தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts

சவுதியில் பார்திமாவால் கற்பழிக்கபட்ட ரகுமான். தொடரும் உண்மை .



எனது நண்பர் ரகுமான் என்று வைத்துகொள்ளுவோம் சவுதிக்கு வேலைக்கு சென்றார் வாகன ஓட்டுனராக அங்கு முகம்மது என்ற ஒரு நபரின் இரண்டாவது மனைவி பார்த்திமா வீட்டில் உள்ள வாகனத்தை ஓட்டுவதுதான் இவர் வேலை முகமதுவின் மனைவிக்கு இரு பெண் குழந்தைகள் அவர்களில்  ஒருவர் ஆரம்ப பாடசாலைக்கு செல்பவர் அவரை கூட்டி செல்வது மற்றும் இந்த குடும்பத்தின் தேவைகளுக்கு ஒவ்வொரு இடத்துக்கு செல்வதுதான் ரகுமானின் வேலை.

முகமதுவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள் இவர் பார்த்திமா வீட்டுக்கு எப்போவதாவது அத்தி பூத்தால் போல் வருவாராம். முகமதுவின் நான்காவது மனைவி சிறு வயதென்பதால் அவர் எப்போதும் அங்கேயே இருந்திருக்கிறார் பணம் மட்டும் தவறாமல் பார்த்திமா வீட்டுக்கு வந்துவிடும்.

பார்த்திமா வீட்டில் இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணும் வேலைக்கு இருந்திருக்கிறார் அவர் பெயர் கரீனா என்று வைத்துகொள்வோம் ரகுமானுக்கு கரீனா மீது காதல் பார்த்திமாவுக்கு ரகுமான் மீது மோகம்.

பார்த்திமா ரகுமானை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறார் ரகுமான் மறுக்கவே அவரை பயமுறுத்தி இருக்கிறார் நீ என்னை பலாத்காரம் செய்யவந்தாய் என்று உன் மீது பழி பொட்டால் உனக்கு என்ன தண்டனை ,எதை வெட்டுவார்கள் என்று தெரியுமா என்று. இதற்கு பயந்து ரகுமானும் வேறு வழி இன்றி சமதித்திருக்கிறான்.இது சில மாதங்களாக தொடர்ந்திருக்கிறது ரகுமான் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு சுப்பர் மார்கெட்டில் வேலை செய்த அவன் நண்பனுக்கு விடயத்தை சொல்லி இருக்கின்றான் அவன் ரகுமானை பயமுறுத்தியிருக்கிறான் இனி உன் கதை முடிந்தது உனக்கு இங்கு மரண தண்டனைதான் என்றெல்லாம் ரகுமானோ அடுத்த இரு மாதத்தில் சவுதியும் வேண்டாம் பணமும் வேண்டாம் என்று இலங்கை சென்று விட்டான்.

இஸ்லாத்தின் பல தார சட்டத்துக்கு இஸ்லாமியர்கள் சொல்லும் காரணம் ஆண்களை விட பெண்கள் அதிகமென்பதால் அவர்களை ஆண்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை விட பல தாரம் கொள்கையின் படி மணம் முடித்து வைத்திருக்கிறார்கள் என்பது கௌரவம் என்று. இப்படி கௌரவபடுபவர்கள் பலதார மனைவிகளை திருப்தி படுத்த முடியுமா என்று சிந்தித்து மணம் முடியுங்கள் இல்லை அவர்கள் மனைவிகள் வேறு ஆண்களை வைத்துகொள்வார்கள். பெண்களை ஆண்கள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள் என்பதுக்காக நியாயபடுத்தும் பலதார கொள்கை மணம் முடித்த பின்னும் பெண்கள் வேறு ஆண்களை வைத்திருக்கிறார்கள் என்ற கெட்ட பெயரை உருவாக்கிவிடாமல் பார்த்துகொள்ளுங்கள். நீங்கள் பலதார சட்டத்திற்கு சொல்லும் நியாய படுத்தல் பொய்த்துபோகாமல் பார்த்துகொள்ளுங்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை..................

வேசி என்பதன் எதிர்பால் சொல் என்ன????




பெண்களை ஏசும்போது வேசி என்கிறார்கள்..

இதுவே ஆண்களை ஏசும் போது வேசி மகன் என்கிறார்கள் ...

வேசிக்கு எதிர்பால் சொல் என்ன? எதிர்பால் சொல் இருக்கிறதா?

ஆண்கள் நல்லவர்கள் என்பதால் அந்த சொல் தேவை படவில்லையா?.....

இதே போல்தான் கற்பும்.....

வாசித்து எனது சந்தேகத்தை தீர்த்துவிட்டு போகவும்.......

மின்கோவில் (e-temple இணையத்தில் இறைவன்) புதிய புரட்சி



ஒரு சிறிய கற்பனை ஆனால் இது எதிர்காலத்தில் நடைமுறையில் வந்தாலும் அதிசயபடுவதற்கு  இல்லை இன்றைய கோவில்கள் நல்லதொரு வியாபார தலங்களாக இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஏழைகள் கோவில்களில் சாமிகும்பிட்டு வரும்போது அவர்கள் மனதில் நிம்மதி கிடைப்பதில்லை காரணம் கோவிலுக்குள் நுழைவதுக்கே கட்டணம் அதிலும் ஒவ்வொரு விதமான வாசல்கள் உண்டு அது அவர்கள் எடுத்திருக்கும் சீட்டை பொறுத்தது. அதிக பணம் செலுத்தியவர்கள் ஒரு வாசலாலும்,குழந்தைகள் வயதானவர்கள் வருசையில் வாடிகொண்டிருப்பர்கள் நடிகர்கள் அரசியல் வாதிகள் விசேட வரவேற்பு 
  இப்படி தரம் பிரித்து பணமே செலுத்த முடியாதவர்கள் மனங்கள் கோவிலிலேயே நோகடிக்கபடுகிறது ஏழ்மையில் வாடி இருக்கும் கஷ்டங்களை சொல்லி கடவுளிடம் அழுது  கவலைகளை இறக்கி வைத்து ஆறுதல் தேடி போகும் பாமர மக்கள் அங்கும் நோகடிக்க படுவதுதான் கடவுளின் நடுநிலையா? எதுக்காக பலதரபட்ட சீட்டுகள் அதை பொறுத்துதான் கடவுளிடம் இவர்கள் சிபாரிசு இருக்குமோ?(உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருநாளும் தெய்வம் கொடுத்ததில்லை) இதில் கடவுளை குறை சொன்னால் பலருக்கு பிடிப்பதில்லை இதெல்லாம் கடவுளா செய்கிறார்? மனிதன் தானே வியாபாரம் செய்கிறான்   செய்பவர்களை ஏசுங்கள் என்கிறார்கள் இதெல்லாம் யார் பெயரில் செய்யபடுகிறது கடவுளின் பெயரில்தானே ? இன்றைய காலத்தில் கடவுள் ஒரு சாராருக்கு நல்லதொரு மூலதனம் சிலருக்கு கடவுள் இல்லை என்று சொல்வது மூலதனம் இதை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்திகொண்டிருக்கிறார்கள்.இவற்றை பற்றி பலர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் கடவுளின் பெயரில் சுரண்டுபவர்க்களும் சுரண்டபடுபவர்களும் அவர்கள் பேச்சை கேட்பதாக தெரியவில்லை... இதை கடவுள் கூட வேடிக்கபாத்துகொண்டிருப்பது மிகப்பெரிய வேடிக்கை (அவனன்றி அணுவும் அசையாது) சரி நான் விடயத்துக்கு வருகிறேன் இப்படியாக மாறிக்கொண்டு போகும் இறைவழிபாடு இணையமயமாக்க பட்டால் ..

உலகத்தில் உள்ள எல்லா கோவில்களும் ஒன் லைன் ஆக்கபட்டும் இணைப்பில் இருக்கும் புதிதாக கோவில் கட்டுபவர்கள் கூட இவர்களிடம் அனுமதி வாங்கியே கட்டவேண்டும். இப்படி இணைப்பில் இருக்கும் கோவில்களுக்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருந்துகொண்டே அர்சனை செய்யவும் வழிபடவும் முடியும் அதாவது நீங்கள் மின் கோவில் இணையத்தில் அர்சனை என்ற தெரிவை தெரிவு செய்து உங்கள் பெயர் ,நட்சத்திரம்,ராசி அர்சனை ரகம் நீங்கள் செலுத்தும் பணத்தின் அளவை பொறுத்து தீர்மானிக்கப்படும். உங்கள் அர்சனை ஒலி வடிவில், உங்கள் அர்சனை காணொளி வடிவில் விரும்பியவர்களுக்கு மினஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் அதற்கு அர்சனை ரகத்தில்  தெரிவை தெரிவு செய்யுங்கள் உங்களுக்கு பிரசாதம் பொதியாக அனுப்பி வைக்கவேண்டுமா கடைசி தெரிவை தெரிவு செய்யுங்கள்.

