தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

கடவுள் வேண்டும்..தூங்காத 
பல திருமணம் முடிக்காத 
அதி காலையில் திருப்பள்ளி எழுச்சி 
பாடி எழுப்பாத கடவுள் வேண்டும்

தரகர் இல்லாமல் 
மணி அடிக்காமல்
அர்ச்சனை பண்ணாமல்
காசு கொடுக்காமல் 
என் வேண்டுதலை
தமிழில் புரிந்துகொள்ளும் கடவுள் வேண்டும்

தானே சிலுவையில் அறைபடாமல் 
மனிதனின் கொடிய குணங்களை சிலுவையில் 
அறையும் சக்தியுள்ள கடவுள் வேண்டும்

பசித்த வயிறுக்கு உணவு கொடுக்க 
வதைக்கும் கொடியவனை தண்டிக்க 
வாழ வழி தெரியாமல் இருபவனுக்கு வழி காட்ட
கடவுள் வேண்டும்

உருவத்தை வைத்து
அலங்காரம் செய்து
சோம்பேறியாக இருந்துகொண்டு 
பிறப்பால் உயர்ந்த ஜாதி என 
பிரிவினைகளை உண்டாக்கி
ஒரு சுரண்டும் வர்க்கம் 
உரிமைகொள்ளா 
கடவுள் வேண்டும்...........

4 comments:

 1. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 2. நன்றி நண்பரே அனுப்பி விட்டேன்...

  ReplyDelete
 3. இதுக்கெல்லாம் எதுக்குக் கடவுள் !

  ReplyDelete
 4. இத்தனை நூற்றாண்டாக மனிதனாலும்,மனிதனால் படைத்த கடவுளாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை களைய முடியவில்லை.உண்மையில் இப்படியான ஒரு கடவுள் வேண்டும் ..இருந்தாலாவது இவை அழியும் அல்லவா??

  ReplyDelete