தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!
Showing posts with label பெண்கள் அறிவுரை. Show all posts
Showing posts with label பெண்கள் அறிவுரை. Show all posts

வேசி என்பதன் எதிர்பால் சொல் என்ன????




பெண்களை ஏசும்போது வேசி என்கிறார்கள்..

இதுவே ஆண்களை ஏசும் போது வேசி மகன் என்கிறார்கள் ...

வேசிக்கு எதிர்பால் சொல் என்ன? எதிர்பால் சொல் இருக்கிறதா?

ஆண்கள் நல்லவர்கள் என்பதால் அந்த சொல் தேவை படவில்லையா?.....

இதே போல்தான் கற்பும்.....

வாசித்து எனது சந்தேகத்தை தீர்த்துவிட்டு போகவும்.......

பணத்தாசை அழித்த எனது வாழ்க்கை.........



கருமேகங்களுக்கு பொருத்தம் பார்த்தது யாரோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் அழுவது தவறாமல் நடந்துகொண்டே இருக்கிறது ... யதார்த்த உலகில் அடுத்தவர்கள் அழுவது மற்றவர்களுக்கு இப்போதெல்லாம் சந்தோசம்தானே... அதுபோலவே அந்த மேகங்கள் அழுவதை என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மரமும் சந்தோசமாக இலையசைத்து ரசிப்பதை என் வீடடு யன்னலூடாக நான் ரசித்துகொண்டிருந்தேன் ... அப்போதுதான் ஒரு முதியவர் அந்த மழையில் நனைந்துகொண்டே சென்று கொண்டிருந்தார் அவரை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் சில வருடங்களுக்கு முன்பு கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வு மனகண்ணில் நிழலாடியது அதை உங்களுடன் பகிர வேண்டும் என்று நான் விரும்பியதுக்கு காரணமும் உண்டு அன்று அந்த சம்பவம் வாழ்க்கை பற்றி
 எனக்கும் பல விடயங்களை இன்றுவரை பதித்து நிற்பதுதான்......


மலேசியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் எனது இருக்கைக்கு முன்னாள் இருந்த ஒருவரை சந்தித்தேன் இன்றுவரை நாங்கள் நல்ல நண்பர்கள் இப்படி ஒரு உயர்ந்த நட்பினை பார்த்திருக்கிறீர்களா கிட்டதட்ட 3000 அடி உயரத்தில் இருந்து ஆரம்பித்த நட்பு  மிக உயர்ந்த நட்பு.......
அப்போது எனது வேலை கணணி திருத்தி கொடுப்பது விற்பனை செய்வது இடையிடையே மலேசியா, சிங்கபூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கணணி, தொலைபேசி, உதிரி பாகங்கள், ஆண்களின்  உடைகள் என கொடுக்கப்படும் பட்டியல்களுக்கேற்ப பொருட்களை கொண்டுசென்று இலங்கையில் விற்பனை செய்வது ,இப்படியான நேரத்தில் தான் எனது உயர்ந்த நண்பன் எனக்கு தொலைபேசியில் சொன்னான் ஒரு முகவரியையும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அந்த வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார் அவருடைய கணணி வேலை செய்யவில்லை செய்து கொடுக்கும் படி .........அவன் அப்போது லண்டனில் இருந்தான் இப்போதும்......
நானும் அந்த முகவரியை நாடி அந்த பெரியவரின் கணணியை சரி செய்து கொடுத்தேன் ஒரு மணிநேரம் ஆகிவிட்டது அதை செய்து முடிப்பதுக்கு.
நானும் அய்யா இப்போது சரியாகிவிட்டது நான் போயிட்டு வருகிறேன் என சொல்லிக்கொண்டு நாற்காலியை விட்டு எழும்பும் போது எனது கையில் 2000 ரூபாய் பணத்தை கொண்டுவந்து திணித்தார். நானும் அய்யா நான் நண்பனுக்காகத்தான் இங்கு வந்தேன் பணம் வேண்டாம் என பணத்தை கணணி அருகில் வைத்துவிட்டு போவதுக்கு ஆயத்தமாகும் போது சொன்னார் என்னை மீண்டும் பழைய மாதிரி ஆக்கி கவலைபட வைத்துவிடாத தம்பி இந்த காசை எடு என்றார்... 
இப்போது எனது ஆர்வம் அவரது வார்த்தைக்குள் ஒளிந்திருந்த பழைய மாதிரி என்ற சொற்களுக்குள் மறைத்து நிக்கும் கருத்துமேல் ஆவலை தூண்டியது. அது என்ன அய்யா பழைய மாதிரி என்றேன்?