உண்டியலில் பணம் செலுத்தி இறைவனின் அருளை அள்ளிட e -உண்டியல் தெரிவை தெரிக...
காணிக்கை செலுத்த e-காணிக்கை எந்த தெரிவை அழுத்துக ...


இது நகைசுவைக்காக கற்பனை செய்ததாக இருக்கலாம் ஆனால் இப்படி ஒரு முறை வந்தால் இதில் பணம் செலுத்த கூட தயாராக பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்படியானவர்கள் இருக்கும் வரை இதுபோல முட்டாள் தனமான செயல்கள் இன்னும் வளர்ந்துகொண்டேதான் போகும்.
எங்கள் இனத்தின் பாரம்பரியம் ,அறிவியல் ,வானியல் ,இப்படி பல துறைகளில் பெருமைகளை இடையில் புகுந்த மதத்தை பெருமைபடுத்துவதற்காக மதத்துக்குள் புதைக்க பட்டு மூடநம்பிக்கைகளாக மற்றைய சமூகத்தினரால் பார்க்க படுவதற்கும் இவர்களே காரணம். 

எல்லா மொழி குழந்தையும்,மாடும் அம்மா என்று தமிழில்தானே கத்துகிறது .....

சின்ன வயதில் எனக்கு பல சந்தேகங்கள் அப்பப்ப வந்து போகும் அவற்றுக்கு என்னால் பதில் கண்டுபிடிக்கமுடியாததால் அப்படியே மறந்து விடுவேன். அது போலதான் இந்த சந்தேகமும்  எங்க வீட்டு மாடு எப்படி அம்மா என்று தமிழில் கத்துகிறது என்பதுதான் அதே நேரம் எனக்கு இன்னொரு சந்தேகம் இருந்தது சிங்களவர்கள் வீட்டு மாடு சிங்களத்தில் கத்துமா? வெள்ளைகாரர்களில் மாடு ஆங்கிலத்தில் கத்துமா? என்பதுதான்.


இதுபோல பல சந்தேகங்கள் அப்போதெல்லாம் வரும் யாரிடமும் கேட்க வெட்கமாக இருக்கும் அப்படியே கால ஓட்டத்தில் மறந்துவிடுவேன் அப்படி மறந்தவை பல இப்போதெல்லாம் நினைவுக்கு வந்து சிந்திக்க வைக்கிறது. அப்படியான ஒரு விடயம்தான் எப்படி மாடு அம்மா என்று கத்துகிறது? மாட்டுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? மாடு தமிழர்களின் பிராணியா? 

எல்லோரும் எவ்வளவு சந்தோசமா இருக்காங்க எனக்கு மட்டும் எதுக்கு இப்படியெல்லாம் ஆகுது எதாவது ஒன்றை பார்த்தமா போனமா இல்லாம எதை பார்த்தாலும் அது ஏன்? எப்படி? எதுக்கு? ஆயிரம் கேள்விகள் உடனே வருது என் நிம்மதியை கெடுக்குது. இந்த மனவியாதியை நிறுத்த எதாவது மருந்து இருக்கா? இருந்தா சொல்லுங்க....

சரி அதை விடுங்க நாம இப்ப என் பிரச்னைக்கு வருவோம் மாடு மற்றும் பிறக்கும் குழந்தை யாரும் சொல்லி கொடுக்காமலே அம்மா என்று கத்துகிறது எப்படி.



எங்கள் நாவில் இருந்து வரும் எல்லா ஒலிகளும் எங்கள் சுவாசப்பையில் இருந்து வரும் காற்று வாயிலும் மூக்கிலும் வெளியாவதை பொறுத்து நா அசைந்து கொடுத்து உதடுகள் சேர்ந்து பிரிந்து ஒலிகளை எழுப்புகிறது மூக்கை மூடிக்கொண்டு சில சொற்களை சொல்ல முடியாது அதே போல நாவை அசைக்காமல் சில சொற்களை சொல்ல முடியாது ,சில சொற்கள் உதடுகள் சேராமல் சொல்ல முடியாது.

பிறந்த குழந்தைக்கு பொதுவாக குழந்தை அழும் போதுதான் இந்த சத்தம் முதலில் வெளிபடுகிறது.குழந்தை அழும் போது சுவாசப்பையில் இருந்து வெளியாகும் காற்று மூக்கின் ஊடக வெளியாகும் போது "ம்" என்ற ஒலியையும் வாயை நன்றாக திறக்கும் போது "ஆ" என்ற ஒலியும் வருகிறது   இது இரண்டும் சேர்ந்து ம்ஆ.ம்ஆ என்று சேரும் போது அது அம்மா என்பது போலுள்ளது. குழந்தை அழும்போது வாயை திறந்து திறந்து மூடுவதால் ம்மா..ம்மா..ம்மா என அழகாக ஒலிக்கிறது.

மாடு கத்தும் போது முதலில் ம் என்ற ஒலி வருகிறது பின் அது ஒரேயடியாக வாயை திறந்தே கத்துவதால் ஆ என்ற ஒலி தொடர்ச்சியாக வருவதால் அது கத்தும் போது ம்மாமாமாமாமா  என்று ஒலிக்கிறது.

இதே போல ஆடு வாயை பெரிதாக திறக்காமல் கத்துவதால் முதலில் "ம்" என்ற ஒலியும் பின் "மே" என்ற ஒலியும் வந்து ம்மே ... ம்மே என சிங்களத்திலும் கத்துகிறது.

எனவே தமிழுக்கும் மாட்டுக்கும், பிறந்த குழந்தைக்கும் இதேபோல ஆட்டுக்கும் சிங்களத்துக்கும் ஆட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இதில் எந்த மாயமும் இல்லை.

ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா ........... ஒரு வழிய இந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சு ...........

இனி இனி என்னென்ன வருமோ தெரியல்லையே.........




வெற்றியின் ரகசியம்


ஆசைகள் மிக சுலபமாக எங்கள் மனதை ஆட்கொள்கிறது அதனை அடைய முடியுமா இல்லையா என எதையும் ஆராயாமல் அது பாட்டுக்கு கனவு காண்கிறது எல்லாம் நிறைவேறிவிட்டதாக .... ஆசை இல்லை என்றாலும் வாழ்க்கை எதிர்பார்ப்பு இருக்காது உப்பில்லாத உணவு போலாகிவிடும். அளவுக்கு அதிகமானாலும் அதுவே வாழ்கையையும் அழித்துவிடும். எனவே இந்த ஆசையை எப்படி வகைபடுத்துவது எதை நோக்கி எங்கள் பயணத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று முடிவெடுப்பது மிக முக்கியம். சிந்திக்க தெரியாத ஆழ்மனம் ஆயிரம் சொல்லும் பின்விளைவுகளை சிந்திக்காது. எந்த ஒரு ஆசை யாரையும் பாதிக்காமல் தொந்தரவு செய்யாமல் எங்களுக்காக நிறைவேற்ற முடியுமோ அதை நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை. அதுவே எங்கள் ஆசை நிறைவேறுவதில் இன்னொருவர் சுகந்திரம் பறிபோகிறது என்றால் அதை நிறுத்திவிடவேண்டும். தவறான ஆசை. அடுத்த படியாக எங்கள் ஆசையில் எங்களுக்கும் பயனிருந்து இன்னும் பலருக்கும் பயனாக இருந்தால் அந்த மாதிரியான ஆசைகள் எங்கள் இலட்சியங்களாகவே நாங்கள் கருதலாம்.

 சில ஆசைகள் மற்றவர்களை,சமுதாயத்தையே அழித்து எங்களை சந்தோஷ படுத்துவதாக இருக்கும் அவற்றை நிறைவேற்ற துடிப்பவர்கள் தேச துரோகிகள். சட்ட விரோதிகள். சட்டத்துக்கு விரோதமாக ஆசைகளை நிறைவேற்றியவர்கள் வாழ்கையில் எப்போதும் அவர்கள் நிம்மதியை எதிர்பார்க்க முடியாது. எதேட்சையாக காவல்துறை அவர்களின் வீட்டருகில் வந்தாலே தன்னை தேடித்தான் வருகிறதோ என்ற பயம் அவர்கள் நிம்மதியை அழித்துவிடும்.இப்படியே தொடரும் வாழ்க்கை. எப்போதும் எங்கள் பெரிய ஆசைகள் அதாவது எங்கள் இலட்சியங்கள் போதுநலமனதாக இருந்தால் மிக சிறப்பு. நான் பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை இருந்தால் கூடவே அதன் பின் பலருக்கு என்னால் வேலை வாய்ப்பை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். இல்லை என்றால் சுயநலமான  இலட்சியமாகிவிடும்.  ஆசைகளை நிறைவேற்றுவதில் வெற்றியடைவதுக்கு சில தகுதிகள் இருக்கவேண்டும்.

