அன்றிலிருந்து
எனது மன புத்தகத்தில்
எண்ண பேனா கொண்டு
நான் கிருக்கியவையெல்லாம்
இன்று என் குணங்களாக
எனக்குள் என்னோடு
போராட்டம் நடத்துகின்றன
நான் கிறுக்கியவை
என் பெற்றவர்கள்
சமூகத்தவர்கள்
செயல்களை
சாடியே இருந்தது
அன்று நானறியாமல்
எனக்குள்
விதைத்ததை
இன்று அறிந்தும்
அறுவடை செய்யாமல்
தவிர்க்க முடியவில்லை
அன்று தெரியாமல்
திண்ற உப்புக்காக
இன்றும் தண்ணீர்
குடித்துகொண்டிருக்கிறேன்
மனம்
பழகி போனால்
குணம்
சிற்பி கையில்
இருக்கும் களிமண்
வடிவம் பெறுவது
அவனின் சிந்தனையை பொறுத்ததே
அக்கிரகாரத்து குழந்தை
மாமிசம் கண்டு குமட்டுகிறது
தாய்லாந்து குழந்தை
கரப்பான் பூச்சியை புசிக்கிறது
குழந்தையின்
மனம்
அவர்கள் வளரும்
சூழலை பொறுத்ததே!!!
வளரும் குழந்தைகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்போம்!!!






Azhagu Sinthanai. Arumai varigal.
ReplyDeleteTM 1.
அருமையான பதிவு..
ReplyDeleteநன்றி நண்பர்களே....................
ReplyDeletesuperb.
ReplyDeleteஉண்மைதான் இளமையில் நாம் வளரும் சூழலும் அதனால் எம் எண்ணங்களில் பதியப்படும் எண்ணங்களுமே எம்மை உருவாக்குகிறது !
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
@ஹேமா
ReplyDeleteநன்றி தோழி.. உங்கள் அழகான கருத்துக்கு.
@Rathnavel
ReplyDeleteநன்றி தோழரே..
குழந்தையின்
ReplyDeleteமனம்
அவர்கள் வளரும்
சூழலை பொறுத்ததே!!!
மிகவும் சரியான உண்மை!
கவிதையும் தெளிவாக இதனைச் செப்புகிறது
நன்றி!
வாக்கிட ஓட்டுப் பட்டை காணவில்லை!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
நண்பரே உங்கள் வருக்கைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteஓட்டு பட்டை இருகிறதே ......