அது ஒரு பெரிய கதை தம்பி என்னுடைய சோக கதை என்றார்... அவர் அப்படி சொல்லும் போதே அவர் கண்களில் அவர் தனிமையின் வேதனையை நான் உணர்ந்தேன். ஏதோ ஒன்றை சொல்ல விரும்புகிறார் ஆனால் என்னிடம் சொன்னால் நான் அதை காது கொடுத்து கேட்பேனா,கேட்க விரும்புவேனா  என்பதுதான் இப்போதைக்கு அவரது சொற்களிலும் அவர் உடல் பாவத்திலும் உணர்த்தி நின்றது..
உங்கள் கதையை கேட்காமல் இன்று நான் இங்கிருந்து போக போவது இல்லை என சொல்லிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தேன் ...
அப்போது அவர் சிரித்துக்கொண்டே அது ஒருவித வெட்கமும் கூட கலந்திருந்தது போடா தம்பி என மீண்டும் சொல்ல விரும்பாதது போல ...
நானும் விடவில்லை கடைசியில் சொல்ல ஆரம்பித்தார்..

நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார் இடியப்பம் விற்பது , அரிசி இடித்து கொடுப்பது,மிளகாய் தூள் இடித்து கொடுப்பது,இப்படியாகத்தான் நானும் எனது தம்பிகள் இருவரும் வளர்க்க பட்டோம்எனக்கு படிப்பு சரியாக மண்டையில் ஏறவில்லை அதனால் 14 வயதிலேயே கொழும்பில் வேலை பார்த்துகொண்டிருந்த பெரியப்பாவில் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டேன். அதன் பின் மிகவும் சிரமபட்டு அப்படி இப்படியாக நானும் வளர்ந்து ஒரு சிறு கடை போட்டு முதலாளியானேன் அப்படியே பணம் மீது எனக்கு வெறி என்றே சொல்லவேண்டும் அதை சேர்பதிலேயே எனது வாழ்கையை அற்பணித்தேன் அப்படியே எனது கடை பெரிதாகியது நானும் பணங்களில் புரள ஆரம்பித்தேன் அப்போதும் எனக்கு பணம் மீது ஆசை போகவில்லை என்னை எப்படி முந்திய காலத்தில் முதலாளிகள் வதைத்தார்களோ அது போலவே நானும் பலரது உழைப்பை சுரண்டி எனது மூலதனமாக்கி கொண்டேன் . எப்போதும் கடையிலேயே காலத்தை கடத்தினேன் இப்படியாக எனது உடல் பருமனும் எனது பணம் போல பெருகி கொண்டே போனது எனக்கோ எதை பற்றியும் கவலை இருக்கவில்லை பணம் இருந்தால் எல்லாமே வந்துவிடும் பணம்தான் எல்லாம் என இருந்துவிட்டேன். எனக்கு ஆண்டவன் பிள்ளைகளையும் கொடுக்கவில்லை, மனைவியும் வேளைக்கே கூப்பிட்டுடான்.என் பொண்டாட்டியை ஒரு மனுசி மாதிரியே நடத்தல்ல.அதை நினைத்து வருந்தாத நாளே இன்று இல்லை. நான் ஆசை பட்டது போல பணம் என்கூடவே இருந்தது சந்தோசம்.......? கண்களை கசக்கிகொண்டார். 

அன்று விதைத்தவற்றை இன்று அறுவடை செய்துகொண்டு இருக்கிறேன் எனது உடலில் எல்லா வியாதிகளும் இருக்கிறது விரும்பிய எந்த உணவையும் உண்ண முடியாது உண்ணும் உணவும் செமிப்பது பெரிய கலவரமாக இருக்கிறது குடல்புண்ணினால். அன்று அநியாயமாக சம்பாதித்து விரும்பிய உணவை உன்னது சேர்த்து வைத்த  பணத்தை இன்று மருந்திற்காக அழித்துகொண்டிருக்கிறேன் நான் அன்று பணத்திற்காக மனிதர்களை பகைத்துகொண்டேனே தவிர மனிதர்களை, நல்ல நண்பர்களை சம்பாதிக்கவில்லை அதனால் இன்று தனிமையில் இருக்கிறேன். பணத்தினால் வியாதிகளை குனபடுத்தவும் முடியவில்லை, தனிமையை போக்கவும் முடியவில்லை. இது எனக்கு கொடுக்கபட்ட தண்டனையாக அனுபவித்துகொண்டிருக்கிறேன். அன்று வாழ்க்கை என்றால் என்ன? சந்தோசம், நிம்மதி என்றால் என்ன? என்று தெரியாமல் பணம் பின்னால் போகும் போதும் வாழ்கையை அனுபவிக்கவில்லை. இன்று எல்லாவற்றையும் புரிந்துகொண்ட போது என்னால் முடியவில்லை.  தனிமை, வியாதி நான் சம்பாதித்தது.மொத்தத்தில் வாழ்கையை நான் வாழவில்லை பணம் அழித்துவிட்டது இல்லை இல்லை என் பணத்தாசை அழித்துவிட்டது என்று சொல்லலாம் என்றார்.
அன்று ஒவ்வொருநாளும் சில நிமிடங்கள் உடற் பயிற்சி செய்திருந்தால், எனது பணத்தினை மற்றவர்கள் கஷ்டத்துக்கு பயன் படுத்தி இருந்தால் இந்த தனிமை, வியாதி இரண்டும் இன்று இல்லாமல் இருந்திருக்கும் இப்போ புரிவது மரமண்டைக்கு அப்போது புரியாமல் போய்விட்டது...
சரிடா தம்பி போதும் நேரமாச்சு நீ போய்ட்டு வா என மேசைமேல் இருந்த பணத்தினை என் கையில் மீண்டும் திணித்தார் நானும் மறுக்கவில்லை. அவரோடு இனி தொடர்ந்து பேசவேண்டும் என முடிவு செய்துகொண்டு அவரது தொலைபேசி இலக்கத்தையும் சேமித்துக்கொண்டு அங்கிருந்து பலவிதமான சிந்தனைகளுடன் புறபட்டேன்... 

