தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

உலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு !!!


பொங்கட்டும் பால் பொங்கட்டும் 
பால் போல் உழவர் வாழ்வும் 
பொங்கட்டும் 

வேண்ணிறபால் மேலெழுந்து வர 
வெடி வெடிப்போம் நாங்கள் 
வெடிபோல் உழவர் பட்டினியும்
வெடிவெடித்து போக
பொங்கிடு பாலே
பொங்கிடு

உலகுக்கே உணவிடும்
உழவர்களுக்கு உதவிடும்
உதயனுக்கு நன்றி சொல்ல
பொங்கிடு பாலே பொங்கிடு

பூமி சிரிக்க அழுதிடும்
வானம்போலல்லாமல்
உலகத்தவர் பசி தீர்க்க
உழுதவனும் உண்டு
களிப்புற பொங்கிடு
பாலே பொங்கிடு

தமிழர்க்காய் போராடி
நாதியற்று நலிவுறும்
முன்னாள் போராளிகளின்
நடுவீதி வாழ்வுதனை
நலம்பெற உதவிடும்
நல்லோரின் மனங்களும்
பொங்கிட பாலே பொங்கிடு


என் முகம் தெரியாமலே நட்பாகி
என்முகம் மலர அன்புகாட்டும்
வலைப்பூ நண்பர்களுக்கு
என் இனிய தைத்திருநாள்
வாழ்த்தை சொல்ல
முழங்கிடு இடியே
முழங்கிடு.

1 comment:

  1. இனிய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete