்கை உண்மையான வாழ்கையை புரிந்துகொள்ளாமல் அழிந்து போய் இருக்கிறது, பணத்துக்குள் சந்தோசம், நிம்மதியை தேடி தொலைந்து போய் இருக்கிறது. பணத்தாசையால் மழலை சொல்லை கேட்காமல் ,பிஞ்சுகளை கொஞ்சாமல், மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச நேரமில்லாமல் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? இப்படியெல்லாம் பணம் பலரது வாழ்கையை அழித்தது, அழித்துகொண்டிருக்கிறது,இனியும் அழிக்கும்.........

வெள்ளம் கடந்தபின் ஆணை கட்ட முடியாது.........
கண்கெட்ட பின் சூரிய நமாச்காரம் பண்ண முடியாது......
வருமுன் காப்போம்... இல்லை வாழ்கையை தொலைத்தபின் புலம்ப மட்டுமே முடியும்... மேலே அந்த வயோதிபர் போல...
நீங்கள் முதலாளியா? உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுங்கள்.... மனிதத்தையும் மதியுங்கள்.

எல்லோரும் உங்கள் உடலையும்,அன்பையும் எப்போதும் பேணுங்கள் அதுதான் நிரந்தர சந்தோசம்,நிம்மதி.

நன்றி.



8 comments:

  1. பணம்...பணம்.....பணம்..அதில்லயின்னா நாங்க பிணம். அப்டீன்னு ஆரோ சொல்லி வச்சாங்க.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அந்த பணத்தை நல்லவிதமாக நாலுபேருக்கு பயனுள்ளதாக பயன்படுத்தாமல் சுயநலத்துடன் இருந்தால் கண்டிப்பாக பிணம்தான்..

      Delete
  2. நிச்சய்ம் அனைவரும் எப்போதும் மனதில்
    பதிந்து வைத்துக் கொள்ளவேண்டிய
    அருமையான பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே ...... உங்கள் தொடர் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

      Delete
  3. நல்ல பல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

    அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தோழரே... உங்கள் கருத்துப்படி எனது வலைப்பூவை மாற்றிவிட்டேன் இப்போது திறப்பதுக்கு தாமதமாகுவதில்லை.. நன்றி....

      Delete
  4. நல்ல வரிகள் ,வாழ்த்துக்கள்!

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தோழரே.......

      Delete