அவரை பின்பும் சில தடவை சந்தித்தேன்.. அப்பப்ப தொலைபேசியில் பேசி அவரது தனிமையை இயன்றவரை போக்கினேன்.. ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லை...

  

இப்படி ஒரு அனுபவத்தை எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்.....

உண்மைதான் இப்படியாக பணம் பணம் என எத்தனை பேர் வாழ்க்கை உண்மையான வாழ்கையை புரிந்துகொள்ளாமல் அழிந்து போய் இருக்கிறது, பணத்துக்குள் சந்தோசம், நிம்மதியை தேடி தொலைந்து போய் இருக்கிறது. பணத்தாசையால் மழலை சொல்லை கேட்காமல் ,பிஞ்சுகளை கொஞ்சாமல், மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச நேரமில்லாமல் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? இப்படியெல்லாம் பணம் பலரது வாழ்கையை அழித்தது, அழித்துகொண்டிருக்கிறது,இனியும் அழிக்கும்.........

வெள்ளம் கடந்தபின் ஆணை கட்ட முடியாது.........
கண்கெட்ட பின் சூரிய நமாச்காரம் பண்ண முடியாது......
வருமுன் காப்போம்... இல்லை வாழ்கையை தொலைத்தபின் புலம்ப மட்டுமே முடியும்... மேலே அந்த வயோதிபர் போல...
நீங்கள் முதலாளியா? உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுங்கள்.... மனிதத்தையும் மதியுங்கள்.

எல்லோரும் உங்கள் உடலையும்,அன்பையும் எப்போதும் பேணுங்கள் அதுதான் நிரந்தர சந்தோசம்,நிம்மதி.

நன்றி.



கமலை(குருவை) மிஞ்சிய அன்ட்ரியா .. படங்கள்,காணொளிகள்



இன்று இணையத்தை மட்டுமல்ல இளையவர்களை கிசுகிசுக்க வைக்கும் விடயம் அன்ட்ரியா அனிருத் .... இப்படியான விடயங்களுக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் ஏனோ பல சமுதாய சீர்கேடுகளுக்கு கொடுப்பதில்லை. இது என்ன மனநிலை புரியவில்லை எனக்கு...
படங்களில் சிலர் தங்கள் பெயர்களை போட்டு புகழ் தேட முயல்வது இன்னும் ........

இருவருடைய அந்தரங்கங்களை உணர்வுகளை இப்படி படம் பிடித்து ரசிப்பது சரியானதா? இருவருடைய விருப்பங்கள் சம்பந்த பட்ட விடயங்களை மற்றவர்கள் குறை சொல்வதுவும்  அவர்களை கேவலமானவர்களாக சித்தரிப்பதுவும் சரியானதா?

அவர்கள் செய்தது தவறென்றால் அதை தேடு தேடி பார்க்க விரும்புவது????

இந்த விடயம் எனக்கு உண்மையில் தெரியாது எனது நண்பனை சந்திக்க சென்ற வேளை அவனுடைய நண்பன்  என்னோடு அறிமுகமாகினான்.நண்பனின் வீட்டருகில் கடல் இருப்பதால் அப்படியே பேசி பேசி கடற்கரையில் அலைகளின் இசைக்கு எங்கள் நடைகளை நடனமாக்கி நடக்க தொடங்கினோம் பல விடயங்களை பேசிக்கொண்டே போகும் போது இந்த விடயமும் வந்தது... அவன் இதை சொன்ன விதம் என்னை அப்படியே சுனாமி அடித்தது போல இருந்தது ... கமல் கமல்தான் என்றான் என்ன கொடுமை கமலுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் என்று சிந்திப்பதுக்குள் சொல்லி முடித்தான் கமல் விஸ்வரூபத்தில் நல்லாத்தான் சொல்லி கொடுத்திருக்கிறார் என்றான்.
ஆனால் குருவை மிஞ்சி விட்டார் அன்ட்ரியா என்றான்..........எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுகிறான் பார்த்தீர்களா? 
இதுவும் திறமைதான் ஆனால் அதை சரியான இடத்தில் பயன்படுத்தாத திறமை என்றே சொல்ல வேண்டும்.

நித்தியானந்தா விடயம் வேறு துறவறம் என்று சொல்லி சாமி என்று சொல்லி லீலைகள் செய்தவன்.. வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது... ஆனால் இது??????????? இப்படி ஊதி பெரிதாக்குவது சரியானதா? 

நண்பர்களே தலைப்பை பார்த்து ஏதோ எதிர் பார்த்திருப்பீர்கள் .....

