தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மின்கோவில் (e-temple இணையத்தில் இறைவன்) புதிய புரட்சி



ஒரு சிறிய கற்பனை ஆனால் இது எதிர்காலத்தில் நடைமுறையில் வந்தாலும் அதிசயபடுவதற்கு  இல்லை இன்றைய கோவில்கள் நல்லதொரு வியாபார தலங்களாக இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஏழைகள் கோவில்களில் சாமிகும்பிட்டு வரும்போது அவர்கள் மனதில் நிம்மதி கிடைப்பதில்லை காரணம் கோவிலுக்குள் நுழைவதுக்கே கட்டணம் அதிலும் ஒவ்வொரு விதமான வாசல்கள் உண்டு அது அவர்கள் எடுத்திருக்கும் சீட்டை பொறுத்தது. அதிக பணம் செலுத்தியவர்கள் ஒரு வாசலாலும்,குழந்தைகள் வயதானவர்கள் வருசையில் வாடிகொண்டிருப்பர்கள் நடிகர்கள் அரசியல் வாதிகள் விசேட வரவேற்பு 
  இப்படி தரம் பிரித்து பணமே செலுத்த முடியாதவர்கள் மனங்கள் கோவிலிலேயே நோகடிக்கபடுகிறது ஏழ்மையில் வாடி இருக்கும் கஷ்டங்களை சொல்லி கடவுளிடம் அழுது  கவலைகளை இறக்கி வைத்து ஆறுதல் தேடி போகும் பாமர மக்கள் அங்கும் நோகடிக்க படுவதுதான் கடவுளின் நடுநிலையா? எதுக்காக பலதரபட்ட சீட்டுகள் அதை பொறுத்துதான் கடவுளிடம் இவர்கள் சிபாரிசு இருக்குமோ?(உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருநாளும் தெய்வம் கொடுத்ததில்லை) இதில் கடவுளை குறை சொன்னால் பலருக்கு பிடிப்பதில்லை இதெல்லாம் கடவுளா செய்கிறார்? மனிதன் தானே வியாபாரம் செய்கிறான்   செய்பவர்களை ஏசுங்கள் என்கிறார்கள் இதெல்லாம் யார் பெயரில் செய்யபடுகிறது கடவுளின் பெயரில்தானே ? இன்றைய காலத்தில் கடவுள் ஒரு சாராருக்கு நல்லதொரு மூலதனம் சிலருக்கு கடவுள் இல்லை என்று சொல்வது மூலதனம் இதை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்திகொண்டிருக்கிறார்கள்.இவற்றை பற்றி பலர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் கடவுளின் பெயரில் சுரண்டுபவர்க்களும் சுரண்டபடுபவர்களும் அவர்கள் பேச்சை கேட்பதாக தெரியவில்லை... இதை கடவுள் கூட வேடிக்கபாத்துகொண்டிருப்பது மிகப்பெரிய வேடிக்கை (அவனன்றி அணுவும் அசையாது) சரி நான் விடயத்துக்கு வருகிறேன் இப்படியாக மாறிக்கொண்டு போகும் இறைவழிபாடு இணையமயமாக்க பட்டால் ..

உலகத்தில் உள்ள எல்லா கோவில்களும் ஒன் லைன் ஆக்கபட்டும் இணைப்பில் இருக்கும் புதிதாக கோவில் கட்டுபவர்கள் கூட இவர்களிடம் அனுமதி வாங்கியே கட்டவேண்டும். இப்படி இணைப்பில் இருக்கும் கோவில்களுக்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருந்துகொண்டே அர்சனை செய்யவும் வழிபடவும் முடியும் அதாவது நீங்கள் மின் கோவில் இணையத்தில் அர்சனை என்ற தெரிவை தெரிவு செய்து உங்கள் பெயர் ,நட்சத்திரம்,ராசி அர்சனை ரகம் நீங்கள் செலுத்தும் பணத்தின் அளவை பொறுத்து தீர்மானிக்கப்படும். உங்கள் அர்சனை ஒலி வடிவில், உங்கள் அர்சனை காணொளி வடிவில் விரும்பியவர்களுக்கு மினஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் அதற்கு அர்சனை ரகத்தில்  தெரிவை தெரிவு செய்யுங்கள் உங்களுக்கு பிரசாதம் பொதியாக அனுப்பி வைக்கவேண்டுமா கடைசி தெரிவை தெரிவு செய்யுங்கள்.

உண்டியலில் பணம் செலுத்தி இறைவனின் அருளை அள்ளிட e -உண்டியல் தெரிவை தெரிக...
காணிக்கை செலுத்த e-காணிக்கை எந்த தெரிவை அழுத்துக ...


இது நகைசுவைக்காக கற்பனை செய்ததாக இருக்கலாம் ஆனால் இப்படி ஒரு முறை வந்தால் இதில் பணம் செலுத்த கூட தயாராக பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்படியானவர்கள் இருக்கும் வரை இதுபோல முட்டாள் தனமான செயல்கள் இன்னும் வளர்ந்துகொண்டேதான் போகும்.
எங்கள் இனத்தின் பாரம்பரியம் ,அறிவியல் ,வானியல் ,இப்படி பல துறைகளில் பெருமைகளை இடையில் புகுந்த மதத்தை பெருமைபடுத்துவதற்காக மதத்துக்குள் புதைக்க பட்டு மூடநம்பிக்கைகளாக மற்றைய சமூகத்தினரால் பார்க்க படுவதற்கும் இவர்களே காரணம். 

3 comments:

  1. ஏன், திருப்பதி கோவிலில் இப்போதே இந்த முறை இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  2. ஹி ஹி ஆரம்பிச்சாச்சா?????????

    ReplyDelete