தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மனிதத்தை தொலைத்துவிட்டு(பசியும் நானும் இரட்டை பிறவி)



"தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆனால் எனக்கு மட்டும் எத்தனை தை பிறந்து விட்டது வழிகள் மட்டும் பிறக்கவே இல்லை. 

உலகமே கோலாகலமாக கொண்டாடுகிறது இன்று 2011 இன் இறுதி நாளாம் எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள், வானவேடிக்கைகள் விற்கும் கடைகள் மக்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். எனக்கு எல்லா நாளும் ஒன்றுதான் ஆனால் இப்படியான நாட்கள் என்றால் எங்கள் வீட்டில் ஏகபட்ட விருந்தாளிகள் எங்களுக்கும் வழமையை விட கொண்டாட்டமே! 

என்ன சொன்னாலும் சென்ற வருடத்தை விட இம்முறை மக்கள் புதுவருடத்தை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது உலக பொருளாதார வீழ்சியில் என்நாட்டு மக்களையும் விதிவிலக்கக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். மக்கள் கூட்டம் எங்கள் வீட்டருகில் அதிகமாக இல்லை இம்முறை.

எனது தந்தை,தாய்  யார் என்று எனக்கு இதுவரை தெரியாது என்னை நான் சிறுவயது இருக்கும் போதே இப்போதைய தாய் என்னை இலங்கை காசுக்கு 3000 ரூபாவுக்கு என்தாயிடம் இருந்து என்னை தன் வியாபாரத்துக்கு மூலதனமாக வாங்கினாராம் அப்போது எனக்கு வயது ஆறு மாதங்கள் என்ன நண்பர்களே புரியவில்லையா நான் எப்படி மூலதனமாக முடியும் என்று ?? என் பெற்ற தாய் மட்டும் அல்ல இப்போது வளர்க்கும் தாயும் செய்யும் தொழில் வேறெதுவும் இல்லை பிச்சை எடுப்பதுதான். எனது பெற்ற தாயின் பெயரை மட்டும் எனக்கு சொன்னார்கள் வேறெதுவும் தெரியாது.

எங்கள் வாழ்க்கை இந்த கடை தெருவில் தான் அதிகாலையில் எழுந்திருப்போம் கடைகள் திறப்பதுக்காக எங்களை அந்த கடைகளில் தொழிலாளிகள் வந்து எழுப்புவார்கள் அவர்கள் கடைகளை பூட்டி போனதும் வந்து தூங்குவோம். பல நாள் பட்டினி.பட்டினி மட்டும்தான் எங்களுக்கு நன்கு பழகிப்போன நண்பன் என்னதான் பசியுடன் இருந்தாலும் அதை மறந்த நேரங்கள் மனதை கனக்க வைத்திருக்கிறது என் வயது பிள்ளைகளை அவர்கள் பெற்றோர்கள் என்ன கவனமாக கூட்டி வருவார்கள் அன்பாக அணைத்தபடி அவர்கள் விரும்பியதை வாங்கி கொடுத்து அரவணைத்து அவர்கள் செய்யும் குறும்புகளை ரசித்தபடி செல்லும் பொது மனதுக்குள் அழுவேன் பாரமாகி தாண்டு போகும் மனது பசி  பறந்து போகும். அந்த தாழ்வில் இருந்து மீழ்வதுகுள் என் வளர்ப்பு அம்மா வந்து அடிப்பார் அதோ வருகிற துறையிடம் போய் கேளு பார்க்க பணக்காரர் போல தெரிகிறார் என்று...........

நேற்று இரவு கூட நள்ளிரவில் பலர் வானவேடிக்கைகள் செலுத்தி அழகு பார்த்தார்கள். பழகிபோன பசியுடன் இருந்த நானும் ரசித்தேன் இவர்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பங்கை கொடுத்தாலாவது இங்கு இருக்கும் பலரின் பசி போகுமே என்று அதங்க பட்டு கொள்வேன்.

 என்னதான் மனிதர்கள் பலர் எங்கள் தெருவில் சென்றாலும் மனிதம் என்பது சிலரிடம் தான் காண்கிறோம் .