 முதலாவது அது தொடர்பான அறிவு. ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் அது தொடர்பான அறிவுதான் முதல்நிலை வகிக்கிறது.பல பாமரர்கள் இருக்கிறார்கள் அவர்களால் நன்றாக உழைக்க மட்டுமே முடியும் அதை எங்கே எப்படி பயன் படுத்துவது என்று தெரிவதில்லை அதனாலேயே வாழ்நாள் முழுவதிலும் மற்றவர்களுக்காக உழைத்து கடைசிவரை உழைப்பாளியாகவே வாழ்ந்து காலத்தை கடந்து விடுகிறார்கள் அந்த உழைப்பை எப்படி எங்கே பயன்படுத்தவேண்டும் என்ற அறிவுள்ளவர்கள் இவர்களை பயன்படுத்தி அவர்கள் சமுதாயத்தில் வெற்றிகளை குவிக்கிறார்கள். 

அறிவு மட்டும் இருந்தால் வெற்றியடைந்துவிடமுடியுமா? இந்த உலகத்தில் பல அறிவாளிகள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் வெற்றியாளர்களா? இல்லை அவர்களில் பலருக்கு விடாமுயற்சி, உழைப்பும் ,பொறுமை,நம்பிக்கை இருப்பதில்லை  "புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை" என்ற சந்திரபாபுவின் பாடல்கள் நினைவுக்கு வருகிறது இப்போதெல்லாம் பலர் ஏதோ அலுவலகம் சென்றோம் முடித்து வந்தோம் என்ற சாதாரண வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் ஆனாலும் இவர்கள் முயற்சி என்பது புதிதாக ஒன்றும் இருந்துவிடபோவதில்லை இவர்கள் வாழ்வில் பாரிய வெற்றிகள் இருக்காது ஆனாலும் இவர்கள் அறிவாளிகள்தான் . இருக்கும் வாழ்க்கை போதும் என்று அதையே வாழ பழகிக்கொண்டவர்கள், இதில் குறை எதுவும் இல்லை. அறிவு மட்டும் வெற்றியை தந்துவிடாது. 

இந்த முயற்சி எப்படி உருவாகிறது?
என்னிடம் முயற்சி இருக்கிறது என்பதற்காக கடல் தண்ணீரை என்னால் குடித்தே முடித்துவிட முடியுமென்று விடாமுயற்சி கொண்டு தண்ணீரை குடிக்க ஆரம்பித்தால் சாத்தியமா? இல்லை எங்கள் முயற்சியை எங்கே பிரயோகித்தால் வெற்றி கிடைக்கும் என்பதை வழிகாட்டும் அந்த அறிவு  மிக முக்கியம்,இந்த அறிவு உறுதியாக இருந்தால் நம்பிக்கை உண்டாகும்.இந்த நம்பிக்கை கடைசிவரை இருக்கவேண்டும்  நம்பிக்கை எங்களை விடாமல் முயற்சி செய்ய வைக்கும்.

 பலர் வெற்றியை நோக்கி 90 %  சென்றிருப்பார்கள் அங்கெ அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் மேலும் பத்து சதவிகிதம் முயற்சி செய்திருந்தால் வெற்றியை அடைந்திருக்கலாம் எனவே பொறுமை என்பதுவும் இங்கே முக்கியமாகிறது.
எனவே வெற்றிக்கு அறிவு,நம்பிக்கை,பொறுமை,முயற்சி,உழைப்பு எல்லாமே முக்கியமாகிறது.. 

இந்த கட்டுரை சம்பந்தமான எங்கோ வாசித்த ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது.... 

நூறு முறை முயற்சித்து ஒரு தடவை வெற்றியடைந்தேன் 99 தடவை தோல்வியில் இருந்து நூறு முறை வெற்றியடைவது எப்படி என்பதை அறிந்துகொண்டேன்.ஆயிரம் தடவை முயற்சி செய்யவேண்டும் என்பதுவே அது.
 வெற்றி என்பது ஆசை பட்டதும் வந்துவிடுவதில்லை எதுவும் செய்யாமல்  வரவில்லை என்றதும் குறைகளை வேறு இடங்களில் திணிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை.......

கடவுள் கற்றுகொடுத்த லஞ்சம்...


கடவுளுக்கு

அர்சனை லஞ்சம் 
படையல் காணிக்கை 
வேண்டுதல் முறைப்பாடு
கடவுளிடம் மனிதன் 
கற்றுகொள்கிறான்
அரசியலை ....!!!

எங்களால் உருவாக்கபட்ட
உருவாக்கப்படும்
இவர்கள் இருவரும் 
சுயநலவாதிகளே 
எங்களுக்கு
அறிவும் 
தன்னம்பிக்கையும்
முயற்சியும் 
உழைப்பும் 
இல்லாதவரைக்கும்...!!!


தோல்வியை எதிர் கொள்ளும் பக்குவமே முதல் வெற்றி!!!





நம்பிக்கை இருந்தால் சிறகுகள் தேவை இல்லை பறப்பதுக்கு!!!

நீ சாதிக்க நினைத்தால் யாரும் இல்லை தடுப்பதுக்கு!!!

.......................................................................................................................
பிரச்சனைகள் வந்த போது 
எதிர் கொள்ள துணிவின்றி 
ஓடி ஒளிந்துகொண்டால்
உன்னோடு  ஒளிந்து கொள்ளும் 
வெற்றிகளும்
உன்  வாழ்கையும்.........

வெற்றி 
அனுபவங்களில் இருந்து கிடைக்கிறது ...

அனுபவம்
தோல்விகளில் இருந்து கிடைகின்றன ...

தோல்வியை எதிர் கொள்ளும் பக்குவமே
முதல் வெற்றி...

(தோல்வி)முதல் வெற்றி இன்றி 
தொடர் வெற்றி இல்லை ...

தோல்விகளே இல்லை என்றால் 
திறமை 
முயற்சி
உழைப்பு
தன்நம்பிக்கை 
தனித்துவமற்று போகும் ...

உன் வாழ்க்கை 
உனக்கு  மட்டும்தான் வாழ்க்கை 
மற்றவர்களுக்கு வேடிக்கை
துணிந்து நில்
எதுவானாலும் பார்த்துவிடலாம்
வந்தால் வாழ்க்கை 
இல்லை அனுபவம்......

கடவுள் வேண்டும்..



தூங்காத 
பல திருமணம் முடிக்காத 
அதி காலையில் திருப்பள்ளி எழுச்சி 
பாடி எழுப்பாத கடவுள் வேண்டும்

தரகர் இல்லாமல் 
மணி அடிக்காமல்
அர்ச்சனை பண்ணாமல்
காசு கொடுக்காமல் 
என் வேண்டுதலை
தமிழில் புரிந்துகொள்ளும் கடவுள் வேண்டும்

தானே சிலுவையில் அறைபடாமல் 
மனிதனின் கொடிய குணங்களை சிலுவையில் 
அறையும் சக்தியுள்ள கடவுள் வேண்டும்

பசித்த வயிறுக்கு உணவு கொடுக்க 
வதைக்கும் கொடியவனை தண்டிக்க 
வாழ வழி தெரியாமல் இருபவனுக்கு வழி காட்ட
கடவுள் வேண்டும்

உருவத்தை வைத்து
அலங்காரம் செய்து
சோம்பேறியாக இருந்துகொண்டு 
பிறப்பால் உயர்ந்த ஜாதி என 
பிரிவினைகளை உண்டாக்கி
ஒரு சுரண்டும் வர்க்கம் 
உரிமைகொள்ளா 
கடவுள் வேண்டும்...........

இங்கே அழிந்தது பேதங்கள் அல்ல காமத்துக்குள் காதலே!!!



காதலர்  தினத்துக்கு 
குடை விற்ற பணத்தில்
அம்மாவுக்கு 
அன்னையர் தினத்துக்கு 
உடை எடுக்கலாம் 
என நினைத்து 
ஆரம்பித்த குடை வியாபார 
லாபத்தில்
நகை எடுத்து கொடுக்க இருக்கிறேன்!!!

மழையில் நனையாமல் இருக்க
குடை பிடிக்கலாம் 
இந்த காதல் என்ற குடை பிடிப்பது 
காம மழையில் நனைவதற்காகவே!!!



