தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!
Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

இரகசிய இலக்கங்கள் களவாடபடுவது எப்படி " hacking passwords "



முதல் பகுதி 

இணையம் பாதுகாப்பானதா பகுதி 2



ஒரு நாளில் 24 மணி நேரம் போதவில்லை இதை அதிபடுத்த எதாவது ஆலோசனை உண்டா??
 சரி நண்பர்களே பதிவுக்கு வருகிறேன் ..எங்கள் இரகசிய இலக்கங்கள் எப்படி களவாட படுகின்றன என்பதை ..

இன்று இணையம் ஒரு அத்தியாவாசிய பாவனைகளில் ஒன்றாக வந்து விட்டது பலரதும் தனிபட்ட இரகசியங்கள் அவற்றில் அடங்கி இருக்கிறது. இப்படியான காலத்தில்  இதன் பாதுகாப்பு பற்றி அறிந்திருப்பது அவசியம்.

உங்கள் மினஞ்சல் ,முகபுத்தக மற்றும் உங்களின் கணக்குகளை வேறு ஒரு கணனியில் திறக்கும் பொது மிகவும் அவதானாமாக இருக்கவும். இன்று அதிக மென்பொருள்கள் இருக்கிறது இலவசமாக கணனியில் நிறுவி வைத்துவிட்டால் நீங்கள் பயன் படுத்தும் தட்டச்சு சொற்கள், இலக்கங்கள் பதிவு செய்து வைக்கப்படும் அதில் இருந்து உங்கள் இரகசிய இலக்கங்களை கண்டறியலாம்.

"சைபர் கபே" களில் உங்கள் கணக்குகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்கவும் ..

இந்த மென்பொருளை "கூகிள்" தேடலில் இலகுவாக பெறலாம் ............

எனக்கு தெரிந்த ஒரு நபர் "சைபர் கபே" களில் இந்த மென்பொருளை நிறுவி வைப்பார் அதன் உரிமையாளர்களுக்கே  தெரியாமல் சில நாட்களுக்கு ஒரு முறை சென்று அங்கு பதிவாகிய கணக்குகளை எடுத்து அதில் விளையாடுவார் இப்படியான மன நிலையிலும் பலர் இருக்கிறார்கள்....

அடுத்தவர்கள் நாட்குறிப்பு ,இரகசியங்கள் படிப்பது,அறிவது சிலருக்கு அலாதி இன்பம்.........

அடுத்தவர்களை குறை சொல்லுவதில் பயன் இல்லை எனவே நாங்கள் அவதானமாக இருப்போம் ...பாதிப்பு எங்களுக்கே!!!!

உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர் உங்களுக்கு இணையம் பற்றி தெரியாத நேரத்தில் கணக்கை ஆரம்பித்து கொடுத்து இருக்கலாம் அதை நான் மேலே கூறியது போன்ற நிகழ்வால் ஒருவர் களவாடி விட்டால் உங்களுக்குள் இருக்கும் அன்பில் விரிசல் ஏற்படலாம் நம்பிக்கை உடையலாம் எனவே அவதானம் நண்பர்களே ............இது என் அனுபவத்தில் சொல்கிறேன்.....

இதில் ஒரு மென்பொருள் எப்படி பயன் படுத்துவது என்பதை இந்த கானொளியில் ....


மரணவிளையாட்டு - வீடியோ

உயிரை பணயம் வைத்து இப்படியெல்லாம் சாகசம் செய்யும் ..................