ஹிஹி... 

இங்கே அழிந்தது பேதங்கள் அல்ல காமத்துக்குள் காதலே!!!



காதலர்  தினத்துக்கு 
குடை விற்ற பணத்தில்
அம்மாவுக்கு 
அன்னையர் தினத்துக்கு 
உடை எடுக்கலாம் 
என நினைத்து 
ஆரம்பித்த குடை வியாபார 
லாபத்தில்
நகை எடுத்து கொடுக்க இருக்கிறேன்!!!

மழையில் நனையாமல் இருக்க
குடை பிடிக்கலாம் 
இந்த காதல் என்ற குடை பிடிப்பது 
காம மழையில் நனைவதற்காகவே!!!



சாதி மத பேதங்களை 
போக்கிடும் காதல் என 
பெருமை பேசியவர்கள் நாங்கள் 
இங்கே அழிந்தது பேதங்கள் அல்ல 
காமத்துக்குள் காதலே!!!

நானும் கணணியும் இணையமும்.



அப்போது எனக்கு பதின்நான்கு வயது ஆண்டு எட்டில்முதல் முதலில் கணணி என்ற சொல்லை அறிந்த காலம் அது எங்கள் பாடசாலையில் படித்து வெளிநாடு சென்ற பழைய மாணவர் ஒருவர் பாடசாலைக்கு நன்கொடையாக கொடுத்ததால் அதை அன்று அறிய முடிந்தது. முதலில் அதை கணணி என்று சொல்லவில்லை பாடசாலை முழுவது இதுதான் பேச்சு  ஒரு இயந்திரம் கொண்டு வந்திருக்கிறார்கள் அது ஒருவரின் கையை அதில் அழுத்தினால் அவரை பற்றி எல்லா விடயங்களையும் சொல்லிவிடுமாம் இதுவரை நாங்கள் என்னென்ன தவறுகள் செய்தோம் சொன்ன பொய்கள் எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிடுமாம் இப்படியாக அதை ஒரு மந்திரவாதியை விமர்சிப்பதை போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களை சொல்லி பயமுறுத்திக்கொண்டு இருந்தனர். போது கூட்டத்தில் அதிபர் அதை அறிமுகம் செய்து வைக்கும் வரை எங்கள் பயம் போகவில்லை. அப்படி இருந்தும் எங்களால் அன்று அதை தூர நின்று பார்க்க முடிந்ததே தவிர அதை இயக்க முடியவில்லை அதற்க்கு காரணம் அப்போது ஈழத்தில் மின்சாரம் இருக்கவில்லை எப்போதாவது உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இயக்கி காட்டினார்கள்,நானுன் எனது நண்பர்களும் கணணி வைக்கபட்டிருந்த யன்னலுக்கு  அருகில் களவாக சென்று அதை  பார்த்துவருவோம்.இப்படியாக என் வாழ்வில் கணணி உள்நுழைந்தது.

அதன் பின் அப்படியே இடம் பெயர்வுஅவசரகாலசட்டம் அப்படியே காலம் யுத்தத்துடன் ஓடியது பாடசாலைக்கு கூட பல காலங்கள் போக முடியவில்லை கணணியை பற்றி யார் சிந்திப்பது.

அப்படியே பல வருடங்கள் ஓடிப்போனது.அப்போது எனது வாழ்க்கை யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நகர்ந்து இருந்தது.

அப்போது வழமையாக மாலை நேரங்களில் காற்பந்து விளையாடுவோம் அதில் அறிமுகமாகிய ஒரு நண்பன் தான் எனக்கு கணணியை அறிமுகம் செய்துவைத்தான். அதுவும் சும்மா அல்ல இணையத்தில் நடிகைகளின் படங்களை பார்க்கலாம் என எனக்கு ஆசை காட்டி அழைத்து சென்றான் நானும் அவனுடன் ஒரு "சைபர் கபே" க்கு சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் காட்டிய வித்தைகளை வியப்புடன் பார்த்துகொண்டிருந்தேன்அவன் என்ன என்ன செய்தான் என்பதை மிகவும் அவதானமாக கவனித்துக்கொண்டே மறுநாள் தனியாக அதே இடத்துக்கு சென்று முயற்சி செய்தேன் முடியவில்லை நடத்துனருக்கு தெரிந்திருக்கவேண்டும் எனக்கு தெரியாது என்று என்னை வெளியில் அனுப்பி விட்டார். மீண்டும் நண்பனுடன் சிலகாலம் தொடர்ந்தேன் படிப்படியாக தனியாக சென்று இயக்கும் அளவுக்கு பழகிவிட்டேன்.

பாடசாலைகாலங்களில் ஆங்கில பாடம் என்றாலும் சரி ஆங்கில ஆசிரியர்கள் என்றாலும் ஏனோ ஒரு வெறுப்பு என்றுமே எனக்கு ஆங்கில பாடத்துக்கு முப்பதுக்கு மேல் மதிப்பெண் வந்ததே இல்லை. இது கணனியில்  எனது மேலதிக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது இதுக்கும் இணையத்திலேயே விடை கிடைத்தது. அரட்டையில் பெண்களுடன் பேசவேண்டும் என்ற ஆர்வத்தில் தேவையானவற்றை பழக ஆரம்பித்தேன் ஆங்கிலம் தெரியாது என்று சொன்னால் என்னை கேவலமாக நினைப்பார்கள் என்ற எண்ணம் வேறு. கையில் அகராதியுடன் அரட்டை அடித்த காலங்களும் உண்டு.


