தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

வயிற்றை நிரப்பத்தான் கயிற்றில் நிக்கிறாள்

எங்கள் நாட்டிலும் அணு குண்டு இருக்கிறது
இங்கும் ஏவுகணை பறக்கிறது 
என்று பெருமை கொள்ளும் நெஞ்சங்களே!!!


இவளுக்கு 

ஏன் இந்த கோலம்
மயிரிழை தப்பினால் மரணம்
உடலில் உயிரிழை ஓடத்தான்!!!

வயிற்றை நிரப்பத்தான்
கயிற்றில் நிக்கிறாள்
உங்கள் மனம் கனத்தால்
இவள் போன்றவர்களுக்கு 

பாதை காட்டுங்கள் 
உயிரை பணயம் வைப்பதை நிறுத்தட்டும்
முடியவில்லை என்றால் 
ஒரு துளி கண்ணீரையாவது விடுங்கள் !!!

அடுத்த கோளில் இருக்க இடம் தேடும்
தொழில்நுட்பத்தில் வளர்ந்தவர்களே
இவர்களின் அடுத்த வேளை உணவுக்கு
நிரந்தர வழி சொல்லுங்கள்!!!

இங்கே அழிந்தது பேதங்கள் அல்ல காமத்துக்குள் காதலே!!!



காதலர்  தினத்துக்கு 
குடை விற்ற பணத்தில்
அம்மாவுக்கு 
அன்னையர் தினத்துக்கு 
உடை எடுக்கலாம் 
என நினைத்து 
ஆரம்பித்த குடை வியாபார 
லாபத்தில்
நகை எடுத்து கொடுக்க இருக்கிறேன்!!!

மழையில் நனையாமல் இருக்க
குடை பிடிக்கலாம் 
இந்த காதல் என்ற குடை பிடிப்பது 
காம மழையில் நனைவதற்காகவே!!!



சாதி மத பேதங்களை 
போக்கிடும் காதல் என 
பெருமை பேசியவர்கள் நாங்கள் 
இங்கே அழிந்தது பேதங்கள் அல்ல 
காமத்துக்குள் காதலே!!!

இரகசிய இலக்கங்கள் களவாடபடுவது எப்படி " hacking passwords "



முதல் பகுதி 

இணையம் பாதுகாப்பானதா பகுதி 2



ஒரு நாளில் 24 மணி நேரம் போதவில்லை இதை அதிபடுத்த எதாவது ஆலோசனை உண்டா??
 சரி நண்பர்களே பதிவுக்கு வருகிறேன் ..எங்கள் இரகசிய இலக்கங்கள் எப்படி களவாட படுகின்றன என்பதை ..

இன்று இணையம் ஒரு அத்தியாவாசிய பாவனைகளில் ஒன்றாக வந்து விட்டது பலரதும் தனிபட்ட இரகசியங்கள் அவற்றில் அடங்கி இருக்கிறது. இப்படியான காலத்தில்  இதன் பாதுகாப்பு பற்றி அறிந்திருப்பது அவசியம்.

உங்கள் மினஞ்சல் ,முகபுத்தக மற்றும் உங்களின் கணக்குகளை வேறு ஒரு கணனியில் திறக்கும் பொது மிகவும் அவதானாமாக இருக்கவும். இன்று அதிக மென்பொருள்கள் இருக்கிறது இலவசமாக கணனியில் நிறுவி வைத்துவிட்டால் நீங்கள் பயன் படுத்தும் தட்டச்சு சொற்கள், இலக்கங்கள் பதிவு செய்து வைக்கப்படும் அதில் இருந்து உங்கள் இரகசிய இலக்கங்களை கண்டறியலாம்.

"சைபர் கபே" களில் உங்கள் கணக்குகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்கவும் ..

இந்த மென்பொருளை "கூகிள்" தேடலில் இலகுவாக பெறலாம் ............

எனக்கு தெரிந்த ஒரு நபர் "சைபர் கபே" களில் இந்த மென்பொருளை நிறுவி வைப்பார் அதன் உரிமையாளர்களுக்கே  தெரியாமல் சில நாட்களுக்கு ஒரு முறை சென்று அங்கு பதிவாகிய கணக்குகளை எடுத்து அதில் விளையாடுவார் இப்படியான மன நிலையிலும் பலர் இருக்கிறார்கள்....

அடுத்தவர்கள் நாட்குறிப்பு ,இரகசியங்கள் படிப்பது,அறிவது சிலருக்கு அலாதி இன்பம்.........