தாய்லாந்தில் வசிப்பவர்கள் கரப்பான் பூச்சியை ருசிக்கிறார்கள் அதை இங்குள்ளவர்கள் நினைத்தாலே அருவருகிறார்கள், இங்குள்ளவர்கள் மாமிசம் புசிக்கிறார்கள்  அதை பூசாரிகள் வாயை சுளிக்கிறார்கள். அவரவர் வாழும் வளரும் சூழழுக்கு ஏற்ப அவர்கள் பழக்கங்கள் இருக்கிறது. என் பழக்கம் என் சுற்றத்தை அண்டியே..

நான் பிச்சை கேட்கும் போது பலர் என்னை ஏசுவார்கள் பலர் பரிதாபமாக பார்ப்பார்கள் பள்ளிகூடம் செல்வதில்லையா என்று கேட்பார்கள் நான் மாட்டேன்  என்றா  சொல்கிறேன் எப்படி போவது இன்று இங்கு, நாளை எங்கோ? ஒரு வீடு இல்லை பசிக்கு உணவே இல்லை படிக்க எப்படி? உடை என்று சொல்வதுக்கு எதுவும் இல்லை எப்படி நாங்கள் பள்ளிக்கு செல்வது? போகலாம் பணம் படைத்தவர்கள் மனம் வைத்தால் அவர்கள் மனம் எல்லாம் மதுபானம் மீதும், சுகபோகம் மீதும் எப்படி அவர்கள் எங்களை பார்ப்பார்கள்? பல தலை முறைக்கு பணம் சேர்த்து வைப்பார்கள் பக்கத்தில் பசித்த வயிறுடன் பலர் இருக்க!!! பெற்றால்தான் பிள்ளை. எவனோ பெற்ற பிள்ளை பசியால் இருந்தால் என்ன இறந்தால் என்ன? நான் மனிதன் என்று மார்தட்டுகிறார்கள்.

எங்களை கேட்கிறார்கள் சில அறிவாளிகள் கை கால் நன்றாகத்தானே இருக்கிறது எதுக்காக இப்படி பழகுகிறிர்கள்  என்று எனக்குள் சிரித்து கொண்டேன். பல பெரிய படிப்புகளை படித்து பட்டங்கள் பெற்று விட்டு சீதனம் என்ற பெயரில் பிச்சை எடுக்கும்  இவர்கள் என்னை கேட்கிறார்கள் கைகால் நன்றாக இருக்கிறது என்று...

என்னால் முடியவில்லை எத்தனையோ படித்த, பல திறமைகள் இருக்கும் மனிதர்களே இந்த உலகில் வாழ்கையை போராட்டமாக கழிக்கும் போது இந்த சிறு வயதில் எந்த உதவியும் இல்லாமல் எப்படி பிச்சை எடுப்பதை நிறுத்துவேன்?பிச்சை எடுக்காதே என்று சொல்லும் எவரும் அதுக்கான மாற்று வழியை சொல்வதில்லை??????

இங்குதான் பிறக்கவேண்டும் என்று நான் விரும்பி பிறக்கவில்லை. ஒட்டியே பிறந்த நண்பனும் அவனே, எதிரியும் அவனே,"பசி" என்னை போல பலர் எங்களை கைதூக்கி விட யாரும் இல்லை. ஆனால் மனிதர்கள் வாழ எந்த கிரகத்தில் வசதி இருக்கிறது என்று பல கோடிகள் செலவழித்து போட்டி போட்டு தேடுகிறார்கள் செல்வந்த நாடுகள். அவர்களை குறை சொல்லவும் முடியாது வறுமையை ஒழிக்க மற்ற நாடுகள் உதவி செய்தால் அந்த பணமும் அமைச்சர்கள் சுகபோகத்துக்கு பங்கிடபடுகிறது.

பல திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உழைப்பை முதலாளிகள் சுரண்டுகிறார்கள் அந்த திறமையை கொண்டு அவர்கள் தனியாக தொழில் செய்யும் ஆற்றல் இருக்கும் முதல் இருபதில்லை உழைப்புக்கு ஏற்ற சம்பளமும் குடுக்க மாட்டார்கள் அதிகம் கொடுத்தால் சேமித்து தனியாக ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் . இவர்களுக்கும் கை கொடுக்க யாருமில்லாததால் தான் காலமெல்லாம் உழைத்து உழைத்தே வருடங்களை தொலைகிறார்கள். 