வேலையோடு சிலகாலங்கள்வெளிநாடு செல்லும் ஆசையால் கனடா செல்வதாக சில வருடங்கள் முகவர்களுடன் சில நாடுகளில் கடவு சீட்டை தொலைத்துவிட்டு அநாதரவாக சில வருடங்கள் கடந்துவிட்டது . எப்போதாவாதுதான் கணணியை பார்க்கவே முடிந்தது.

பூமி தனது வேலையே சரியாக செய்துகொண்டே இருந்தது பகல் இரவு என்று காலம் உருண்டுகொண்டே போனது. வெளிநாடு செல்ல முடியாமல் சொந்த நாடுக்கு வருவதுக்கே பலத்த போராட்டம். இப்படியாக மீண்டும் கொழும்புக்கு வந்து சேர்ந்தேன்.
மீண்டும் ஒரு வேலையில் சேர்ந்தேன் சொந்தமாக ஒரு கணணியையும்  வாங்கினேன் அதிலேயே எல்லாவற்றையும் செய்து பழகினேன். பலவிதமான மென்பொருள்களை தரவிறக்குவதுவும் அதை பயன் படுத்தி பார்ப்பதுவும் பின்பு அழிப்பதுமாக இப்படியே ஓரளவுக்கு கணணியை திருத்தும் அளவுக்கு பிரசித்தம் ஆகிவிட்டேன், பலரது கணணியை திருத்தி கொடுப்பது இப்படியே எனது தேர்ச்சியையும் வளர்த்துக்கொண்டேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் இணையத்தில் ஒரு வலைபூவை ஆரம்பித்துவிட்டு எனக்கு இணையத்தளம் இருப்பதாக பல கவிதைகளை போட்டு காட்டினான். பொறாமையாக இருந்ததுநான் கணணி பற்றி படிக்கவில்லையே என்ற கவலை அதேநேரம் எப்படியும் நானும் அதை பழகவேண்டும் என்ன ஆசையும் அவனிடமே கேட்டு தெரிந்துகொண்டேன் அவனும் எனக்கு ஒரு வலைபூ ஆரம்பித்து அதுக்கு இடிமுழக்கம் என பெயரும் வைத்து கொடுத்தான். 

எனக்கு ஆங்கிலம் இப்போதும் நன்றாக தெரியாது ஆனால் வாசிப்பேன் புரிந்துகொள்வேன் இதுவும் இணையத்தினால்தான்.

இப்போது பல இணையத்தளங்களில் இருக்கும் செய்திகளை எனது தளத்தில் பிரதி செய்து அதை தமிழ்மணத்தில் இணைத்து எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை அடிகடி பார்த்து சந்தோஷ பட்டுகொள்வேன்.

இப்படியே பலர் என் வலை பூவை பார்க்க பார்க்க சந்தோஷ பட்டாலும் உள்ளுக்குள் கவலையாகவே இருந்தது. யாரோ எழுதிய எழுத்துக்கு சந்தோஷ படுகிறோமே.எனக்கு தமிழ் எழுத தெரியும் ஆனால் கட்டுரை,கவிதை இவை எல்லாம் எழுதவே தெரியாது எழுதியும் பழக்கம் இல்லை இலக்கணம், இலக்கியம் என்றால் பெயரளவில் தெரியுமே தவிர அவற்றின் பங்களிப்பு மொழியிலே எப்படிபட்டது எதுவுமே தெரியாது நானெப்படி எழுதுவது என்று எனக்கும் சிந்தித்து சொர்ந்துபோவேன்.

இந்த நேரத்தில் தான் நண்பன் தனது வலை பூவில் தமிழில் எழுதுவதை பார்த்து எப்படி எழுதுகிறாய் என்று கேட்டேன் அவனும் "கூகிளில்" எழுதும் முறையை சொல்லி கொடுத்தான் அதிலே தமிழில் பல சொற்களை எழுதி பழக ஆரம்பித்தேன் இப்போது நினைக்கும் சொற்களை தமிழில் எழுத பழகிவிட்டேன்.
 எழுதவேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்காமல் என்னை முனைப்புக்குள்ளாக்கியது.... 
நானும் சிலவற்றை இடையிடையே எனது வலைப்பூவில் எதாவது எழுதிகொள்வேன் அதை யாரவது பார்கிறார்களா என பலமுறை பார்த்து சந்தோஷ பட்டுகொள்வேன். வலைப்பூவை அறிமுகபடுத்திய நண்பன் அதே பெயரில் முகபுத்தகத்தில் ஒரு கணக்கு ஆரம்பித்து இங்கு பதியும் பதிவுகளை அங்கு இணைப்பு கொடுத்து பலர் அவன் வலை பூவை பார்ப்பது போல செய்துகொண்டான் நானும் முகபுத்தகத்தில் இடிமுழக்கத்தை ஆரம்பித்தேன்.