சாதி மத பேதங்களை 
போக்கிடும் காதல் என 
பெருமை பேசியவர்கள் நாங்கள் 
இங்கே அழிந்தது பேதங்கள் அல்ல 
காமத்துக்குள் காதலே!!!

நம்(பிக்)கை



தோல்விகள் கொடுத்த 
வலிகளை
அனுபவமாக்கு 

வெற்றிகள் கொடுத்த 
ஆணவத்தை
படிகட்டாக்கு

தொடர் வெற்றிக்கு!!!!

**************************
விழுந்தால் -உன்
காலிலே விழு
நீதான் உயர்ந்தவன்

எழுந்தால்-உன்
கை பிடித்தே எழு
உன் கைதான் உனக்கு உதவி!!!

*****************************
தோல்வி தாங்கி
தாண்டியதுதான்
வெற்றி

முடியாது என்று
ஒதுங்கியவன்
தோல்வியை கூட
நெருங்க முடியாது

நாளைய பொழுது
உனக்காக என்று
இருந்துவிடாதே

இன்றைய பொழுது
உனக்காக என்று
எழுந்துவிடு!!!

******************************

காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?



வண்ணங்கள் போல் பல எண்ணங்கள் தோணுது 
என்னுள்ளே என்னையும் ஏகாந்தம் செய்யுது 
முயற்சிகள் ஏதும் இன்றி எண்ணங்கள் ஜெயிக்குது 
பகல் கனவிலே மகிழ்ச்சியை தூண்டுது 
நித்தமும் இந்நிரந்தரமில்லா இன்பம் வந்துதான் போகுது 

கண் திறந்திருந்தும் கனவினில் லயிக்கிறேன் 
போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

கனவினில் கண்ட வேகம் நிஜத்தில்  நில்லாமல் 
சொர்ந்துதான் போகிறேன் நம்பிக்கை இழக்கிறேன்
உழைப்பை மறந்து உயரத்தில் பறக்கமுயல்கிறேன் 

வலிகள் இல்லாமல் வானத்தை அடைவதில் 
உனக்கென்று  தனித்துவம் என்ன இருந்திடபோகுது 
அனுபவம் இன்றி அடைந்திடும் வெற்றி என்றும் நிரந்தரமாகிடாது 
சோதனைகளும் வேதனைகளுமே வெற்றியில் இன்பம்
அடுத்தவர் கொடுக்கும் பெயருக்கு அடையும் வெற்றி இன்பத்தை தந்திடுமோ 
இத்தனை சொல்லியும் சொப்பனம் போகிறேன் 

போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

ஒரு அடி வைத்து சிகரத்தை அடைகிறேன் 
இறக்கை முளைக்காமல் உயரத்தில் பறக்கிறேன் 
சக்கரம் சுத்தாமலே வண்டிகள் ஓடுது 
கண் திறந்திருந்தும் காட்சிகள் போய்க்குது 

உடல் கழைக்க உத்வேகம் இல்லாமல் 
உணர்வுக்கு தெரியாமல் அப்பா ஆகபார்க்கிறேன் 
இன்பத்தை தொலைக்கிறேன் 
உழைப்பில் இருக்கும் உண்மையை அறியாமலே 
இந்த வெற்றியில்  எனக்கு  என்ன கிடைத்திட போகுது
கண் தெரிந்தும்  குருடனாய் வாழ்கிறேன்

போகும் இடம் மறந்து எங்கோ போய் நிக்கிறேன் 
காட்சிகள் மெய்த்திட சூட்சுமம் என்னவோ?

தனுஷ் -சுருதியினால் ரஜினி கமலுக்குகிடையிலான நட்பில் விரிசல்.


எந்த பக்கம் திரும்பினாலும் பசி, முடியாமை, மூட நம்பிக்கை, ஏமாற்றம், ஏழ்மை இப்படியாக ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது இதை பற்றியோ இதை போக்க ஏதாவது விழிப்புணர்வோ அல்லது இதை தடுக்கவோ என்பதை பற்றிய பதிவுகள் எங்கேனும் தேடினால் தான் கிடைக்கிறது ஆனால் சில இருவர் சம்பந்த பட்ட அவர்களின் தனிபட்ட விடயம் அதை பற்றி எங்கு பார்த்தாலும் பதிவுகள் தனுஷ்- சுருதி காதல் இதனால் என்ன என்ன நடக்கிறது என அவரவர் கற்பனையில் ஒவ்வொரு விதமான பல பதிவுகள் இதனால் யாருக்கு என்ன பயன்?? அதிகளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்பதை தவிர? முன்பு பிரபுதேவா,நயன்தாரா அவர்கள் கூட அவர்கள் வாழ்கையை பற்றி அவளவு நேரம் செலவழித்து அவர்களை பற்றி சிந்தித்து இருக்க மாட்டார்கள் அவர்களுக்காக பலர் எந்த பயனும் அற்று பதிவுகளை போட்டு தங்களை தானே எமற்றிகொண்டனரே தவிர வேறு எந்த நன்மையும் ஏற்பட்டதாக  என் சிற்றறிவுக்கு படவில்லை.

மேலே நான் பதிந்த தலைப்பை பார்த்து பலர் பல  எதிர்பார்ப்புக்களோடு   வந்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியும் அந்த நபர்கள் எல்லாம் என்னை மன்னித்து விடுங்கள்.என்னாலும் கிளுகிளுப்பாக எழுத முடியும் ஆனால் அடுத்தவர்கள் வாழ்கையை கெடுப்பதுக்காக எழுதுவதுக்கா நானும் எழுத வேண்டும் என்று சில காலங்களுக்கு முன்பு எழுதுபவர்களை பார்த்து நானும்  ஆசை பட்டேன். பயனுள்ள நேரத்தை விரயம் செய்யும் பொது ஒன்று எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் இல்லை பிறருக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் எதுவும் இல்லாமல் உண்மையோ இல்லையோ என்று தெரியாத ஒரு விடயத்தை பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல எழுதுவது மட்டும் அல்ல ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கிறீர்கள் இது சரியானதா? இப்படி எழுதி எங்கள் இணையத்தை பலர் பார்க்க வைப்பதில் என்ன ஆகிவிட போகிறது?? இதை விட மற்றவர்களை சிந்திக்கவோ சிரிக்கவோ வைக்கும் பதிவுகளை போடலாமே!!!

சமுதாயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க எழுத எத்தனையோ விடயங்கள் இருகின்றன. படித்தவர்கள் பாமர மக்களின் அறியாமையை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள். கல்வி இன்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது நல்ல கல்வியை நாடி சென்றால் அதிகளவு பணம் கேட்கிறார்கள் இல்லை என்றால் அதோடு அப்பா அம்மா படித்தவர்களா என்று கேட்டகிறார்கள் அப்படியானால் பாமரனும் ஏழையும் என்ன செய்வான்? இதை விட சில இடங்களில் சாதி கேட்கிறார்கள்,சீதனம் என்ற பெயரில் எத்தனை பெண்ணை பெற்றவர்கள் சுரண்ட படுகிறார்கள்,ஆன்மிகம் என்ற பெயரில் எத்தனை பாமரர்கள் வழிமாறி போகிறார்கள்  இப்படி ஆயிரம் ஆயிரம் பிரச்சனையில் எங்கள் சமுதாயம் மெல்ல மெல்ல அழிக்கபடுகிறது. 

தனுஷ் சுருதியை காதலிக்கா விட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமா? அவர்கள் அப்படி காதலித்தாலும் அவர்களை விட கேவலமானவர்கள் அவர்கள் தனிபட்ட வாழ்கையை இப்படி கேலிசெய்து விளம்பர படுத்தி ரசிக்கும் வக்கிர குணம்.


முகபுத்தகமும் தவறவி(ட்ட)டும் தருணங்களும்.



நான் ஈழத்தில் பிறந்தவன். எல்லோரும் போல எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமாக  எங்கள்  ஊரில் என் நண்பர்களுடன் சந்தோசமாக காலங்களை கழித்து  வந்தேன். யாருக்கு தெரியும் போர் எங்களை எல்லாம் இப்படி சிதறடிக்கும் என்று ஆளுக்கொரு இடம், நாடு சிதறியே போனோம். ஒன்றாக இருந்து பழகிய நாட்கள் மட்டுமே எப்போதெல்லாம் தனிமை வாட்டியதோ அப்போதெல்லாம் நினைத்து சந்தோஷ படும் நினைவுகளாக இருந்தது. இந்த அனுபவம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது ஆனால் ஈழத்தில் பிறந்தவர்களுக்கு இது அதிக பட்ச கொடுமையை செய்தது யார் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் இயந்திர வாழ்கையில் கால் பதித்து போலியான சந்தோசத்தை கொடுத்த பணத்தின் பின் ஓடிகொண்டிருந்தோம். 