பெண்களை இப்படி...இந்தியா வல்லர சாகுமா??? வீடியோ

பெண்களை இப்படி...இந்தியா வல்லர சாகுமா??? வீடியோ




உங்கள் கணனியை வேவு பார்க்க...களவாட

நண்பர்களே எனது பதிவுக்கு அதரவு , பிழைகளை சுட்டிக்காட்டியும் என்னை வளர்க்கும் உங்களுக்கு நன்றி. நான் இன்று பகிர விரும்பும் பதிவு உங்களுக்குத்தெரியாமல் உங்கள் கணனியை கட்டுப்படுத்தல், உங்கள் கோப்புக்கள் தேவையானவற்றை உங்கள் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளலாம். இது எப்படி சாத்தியம்?ஆம் இதற்கு ஒரு மென்பொருள் உண்டு ஆனால் இதனை செயற்படுத்த உங்கள் கணனி இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். நீங்கள் உங்கள் கணனியில் ஏற்படும் பிழைகளுக்கு திருத்தும் இடத்திற்கு கொடுக்கிறீர்கள் அங்கே அவர்கள் உங்கள் கணனியை ஒரு இணையப்பக்கத்திற்கு பதிவு செய்து விடுவார்கள், அதன் பின் உங்கள் கணனி திரையில் தெரிவதை அவர்கள் எங்கிருந்தும் கணனியிலும், சில நவீன தொனைபேசியில் இருந்தும் பார்பது மட்டுமல்ல, எல்லாவகை கோப்புக்களையும் களவாடலாம்,ஒலி வாங்கி பொருத்தியிருந்தால்(mic) நீங்கள் பேசுவதையும் கேட்கலாம்...
உங்களை சந்தேகப்படுபவர்களும் இதை செய்யலாம்............இந்த காணொளியைப்பாருங்கள்



எனது ஆலோசனை
1)கணனியை திருத்துவதற்கு மிகவும் தெரிந்தவர்களை, நம்பினவர்களை நாடுங்கள்.
2)தேவையற்ற நேரத்தில் வலை இணைப்பை துண்டித்துவிடுங்கள்
3)எல்லாநேரத்திலும் கணனியில் இணைய ஒளிப்பதிவு கருவியை(web cam) இணைத்து வைக்க வேண்டாம். இதை பாருங்கள்
4) தேவையற்ற நேரத்தில்  mic இணைப்பை துண்டித்துவிடுங்கள்

நான் கூறிய இணையம்
https://secure.logmein.com/US/home.aspx

இந்த இணையம் நல்ல பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது ஆனால்......இந்த பதிவை பார்க்கவும்
http://idimulhakkam.blogspot.com/2010/03/blog-post_31.html

நன்றி

உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

யூடியூப் தெரியும்.டிவி டியூப் தெரியுமா?
டிவியூடியூப்பை டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம்.
இந்த இணையதளம் வாயிலாக டிவி நிகழ்ழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். சும்மா இல்லை;உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
டிவி நிகழ்சிகளை இணையத்தில் திரட்டித்தரும் சேவையான டிவி டியூப் அகண்ட அலைவரிசை மற்றும் இண்டெர்நெட் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து சிறந்தவற்றை திரட்டித்தருவதாக சொல்கிறது.
இத‌ற்காக‌ ட‌வுண்லோடு செய்ய‌வோ அல்ல‌து எதாவ‌து சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய‌வோ தேவையில்லை நிக‌ழ்ச்சிகளை தேர்வு செய்து கிளிக் செய்தாலே போதும்.
டிவி நிக‌ழ‌ச்சிக‌ள் ப‌ல‌வேறு த‌லைப்புக‌ளில் வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அவ‌ற்றில் விருப்ப‌மான‌வ‌ற்றை தேர்வு செய்து கொள்ள‌லாம்.
இதைத்த‌விர‌ முக‌ப்பு ப‌க்க‌த்திலேயே பிர‌ப‌ல‌மான‌ சேனல், ச‌மீப‌த்திய‌ சேன‌ல் , த‌ற்போது பார்க்க‌ப்ப‌டும் சேன‌ல் ஆகிய‌ ப‌குதிக‌ள் மூல‌மும் நிக‌ழ்ச்சிக‌ளை தேர்வு செய்ய‌லாம்.
உல‌க‌லாவிய‌ அனுப‌வ‌த்தை விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்க‌ ச‌ரியான‌ விருந்து இந்த‌ த‌ள‌ம்.அதோடு க‌ண்ணை க‌சிக்கி கொண்டு பார்க்கும் ந‌ம்மூர் சேன‌ல்க‌ளை பார்த்து வெறுத்துப்போன‌வ‌ர்க‌ள் இந்த‌ டிவி டியூப்பை மிக‌வும் விரும்ப‌லாம்.
 ————-
 http://www.tv-tube.net/