தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

வயிற்றை நிரப்பத்தான் கயிற்றில் நிக்கிறாள்

எங்கள் நாட்டிலும் அணு குண்டு இருக்கிறது
இங்கும் ஏவுகணை பறக்கிறது 
என்று பெருமை கொள்ளும் நெஞ்சங்களே!!!


இவளுக்கு 

ஏன் இந்த கோலம்
மயிரிழை தப்பினால் மரணம்
உடலில் உயிரிழை ஓடத்தான்!!!

வயிற்றை நிரப்பத்தான்
கயிற்றில் நிக்கிறாள்
உங்கள் மனம் கனத்தால்
இவள் போன்றவர்களுக்கு 

பாதை காட்டுங்கள் 
உயிரை பணயம் வைப்பதை நிறுத்தட்டும்
முடியவில்லை என்றால் 
ஒரு துளி கண்ணீரையாவது விடுங்கள் !!!

அடுத்த கோளில் இருக்க இடம் தேடும்
தொழில்நுட்பத்தில் வளர்ந்தவர்களே
இவர்களின் அடுத்த வேளை உணவுக்கு
நிரந்தர வழி சொல்லுங்கள்!!!

2 comments:

  1. ம்...உண்மையான கோரிக்கை.யார் காதிலாவது விழுமா.அதுவும் எம் அரசியல்வாதிகளுக்கு !

    ReplyDelete
  2. @ஹேமா
    உங்கள் வருகைக்கு நன்றி தோழி........

    ReplyDelete