இதுவும் எங்களை போன்ற நிலையே. நானும் படிக்க விரும்புகின்றேன். நானும் வேலை செய்ய விரும்புகின்றேன் , நன்றாக சாப்பிட ஆசை படுகிறேன். நான் பாமரன் ஏழை. எனக்கு வழி தெரியவில்லை . வழி காடவேண்டிய மனிதர்கள் மனிதத்தை தொலைத்து விட்டார்கள்.

நண்பர்களே உங்கள் புதுவருடத்தை நன்றாக கொண்டாடுங்கள். மது அருந்துங்கள். புதிய உடை அணியுங்கள் . சிறு குழந்தைகள்,இருதய நோய் உள்ளவர்களை பற்றி சிந்திக்காது வானவேடிக்கைகள் வெடிகளை போடுங்கள். உங்கள் பிள்ளை இல்லாததால் நாங்கள் பசித்த வயிறுடன் இருக்கும் போது உங்கள் அடுத்த தலைமுறைக்கு பணம் சேர்த்து வைகிறிர்கள் ஆனால் நீங்கள் வெடிக்கும் வெடிகளால் சூழலில் ஏற்படும் மாசுகள் ஓசோன் வரை சென்று நாளை உங்கள் தலைமுறைக்கு மட்டும் அல்ல எங்கள் தலைமுறைக்கும் அச்சுறுத்தலாகும் சிந்தியுங்கள் உங்கள் சந்தோசம் அடுத்தவர்களை சந்தொசபடுத்துவதில் இருக்கட்டுமே!!!!!!!!

எல்லாம் வளர்கிறது பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்,ஏழை இன்னும் ஏழை ஆகிறான் உங்கள் தேவைக்கு போக மீதத்தை கொண்டு மற்றவர்களை தூக்கிவிடுங்கள். மனிதம், மனிதாபிமானம், அன்பு, இவை எல்லாம் என்ன? எதுக்கு எங்களுக்கு ஆறறிவு? அடுத்தவன் அறியாமையை, இயலாமையை பணமாக்கவா? 

பிறக்கின்ற புதுவருடத்தில் அன்பினால் உலகை ஆழ புறபடுங்கள்.

எங்களை போன்றவர்களுக்கு பிச்சை போடா சொல்லி கேட்கவில்லை எங்கள் அறியாமையை போக்க கல்வியை புகட்ட வழி செய்யுங்கள், எங்கள் பெற்றவர்களுக்கு தொழில் செய்யும் அறிவை கொடுங்கள். 

முள்ளி வாய்க்கள் போரினால் எங்கள் இனத்தில் எண்ணிக்கை அதிகரித்து விட்டது........... எங்களை பற்றி பேசி பேசியே அரசியல் மாற்றம் நடக்குது, தலைமைத்துவம் மாற்றம் நடக்குது,சினிமா வெற்றி அப்படி இப்படி என்று என்னென்னவோ எல்லாம் நடக்குது, எந்த மாற்றமும் இல்லாமல் நாங்கள் மட்டும்.
நாங்களும் மனிதர்கள்தான்.


2 comments:

  1. என்னதான் மனிதர்கள் பலர் எங்கள் தெருவில் சென்றாலும் மனிதம் என்பது சிலரிடம் தான் காண்கிறோம் .
    உண்மை தான்

    ReplyDelete
  2. எங்களை கேட்கிறார்கள் சில அறிவாளிகள் கை கால் நன்றாகத்தானே இருக்கிறது எதுக்காக இப்படி பழகுகிறிர்கள் என்று எனக்குள் சிரித்து கொண்டேன். பல பெரிய படிப்புகளை படித்து பட்டங்கள் பெற்று விட்டு சீதனம் என்ற பெயரில் பிச்சை எடுக்கும் இவர்கள் என்னை கேட்கிறார்கள் கைகால் நன்றாக இருக்கிறது என்று...

    hahaha...

    ReplyDelete