பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்
அப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்
பிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
படம் 1
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்
பிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல்
பிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.
No comments:
Post a Comment