தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மீண்டும் தலைவர் பிரபாகரன் (நன்றி மறந்த தமிழர்கள்....!!!)



நேற்று இரவு ஏனோ மனது சிறிது பாரமாக இருப்பதை உணர்ந்தேன் அதை திசை திருப்ப வழமை போல வலைபூக்களை துலாவிகொண்டிருந்தேன் அப்போது நண்பர் சஞ்சயன் தனது பயண அனுபவங்களை பகிர்ந்திருந்தார் அவற்றை பார்க்க நேர்ந்தது எனது மன கவலை வறண்ட நிலத்தில் விழுந்த மழைத்துளிபோல மறைந்து போனது காரணம் அவர் எழுத்துக்களில் என் மனதில் சுனாமியே அடித்திருந்தது.

விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன் அவர்கள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வேறுவிதமாக இருக்கும் இப்படியானவர்கள் மத்தியில் இவரின் தேடல் எங்கள் மக்களுக்கு நல்லதொரு பாடம். எங்களுக்காக போராடியவர்கள் இப்போது இருக்கும் நிலைமை என்ன,நாங்கள் எதை பற்றி கவலை பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் எங்கள்  குறுகியமனப்பாங்கையும் எங்கள் சுயநல மனதுக்கு புரிய வைத்திருக்கிறது இவரின் இந்த அனுபவ பகிர்வு. இவரின் இந்த தேடல் இவருக்கு தெரிந்த ஒரு சிலருக்கு தெரிந்தவர்களிடம் இருந்து அறிந்துகொண்டது அதிலும் சிலவற்றைத்தான் அவர் பகிர்ந்திருப்பார் அப்படியானால் இதுபோன்ற இன்னும் எத்தனை பேர் இழப்புகளை தாங்கிக்கொண்டு வாழ்கையை இறுதிவரை போராட்டமாக சுமக்க போகிறார்கள் ஈழ போராட்டத்துக்காக பங்களிப்பு செய்ததுக்கு???? 

ஈழ போராட்டம்  கசப்பான அனுபவத்தில் முடிந்ததில் இருந்து எங்கள் எதிர் பார்ப்புகள் என்னவாக இருந்தது. இனி ஈழம் கிடைக்காதா என்ற கவலை மனம் முழுவதும் பரவி ஒருவித மன நோயாளர்கள் போல எங்களை மாற்றியது உண்மை அதன் விளைவால் தலைவர் மீண்டும் வருவார் மீண்டும் ஈழ போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கையை நாமே உருவாக்கி அந்த கனவில் எங்கள் மனநோய்க்கு மருந்தாக்கி கொண்டோம். அது மட்டுமல்ல இந்த பின்னடைவை தாங்கி கொள்ள முடியாமல் எங்கும் தமிழ் பற்றை புகுத்த முனைந்தோம் தமிழ் நடிகர்கள் இலங்கைக்கு சென்றால் அவரின் படங்கள் தடை செய்வோம், ஒரு தமிழன் ஆங்கிலத்தில் தமிழ் படங்களில் பாடல் எழுதினால் கொதித்தெழுவது இதுபோன்ற நியாயமற்ற காரணங்களை தூக்கி பிடித்து எங்கள் மன வேதனையை திசை திருப்ப முயன்றோம் . மக்களின் மனதினை நன்கு புரிந்துகொண்ட அரசியல் வாதிகள் சினிமாக்காரர்கள் என எல்லோரும் எங்கெங்கு ஈழம் பற்று பற்றி பேச முடியுமோ அங்கெல்லாம் பேசி அவர்களை உயர்த்திகொண்டார்கள்.ஆனால் எதை நாங்கள் நினைத்திருக்க வேண்டுமோ அதை மறந்துவிட்டோம்.

எங்களுக்காக நாங்கள் சொகுசாக இங்கு வாழ களத்தில் போராடி இன்று ....

நண்பர் சஞ்சயனின் அனுபவ பகிர்வில் இருந்து ...
http://visaran.blogspot.com/2012/08/blog-post_19.html 
"ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. 
  • விபச்சாரம் செய்யும்  முன்னாள் பெண்போராளிகள்,
  • ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும்  முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி, 
  • தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவிகுழந்தைகளை  காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,
  • திருமணமாகி  பத்தே மாதத்தில் கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன்  இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி  தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,
  • இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள்  போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை, 
  • இருகண்களையும் இழந்த முன்னாள்  ‌போராளி,
  • குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் ‌ ‌போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி"
இவர்கள் வாழ்க்கை போராட்டமாக மாறிவிட்டது இப்போதும் நாங்கள் ஈழத்தில் போராட்டம் மீண்டும் வெடிக்காதா என்று எங்கள் சுயநலத்தை விதைக்கிறோமே தவிர இவர்களை பற்றி அறிய கூட முயலவில்லை என்பதுதான் உண்மை. எத்தனை பேர் இது பற்றி பேச தயாராக இருக்கிறீர்கள் ... 

