தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

எல்லா மொழி குழந்தையும்,மாடும் அம்மா என்று தமிழில்தானே கத்துகிறது .....

சின்ன வயதில் எனக்கு பல சந்தேகங்கள் அப்பப்ப வந்து போகும் அவற்றுக்கு என்னால் பதில் கண்டுபிடிக்கமுடியாததால் அப்படியே மறந்து விடுவேன். அது போலதான் இந்த சந்தேகமும்  எங்க வீட்டு மாடு எப்படி அம்மா என்று தமிழில் கத்துகிறது என்பதுதான் அதே நேரம் எனக்கு இன்னொரு சந்தேகம் இருந்தது சிங்களவர்கள் வீட்டு மாடு சிங்களத்தில் கத்துமா? வெள்ளைகாரர்களில் மாடு ஆங்கிலத்தில் கத்துமா? என்பதுதான்.


இதுபோல பல சந்தேகங்கள் அப்போதெல்லாம் வரும் யாரிடமும் கேட்க வெட்கமாக இருக்கும் அப்படியே கால ஓட்டத்தில் மறந்துவிடுவேன் அப்படி மறந்தவை பல இப்போதெல்லாம் நினைவுக்கு வந்து சிந்திக்க வைக்கிறது. அப்படியான ஒரு விடயம்தான் எப்படி மாடு அம்மா என்று கத்துகிறது? மாட்டுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? மாடு தமிழர்களின் பிராணியா? 

எல்லோரும் எவ்வளவு சந்தோசமா இருக்காங்க எனக்கு மட்டும் எதுக்கு இப்படியெல்லாம் ஆகுது எதாவது ஒன்றை பார்த்தமா போனமா இல்லாம எதை பார்த்தாலும் அது ஏன்? எப்படி? எதுக்கு? ஆயிரம் கேள்விகள் உடனே வருது என் நிம்மதியை கெடுக்குது. இந்த மனவியாதியை நிறுத்த எதாவது மருந்து இருக்கா? இருந்தா சொல்லுங்க....

சரி அதை விடுங்க நாம இப்ப என் பிரச்னைக்கு வருவோம் மாடு மற்றும் பிறக்கும் குழந்தை யாரும் சொல்லி கொடுக்காமலே அம்மா என்று கத்துகிறது எப்படி.எங்கள் நாவில் இருந்து வரும் எல்லா ஒலிகளும் எங்கள் சுவாசப்பையில் இருந்து வரும் காற்று வாயிலும் மூக்கிலும் வெளியாவதை பொறுத்து நா அசைந்து கொடுத்து உதடுகள் சேர்ந்து பிரிந்து ஒலிகளை எழுப்புகிறது மூக்கை மூடிக்கொண்டு சில சொற்களை சொல்ல முடியாது அதே போல நாவை அசைக்காமல் சில சொற்களை சொல்ல முடியாது ,சில சொற்கள் உதடுகள் சேராமல் சொல்ல முடியாது.

பிறந்த குழந்தைக்கு பொதுவாக குழந்தை அழும் போதுதான் இந்த சத்தம் முதலில் வெளிபடுகிறது.குழந்தை அழும் போது சுவாசப்பையில் இருந்து வெளியாகும் காற்று மூக்கின் ஊடக வெளியாகும் போது "ம்" என்ற ஒலியையும் வாயை நன்றாக திறக்கும் போது "ஆ" என்ற ஒலியும் வருகிறது   இது இரண்டும் சேர்ந்து ம்ஆ.ம்ஆ என்று சேரும் போது அது அம்மா என்பது போலுள்ளது. குழந்தை அழும்போது வாயை திறந்து திறந்து மூடுவதால் ம்மா..ம்மா..ம்மா என அழகாக ஒலிக்கிறது.

மாடு கத்தும் போது முதலில் ம் என்ற ஒலி வருகிறது பின் அது ஒரேயடியாக வாயை திறந்தே கத்துவதால் ஆ என்ற ஒலி தொடர்ச்சியாக வருவதால் அது கத்தும் போது ம்மாமாமாமாமா  என்று ஒலிக்கிறது.

இதே போல ஆடு வாயை பெரிதாக திறக்காமல் கத்துவதால் முதலில் "ம்" என்ற ஒலியும் பின் "மே" என்ற ஒலியும் வந்து ம்மே ... ம்மே என சிங்களத்திலும் கத்துகிறது.

எனவே தமிழுக்கும் மாட்டுக்கும், பிறந்த குழந்தைக்கும் இதேபோல ஆட்டுக்கும் சிங்களத்துக்கும் ஆட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இதில் எந்த மாயமும் இல்லை.

ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா ........... ஒரு வழிய இந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சு ...........

இனி இனி என்னென்ன வருமோ தெரியல்லையே.........
10 comments:

 1. வாவ் என்ன கண்டுபிடிப்பு? அசத்தல். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி... இன்னும் பல கண்டு பிடிப்புக்கள் தொடரலாம் போல இருக்கு உங்கள் கருத்துக்காக..

   Delete
 2. நல்ல ஆராய்ச்சிங்க... நன்றி...

  ReplyDelete
 3. அம்மா ஆராய்ச்சி நன்று.

  ReplyDelete
 4. நம்ம கண்டு பிடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்யுது... நன்றி நன்றி..

  ReplyDelete
 5. ம்...ஆ...மா என்பது சீன மொழியாம். அதைத்தான் மற்றவர்கள் காப்பியடித்துவிட்டார்கள் என்று சீனாவிலிருந்து வரும் சீனர்கள் கூறுகின்றார்கள்.

  என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. அதை சீனர்கள்தான் கண்டு பிடிக்கவேண்டும்...

   Delete