இப்போது முகபுத்தகத்தில் பல நண்பர்களை சேர்க்கும் படலம் எங்கள் அதிவேக நண்பர்கள் இணைப்பால் முகபுத்தக நிர்வாகம் நண்பர்களை இணைப்பதுக்கு அப்பப்ப தற்காலிக தடை விதிப்பதுவும் மீண்டும் நான் இணைப்பதுவும் இப்படியே ஒரு சக்கரமாக நடந்துகொண்டே இருந்தது.

இந்த காலத்தில் முகபுத்தகத்தில் சிறிது சிறிதாக ஒவ்வொருவரின் பதிவுகளில் நான் பதிந்த பின்னூட்டல்கள் பலர் விருப்பம் தெரிவிக்க தெரிவிக்க எனக்குள் எதோ ஒரு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது அதன் பின் எனது எண்ணங்களை எல்லாம் பதிந்தேன் அதுக்கு பலரது விமர்சனங்கள், விருப்பங்கள் அவற்றுக்கு கருத்து சொல்வது வாதம் செய்வது இப்படியாக பல விடயங்கள் பற்றி பலர் பதியும் பதிவுகள் சம்பந்தமான கட்டுரைகளை தமிழில் தட்டச்சு செய்து "கூகுளில்" தேடி வாசித்து தெரிந்துகொண்டு அது பற்றி வாதம் செய்ய அரம்பித்தேன் இதன் காரணமாக பல நண்பர்களும் சில கொள்கை எதிரிகளும் உருவாகினார்கள் அவர்களில் சிலர் என் கணக்கை மொத்தமாக ஐந்து தடவைகள் முடக்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த முகபுத்தக ஆர்வம் அதிகரித்த காலத்தில் நான் வலைபூவை மறந்து போனேன் என்றே சொல்லவேண்டும்.
இப்போது எனது முகபுத்தக கணக்கு இறுதியாக முடக்கபட்டு ஆறாவது கணக்கு ஆரம்பித்து இருக்கிறேன் இந்த நேரத்தில் மீண்டும் வலைப்பூவில் எழுத ஆசை வந்துள்ளது.முகபுத்தக கணக்கில் 5000 நண்பர்களும், பக்கத்தில் அண்ணளவாக 1000 நண்பர்களையும் சேர்த்து வைத்து இருந்தேன் அதை இம்முறை இழந்தது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. முகபுத்தகத்தை திறந்ததுமே அந்த சோகம் தொற்றிகொள்கிறது முதல் கணக்கில் ஒரு பதிவு பதிந்தால் பல விருப்பங்கள், பல பின்னூட்டல்கள் ஒருவித உற்சாகத்தை கொடுத்தது இப்போது புதிய கணக்கில் நண்பர்கள் 200௦௦ பேர் தான் இருக்கிறார்கள்.

நண்பர்களே இணையம் எங்களுக்கு கிடைத்து இருக்கும் ஒரு அருங்கொடை அதை பாவிக்கும் நாங்கள் தான் அதன் மீது பழி போடுகிறோம், பல செய்திகள் வருகின்றன முகபுத்தகத்தால் பல பெண்கள் ஏமாற்ற படுகிறார்கள் பல தவறுக்க நடைபெறுகின்றன,முகபுத்தகத்தை தடை செய்யவேண்டும் உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் முகபுத்தகம் உங்களை ஏமாற்றுகிறதா?  நீங்கள் எமாற்றுவதுக்கு முகபுத்தகத்தை பயன் படுத்துகிறீர்களா? பலர் கொலை செய்வதுக்கு கத்தியை பயன் படுத்தினார்கள் என்பதுக்காக அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை தடை செய்யவேண்டும் சொல்வது சரியா?

முன்பெல்லாம் ஒரு விடயம் தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ள அது சம்பந்தமாக படித்தவரிடம் தான் தெரிந்துகொள்ளவேண்டும் இப்போது எந்த விடயத்தையும் இருந்த இடத்திலேயே நாங்களாகவே அறிந்துகொள்கிறோம். இணையம் என்பது ஒரு கொடை அதை நாங்கள் எங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பயன் படுத்தவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் முகபுத்தகத்தில் பல குழுக்கள் ஆரம்பித்து ஒரே பதிவை பலமுறை பதிந்து உங்கள் நேரங்களையும் வீணாக்குகிறிர்கள். பலர் இனணயத்தளம் பார்ப்பதே இல்லை செய்திகள் படிப்பதே இல்லை எப்போது பார்த்தாலும் முகபுத்தகத்தில் அரட்டை. 
ஒன்றுமே தெரியாத நான் இன்று எழுத ஆரம்பித்து இருக்கிறேன் என்றால் பல விடயங்கள் தெரிந்த உங்களால் ஏன் முடியாது???

