தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

2012 .12 .21 காலை மணி 11:11 க்கு உலகம் அழியுமா? அழியாது!!!


உலகம் இப்போதெல்லாம் சந்தித்துவரும் அழிவுகளை காலநிலை மாற்றங்களை அவதானிக்கும் மக்களுக்கு மெதுவாக ஒரு பயம் மனதில் வேருன்றி இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை ஆனால் இங்கு இப்படியான ஒரு வதந்தி /செய்தி வருவதற்கு என்ன காரணம் என்பதை நாங்கள் அராய்ந்து பார்த்தால், கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா என்ற ஓர் இனம் இருந்தது. 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர்.  இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர். இந்தக் காலண்டர் கிமு 313ல் தொடங்கியது. இதன்படி டிசம்பர் 2012ன் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் உலகம் அந்தத் தேதியுடன் முடிவடையும் என்று அவர்கள் ஞானதிருஷ்டியால் உணர்ந்து முற்றுப்புள்ளி வைத்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது சூரிய மண்டலத்திற்கு 7நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,625 வருடங்களாம். இதனை மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு கால கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி 5 கால கட்டங்கள் முடிவடைந்து மீண்டும் அடுத்த சுற்று அரம்பிப்பதைதான் உலகம் அழியும் என சினிமாவும் மக்களும் இப்படி விமர்சனத்துக்குள்ளாக்குகிறார்கள்.அது முடிவடையும் காலம்தான்  அந்த நாட்காட்டி 21.12.2012ல் குறித்து நிக்கிறது. அதன்படி 21.12.2012ல் உலகு அழியும் என்று பலர் நம்புகிறார்கள்.பூமி தன்னை தான் சுற்றுகிறது அது ஒருநாள், சந்திரன் பூமியை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு மாதம், பூமி சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்கும் போது சந்திரன் பூமியை பன்னிரண்டு முறை சுற்றி முடிக்கிறது. இது ஒரு வருடம் .இது இப்படி இருக்க இந்த சூரியன் தன்னை தானே சுற்றிக்கொண்டு கறுப்பு ஓட்டை (black hole ) என்று சொல்லப்படும் ஒரு மையத்தையும் சுற்றுகிறது அப்படி அந்த கறுப்பு ஓட்டையை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 25625 வருடங்கள் அந்த காலபகுதியில் சூரியன் தன்னைத்தான் 7 முறை சுற்றி முடிக்கிறது. இந்த சுற்றைதான் ஐந்தாக பிரித்து மாயன் இனமக்கள் குறித்து வைத்துள்ளார்கள். எனவே அவர்கள் ஒரு சுற்றை சரியாக குறித்து பூர்த்தியாக்கி முடித்து வைத்துள்ளார்கள் என்றே சொல்லவேண்டும்.

ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரம் என்பதை சரியாக வகுத்து சொன்னால் போதுமானது அடுத்தநாள் அதுபோலவே இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.அதுபோலவே வருடமும். அதனால் மாயன் இன மக்கள் ஒரு சரியான பூரண சுற்றி முழுமையாக வகுத்து முடித்து இருக்கிறார்கள் அதன் படி மீண்டும் மீண்டும் இவ்வொரு 25625 வருடங்களுக்கு ஒரு தடவை சூரியன் தனது சுற்றை பூர்த்தியாக்குகிறது (கறுப்பு ஓட்டையை சுற்றி).

அவர்களது குறிப்பில் சூரிய தொகுதியின் ஒரு முழுமையான சுற்றை பூர்த்தியாக முடித்து இருக்கிறார்களே தவிர அது உலக அழிவல்ல அவர்கள் எந்த இடத்திலும் உலகம் இந்த காலகட்டத்தில் அழிந்துவிடும் என எங்கும் கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது. 

வாசகர்களே இங்கே குறிப்பிட்டவை எல்லாம் இணையத்தில் பலர் எழுதிய கட்டுரைகளை வாசித்து அதில் இருந்து நானாக என் சிற்றறிவுகொண்டு தொகுத்து எழுதிய முடிவு. இது பிழையாகவும் இருக்கலாம்.ஏதொ என்னால் முடிந்தது........ 

20 comments:

 1. தங்களின் அற்புதமான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) இணையுங்கள்.

  ReplyDelete
 2. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 3. நன்றி நண்பரே............

  ReplyDelete
 4. @சு ராபின்சன்
  நன்றி நண்பரே..

  ReplyDelete
 5. @தொழிற்களம் குழு
  நன்றி நண்பரே இணைத்துவிட்டேன்.

  ReplyDelete
 6. இந்த மாதத்தில் முதலாவது பதிவு இதுதான் போல்
  நல்ல அலசல்
  உலக அழிவு என்பது உண்மை ஆனால் அது இந்த வருடத்துக்குள் நடக்குமா என்பதை இறைவன் ஒருவனால் மட்டுமே சொல்ல முடியும்

  ReplyDelete
 7. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது.
  தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
  தினபதிவு திரட்டி

  ReplyDelete
 8. @Jayadev Das
  உங்கள் வருகைக்கும் நன்றிக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 9. @சிட்டுக்குருவி

  இந்த மாதத்தில் முதலாவது பதிவு இதுதான் போல்
  நல்ல அலசல்
  உலக அழிவு என்பது உண்மை ஆனால் அது இந்த வருடத்துக்குள் நடக்குமா என்பதை இறைவன் ஒருவனால் மட்டுமே சொல்ல முடியும்

  இறைவன் என்றுதான் சொல்லி இருக்கிறார் இனி சொல்லவதற்கு நடப்பதை வேடிக்கை வேண்டும் என்றால் பார்பார் இல்லை அதை நடத்திகொண்டிருப்பார்..

  ReplyDelete
 10. @தினபதிவு

  நன்றி நண்பரே நானும் இணைகிறேன்..

  ReplyDelete
 11. நல்ல பதிவு ..நன்றிங்க

  ReplyDelete
 12. @Thava Kumaran
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 13. அருமையான விளக்கம்.. பொறுத்திருந்து பார்ப்போம்

  அமர்க்களம் கருத்துக்களம்
  http://www.amarkkalam.net

  ReplyDelete
 14. @அமர்க்களம் கருத்துக்களம்
  நன்றி நண்பரே.. சில நாட்களே உள்ளன பார்க்கலாம்...

  ReplyDelete
 15. உலகத்துக்கு இப்போதுதான் 51 ஆவது வயது நடக்கின்றது. இன்னமும் 49 வயது அது வாழும். ஆதாரம், எமது தமிழ்ப் பஞ்சாங்கம்.

  ReplyDelete
 16. @Ceylon Tamil
  புரியவில்லை நண்பரே இன்னும் தெளிவாக சொல்லலாமே?

  ReplyDelete
 17. விளக்கத்திற்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 18. @திண்டுக்கல் தனபாலன்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..

  ReplyDelete
 19. சூரிய தொகுதியின் ஒரு முழுமையான சுற்றை பூர்த்தியாக முடித்து இருக்கிறார்களே தவிர அது உலக அழிவல்ல

  அருமையான பகிர்வுகள்..

  ReplyDelete