இந்த சமயத்தில் தான் முகபுத்தக அறிமுகம் கிடைத்தது நானும் அங்கத்தவர் ஆகினேன் அதில் பெயரை தட்டச்சு செய்து பல இழந்த நண்பர்களை இணைத்துக்கொண்டேன். பலர் எனது பெயரை தேடி இணைந்து கொண்டனர் இப்படியாக இழந்த நட்பை பெற்று கொடுத்தது இந்த முகபுத்தகம் அதன் பின் இழந்த சந்தோசங்கள் மீட்க பட்டது எப்போதெல்லாம் தனிமையும், துன்பமும், தோல்விகளும் மனதை அழுத்தும் போதும், சந்தோசங்கள் ஆட்கொள்ளும் போதும் எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டோம் இழந்த எதோ ஒரு சந்தோசம் கைகெட்டிய துரத்தில் இருந்தது.
இது எனக்கு மட்டும் அல்ல, ஈழத்தில் மட்டும் அல்ல, பல பிரிந்த உண்மை உறவுகள் பலருக்கும் இந்த பிரிவு உணர்வை அனுபவிக்கும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருந்தது. இந்த வகையில் முகபுத்தகத்துக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் இன்று முகபுத்தகத்தில் என்ன நடக்கிறது? எந்த செய்தி இணையத்தை திறந்தாலும் முகபுத்தகத்தால் இது நடந்தது, முகபுத்தகத்தில் இது நடந்தது. என குற்றங்கள் பதிய பட்டுள்ளது.இது யார் தவறு? முகபுத்தகத்தின் தவறா? கையில் எடுக்கும் கத்தியை உயிரை காக்கும் அறுவை சிகிச்சைக்கும் பயன் படுத்தலாம் உயிரை எடுக்கவும் பயன் படுத்தலாம் இதில் கத்தியை குற்றம் சொல்ல முடியுமா? அன்பர்களே முகபுத்தகத்தை நீங்கள் தவறாக பயன் படுத்தி விட்டு தவறை நிங்கள் செய்து விட்டு முகபுத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றால் எந்த விதத்தில் சரியானது? இளையவர்கள் கவர்சிக்கும், பருவ உணர்வுக்கும் காதலை பகடைகாயாக்கி விட்டும் இப்பெல்லாம் காதல் பொய்யானது என்று காதல் மீது பழி போடுவது போலவே இதுவும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை முகபுத்தகம் ஒரு கண்ணாடி போல எந்த நோக்கத்தில் நீங்கள் அங்கு நுழைகிறிர்களோ அதனை நிங்கள் காணலாம். அன்பை, காதலை, நட்பை, காமத்தை , நகைசுவையை,நல்ல பயனுள்ள கருத்தை எந்த நோக்கமோ அது உங்களுக்கு கிடைக்கும் இது கண்ணாடியின் குற்றமா உங்கள் குற்றமா? நான் இங்கு எல்லவிதமானவர்களையும் கண்டேன். இங்கு நாங்கள் எதை தெரிவு செய்கிறோம் எதை நாடுகிறோம் எதை தேடுகிறோம் என்பதை பொறுத்து இங்கு எங்கள் பயன் வேறுபடுகிறது இதை வைத்து எங்கள் உண்மை முகத்தை நாங்களே படிப்பதுக்கு உதவியாக இருக்கிறது. நிஜம்  சரியாக இருந்தால் விம்பம் சரியானதாக இருக்கும் இது ஒரு இலட்சிய கண்ணாடி. இப்போது புரிகிறதா எங்கள் முகத்தை நாங்களே படிக்கும் புத்தகம் தான் இந்த முகபுத்தகம் என்பது.பெயர் சரியாகத்தான் இருக்கிறது எங்கள் நிஜ முகம் சரியில்லை என தோன்றினாள் திருத்த சந்தர்பத்தை உருவாக்கி கொள்ளலாம்.


அடுத்த விடயத்தை பகிர நினைக்கும் போது கண்ணதாசனின் யதார்த்த வரிகள் நினைவுக்கு வருகிறது ..
"நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!. 
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்!"
ஆம் அன்பர்களே குடி என்பது போதை ஆழ்மனதை ஆட்டி  படைத்துகொண்டிருக்கும் பல குடும்பங்களை  அழித்துகொண்டிருக்கும் கொடிய வியாதி  சிலருக்கு அது உற்சாகபானம் அது அவரவர் பயன் படுத்தும் அளவை பொறுத்தது. இதை எதுக்காக இங்கு சொல்கிறேன் என்றால் முகபுத்தக பாவனை ஒரு போதையாக மாறிகொண்டிருக்கிறது இது மறுக்க முடியாத உண்மை இந்த போதையில் பலர் சிக்கித்தவிக்கிறார்கள் பல பயனுள்ள வேலைகளை சந்தர்பங்களை இன்று தவற விடுகிறார்கள் முக்கியமான வேலைகளை நாளை நாளை என்றி தள்ளி போடுகிறார்கள் நாளை முதல் குடிக்க மேடன் என்று சொன்ன எவனும் குடியை நிறுத்தியதில்லை எப்போது முகபுத்தக பாவனையால் ஒரு பயனுள்ள வேலை நாளை நாளை என்று தள்ளி போனதோ அன்றே நிங்கள் அந்த போதைக்கு அடிமை என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். இது கால போக்கில் எங்கள் வாழ்கையையும் அழிக்கலாம். இங்கு கூட இது முகபுத்தக தவறு அல்ல எங்கள் மன கட்டுபாடற்றதன்மையே.நான் முகபுத்தகத்துக்கு வருவதுக்கு முன் பல துறை விடயங்கள்  தெரியாதவனாக இருந்தேன் என்றே சொல்லவேண்டும் இப்போது சரியோ பிழையோ என்னையும் எழுத தூண்டியது என்றால் அந்த பெருமை கண்டிப்பாக பெரும் பங்கு முகபுத்தகத்துக்கு உண்டு.  பலர் எழுதுகிறார்கள்  அவர்கள்  எழுத்தில் யதார்த்தமும், தன்னம்பிக்கையும், கருத்தாழமும் சுவை சொட்ட தருகிறார்கள். மனதில் தோன்றுவதை உண்மையாக எழுதுபவர்கள்  அவற்றுள் இருந்து தெறித்து வெளிவந்ததுதான் இந்த பாமரனின் சிறிய கருத்துக்கள். அதை பார்த்து பார்த்து தோன்றியதுதான இந்த எழுதும் ஆசை எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை. இப்படி பலருக்கு பயனுள்ளதாக  இருக்கிறது முக புத்தகம்.

இந்த பதிவை பகிர்வதுக்கு சில உண்மை அனுபவங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது ஒரு கிழமைக்கு முன்பு ஒரு பெரியவரின் ஒரு வீட்டுக்கு கணணி திருத்தி கொடுக்க சென்றிருந்தேன் அப்போது அவரது மனைவி வந்து எனக்கு சொன்ன வசனம் "தம்பி இந்த கணணியை திருத்தி விட்டு முகபுத்தகம் பயன் படுத்த முடியாதவாறு எதாவது செய்ய முடியுமானால் செய்து விடுங்கள்" ஏன் என கேட்டதுக்கு அவருடைய கணவன் எப்ப பார்த்தாலும் முகபுத்தகத்திலேயே இருப்பதாகவும் எதாவது அவசர வேலை என்று சொன்னால் பின்பு செய்யலாம் என்பதுவும் அதையும் மீறி பலமுறை கேட்டால் கோவம் வந்து ஏசுவதாகவும் சொன்னார். மற்ற நாடில் கல்யாணம் கட்டி  கொடுத்த மகளுடன்,பிள்ளைகளுடன்  முகம் பார்த்து கதைப்பதுக்ககத்தான் கணணியை எடுத்தோம் இப்போது மகள் கதைப்பதுக்கு வந்தாலும் சில நேரங்களில் கதைக்க விடாமல் முகபுத்தகத்தில் அதையோ செய்துகொண்டு இருக்கிறார். அதுக்கு அவர் இவளுக்கு என்ன தெரியும் என்று அவர் பக்க நியாயங்களை அடுக்க தொடங்கினார், சுதாரித்துகொண்ட நான் நாட்டாமை  பதவியை புறக்கணித்து விலகி வருவது கணணி திருத்துவதை விட கடினமாக இருந்தது.

 மனோதத்துவ நிபுணர்களின் அறிக்கையில் இப்போதெல்லாம் குடி பழக்கம் போல இந்த இணைய, முகபுத்தக பழக்கத்தில் இருந்து விலகுவதுக்கு அதிக மக்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் .