இணையத்தில் இப்போது மொழி அறிவு ஒரு தடை இல்லை எல்லா விடயங்களையும் எங்கள் மொழியிலேயே அறிந்துகொள்ளலாம் வாசியுங்கள் பல விடயங்களை வாசியுங்கள் அறிய அறிய உங்கள் அறிவு வளர்ந்துகொண்டே போகும். உங்கள் கையிலேயே உங்கள் அறிவு இருக்கிறது.




உங்கள் முதலிரவு காணொளியை பலவருடங்கள் கடந்து நீங்களே பார்க்க நேரிட்டால்???



தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்கையை மேம்படுத் தவே  ஆரம்ப காலத்தில் இருந்து வந்தது ஆனால் இன்று மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவே அதிகம் காணபடுகிறது அதுக்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.எந்த ஒரு வளர்ச்சியையும் பயன் படுத்தும் விதத்தை பொறுத்தே அதன் வெற்றி அமைகிறது..

எனது நண்பனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடை பெற்றது நானும் சென்றிருந்தேன் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது பல பாடசாலை நண்பர்களை சந்திக்க கிடைத்ததால் சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது மீண்டும் பள்ளிக்கு  போன உணர்வு அது மட்டும் அல்லாமல் பல விதமான அனுபவங்களை ஒவ்வொருத்தரும் பகிர்ந்துகொண்டார்கள் அதில் ஒரு நண்பனின் மாமாவும் அதில் கலந்துகொண்டார் அவர் சொன்ன ஒரு சம்பவம் மிகவும் கவலை அடைய வைத்தது ...

திருமணம் முடிந்து தம்பதிகளை ஒரு ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைப்பதுக்காக தயாராகிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் மாமா அவசர அவசரமாக மாப்பிளையிடம் ஏதோ ரகசியம் சொல்லிகொண்டிருந்தார் அதன் பின் அவர்களை அனுப்பி வைத்துவிட்டு மாமாவிடம் கேட்டோம் என்ன ரகசியம் பேசிக்கொண்டு இருந்தீர்கள் என !!!
அவர் சொன்னது...

சில ஆண்டுகளுக்கு முன் அவர் துபாயில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் ஒருநாள் அவருடன் அறையில் தங்கி இருந்த நண்பர்கள் இருவர் பலான படம் பாற்பதுக்காக ஒரு கடையில் இருந்து ஒரு CD ஒன்றை எடுத்து வந்து போட்டார்களாம் அதிலும் கடைக்காரன் சொல்லி கொடுத்து இருக்கிறான் இது உண்மையாக நடந்ததை களவாக பிடிக்க பட்ட காணொளி என்று, காணொளியும் ஆரம்பமானது, ஒரு பெண் தனியாக அறையில் நின்று கொண்டிருந்தாள்  திடிரென அங்கு அறையில் இருந்த ஒருவர் அவசரமாக வந்து மின்சார இணைப்பை துண்டித்தாராம் காரணம் அந்த கானொளியில் இருந்த அந்த பெண் அவர் மனைவி.
 மிகவும் மனமுடைந்துபோனவரை அவர்கள் சமாதான படுத்தினார்களாம் பின் அந்த காணொளியை தனியாக எடுத்து சென்று கணனியில் போட்டு பார்த்து இருக்கிறார் அடுத்த அதிர்ச்சி அங்கு அவர் மனைவியுடன் இருந்தது அவர் தான்!!! அதுவும் அவர்கள் தேனிலவுக்காக தங்கி இருந்த அறையில் அவர்களுக்கு தெரியாமல் பிடிக்க பட்ட காணொளி......

என்ன நண்பர்களே புரிகிறதா எதுக்காக முதல் இரவுக்கு போகும் மாப்பிளைக்கு மாமா என்ன சொல்லி இருப்பார் என்று?? 

இப்படியான பிரச்சனைகளில் இப்போதெல்லாம் பல பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிகொள்கிறார்கள்  வாழ்கையையும் தொலைகிறார்கள், காதலிக்கும் போது காதலன் தானே எதிர் கால கணவன் தானே என்று நம்பியே பல பெண்கள் தங்கள் அரை நிர்வாண ,நிர்வாண படங்கள் எடுப்பதை அனுமதிகிறார்கள் பின் வழமை போல தோல்வியில் முடியும் கவர்ச்சி காதலில் பெண்ணின் நிம்மதி அந்த படங்களை நினைத்து அழிக்கபடுகிறது. இது இப்போது skype இல் அதிகமாக நடக்கிறது........

எதையும் வருமுன் காப்பதே மேல் முடிந்தபின் !!!!!!!!!!!!!!!!

வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்.. 

பெண்களுக்கு தெரியாமல் ............... வீடியோ - தொகுப்பு(18+)


 சிறிது நாளைக்கு முன் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். ஆசிரியப்பயிற்சி பயிலும் ஒரு மாணவன் கல்லூரி பாத்ரூமில் உடன் படிக்கும் மாணவியை தவறான முறையில் செல்பேசி மூலம் படமாக எடுத்து நண்பர்களுக்கு காட்டியது மட்டுமன்றி இணையத்திலும் போட்டு விட்டான்.அந்த மாணவியின் நிலையை நினைத்துப்பாருங்கள்.இதில் கொடுமை என்னவென்றால் இருவரும் காதலர்களாம். இதே போல் ஒரு பள்ளியின் படிக்கட்டிலேயே வைத்து பிளஸ்டூ படிக்கும்....

