என்னை தவிர எல்லோரும்
ஏன் இப்படி இருக்கிறார்கள்!!!
அவனை பார்த்தேன்
ஆயிரம் அழுக்கு
இவனை பார்த்தேன்
எத்தனை இழுக்கு!!!
நித்தமும் இவர்களுக்கு
இலவச ஆலோசனை
அள்ளி அள்ளி கொடுத்தேன்
பயனின்றி தலை கவிழ்ந்தேன்
என்ன மனிதர்கள் இவர்களென்று!!!
என்ன செய்வதென தெரியாமல்
எனக்குள் எட்டி பார்த்தேன்
ஏங்கித்தான் போனேன்
வெட்கி சுயநலம் கொண்டேன்
இனி எனக்கு மட்டுமே
இலவச ஆலோசனை!!!
சமூகத்தின் மீது எனக்கு எத்தனை அக்கறை
ஏனோ என்மீது இல்லாமல் போனது
என்னை போல் பலர் இங்கு பொதுநலவாதிகள்!!!






இப்படி என்றால் நானும் பொதுநலவாதிதான்.
ReplyDeleteநன்றி நண்பரே..
ReplyDeleteஎன்ன செய்வதென தெரியாமல்
ReplyDeleteஎனக்குள் எட்டி பார்த்தேன்
ஏங்கித்தான் போனேன்
வெட்கி சுயநலம் கொண்டேன்
இனி எனக்கு மட்டுமே
இலவச ஆலோசனை!!!//
நான் அடிக்கடி இப்படித்தன் சுய பரிசோதனை
செய்து கொள்வேன்
அதைத்தான் பதிவாகவும் தருகிறேன்
அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
நன்றி நண்பரே............
ReplyDeleteஇதைத்தானே சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.”நீ உன்னைத் திருத்து.உலகம் தானாகவே திருந்தும்”என்று.அருமையான சிந்தனை !
ReplyDeleteநன்றி தோழி .........
ReplyDelete