அறிவுத்தீ கொண்டு வாழ்கையில் ஒளி ஏற்றவும் முடியும் வாழ்கையை அழிக்கவும் முடியும், அறிவோ  தீ யோ பயன்படுத்துவதை பொறுத்தே அதன் பயனும், பாதிப்பும்..

அன்பாக இருந்தாலும் அமிர்தமாக இருந்தாலும் அளவுடன் இருந்தால் நிம்மதி,சுவை தவறினால் ஆபத்தே.



அதிகூடிய விலைக்கு விற்கபடும் மிருகம் ஆண்கள்தான்.



சீதன மாப்பிள்ளை  (தன்மானத்தை இழந்தவன்)
பெருமை கொள் 
உலகிலேயே
அதிகூடிய விலைக்கு 
விற்கபடும் மிருகம்
படித்த ஆண்கள்தான்.

ரஜினிகாந்த் சொத்து முழுவதையும் தமிழ் மக்களுக்கே வழங்குகிறார்.




எனது உயிரிலும் மேலான ரசிக்க பெருமக்களே பேருந்தில் நடத்துனராக இருந்த நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆயிரங்களில் ஆரம்பித்த எனது வாழ்க்கை உங்கள் அன்பினால் ஆயிரங்கள் இலட்சங்களாகின அது போதாதென்று உங்கள் அன்பு அதிகரிக்க அதிகரிக்க இலட்சங்கள் கோடிகளாகி.ஈழ தமிழர்களின் இடம்பெயர்வாலும் இன்று கோடிகள் பல்கிபெருகிவிட்டன. உங்கள் அன்பினால் சேர்த்த பணத்தில் எனது முதல் மகளுக்கு சீதனம் மட்டும் 100 கோடியும் அடுத்த மகளுக்கு அதை விட அதிகமாகவும் கொடுத்து கல்யாணமும் செய்து வைத்தேன் . அதை விட இன்னும் பல கோடிகள் சேர்த்து வைத்துள்ளேன். எந்திரனில் மட்டுமே எனது வருமானம் உங்களுக்கே தெரியும். எத்தனை கோடிகள் என்று.

எனது பல்லாயிரம் ரசிகர்கள் நான் உடல் நலம் இல்லாமல் இருந்த போது மண்சோறு சாப்பிடுவது , தீச்சட்டி எடுத்தது, அலகு குத்தி காவடி எடுத்தது , இப்படியாக பல வேண்டுதலை செய்ததை நான் அறிவேன். உங்கள் இந்த அன்பை நான் இதுவரை காலமும் எனது வியாபாரத்துக்கு பயன் படுத்திவிட்டேன் என்று நினைக்கும் போது மிகவும் மனது வேதனை படுகிறது.

எனது படம் வெளியாகும் நேரங்களில் பல ரசிகர்கள் எனது பல அடி உயரமான படங்களுக்கு ஏறி மாலை போடுவதும்,பாலபிசேகம் செய்வதுவும் எனக்கு தெரிந்தும் தெரியாமல் இருந்துவிட்டேன். மேலே ஏறும் நீங்கள் விழுந்தால் உங்கள் வைத்திய செலவுக்கு கூட உங்களிடம்  பணம் இல்லை என்பதுவும் தெரியும், எனது படத்துக்கு பாலபிசேகம் செய்யும் ரசிகர்களின் வீட்டில் குடிப்பதுக்கு பால் இல்லாமல் கூட இருந்திருக்கும் அது எல்லாமே தெரிந்திருந்தும் எனது சுய நலத்துக்காக உங்களை பயன் படுத்திவிட்டேன். அதை விட கொடுமையான விடயம் என்னை பார்த்து புகை பிடிக்க பழகிப்போன சிறுவர்கள் எத்தனையோ பேர் என்று தெரிந்தும் அது எனது "ஸ்டைலுக்கு"  கிடைத்த வெற்றியாக கருதினேனே தவிர அதை படங்களில் நிறுத்தவே இல்லை நான் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது நீங்கள் பட்ட மன வேதனையை, உங்கள் புகை பழக்கம் உங்கள் ஆயுளை குறைக்கும் என்று தெரிந்தும் நான் தடுக்காமல் எவ்வளவு சுயநலத்துடன் இருந்துவிட்டேன்.

பாடல் வரிகளில் தத்துவங்களை சொல்லி சொல்லி சேர்த்த பணத்தை கோடிகணக்கில் மகள்களுக்கு சீதனமாகவும் எனது குடும்ப சுக போகத்துக்கும் செலவழித்து விட்டேன்.மற்றயவற்றை சேமிப்பிலும் வைத்து இருக்கிறேனே தவிரஉங்களை பற்றி சிந்திக்கவே இல்லை. அது மட்டும் அல்ல எனது பிறந்த மாநிலத்தில் தொழில்சாலைகளை அமைத்து என்னை உயர்த்தி அழகு பார்த்து ஏணியை போல இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுக்காமல் துரோகம் செய்தேன். இப்படியாக எனது மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்லாமல் நான் உடல் நலம் இல்லாமல் வைத்திய சாலையில் இருக்கும் போது மிகவும் பயந்துவிட்டேன் எனது உயிர் போய்விடுமோ என்று பல சிந்தனைகள் வந்தன வாழ்க்கையே அப்போதுதான் புரிந்தது அது மட்டும் அல்லாமல் அப்போதுதான் உங்கள் அன்பு எனக்கு முழுசாக புரிய தொடங்கியது எனக்காக இவளவு செய்யும் உங்களுக்குதுவுமே செய்ததில்லையே என்று மனம் ஏங்கியது. அதை நான் வைத்திய சாலையில் இருந்து வெளியிட்ட அறிவிப்பில் தெரிந்து இருபீர்கள். என்னடா சுடலை ஞானம் போல வைத்திய சாலையில் இருக்கும் போது சொன்னானே உடல் நிலை சரியாகியதும் கொடுத்த பொருளையும் கொடுத்த வாக்கையும் திருப்பி வாங்கினதே இல்லை என்று வசனம் பேசியவன் உடல் நிலை சரியாகியதும் எல்லாவற்றையும் தூக்கி போட்டுட்டு அடுத்த படத்தில நடிக்க போய்ட்டானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியாமல் இல்லை. இந்த வாக்கும் அரசியலுக்கு வருவானா, மாட்டானா என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருப்பதை போல நினைத்திருப்பதுவும் எனக்கு புரியாமல் இல்லை.

ஒருவனுக்கு அதுவும் எனக்கு என் மனைவிக்கும் காலாம் பூராவும் சுகபோகமாக வாழ எதனை கோடி வேண்டும் அனால் என்னிடம் எத்தனை கோடிகள், சொத்துகள் இருகின்றன இவற்றை எல்லாம் நான் சேர்த்து வைத்து இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனை தமிழர்கள் பசியால் துடித்துக்கொண்டு இருப்பார்கள் என்பதுவும் எனக்கு தெரியாமல் இல்லை. நானெல்லாம் என்ன தலைவன் என்னை அரசியலுக்கு வருவேனா மாட்டேன என்று எல்லாம் எதிர்பார்கிறார்கள் இத்தனை ஏழைகள் பசியால் துடிக்கும் போது பல கொடிகளை ஒதுக்கி வைத்து இருக்கிறேனே என் பணம் என்ற சுய நலத்தில் தானே ? என்னை எல்லாம் எந்த நம்பிக்கையில் அரசியலுக்கு அழைக்கிறார்கள்? என் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவன் நான் அரசாங்க பணத்தில் உதவி செய்வேன் என்று நம்பி வர சொல்கிறார்களோ!!! இப்படியான பாமர முட்டாள் ரசிகர்களை இப்படி இத்தனை காலமும் ஏமாற்றியது எனக்கு மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

என்னிடம் இருக்கும் பணத்தில் எத்தனை ஏழைகளின் குடும்பத்துக்கு கடன் உதவி செய்யலாம், தொழில் செய்ய உதவி செய்யலாம் அது மட்டும் அல்ல ஒரு படம் நடித்தால் குறைந்தது 25 கோடி கிடைக்கும் ஒருவனுக்கு 2 லட்சங்கள் படி கொடுத்தாலே ஒரு படத்தின் மூலம் 1250 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என்னால் மட்டுமே இப்படி என்றால் மொத்த நடிகர்களும் சேர்ந்தால்? நடிகர்கள் மட்டும் அல்ல என்னை போன்ற பணக்காரர்கள் எல்லோரும் சேர்ந்தால் தமிழ் நாட்டையே  மாற்றிவிட முடியாதா? எனது இரு மகள்களுக்கு மட்டும் கொடுத்த சீதன பணத்தில் 12 ,500 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுத்து இருக்கலாம். இதை எல்லாம் சிந்தித்து பார்க்கும் போது நானெல்லாம் எவ்வளவு சுயநலவாதி என என் மனச்சாட்சியே என்னை பார்த்து துப்புகிறது.