இதை விட இன்னொரு சம்பவம். காஞ்சிபுரம் கோயில் குருக்களின் காமக்கொடுரம். நான்கு பெண்களை கோயிலிலேயே வைத்து மனதைக்கெடுத்து அந்தரங்கத்தை படமாக எடுத்தது தான். இவற்றை எல்லாம் மிஞ்சிய விடியோக்கள் எல்லாம் இணையத்தில் பரவிக்கிடைக்கின்றன. எல்லாவற்றையும் கவனியுங்கள். பெண்கள் தான் ஏமாந்தோ அல்லது அலட்சியமாகவோ இருந்து உள்ளனர்.

இப்படி படம் எடுக்க உதவும் செல்பேசிகள் சந்தையில் 2000 ருபாய்க்கே கிடைக்கின்றன.அதுவும் தெளிவாக படம் எடுக்கும் வசதியோடு.மேலும் உளவு பார்க்கும் Spy Cameras மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.இவை பட்டன் வடிவிலோ பேனா மூடி வடிவிலோ மேலும் கண்ணுக்கு புலப்படாத வடிவில் கூட கிடைக்கின்றன. இவற்றை வைத்து படம் எடுப்பது சுலபமான வேலை தான்.

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

• இணையம் பயன்படுத்த வெளியில் நெட்கஃபேகளுக்கு செல்லும் போது கணிணியின் மேல் வைத்திருக்கும் வெப் கேமராவின் கண்கள் உங்களுக்கு தெரியாமல் படம் பிடிக்கலாம்.இந்த மாதிரி மாட்டுகிற பெண்கள் அதிகம்.எனவே அங்கே சென்று மகிழ்வதை நிறுத்துங்கள்.

• எங்கேனும் ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் படுக்கைக்கு அருகில் கேமரா இருக்கிறதா என்று நன்றாக பார்த்து விடவும். கூடவே பாத்ரூமிலும் பாருங்கள்.பொது கழிப்பறைகள், துணிமாற்றும் அறைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும் கவனமாக இருங்கள்.

• உங்கள் காதலரோ அல்லது கணவரோ விளையாட்டாய் படம் பிடிக்கறதாய் இருந்தால் கூட அனுமதிக்காதிர்கள்.அழித்து விடலாம் என்று சொல்வார்கள்.ஒருவேளை அவர்கள் உண்மையாக இருந்தால் கூட இப்போது அழித்ததை மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் நிறைய உள்ளன. மொபைலை கடைகளில் வேலையாக கொடுக்கும் போது அவர்கள் மீட்டு எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது.

• காமுகர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் தான் மோசம் செய்கின்றனர்.இளம்பெண்கள் காதலிக்கும் போது கவனமாக இருங்கள். எங்கேனும் வெளியில் அழைத்தால் தள்ளி ப்போடுங்கள். பாசமாக பேசுகிறவர்கள் கூட் வில்லனாக இருப்பார்கள். ஒருபோதும் எதையும் படமாக எடுக்க அனுமதிக்காதிர்கள்.உங்களுக்கு தெரியாமலே படம் எடுத்து உங்களை மிரட்டக்கூட வாய்ப்புண்டு.

• பொது இடங்களில் உங்கள் உடைகள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். எங்கே கேமரா இருக்கும் என்றே இப்போது சொல்ல முடிவதில்லை.உடைகள் கலைந்த நிலையில் பிடிக்கப்பட்ட படங்கள் நிறைய உலவுகின்றன. உங்கள் குளியல் அறையில் கூட இருக்கலாம். உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், பக்கத்துக்கு வீட்டு நபர்களால் கூட வைக்கப்பட்டு அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டலாம்.

• பெற்றோர்களும் தங்களது பெண்கள் பாசம் கலந்த அக்கறை கொள்ள வேண்டும். இயல்பான நடத்தையில் மாற்றம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.அதிக நேரம் சாட்டிங் செய்வது , மொபைலில் பேசுவது போன்றவை இருந்தால் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். அவர்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

• எளிதில் யாரையும் நம்பாதிருங்கள்.உங்களுக்கு பிடித்தமானவர்கள் கூட பழிவாங்கலாம்.முன்னரே எச்சரிக்கையாக இருந்தால் பின்னால் ஆபத்து இல்லை தானே!

இன்று எவ்வாறான காமராக்கள் உள்ளன .......................


இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் கள்ளக்காதல், லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.

கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது.





அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?



அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.



கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.


இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.


இதைப்பாருங்கள் வாயில் இட்டு சுவைக்ககூடிய சமாச்சாரம். அதன் வடிவில்கூட கேமரா.

இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.

இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.



இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!

எனவே கள்ளகாதல் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், ஊழல் பேர்வழிகள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இது காலத்தின் கட்டாயம்.

லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.