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை முகபுத்தகதை திறந்தால் ஈழம் பற்றி தினமும் பல ஆயிரம் பகிர்வுகள் எங்கும் ஈழம் சம்பந்தமான குழுக்கள், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியை பார்த்தாலும் ஈழத்துக்காகவே பிறந்தவர்கள் போல பேட்டிகள் மேடை பேச்சுக்கள் அப்படி இருக்க ஒரு இடத்திலும் இதுபோன்ற உண்மை பதிவுகளை, பேச்சுக்களை இவற்றை நிவர்த்தி செய்ய எதாவது திட்டமிடல் முயற்சி  நான் பார்த்ததில்லை சுய விளம்பரத்துக்கான விடயமாக போய்விட்டது ஈழம்..

புலம்பெயர்ந்த தேசத்தில் ஈழ தமிழர்கள் எத்தனை இலட்சம் இருக்கிறார்கள் அவர்களில் எத்தனைபேர் பணங்களில் புரள்கிறார்கள் அவர்களுக்கு குடியுரிமை வாங்கித்தந்த போராட்டத்தில் பங்கேற்று இன்று ஒரு வேளை உணவுக்காக அங்கங்களை இழந்து ,விபச்சாரம் செய்து வாழ்வை போராட்டமாக மாற்றிகொண்டிருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் ஒவ்வொருத்தருக்கு ஒரு புலம் பெயர்ந்த குடும்பம் உதவி செய்தாலே தாரளமாக போதுமானது... இது எங்களின் கடமையும் கூட ... ஆனால் நாங்கள் அன்று புலிகள் பெற்ற வெற்றி பெருமைகளையும், ஈழ வரலாறுகளையும், மீண்டும் தலைவர் வருவார் , போராட்டம் மீண்டும் மலரவேண்டும் போன்ற விடயங்களை பற்றி பேசுவதால், சிங்களவர்களையும், அவர்களோடு நட்புறவை பேணுபவர்களையும் வன் சொற்களால் எசுவதாலும் எங்களை ஈழ ஆதரவாளர்கள் என நாங்களே நினைத்து பெருமையடைந்துகொண்டிருக்கிறோம்.


எங்களுக்காக இரத்தம் சிந்தி, உயிரை விதையாக்கி வாழ்ந்தவர்கள், அவர்கள் குடும்பங்கள் பற்றி சிறிது சிந்தியுங்கள் நாங்கள் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் யார்? எங்களுக்காக போராடி இன்று ஒரு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்யும் அளவுக்கு முன்னாள் போராளிகள் செல்லுமளவுக்கு நாங்கள் எங்கள் சுயநலம் இருக்கிறது என்றால் நாங்களனைவரும் உயிருள்ள சுயலப்பிணங்கள்..


நண்பர் சஞ்சயனின் பயண அனுபவங்கள் இனித்தான் விரிவாக பதிவாகும்... இன்னும் பல 
உண்மைகளுடன் .....!!!
இணைந்திருங்கள் அறிய விரும்புபவர்கள்.
http://visaran.blogspot.com/ 

8 comments:

  1. புலம் பெயர்ந்த தமிழனாக வெட்கி தலை குனிகிறேன்.மனச்சாட்சியை உலுக்கும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனச்சாட்சிக்கு தலை வணங்குகிறேன்..

      Delete
  2. வணக்கம் பதிவுலகமே...
    நான் தமிழ் நண்பர்கள் இணைய தளத்திலே நடந்து கொண்டு இருக்கும் பதிவு போட்டியில்
    பங்கு பெற்று தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...என்ற ஒரு கவிதை எழுதி உள்ளேன்.
    நீங்கள் எனக்கு அந்த தளத்தில் சென்று வாக்களித்து உறுதுணையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

    நீங்கள் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.
    தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...

    நீங்களும் போட்டியில் பங்கு பெறலாம்

    என்னுடைய வலைப்பூ
    http://kavithai7.blogspot.in/

    என்றும் அன்புடன்
    செழியன்

    ReplyDelete
  3. :( வேதனையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வேதனைகள்தான் எங்களுக்கு மிஞ்சி இருப்பது என்ன செய்ய?

      Delete
  4. இந்த பதிவை நானும் ஏற்கனவே படித்திருந்தேன் நண்பரே...
    வலிகூடிய பதிவுதான் என்ன செய்வது இப்போதைய இலங்கை அரசில் சிறுபான்மை மக்கள் பற்றிய உரிமைகளுக்கு ஒரு சதவீதம் கூட அங்கீகாரம் கிடையாது எமது மக்களை நாமே பாதுக்காக்க வேண்டும்....

    முடியுமென்றால் புலம் பெயர் தமிழ் உறவுகள் இவர்களுக்கான உதவிகளை செய்தால் அவர்களின் அடிப்படை தேவைகளாவது பூர்த்தியாகும்..

    ReplyDelete
    Replies
    1. ///முடியுமென்றால் புலம் பெயர் தமிழ் உறவுகள் இவர்களுக்கான உதவிகளை செய்தால் அவர்களின் அடிப்படை தேவைகளாவது பூர்த்தியாகும்..///

      இதற்க்கு வழி இதுதான் ...

      Delete