முத்து படத்தில் சொத்துகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது போலவும், சிவாஜி படத்தில் மற்றவர்களுக்காக வாழ்வது போல,இப்படி சமுக சிந்தனையாளன் போல  நடித்து சேர்த்த காசை நான் மட்டும் எனது குடும்பம் மட்டும் அனுபவிக்கிறோம். ஒரு மனிதாபிமானமுள்ள மனிதனாக நியவாழ்விலும் நடிப்பது வேதனையளிக்கிறது.நானும் எவ்வளவு நாளாத்தான் நல்லவனாவே நடிக்கிறது?????? 

இன்று புதுவருட நாளிலே எனது மனச்சாட்சி விளித்து கொண்டது, எனது மகள்கள் திறமையானவர்கள் சொந்த காலில் நிக்கும் தகுதி தன்னம்பிக்கை உள்ளவர்கள் அது மட்டும் அல்ல அவர்கள்  கணவர்கள் இருவரும்  நிறையவே சம்பாதிக்கிறார்கள் அத்துடன் நான் கொடுத்த பல கோடிகள் அவர்களிடம் இருகின்றன எனவே அவர்களை பற்றி இனி எனக்கு கவலை இல்லை. என்னுடைய கவலை எல்லாம் என்மேல் ஒப்பற்ற பாசம் வைத்து இருக்கும் உங்களை பற்றியதே!!!அதனால் தான் இந்த முடிவு எனது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை எடுத்துகொண்டு மீதமாக உள்ள பணத்தை உங்களுக்காக பயன் படுத்த போகிறேன்.

இப்படிக்கு உங்கள் தொண்டனாக இந்த நிமிடம் முதல்.
ரஜினிகாந்த்.

ஒரு நடிகனை நடிகன் என்ற வட்டத்தை விட்டு வெளியேயும் அதுபோலவே என நம்பும் ஒரு ரசிகனின் கற்பனையாக இந்த பதிவை இங்கு பதிகிறேன். ஒரு நடிகன் நடிகனாக இருந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வது அவசியம் அற்றது அது அவ ரது சொந்த பிரச்சனை. விமர்சனம் செய்வது தவறு. ஒரு நடிகனை அந்த துறையை விட்டு அரசியல், நாடு, தலைவன் என அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வத்துக்கு முன்பு அதுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை பார்க்கவேண்டும். போது தொண்டு போது வாழ்கையின் சமுதாய அக்கறை படத்துக்கு வெளியேயும் இருக்கிறதா என்று சிந்திக்கவேண்டும். இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியலில் வேறு எந்த நாடிலும் இல்லாத கொடுமை இருக்கிறது எல்லா தேர்தலிலும் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தெரிவு செய்து வாக்களிப்பார்கள். தமிழ் நாட்டில் மட்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை தெரிவு செய்துவிட்டு பின் போடுகிறார்கள் ஏனெனில் யாருக்கு போட்டாலும் ஒன்றுதான் அப்போதைய நிலவரப்படி யார் அதிக கேட்டவர்கள் என பார்த்து அவர்களுக்கு போட கூடாது   என நினைத்து மற்றவர்களுக்கு போடுகிறார்கள்.

மக்களே சிந்தியுங்கள். உங்களால் தான் சமுதாய சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவே பயப்பிடுகிறார்கள்.

இந்த சினிமா, அரசியல் இதை ஒரு எல்லையுடனே வைத்து கொள்ளுங்கள் இல்லை உங்கள் வாழ்கையை அழித்துவிடும்.

இந்த பதிவை பார்த்து எனக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு கோபம் என்று நினைக்கவேண்டாம் ஒரு ரசிகனாக ரஜினி படத்தை நானும் ரசிப்பேன். என்றும்  வெறியனாகியதில்லை. இது ஒரு ஆதங்கம் ரஜனியை ஒரு சிறு உதாரணமாக எடுத்தேன் இப்படியான பல பணக்காரர்கள் நாளும் எங்களை சுரண்டுகிறார்கள் சினிமா காரர்களாக மட்டும் அல்ல அரசியல் வாதியாக, முதலாளியாக இப்படியானவர்களுக்கு மனிதாபிமானமே இருப்பதில்லை. வெளியில்  தேனொழுக பேசி பேசியே அவர்கள் குடும்பம் பல தலைமுறை சுகபோகமாக வாழ வழி செய்து விடுவார்கள் இது தெரியாமல் நாங்கள்  அவர்கள் சொல்லும்   வார்த்தையை  நம்பி அவர்கள் பின்னால் சென்று எங்கள் வாழ்கையை தொலைக்கிறோம்.எங்கள் அறியாமைதான் அவர்கள் மூலதனம்.

அன்னை திரேசா ஒரு முறை பணம் கேட்டு சென்ற இடத்தில் ஒருவர்  காறி உமிழ்ந்து விடுகிறார்கள் அப்போது கூட அவர் சொன்னா வார்த்தை இதை நான் எனக்கு வைத்துகொள்கிறேன் ஏழை குழந்தைகாளுக்கு எதவாது தாருங்கள். இப்படி இல்லாதவார்கள் எத்தனையோ சேவைகள் செய்து இருக்கும் போது இருக்கும் இவர்கள்???????

தங்களிடம் பணம் இல்லாவிட்டலும் இருபவர்களிடம் கையேந்தி சிறுக சிறுக சேர்த்து இல்லதாவார்காளுக்கு உதவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கும் நாட்டில் இப்படி இருப்பதை பதுக்கி வைத்து தத்துவம் பேசும் இவர்கள் எதிர் காலத்தில் நாட்டை ஆளபோகிறார்களாம். 


மனிதத்தை தொலைத்துவிட்டு(பசியும் நானும் இரட்டை பிறவி)



"தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆனால் எனக்கு மட்டும் எத்தனை தை பிறந்து விட்டது வழிகள் மட்டும் பிறக்கவே இல்லை. 

உலகமே கோலாகலமாக கொண்டாடுகிறது இன்று 2011 இன் இறுதி நாளாம் எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள், வானவேடிக்கைகள் விற்கும் கடைகள் மக்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். எனக்கு எல்லா நாளும் ஒன்றுதான் ஆனால் இப்படியான நாட்கள் என்றால் எங்கள் வீட்டில் ஏகபட்ட விருந்தாளிகள் எங்களுக்கும் வழமையை விட கொண்டாட்டமே! 

என்ன சொன்னாலும் சென்ற வருடத்தை விட இம்முறை மக்கள் புதுவருடத்தை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது உலக பொருளாதார வீழ்சியில் என்நாட்டு மக்களையும் விதிவிலக்கக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். மக்கள் கூட்டம் எங்கள் வீட்டருகில் அதிகமாக இல்லை இம்முறை.

எனது தந்தை,தாய்  யார் என்று எனக்கு இதுவரை தெரியாது என்னை நான் சிறுவயது இருக்கும் போதே இப்போதைய தாய் என்னை இலங்கை காசுக்கு 3000 ரூபாவுக்கு என்தாயிடம் இருந்து என்னை தன் வியாபாரத்துக்கு மூலதனமாக வாங்கினாராம் அப்போது எனக்கு வயது ஆறு மாதங்கள் என்ன நண்பர்களே புரியவில்லையா நான் எப்படி மூலதனமாக முடியும் என்று ?? என் பெற்ற தாய் மட்டும் அல்ல இப்போது வளர்க்கும் தாயும் செய்யும் தொழில் வேறெதுவும் இல்லை பிச்சை எடுப்பதுதான். எனது பெற்ற தாயின் பெயரை மட்டும் எனக்கு சொன்னார்கள் வேறெதுவும் தெரியாது.

