தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

ஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம்

ஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம் 
 
 
ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக்
கொள்ளும் ஆர்வம் இன்று
அனைவரிடையேயும் உள்ளது.
சாஃப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும்
மொழி திறனாற்றல் அனைத்து
நிலைகளிலும் வேண்டப்படுகிறது.
வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் 
தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க
வேண்டும் என எண்ணுகின்றனர்.
அனைவரும் கற்றிருந்தாலும் அயல்
மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு 
இருக்குமோ என்ற அச்சம் கூடவே
இருக்கிறது. இவர்களுக்கெனவே 
ஒரு இணைய தளம் இயங்குகிறது.


இந்த தளம் உள்ள இணைய முகவரி
http://www.worldenglish.org   ஆங்கிலம்
பேச எழுதத் தேவையான 500 சொற்கள்
பட்டியல் கிடைக்கிறது. அதே போல
100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன.
எவ்வளவு கவனம் எடுத்தாலும்
பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள்
தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின்
அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும்
தேர்வும் தரப்படுகின்றன. எதிர்ப்பதங்களும்
ஒத்த பொருள் தரும் சொற்களும்
பட்டியலிடப்பட்டுள்ளன.

 
ஆங்கில மொழி இலக்கணத்தின்
அனைத்து பிரிவுகளுக்கும்
விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும்
தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு
மூலமாகவும் இவற்றைக் கற்றுக்
கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள்,
வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை
சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை
நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்
என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம்
சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி
வினாக்களில் தங்களுக்கானதைத் 
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். 
ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் 
பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம்
Six sick hicks nick six slick bricks
with picks and sticks என்று
சொல்லிப் பாருங்கள். என்ன
நாக்கு சுழல்கிறதா?

1 comment:

  1. There is SHOCKING news in the sports betting industry.

    It has been said that any bettor needs to see this,

    Watch this now or stop placing bets on sports...

    Sports Cash System - Advanced Sports Betting Software.

    ReplyDelete