அடுத்தவர்களை குறை சொல்லுவதில் பயன் இல்லை எனவே நாங்கள் அவதானமாக இருப்போம் ...பாதிப்பு எங்களுக்கே!!!!

உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர் உங்களுக்கு இணையம் பற்றி தெரியாத நேரத்தில் கணக்கை ஆரம்பித்து கொடுத்து இருக்கலாம் அதை நான் மேலே கூறியது போன்ற நிகழ்வால் ஒருவர் களவாடி விட்டால் உங்களுக்குள் இருக்கும் அன்பில் விரிசல் ஏற்படலாம் நம்பிக்கை உடையலாம் எனவே அவதானம் நண்பர்களே ............இது என் அனுபவத்தில் சொல்கிறேன்.....

இதில் ஒரு மென்பொருள் எப்படி பயன் படுத்துவது என்பதை இந்த கானொளியில் ....


எண்ணத்தின் வேகம் எனக்கில்லை


மெதுவாக போக சொன்னேன் எனது எண்ணதிடம்

வேகமாக வரசொன்னது என்னை 
முடியவில்லை

எண்ணத்தின் வேகம் எனக்கில்லை
வேகத்தை குறைக்கும் எண்ணமோ அதற்கும் இல்லை
இரண்டும் எப்போது ஒன்றிக்குமோ???
அதுவரை இதன் விளைவுகளுக்குள் நான்......

இணையம் பாதுகாப்பானதா



இன்று இணையம் மனிதனின் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. இந்த வளர்ச்சி இன்றைய வாழ்க்கைக்கு பல வழிகளில் பயனுள்ளதாகவே இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பல விதத்தில் நேரத்தை மிகுதியாக்கி கொள்ளலாம் முன்பெல்லாம் ஒரு துறை சார்ந்த விடயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அத்துறை சார்ந்த ஒருவரிடம் சென்றுதான் அது பற்றி தெரிந்துகொள்ள முடியும் அதிலும் அப்படியானவர்களை தெரியாதபட்சத்தில் அச்சந்தேகம் அப்படியே தீர்க்க படாமல் இருக்கும் ஆனால் இன்று இணையத்தில் அந்த நிமிடத்திலேயே அது பற்றி தெரிந்துகொள்ளலாம் இப்போதெல்லாம் இணையத்தில் எல்லா பொருள்களையும் விக்கவோ வாங்கவோ இணையத்திலேயே முடிகிறது. கண்டம் விட்டு கண்டம் காதலிக்கும் காதலர்களுக்கும், பொருளாதார தேடல் காரணமாக பிரிந்திருக்கும் கணவன் மனைவி க்கும் ஒருவருக்கு ஒருவர் பக்கத்திலேயே இருப்பது போன்ற உணர்வுடன் இருக்கவும் இந்த இணையம் உதவுகிறது.

சிலருக்கு இன்று இணையம் அறிவை வளர்க்கும் ஒரு ஒப்பற்ற களஞ்சியமாக இருக்கிறது சிலருக்கு பொழுது போக்காகவும் சிலருக்கு மனோவியாதியாகவும்  மாறிகொண்டிருக்கிறது.

அதிகமானவர்கள் இன்று அவர்களுடைய கொடுக்கல் வாங்கல்களை இணையத்தின் உடாகவே நடாத்துகின்றனர் இது அவர்களின் வியாபர நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவியாக இருகின்றது. பல வியாபர தலங்களின் அலுவலகங்களில் ,தொழில்சாலைகளில் என்று எல்லா இடமும் ஒளிபதிவு கருவிகள் மூலம் எந்த நாட்டில்  இருந்துகொண்டும் அவற்றை கண்காணிக்கிறார்கள் இணையத்தினுடாக. 

இப்படி தெரிந்தோ தெரியாமலோ இணையத்தின் பாவனை எங்களுக்குள் கலந்து விட்டது அது பற்றி சிந்திக்க நேரம் இல்லை அவசர  உலகத்தில் எல்லாம் அவசரமாக நடக்க வேண்டும் என்பதுக்காக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

இப்படியான பயனுள்ள இணையத்தினால் என்னென்ன இழப்புக்கள் எங்களுக்கு தெரியாமல் நடக்கிறது என்பது பற்றிய தொடர் பதிவொன்றை பதியலாம் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்கிறேன்.

அடுத்த தொடரில்.....
உங்கள் இரகசிய இலக்கங்கள் எப்படி களவாடபடுகிறது.

தொடரும் ...