எங்கள் வாழ்க்கை இந்த கடை தெருவில் தான் அதிகாலையில் எழுந்திருப்போம் கடைகள் திறப்பதுக்காக எங்களை அந்த கடைகளில் தொழிலாளிகள் வந்து எழுப்புவார்கள் அவர்கள் கடைகளை பூட்டி போனதும் வந்து தூங்குவோம். பல நாள் பட்டினி.பட்டினி மட்டும்தான் எங்களுக்கு நன்கு பழகிப்போன நண்பன் என்னதான் பசியுடன் இருந்தாலும் அதை மறந்த நேரங்கள் மனதை கனக்க வைத்திருக்கிறது என் வயது பிள்ளைகளை அவர்கள் பெற்றோர்கள் என்ன கவனமாக கூட்டி வருவார்கள் அன்பாக அணைத்தபடி அவர்கள் விரும்பியதை வாங்கி கொடுத்து அரவணைத்து அவர்கள் செய்யும் குறும்புகளை ரசித்தபடி செல்லும் பொது மனதுக்குள் அழுவேன் பாரமாகி தாண்டு போகும் மனது பசி  பறந்து போகும். அந்த தாழ்வில் இருந்து மீழ்வதுகுள் என் வளர்ப்பு அம்மா வந்து அடிப்பார் அதோ வருகிற துறையிடம் போய் கேளு பார்க்க பணக்காரர் போல தெரிகிறார் என்று...........

நேற்று இரவு கூட நள்ளிரவில் பலர் வானவேடிக்கைகள் செலுத்தி அழகு பார்த்தார்கள். பழகிபோன பசியுடன் இருந்த நானும் ரசித்தேன் இவர்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பங்கை கொடுத்தாலாவது இங்கு இருக்கும் பலரின் பசி போகுமே என்று அதங்க பட்டு கொள்வேன்.

 என்னதான் மனிதர்கள் பலர் எங்கள் தெருவில் சென்றாலும் மனிதம் என்பது சிலரிடம் தான் காண்கிறோம் .

தாய்லாந்தில் வசிப்பவர்கள் கரப்பான் பூச்சியை ருசிக்கிறார்கள் அதை இங்குள்ளவர்கள் நினைத்தாலே அருவருகிறார்கள், இங்குள்ளவர்கள் மாமிசம் புசிக்கிறார்கள்  அதை பூசாரிகள் வாயை சுளிக்கிறார்கள். அவரவர் வாழும் வளரும் சூழழுக்கு ஏற்ப அவர்கள் பழக்கங்கள் இருக்கிறது. என் பழக்கம் என் சுற்றத்தை அண்டியே..

நான் பிச்சை கேட்கும் போது பலர் என்னை ஏசுவார்கள் பலர் பரிதாபமாக பார்ப்பார்கள் பள்ளிகூடம் செல்வதில்லையா என்று கேட்பார்கள் நான் மாட்டேன்  என்றா  சொல்கிறேன் எப்படி போவது இன்று இங்கு, நாளை எங்கோ? ஒரு வீடு இல்லை பசிக்கு உணவே இல்லை படிக்க எப்படி? உடை என்று சொல்வதுக்கு எதுவும் இல்லை எப்படி நாங்கள் பள்ளிக்கு செல்வது? போகலாம் பணம் படைத்தவர்கள் மனம் வைத்தால் அவர்கள் மனம் எல்லாம் மதுபானம் மீதும், சுகபோகம் மீதும் எப்படி அவர்கள் எங்களை பார்ப்பார்கள்? பல தலை முறைக்கு பணம் சேர்த்து வைப்பார்கள் பக்கத்தில் பசித்த வயிறுடன் பலர் இருக்க!!! பெற்றால்தான் பிள்ளை. எவனோ பெற்ற பிள்ளை பசியால் இருந்தால் என்ன இறந்தால் என்ன? நான் மனிதன் என்று மார்தட்டுகிறார்கள்.

எங்களை கேட்கிறார்கள் சில அறிவாளிகள் கை கால் நன்றாகத்தானே இருக்கிறது எதுக்காக இப்படி பழகுகிறிர்கள்  என்று எனக்குள் சிரித்து கொண்டேன். பல பெரிய படிப்புகளை படித்து பட்டங்கள் பெற்று விட்டு சீதனம் என்ற பெயரில் பிச்சை எடுக்கும்  இவர்கள் என்னை கேட்கிறார்கள் கைகால் நன்றாக இருக்கிறது என்று...

என்னால் முடியவில்லை எத்தனையோ படித்த, பல திறமைகள் இருக்கும் மனிதர்களே இந்த உலகில் வாழ்கையை போராட்டமாக கழிக்கும் போது இந்த சிறு வயதில் எந்த உதவியும் இல்லாமல் எப்படி பிச்சை எடுப்பதை நிறுத்துவேன்?பிச்சை எடுக்காதே என்று சொல்லும் எவரும் அதுக்கான மாற்று வழியை சொல்வதில்லை??????

இங்குதான் பிறக்கவேண்டும் என்று நான் விரும்பி பிறக்கவில்லை. ஒட்டியே பிறந்த நண்பனும் அவனே, எதிரியும் அவனே,"பசி" என்னை போல பலர் எங்களை கைதூக்கி விட யாரும் இல்லை. ஆனால் மனிதர்கள் வாழ எந்த கிரகத்தில் வசதி இருக்கிறது என்று பல கோடிகள் செலவழித்து போட்டி போட்டு தேடுகிறார்கள் செல்வந்த நாடுகள். அவர்களை குறை சொல்லவும் முடியாது வறுமையை ஒழிக்க மற்ற நாடுகள் உதவி செய்தால் அந்த பணமும் அமைச்சர்கள் சுகபோகத்துக்கு பங்கிடபடுகிறது.

பல திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உழைப்பை முதலாளிகள் சுரண்டுகிறார்கள் அந்த திறமையை கொண்டு அவர்கள் தனியாக தொழில் செய்யும் ஆற்றல் இருக்கும் முதல் இருபதில்லை உழைப்புக்கு ஏற்ற சம்பளமும் குடுக்க மாட்டார்கள் அதிகம் கொடுத்தால் சேமித்து தனியாக ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் . இவர்களுக்கும் கை கொடுக்க யாருமில்லாததால் தான் காலமெல்லாம் உழைத்து உழைத்தே வருடங்களை தொலைகிறார்கள். 

இதுவும் எங்களை போன்ற நிலையே. நானும் படிக்க விரும்புகின்றேன். நானும் வேலை செய்ய விரும்புகின்றேன் , நன்றாக சாப்பிட ஆசை படுகிறேன். நான் பாமரன் ஏழை. எனக்கு வழி தெரியவில்லை . வழி காடவேண்டிய மனிதர்கள் மனிதத்தை தொலைத்து விட்டார்கள்.

நண்பர்களே உங்கள் புதுவருடத்தை நன்றாக கொண்டாடுங்கள். மது அருந்துங்கள். புதிய உடை அணியுங்கள் . சிறு குழந்தைகள்,இருதய நோய் உள்ளவர்களை பற்றி சிந்திக்காது வானவேடிக்கைகள் வெடிகளை போடுங்கள். உங்கள் பிள்ளை இல்லாததால் நாங்கள் பசித்த வயிறுடன் இருக்கும் போது உங்கள் அடுத்த தலைமுறைக்கு பணம் சேர்த்து வைகிறிர்கள் ஆனால் நீங்கள் வெடிக்கும் வெடிகளால் சூழலில் ஏற்படும் மாசுகள் ஓசோன் வரை சென்று நாளை உங்கள் தலைமுறைக்கு மட்டும் அல்ல எங்கள் தலைமுறைக்கும் அச்சுறுத்தலாகும் சிந்தியுங்கள் உங்கள் சந்தோசம் அடுத்தவர்களை சந்தொசபடுத்துவதில் இருக்கட்டுமே!!!!!!!!

எல்லாம் வளர்கிறது பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்,ஏழை இன்னும் ஏழை ஆகிறான் உங்கள் தேவைக்கு போக மீதத்தை கொண்டு மற்றவர்களை தூக்கிவிடுங்கள். மனிதம், மனிதாபிமானம், அன்பு, இவை எல்லாம் என்ன? எதுக்கு எங்களுக்கு ஆறறிவு? அடுத்தவன் அறியாமையை, இயலாமையை பணமாக்கவா? 

பிறக்கின்ற புதுவருடத்தில் அன்பினால் உலகை ஆழ புறபடுங்கள்.

எங்களை போன்றவர்களுக்கு பிச்சை போடா சொல்லி கேட்கவில்லை எங்கள் அறியாமையை போக்க கல்வியை புகட்ட வழி செய்யுங்கள், எங்கள் பெற்றவர்களுக்கு தொழில் செய்யும் அறிவை கொடுங்கள். 

முள்ளி வாய்க்கள் போரினால் எங்கள் இனத்தில் எண்ணிக்கை அதிகரித்து விட்டது........... எங்களை பற்றி பேசி பேசியே அரசியல் மாற்றம் நடக்குது, தலைமைத்துவம் மாற்றம் நடக்குது,சினிமா வெற்றி அப்படி இப்படி என்று என்னென்னவோ எல்லாம் நடக்குது, எந்த மாற்றமும் இல்லாமல் நாங்கள் மட்டும்.
நாங்களும் மனிதர்கள்தான்.