தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

விதியை மதியால் வெல்லலாமா?, அறிவுதான் கடவுள்.


கடவுள்,
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே எதை எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அவற்றை எல்லாம்  வணங்கி வந்தான் இந்த வணக்கமுறை பல மாற்றங்களுக்கு பின்பு மதங்கள் என உருவாகியது அன்றில் இருந்து இன்றுவரை கடவுள் இருக்கு என்று சொல்லுபவர்களும் சரி இல்லை என்று சொல்பவர்களும் சரி இத்தனை நூற்றாண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை காரணம் பல அழிவுகளையும், பல பிரச்சனைகளையும் மனிதன் சந்திக்கும் பொது மதங்கள் சொல்வது போல கடவுள் அவதாரம் எடுப்பார் எடுப்பார் என்று சொல்லி சொல்லியே காலம் போனதுதான் கடவுள் அவதாரம் வரவில்லை அவர்கள் பெயரை சொல்லி பிரேமானந்தா, நித்தியானந்தா  அதேநேரம் இந்த பிறப்பு ,இறப்பு மனிதனால் தடுக்கவும் முடியவில்லை இப்படியான பல விடயங்களுக்கு இன்னும் அறிவியலால் விளக்கம் சொல்லமுடியாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களும்,இருக்கு என்று சொல்பவர்களும்   பலவினமானவர்களாகவே இருக்கிறார்கள் ......நிற்க

இந்த உலக வாழ்கையில் கடவுளின் ஆதிக்கம் இருக்க இல்லையா என்று கேட்டால் இல்லை(நேரடியாக இத்தனை நூற்றாண்டை எந்த உதவியாவது  யாருக்காகவும் கடவுள் செய்தார் என்பதுக்கு எந்த சம்பவமும் இல்லை ) ......... ஆனால் இந்த விதி என்றால் என்ன? மனித வாழ்வில் என்ன என்ன சம்பவங்கள் நடக்கவேண்டும் என்று எல்லா விடயங்களும் ஏற்கனேவே எழுதி வைக்கப்பட்டு விட்டது  என்பதா? கண்டிப்பாக இருக்க முடியாது , எல்லாவற்றையும் எங்களை கடவுள்  என்ற ஒருவன் செய்ய வேண்டும் என்று விதி வடிவில் எழுதி வைத்துவிட்டு பாவ புண்ணிய கணக்கு எப்படி போடா முடியும்??? இல்லை போனஜென்ம  பலனின் படி என்று நீங்கள் விளக்கம் சொல்லலாம் அப்படியானால் முதல் பிறவி என்றால் அவர்களுக்கு விதி என்று ஒன்று இல்லையா? அவர்களுக்கு முதல் ஜென்மம் இல்லையே? அப்படியானால் அவர்களுக்கு விதி எது?

அப்படியானால் இந்த விதியை மதியால் வெல்வது என்பது என்ன?
என்னை பொறுத்தவரையில் இந்த விதி என்பது கோட்பாடுகள் அதாவது சூரியனை பூமி சுற்றுகிறது (சூரியனின் ஈர்ப்பு) ,பூமியை சந்திரன் சுற்றுகிறது(புவி ஈர்ப்பு)  இவை இயற்கை கோட்பாடுகள் இதில் இந்த புவி  ஈர்ப்பு என்பதை எடுத்துகொள்வோம், ஒரு கல்லை மேலே போட்டால் அது  கிழே விழும் இது விதி அதாவது அந்த கல்லு விழும் இடத்தில் எங்கள் தலை இருந்தால் அது தலையில்தான் விழும் இந்த விதியை மேலே போன கல்லு கிழேதான் வரும் அதுவும் சரியாக தலைக்கு மேலே போடுவதால் அது தலையில்தான் விழும் என்று மதிகொண்டு(அறிவு) விலகி நின்றாள் அந்த கல்லு தலையில் விழுவதை தவிர்க்கலாம். இப்படி வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் ஒவொரு உண்மைத்தன்மை உண்டு அதில் சில எங்களுக்கு தெரிந்ததால் விலகி நிக்கிறோம் தெரியாதவற்றை தலையில் வாங்கிக்கொள்கிறோம் அதன் பின் எங்கள் அறியாமையை நேரப்பிழை, காலப்பிழை ,ராசி சரியில்லை  அப்படி இப்படி என்று உங்கள் வாழ்கையை கேள்விக்குறி ஆக்காதிர்கள் .............இங்கு அறிவுதான் கடவுள்.

1 comment:

  1. arivuthaan kadavul,arivin sayalpadugalai kattupaatukkul vaithugolvathu yaar avane kadavulai purinthugondavan....ungal sinthanaikku en nanri..

    ReplyDelete